Read in : English

வாழ்வதற்கான காரணாத்தைக் கண்டுணர்ந்து வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதே சம்பாதிப்பது  குடும்பத்தை உருவாக்குவது, வீடு கட்டுவது என்று நினைத்து வாழ்வார்கள். சிலர் சமூகம், சுற்ருச்சூழல் என மொத்த உலகமும் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகத் தோன்றும். அவர்களால் தான் எதிர்கால் சந்ததி ஒரு நல்ல வாழ்வை பெற முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் தங்கசாமி என்ற விவசாயி மரங்கள் தான் விவசாயிகளில் உற்ற நண்பன் என்கிறார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு  ஒவிவசாயி, கல்வி நிறுவனத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரிடம் ‘கண்டிப்பா  மரம் வளருங்கள்’ என வலியுறுத்தி வருகிறார்.

தங்கசாமியை தொலைபேசியில் அழைத்தால்,’நான் மரம்பேசுகிறேன்’ என்கிற மென் சத்தத்தைக் கேட்க முடியும். அவரைப் பொறுத்தவரை மரம் தான் அவரது உயிரும் உடலும். அவருக்கும் மரத்துக்குமான உறவு மிக ஆழமானது;அவர் மரங்களுடன்பேசுவார்.

70 வயதாகும் மரம் தங்கசாமியின் தினசரி வேலை அவர் நட்ட மரங்களுடன் பேசுவதுதான். தங்கசாமியைப் பொறுத்தவரை மரங்களுக்கு உணர்வு இருக்கிறது; அவை நம் பேச்சையும் அன்பையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றும் என்று உறுதியாக நம்புகிறார். மரங்களைப் பற்றிய புரிதலில் அவர் ஒரு என்சைக்ளோபீடியா. வனத்துறையில்  இருக்கும்  பலர், அவர்களுக்கு சில மரங்களைப்  பற்றி தெரியாதபோது   அதைத் தெரிந்துகொள்ள இவரை அழைத்துச் செல்கின்றனர். ‘’இதெல்லாம் அனுபவத்திலிருந்து வரும் அறிவு.  புத்தக அறிவு பட்டறிவைக் கொண்டு உருவாக்கப்படவில்லையே’’ என்பார் தங்கசாமி.

மரம் தங்கசாமி, அவருடைய பண்ணையில் வழக்கமான அறிமுகத்தைச் செய்வதில்லை. அவர் இதயம் சொல்வதை செய்கிறார். அவர் தோட்டத்துக்கு வரும் பார்வையாளார்களிடம்,’’கடவுளைப் பார்த்து இருக்கிறீர்களா?’’ என கேட்கிறார். அவரது கேள்வியை ஆச்சர்யத்துடன் எதிர்நோக்கும் பார்வையாளரிடம், வாருங்கள் உங்களுக்கு நான் கடவுளைக் காட்டுகிறேன்’’ என அழைத்துச்  செல்கிறார். பிறகு அவர்களது கண்களை துணியால் கட்டி, கைகளைப் பிடித்து ஒரு சிறு அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சென்றவுடன்  கட்டை அவிழ்க்கச் சொல்லி பெரிய கண்ணாடி முன்பு நிறுத்துகிறார். ‘’பாருங்கள் இதுதான் கடவுள். கடவுள் வேறெங்கும் இல்லை;நமக்குள்தான் இருக்கிறார். பிறகு ஏன் நாம் நமது இயற்கை வளங்களை  அழித்துக்கொண்டு இருக்க வேண்டும்? அதனை பாதுகாப்பது நம் கடமை தானே?’’ என கேள்வி எழுப்புவார்.

இந்த கேள்வி, எளிமையான கேள்வியாக இருந்தாலும் கேட்பவர் மனதில் னஒருவித சலனத்தை ஏற்படுத்தும். அடுத்து அவர் பார்வையாளர்களை மரக்கன்று  நடச் சொல்வார்.அந்த மரக் கன்றுக்கு நட்டவரின் பெயரைச் சூட்டுவார். அதன்பின்பு அந்த மரக்கன்றிடம், ‘’இங்கு பார், இவர் நீ நன்றாக வளர்வாய் என்ற  மிகுந்த நம்பிக்கையுடன் உன்னை இங்கே நட்டுள்ளார்.  என்ன புயல், மழை, வறட்சி றவந்தாலும் அதைத் தாங்கி, எதிர்த்து போரிட்டு நீ வளர்ந்து அவர் பெயரைக் காப்பாற்றா வேண்டும்’’ என்று அன்புடன் அதனிடம் கூறுவார்.

‘’விவசாயிகள் மரம் வளர்க்க ஆரம்பித்தால் வறட்சி ஒருபோதும் ஏற்படாது. தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட மாட்டோம்’’ என்று உறுதியாகக் கூறிகிறார் தங்கசாமி. ‘’இன்று ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறைக்கு நாம் தான் காரணம்.  நிறைய மரங்களை வெட்டிவிட்டு, தரையை சிமெண்ட் வைத்து பூசியதால் பூமிக்குள் நீர் இறாங்கி பரவி, நீர்மட்டம் உயர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் என்றா பெயரில் பல ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. ஒரு மரத்தை வெட்டின்பால் அங்கு பத்து மரங்களை நட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதனை பின்பற்றினால் மட்டுமே கடந்த பல வருடங்களாக நாம் உண்டாக்கிய அழிவை நேர் செய்ய இயலும். இப்போது கூட நாம் இதை உணர்ந்து செயல்படாவிட்டால்  தமிழகம் சவுதி அரேபியாவைப் போல் மாறிவிடும்’’ என எச்சரிக்கிறார்.

தங்கசாமிக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பாதி அவரது வீட்டுக்கு அருகிலும் மீதி வேறு இடத்திலும் உள்ளது. கடந்த 15 வருடங்களாக மாற்றுமுறை விவசாயத்தை செய்துவருகிறார். அவர் இயற்கை வழி விவசாயத்தை உறுதியாக ஆதரிக்கிறார். இயற்கை வழி விவசாயத்துக்கு மாறுவதற்கு முன்பு அவர் பெருத்த நஷ்டத்தை அடைந்ததாகக் கூறினார். விவசாயம், இயற்கையுடன் ஒத்திசைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து வீழ்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தால் விவசாயத்தில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் தங்கசாமி. மண்ணின் வளம் செயற்கை உரங்களை இடுவதால் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மண்ணுக்கும் உயிர் உள்ளது என நம்புகிறார் அவர். அதேபோல் கால்ந்டை தீவனங்களும் நிலத்திலேயே வளர்க்கப்பட வேண்டும் என்கிறார்.

அவர் 12 ஏக்கர் நிலத்தில் 125 வகையான மரங்களை வளர்த்து வருகிறார். இந்த மரங்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான கிளை பரப்பளவும் வேர் ஆழமுமுள்ளதுஅ. அதனால் மரங்கள் ஒன்றுக்கொன்று மண்ணின் வளத்தை அதிகரித்து உதவி செய்துகொள்கிறது என்கிறார்.  தன்னுடைய 13 ஏக்கர் நிலத்தில் நெல், நிலக்கடலை, உளுந்து, டெய்ன்சா போன்ற பயிர்களை பயிர் சுழற்சி முறையில் வளர்த்து வருகிறார்.  சாமந்தி உள்ளிட்ட செடிகளைபயிர் பாதுகாப்புக்கு வளர்க்கிறார். அதுமட்டுமில்லாமல் 100 வகையான மூலிகை செடிகளையும் வளர்க்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்ன்னவென்றால், நிலத்தில் விழும் இலைகளை அவர் சுத்தப்படுத்துவது இல்லை;நிலத்தை உழுவதும் இல்லை. இலைகளை அப்படியே விடுவதால் அவை மக்கி, நிலத்துக்கு உரமாகிறது. நிலத்தில் களை முளாஇத்தால் மட்டுமே உழ வேண்டும் என்கிறார் தங்கசாமி.

மரங்களுக்கு அருகில் சிறுசிறு தொட்டிகளை வைத்துள்ளார்.அதில் பறவைகள் நீர்குடித்துவிட்டு அதன் எச்சங்களை அங்கு இடும். அது பூச்சிகளுக்கு உணவாகும். கூடுதலாக வேப்பம்புண்ணாக்கு, எருக்கு ஆகியவற்றை நிலத்தில் ஆங்காங்கே வைத்துள்ளார். இந்த வாசத்துக்கு ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் தொட்டியில் விழுந்து இறந்துவிடும். இந்த யுக்தி மூலம் கடந்த 5 வருடங்களாக அவர் அதிக பூச்சி தொல்லையின்றி இயற்கை வழி நெல் பயிர் செய்கிறார்.

விவசாய பயிர்களால் அவ்வப்போது நட்டம் ஏற்பட்டாலும் தேக்கு, ரோஸ்வுட் போன்றா மரப் பயிர் அவருக்கு கைகொடுத்து உதவுகிறது. றைவை எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரிய சொத்தாக அமையும் என்கிறார்.

இந்த கருத்தாக்கங்கள் இயற்கை வழி வேளாண்மையில் மிக முக்கியம் என்கிறார். 1. நிலத்துக்கு ஊட்டம்கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய பயிர்களுக்கு அல்ல. 2.விவசாயின் உணவுத் தேவைக்கும் மண்ணின் வளத்துக்குமே பயிர் செய்யப்பட வேண்டும். 3.பயிர் சுழற்சியும் கலவை பயிர் வளர்ப்பும் அவசியம். 4.மரங்கள் விவசாயத்தில் மிக முக்கியமானது;விவசாயி அவர்களின் நிலத்திலேயே வசிக்க வேண்டும். நிலைத்த வேளாண்மை என்பது பயிர், விலங்குகள், நுண்ணுயிர்கள் மற்றும் பிற உயிர்கள் என அனைத்தும் ஒன்றிணைந்தவையே.

அவர் தன் வாழ்நாளில் பல லட்சம் மரங்களை நட்டுள்ளார். ‘’எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்ல. ‘’நான் மறையும் வரை  மரங்களை நட்டுக்கொண்டே இருப்பேன்’’ என்கிறார்.

திருச்சி-புதுக்கோட்டை சாலையின் இருமருங்கிலும் நடப்பட்ட மரங்கள் அனைத்தும் தங்கசாமியால் நடப்பட்டவைதான் என்கின்றனர் பொதுமக்கள்.

தங்கசாமி, கற்பகசோலை, சேந்தன்குடி போஸ்ட், ஆலங்குடி தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம் என்றா முகவரியில் அவரைதொடர்புகொள்ள முடியும். செல்பேசி: 097866 04177

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival