Read in : English

அன்புள்ள விவசாய நண்பர்களே! கடந்த வார உரையாடலில் புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைத்தது குறித்து பேசியிருந்தேன். அதனை என் இணைய பக்கத்தில் பகிர்ந்தேன்; அதன் பிறகு விவசாயிகள் கூட்டம் ஒன்றில் பங்கெடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்தக் கட்டுரையைப் படித்திருந்த சில விவசாயிகள் அதேபோல் பண்ணைக் குட்டை அமைத்துத் தர வழிகாட்டச் சொன்னார்கள். அவர்களது மாவட்டத்தில் அதே போல் பண்ணைக் குட்டை அமைக்கப்பட்டுள்ளது பற்றிய தெரிய வந்தால், அதைப் பார்த்துக் பார்த்து கற்றுக்கொள்ள உதவி கேட்டார்கள்.

அண்மையில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில், திறந்துவிடப்பட தண்ணீரில் கிட்டத்தட்ட 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்தது; இந்த தண்ணீரில் சிறு பகுதியாவது தங்களது பகுதியில் சேமிக்கப்பட்டிருந்தால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை வராது என்ற உணர்வு விவசாயிகளின் மத்தியில் மேலோங்கி இருந்தது. அவர்கள் பகுதியில் ஏதேனும் இடத்திலோ அல்லது தனி நபரோ பண்ணைக் குட்டை அமைத்திருந்தால் அதை பார்க்க வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பற்றி தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் அந்த ஊர் பற்றி கூறுகிறேன். பட்டுக்கும் கோயில்களுக்கும் புகழ் பெற்ற இங்கு விவசாயத்தில்  பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை.

எனவே, விஷயங்களை நினைவுபடுத்திப் பார்த்து, திண்டிவனம் அருகே இல்லீடு கிராமத்தில் அமைந்துள்ள நேஷனல் அக்ரோ பவுண்டேஷனுக்கு செல்லும்படி அவர்களை அறிவுறுத்தினேன்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,300 கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கிய ஐந்து கிராமங்களில் நீர் மேலாண்மைக்கான நீர் வடித் திட்டத்தை அந்தத் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அரசூர் நீர் வடித் திட்டம் (வாட்டர்ஷெட் திட்டம்) என்ற பெயரில், முதல் வேலையாக குமுளி என்ற கிராமத்தில் இருக்கும் கோயில் குளத்தை சீரமைக்கும் பணியை விவசாயிகளின் பங்கேற்போடு ஆரம்பித்து செய்தனர். தொடக்கத்தில், வழக்கம் போல் இதனை முழுமூச்சாக செய்யவில்லை. காரணம் விவசாயிகளிடம் இதுகுறித்த விழிப்புணர்வின்மை இந்தத் திட்டம் அவர்களுக்கு இரண்டு பருவகாலப் பயிர்களைத் தரும் என்பதை அவர்கள் உணரவில்லை. அதனால் அவர்களின் நீர் மூலதாரமான ஏரிகள் கோடையில் வற்றிப் போயின.

இதுவரை, கிட்டத்தட்ட 3 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர்  வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இரண்டாம் பருவ பயிர்கள்  மட்டுமில்லால் மூன்றாம் கால பயிர்களையும் செய்கின்றனர்.

நபார்டு வங்கியின் உதவியுடன், அந்தத் தொண்டு நிறுவனம் 100 ஹெக்டர் பரப்பளவில் முன்னோடித் திட்டத்தை மேற்கொண்டது. அந்த நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ், பண்ணைக் குட்டைகள், ஆழமுள்ள குளங்கள், வரப்புகளை பலமாக்குதல், நீர் வரும் கால்வாய்களை சுத்தப்படுத்துதல், நீர் ஊறும் குளங்கள்… என பல வேலைகளைச் செய்தனர்.

இதுவரை, கிட்டத்தட்ட 3 ஆயிரம் லட்சம் லிட்டர் தண்ணீர்  வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இரண்டாம் பருவ பயிர்கள்  மட்டுமில்லால் மூன்றாம் கால பயிர்களையும் செய்கின்றனர். அது அவர்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தருகிறது. தற்போது அவர்கள் கூடுதலாக 1,200 ஹெக்டர் பரப்பளவை உள்ளடக்கிய சித்தூர், மாம்பட்டு, மாம்பாக்கம், அகரம் ஆகிய ஊர்களில் 3 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 750 குடும்பங்கள் பயன்பெறுகின்றன. இதற்கு மாநில அரசும் ஓரளவு நிதியுதவி செய்து வருகிறது.

‘வாட்டர்ஷெட்’ திட்டம் என்பது நீரைத் தேக்குவதுடனும் சேமிப்பதுடனும் நின்றுவிடுவதில்லை. மரங்கள் வளர்த்தல், மேலாண்மை, வாழ்வியல் மேம்பாடு, பயிற்சி மற்றும் செயல் பயிற்சி ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.  இது நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், நிலம் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்தும் வகையில் இத்திட்டம் உள்ளது. அப்பகுதி மக்களின்  பாரம்பரிய அறிவுடன் அறிவியல் அனுபவத்தையும் சேர்த்து தருவதால் அத்திட்டம் தனித்தன்மையுடன் விளங்குகிறது.

இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் அங்கு வாழும் கிராம மக்களின் பங்களிப்புடன் திட்டமிடப்பட்டு, அவர்களாலேயே செயல்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. விவசாயிகள் திட்டமிடுவதிலிருந்து மேற்பார்வையிடுவது வரை விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், நீண்ட கால வளங்குன்றா வளர்ச்சிக்கு உதவும் சமூக பங்கேற்பு திட்டம் இது.

மண்வள மேலாண்மை, நல்ல வேளாண் செயல்பாடுகள், விவசாயம் சார்ந்த  தொழில்களான பால் பண்ணை, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகளை நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இந்தத் தொண்டு நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்களுக்காக இதுகுறித்து சுருக்கமாகக் கூறுகிறேன். முன்னாள் மத்திய அமைச்சரும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பசுமைப் புரட்சித் திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தியவருமான பாரத ரத்னா சி. சுப்பிரமணியம், இந்த நிறுவனத்தை இரண்டாயிரமாவது ஆண்டில் தொடங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகம், தரமணி வளாகம், சிஎஸ்ஐஆர் சாலை, தரமணி, சென்னை 600113 என்ற முகவரியில் இதன் அலுவலகம் உள்ளது.

இமெயில்: nationalagro@gmail.com

இணையதள முகவரி: www.nationalagro.org.in

செல்பேசி: 09445504853&09444036400.

இந்த நிறுவனத்தில் மண், உணவு, நீர், இயற்கை உரம், தொழு உரம் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்கு தரமான ஆய்வகங்கள் உள்ளன. மானிய விலையில் பரிசோதனைகளை செய்து தருகின்றனர்.

என்னிடம் வழிகாட்டக் கோரிய விவசாயிகளுக்கும் இந்த பத்தியின் மூலம் பதில் அளித்துள்ளேன். இதனை வாசிப்பவர்கள் ஒரு முறை நேஷனல் அக்ரோ பவுண்டேஷனுக்குச் சென்று அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம். நன்றி!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival