கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு விவசாயத்துக்கு அளித்து வரும் மானிய உதவியைக் குறைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. இந்திய அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை உதவியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால், உலக வர்த்தகத்தின் பெரிய அண்ணன்களான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
பெரும்பாலான வளாரும் நாடுகளில், இந்தியா உள்பட பயிர் உற்பத்திக்கு ஆகும் மொத்த செலவீனத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் கொடுக்க முடியாது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், கோதுமை 500 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் இதற்கு 10 சதவீதத்துக்கும் அதிகமான மானியம் கொடுக்கப்பட இயலாது. வேறு வகையில் சொல்வதென்றால், 500 கோடி ரூபாய்க்கு கோதுமை உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், குறைந்தபட்ச ஆதாரவிலையாக 50 கோடியை மட்டுமே வழங்க முடியும். அதேவேளையில் குறைந்தபட்ச ஆதாரவிலையில் கோதுமை அல்லது அரிசி வாங்கப்பட்டால், அது உற்பத்தி விளைபொருள் -தனித்த ஆதாரவிலை( product-specific support) என்பதின் கீழ் வரும்.
வளர்ந்த நாடுகளில் சில விளைபொருட்களுக்கு, அதன் உற்பத்தி செலவை விட மிக அதிகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உற்பத்தி செலவை விட இரு மடங்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது
உலக வர்த்தக மையத்தின் அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் லிதேஸியர் சில வாரங்களுக்கு முன்பு, உலக வர்த்தக மையத்தின் பிடியின் கீழ் இந்தியாவை கொண்டுவர திட்டமிட்டு, அதன்படி இந்தியா கோதுமை மற்றும் அரிசிக்கு கொடுக்கும் அனுமதிக்கப்பட்ட மானியத்தை விட, 50-60 சதவீதம் அதிகமாகக் கொடுக்கிறது என்ற தவறான அறிக்கையை கொடுத்துள்ளது என அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த வர்த்தக மோதலை அதிகரிக்கும் விதமாக, அண்மையில் மத்திய அரசு 23 வகை பயிர்களின் உற்பத்தி விலையில், குறைந்தபட்ச ஆதாரவிலையை 150 சதவீதம் அதிகமாக அதிகரித்ததாகக் கூறி, இதனையும் உலக வர்த்தக மையம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த முரண்பாடுகளில் முக்கியமானது, உலக வர்த்தக மையத்தின் கீழ் வரும் Aggregate Measurement of Support என்னும் மானிய உதவி. வளரும் நாடுகளுக்கு அளித்து வரும் 10 சதவீத மானிய உதவி வரம்பு என்பது 1986-88 ஆண்டுகளில் நிலவி வந்த உலக விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு, விவசாய இடுபொருட்களின் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விவசாய விளைபொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிப்பது என்பது முக்கியமான கொள்கை முடிவு.காரணம், இந்த கொள்கை முடிவின் மூலம் தான் சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ முடியும். இது 600 மில்லியன் விவசாயிகளின் வாழ்வாதரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
வளரும் நாடுகளுக்கு மானியம் 10 சதவீதம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றால், வளர்ந்த நாடுகளுக்கு 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை உலக வர்த்தக மையத்தில் ‘ஆம்பர் பாக்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த ஆம்பர் பாக்ஸ், வர்த்தகத்தை உருக்குலைக்கிறது. இதுகுறித்து இந்தியா மற்ம் சீனா ஆகிய இரு பெருநாடுகள் உலக வர்த்தக மையத்தில் அளித்த அறிக்கையில், பணக்கார நாடுகள் உலகின் மொத்த மானிய உதவியில், 90 சதவீதத்தை அதாவது 160 மில்லியன் அமெரிக்க டாலரை மானியமாக பயன்படுத்துகின்றன. அதுமட்டுமில்லாமல் பணக்கார நாடுகள் உலக வர்த்தக மையத்தின் மற்றொரு மானிய உதவியான ‘கிரின் பாக்ஸ்’ – ன் கீழ், 200 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதலாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் இது கேள்விக்குள்ளாவது இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு அளிக்கப்பட்டு வரும் உள்நாட்டு உதவிகள் அறிவிப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் கனடா ஆகிய நாடுகள் மிக பிரமாண்டமான மானியத் தொகையை அளித்து வருகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறியது.
பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கையில், சில உண்மைகள் வெளிவருகின்றன. அதாவது வளர்ந்த நாடுகளில் சில விளைபொருட்களுக்கு, அதன் உற்பத்தி செலவை விட மிக அதிகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் உற்பத்தி செலவை விட இரு மடங்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியா அரிசிக்கு குறாஇந்தபட்ச ஆதாரவிலையாக 60 சதவீதம் கொடுப்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா 82 சதவீதம் மானியம் கொடுக்கிறது; ஐரோப்பிய யூனியன் 66 சதவீதம் மானியம் கொடுக்கிறது. சில குறிப்பிட்ட வருடங்களில் அமெரிக்காவில் இந்த மானியம், பால் மற்றும் சர்க்கரைக்கு கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய யூனியலும் இரு பொருட்கள் உற்பத்தியில் மிக அதிக கவனம் செலுத்தப்பட்டு அதிக மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், வெண்ணெய் மற்றும் கோதுமைதான் அவ்விரு பொருட்கள்.
அமெரிக்காவில் 50%சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படும் பொருட்கள்: கம்பளி(215%), மோஹேர்(141%),அரிசி(82%), பருத்தி(74%), சர்க்கரை(66%), சணல்(61%), காய்ந்த பட்டாணி(57%), இது, 20 வருடங்களில் 7 வருடத்துக்கான தகவல்களை தொகுக்கக் கிடைத்த தகவல்கள் ஆகும். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மானியம் பாலுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியல், 50 சதவீதத்த்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படும் பொருட்கள்: பட்டுப்புழு(167%), புகையிலை(155%),வெள்ளை சர்க்கரை(120%), வெள்ளரி(86%), பேரிக்காய் பதனிட(82%),ஆலீவ் எண்ணெய் (76%), வெண்ணெய்(71%), ஆப்பிள் (68%), பால் பவுடர்(67%), தக்காளி பதனிட (61%). கனடாவில் பால், ஆட்டுக்கறி மற்றும் மக்காசோளாத்துக்கு மிக அதிக அளவில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. புகையிலைக்கு வழங்கப்படும் மானியத் தொகை அதன் உற்பத்தி செலவை விட மூன்று மடங்கு அதிகம்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா ஆகிய நாடுகள் 160 பில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை பெறுவதை மறுபரிசீலனை செய்வதற்கன நேரம் இதுதான். இந்த விஷயத்தில் காலம் தாமதித்தால், சீனாவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து கொடுத்த அறிக்கை,, வர்த்தக மோதல்களை தடுக்க வழிவகுக்கும். குறிப்பாக, மிக குறைந்த விலையில் விளைபொருட்களை வளரும் நாடுகளிலிருந்து வளர்ந்த நாடுகள் இறக்குமதி செய்வதை தடுக்கும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க கிளிக் செய்யவும்.