Read in : English

Share the Article

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு ஊழியர்கள்மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும்  லோக்-ஆயுக்தா அமைப்புஉருவாக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று நிறைவேறியது.

லோக்-ஆயுக்தா

தமிழக சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர், அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களைவிசாரிக்கும்  லோக்-ஆயுக்தா அமைப்பு உருவாக்க வகை செய்யும் சட்டமசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அந்தமசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியர்கள் மீதுபுகார்களை  அளிக்கலாம். இந்தப் புகார்களை லோக்-ஆயுக்தா அமைப்புவிசாரிக்கும்.

லோக்-ஆயுக்தா அமைப்பு தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்படும்.அதாவது, அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து லோக் -ஆயுக்தாஅமைப்பு உருவாக்கப்படும். இந்த அமைப்பின் தலைவராக உயர் நீதிமன்றநீதிபதி அல்லது உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அல்லது ஊழல் தடுப்புக்கொள்கை, பொது நிர்வாகம், நிதி மற்றும் சட்டத்தில் 25 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றுள்ள நபர் இருப்பார். லோக்-ஆயுக்தா அமைப்பின்உறுப்பினர்களாக நான்கு பேர் இருப்பர்.

உறுப்பினர்கள்…

இந்த நான்கு பேரில் இரண்டு பேர் நீதித் துறையைச் சேர்ந்தஉறுப்பினர்களாக இருப்பர்.

லோக்-ஆயுக்தா அமைப்பில் சிலர் தலைவராகவோ, உறுப்பினர்களாகவோஇருந்திடக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர்,குற்றம் எதற்காகவும் தண்டிக்கப்பட்ட நபர், 45 வயதுக்குக் குறைவானநபர்கள், ஊராட்சி அல்லது நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகள், மத்திய அல்லது மாநில அரசுப் பணியிலிருந்துஅகற்றப்பட்ட அல்லது நீக்கம் செய்யப்பட்ட நபர்கள், ஆதாயம் தரும் பதவி,அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருப்போர், தொழில் செய்யும்நபர்கள் ஆகியோரை நியமித்திடக் கூடாது.

லோக்-ஆயுக்தா அமைப்பின் தெரிவுக் குழுவின் தலைவராக முதல்வர்இருப்பார். சட்டப் பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவுக்குபெயர்களைப் பரிந்துரைக்க தனியான ஒரு தேடுதல் குழு அமைக்கப்படும்.இந்தக் குழுவின் சார்பில் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, தெரிவுக்குழுவிடம் அளிக்கப்படும்.

பதவிக்காலம்

தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் என்பது ஐந்தாண்டுகாலம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் 70 வயதை அடையும் வரையில் எதுமுதலில் வருகிறதோ அதுவரை பதவி வகிப்பர்.

லோக்-ஆயுக்தா அமைப்பின் தலைவர் இறந்தாலோ அல்லது பதவிவிலகினாலோ அந்த காலியிடத்தை நிரப்பும் வகையில் புதிய தலைவர்அமர்த்தப்படுவார். புதிய தலைவரை அமர்த்தும் வரையில், அமைப்பின் மிகமூத்த உறுப்பினர் தலைவராகச் செயல்படுவார். அமைப்பின் செயலாளராகஅரசின் துணைச் செயலாளர் நிலைக்குக் குறையாதவர் இருப்பார். மேலும்,அரசின் துணைச் செயலாளர் நிலைக்குக் குறையாதவர், விசாரணைஇயக்குநராக இருப்பார். லோக்-ஆயுக்தா அமைப்பு தடையின்றிசெயல்படுவதற்குத் தேவையான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்அரசால் நியமிக்கப்படுவர்.

அதிகார வரம்பு

லோக்-ஆயுக்தா அமைப்பின் அதிகார வரம்புக்குள், முதல்வர்,அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில அரசு அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் அனைவரும் வருவர். பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்மத்திய அரசைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அதனுடைய ஒப்புதலைப்பெற்ற பிறகே விசாரணை மேற்கொள்ளப்படும்.

1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஊழல் குற்றச்சாட்டு எதுவும்தொடர்பாக லோக்-ஆயுக்தா விசாரிக்கும். மேலும், ஊழலுக்கு தூண்டிவிடுதல், லஞ்சம் அளித்தல் அல்லது லஞ்சம் பெறுதல் அல்லது ஊழல் சதிசெயலில் ஒரு நபருக்கு எதிராக ஈடுபடும் மற்றொருவரின் செயல் அல்லதுநடத்தை எதையும் விசாரணை செய்யலாம்.

புலன் விசாரணை

இந்திய பாதுகாப்பு தொடர்பான குற்றத்தை புலன் விசாரணை செய்யும்நோக்கத்துக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை விசாரிக்க முடியாது.பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி அமர்த்தம்,பணி நீக்கம், ஊதியம், நடத்தை, பணி ஓய்வு, ஓய்வூதியம், பணிக்கொடை,வருங்கால வைப்பு நிதி, பணி நீக்கம், பொது ஊழியர்கள் பணிநிபந்தனைகள் தொடர்பான அம்சங்களை விசாரிக்க இயலாது. லோக்-ஆயுக்தா அமைப்புக்குள் வரும் நபர்களுக்கு வழங்கப்படும் வெகுமதிகள்மற்றும் பரிசுகள்.

ஒப்பந்ததார்கள் கடமையை நிறைவு செய்யத் தவறும் போதோ, மிகையானகாலதாமத குற்றச்சாட்டுகளையோ புகார்தாரர்கள் தெரிவிக்கலாம்.ஆனால், ஒப்பந்த நிபந்தனைகளில் இருந்து எழுகின்ற நிர்வாகநடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கக் கோர முடியாது. உள்ளாட்சிமன்றப் பிரதிநிதிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க முறைமன்றநடுவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுவத்தின் நடுவருடைய அதிகாரஎல்லையின் கீழ் உள்ள நபர் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பானநடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த முடியாது.

முடிவு எடுக்கும்…

லோக்-ஆயுக்தாவிடம் புகார் பெறப்பட்ட பிறகு, அதனை விசாரணைக்குஎடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது அதை நிராகரிக்க வேண்டுமாஎன்பதை முடிவு செய்யும். அரசு ஊழியர்களில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுஊழியர்கள் மீதான விசாரணையை நடத்துவதற்காக விழிப்பணிஆணையத்துக்கு அந்தப் புகார் அனுப்பப்பட வேண்டும்.

லோக்-ஆயுக்தா அமைப்பில் பொய்ப் புகார் அளிக்கும் பட்சத்தில், ஒருஆண்டு காலத்துக்கு நீட்டிக்கப்படும் சிறைத் தண்டனையுடன், ரூ.1 லட்சம்வரை அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகள்…

ஒரு புகாரோ குற்றமோ நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியில் இருந்துநான்கு ஆண்டுகளுக்குள் அது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறுஇல்லாவிட்டால் அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்யக் கூடாது.லோக்-ஆயுக்தாவின் அம்சங்கள் எதுவும் தொடர்பாக, உரிமையியல்நீதிமன்றம் விசாரித்திட அனுமதி இல்லை.

இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. எதிர்ப்பு

இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச்செய்தனர். பின்னர் மசோதாவை ஆளும்கட்சி உறுப்பினர்கள் குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினர்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles