மறைந்த முதல்வர்  ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 1998-ம் ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களுக்குளாகவே  பா.ஜ.க.கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார். அதன் பிறகு 2004 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார். அந்த தேர்தலில் அ.தி.முஉ.க  ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதையடுத்து  பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே  கூட்டணி  அமையவில்லை.

பின்னர் வந்த 2001,2006,  2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில்  வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா,  பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சுமூகமான உறவை மட்டுமேகடைபிடித்து வந்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அவர் தலைமையிலான அ.தி.மு.க.,பா.ஜ.க.வுடன் கூட்டணி எதையும் வைத்துக் கொள்ளவில்லை.

2014-ம் ஆண்டு மத்தியில் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திரமோடி, மத்திய மந்திரி சபையில்அ.தி.மு.க.வுக்கு முக்கிய இடம் கொடுப்பதாக கூறிய போது கூட அதை ஏற்க ஜெயலலிதாமறுத்து விட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனானஅ.தி.மு.க.வின் நெருக்கம் அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க.வில் பிளவு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியின்தலையிட்டால், அந்த கருத்து வேறுபாட்டுக்கு உடன்பாடு எட்டப்பட்டு,  எடப்பாடி பழனிசாமியும்ஓ.பன்னீர்செல்வமும் இடையூறு இல்லாமல் ஆட்சியை நட்டதி வருகின்றனர்.

பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நல்ல நெருக்கமான நட்பில் இருப்பதால்பா.ஜ.க. – அ.தி. மு.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று தகவல்கள்  வெளியானது. ஆர்.கே.நகர்தொகுதி இடைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டாலும், 2019-ம் ஆண்டுநடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேரும் என்று பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் ஓரிரு இடங்களை பெற முடியும் என்பதால்அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள்தீர்மானமாக உள்ளனர். அதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. தலைவர்களையும்ஆட்சியையும் பா.ஜ.க. அரசு மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டுகள் வைத்து இருப்பதாககூறப்படுகிறது.

கூட்டணி குறித்த இணக்கம் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. தீவிர வாதிகளின் புகழ் இடமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழக அரசு மீது நேரடியாக  தாக்காமல் மறைமுக தாக்குதலை நடத்தினார்.

அதோடு மல்டுமல்ல, பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவும், அ.தி.மு.க. அரசை சாடுவதை நிறுத்தவில்லை. பாஜகவின் தமிழ பொறுப்பாளரான முரளிதரராவும் அ.தி.மு.க. பகீரங்கமாக தாக்கி வருகிறார்.  இதற்கெல்லாம்  ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எவறும் வாய் திறக்காமல் மவுனத்தையே பதிலாக அளித்து வந்தனர்.

ஆனால் சமீபத்தில் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், தமிழகத்தில் ஊழல் அதிகரித்து உள்ளது என்று குற்றம்சாட்டினார். இப்பதான் அ.தி.மு.க.வினருக்கு கோபம் வந்து இருக்கு.  அந்த கோபத்தை பல நிலைககளில் காட்டி வருகின்றனர்.

உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், புஜிசி-க்கு பதிலாக புதிய உயர்கல்வி அமைப்பை உருவாக்க மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வரைவுமசோதாவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

அது குறித்து ஆலோசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, மத்திய அரசு தனது முடிவை கைவிட்டு, யுஜிசி அமைப்பையை தொடர வேண்டும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே கருத்தை வலியுறுத்தி பிரதமர் கோடிக்கும் கடிதம் எழுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சி பெறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவு தெரிவித்து வந்த அ.தி.மு.க. அரசு. அந்தவகையில்தான் உதய் திட்டம் உள்ளிட்ட சிலவற்றை ஜெயலலிதா இருந்தபோது ஏற்காத நிலையில் அவரது மறைவுக்கு பிறகு அந்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டது.

அதேநேரத்தில் நீட் உள்ளிட்ட சில முக்கி முடிவுகளுக்கு மத்திய அரசை எந்த அளவுக்கு எதிரத்து போராட வேண்டுமோ அந்த அளவுக்கு எதிர்த்து போராடிய நிலையிலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து நீட் தேர்வை ஏற்கவேண்டிய கட்டாயத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டது.

ஆனால் அடிமடியில் கைவைப்பது போல, இந்திய மருத்துவ முறையிலான  சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஓமியோ உள்ளிட்ட மருத்துவ படிப்புகான மாணவர் சேர்க்கையும், நீட் தேர்வு முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் இதை தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக எதிர்த்து வருகிறது.

ஆக, நடப்பு ஆண்டுகான மாணவர் சேர்க்க பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளும்போது மத்திய அரசின் விடாபடியான திட்டங்களை இனி ஆதரித்தால் அது வரும் பாராளுமன்ற தேர்தல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படும் என்ற நிலையை கருத்தில் கொண்டு மேற்படி மத்திய அரசின் முடிவை தமிழக அரசு எதிர்க்க துணிந்ததாக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

Share the Article
Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival