* வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி

* கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம்அழைத்துச் செல்லப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* 28-ந் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டதாகவும், கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

* குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்கே சென்று பார்த்தனர்.

* கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படமும், ஸ்டாலின் அவரிடம் பேசும் புகைப்படமும் வெளியானது.

* முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நிலை

குறித்து கேட்டறிந்தனர்.

* 29 ஆம் தேதி இரவு மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் நிலைமை சீரடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

* அன்று இரவு மருத்துவமனை முன்பு குவிந்த தொண்டர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

* இதனைத்தொடர்ந்து 31-ந் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும்,அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

* நேற்று முன்தினம் மாலை வெளியான மருத்துவ அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,வயது மூப்பு காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதையடுத்து காவேரி மருத்துமனைக்கு வெளியே மாலை முதலே திரண்ட தி.மு.க. தொண்டர்களும் நிர்வாகிகளும் எழுந்து வா எங்கள் தலைவா என்று மனமுருக முழக்கம் எழுப்பினர்.

Share the Article
Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival