Read in : English
மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம், அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (14ந் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், கட்சியில் பெரும்பான்மை தனக்கே உள்ளது என்பதை அக்கட்சியின் செயல் தலைவரும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின் நிரூபித்து விட்டார்.
மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி நேற்று மூர்க்கதனமான பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அந்த பேட்டியில், ‘கருணாநிதியின் உண்மை தொண்டர்கள், தன் பின்னால் இருப்பதாக தெரிவித்தார். இதுமட்டுமின்றி எதிர்கால நடவடிக்கை குறித்த இன்னும் 2 மூன்று நாள்களில் தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அறிவாலயத்தில் இன்று செயற்குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது அழகிரியின் கூற்று, எட்டாக்கனி என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே. அன்பழகன் முன்னிலையில் மறைந்த தலைவர் மு.கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மு.க. ஸ்டாலினுக்கு பின்னால் கட்சியினர் ஒன்றுபட்டு நின்றனர். இது அவரை தலைவர் பதவிக்கு உயர்த்தி உள்ளது.
இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஒரு காலத்தில் பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை அழகிரி தன் கைவசம் வைத்து இருந்தார். அது அவர் கட்சியின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளராக இருந்த நேரம். அவரின் கண் அசைவிற்கு கட்டுப்பட்டு அவர்கள் நடந்தனர். இருப்பினும் மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணங்கள் வாயிலாக தன் ஆதரவாளர்களை பெருக்கிக் கொண்டார். அழகிரிக்கு ஒரு குறிப்பிட்ட ஆதரவு மட்டுமே உள்ளது. கட்சியில் இருந்து மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்ட போது, மு.க. ஸ்டாலின் ஆதிக்கம் தெரிந்தது.
இந்த நிலையில் இன்று மு.கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அப்போது, மு.கருணாநிதியின் மரணம், மறைந்த முதல்வர் சி.என். அண்ணாத்துரை அருகே உடலை புதைக்க மறுப்பு, நள்ளிரவில் நீதிமன்றம் ஏறி பெற்ற சட்டரீதியான வெற்றி என உணர்ச்சி ரீதியாக பேசி புத்திசாலிதனமாக நடந்து கொண்டார். மேலும் கட்சியினர் அனைவரும் மு.கருணாநிதி எண்ணப்படி, அமைதியாகவும் ஒற்றுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரின் பேச்சு, கட்சி நிர்வாகிகளை நேரிடையாக சென்று உள்ளது. மேலும் இலக்கை அடையும் வகையில் இருந்தது. அவரின் பேச்சுக்கு கிடைத்த பெரும்வரவேற்பால் இது தீர்மானிக்கப்பட்டது.
Read in : English