Read in : English
உச்சநீதிமன்றம் துணைநிலை ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரம் குறித்து அளித்த தீர்ப்பில், துணைநிலை ஆளுநருக்கென்று தனி அதிகாரம் இல்லை; அமைச்சரவையின் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டவர் என கூறியுள்ளது. இதுடெல்லி மற்றும் புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. காரணம், இவர்கள் அரசின் மக்கள் நல செயல்பாடுகளையும் மசோதாக்களையும் நிறைவேற்றவிடாமல் தடுத்து வந்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு புதுமையானது அல்ல. அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள், எந்த பாகுபாடுமின்றி தங்கள் கருத்தை பகிர்கையில் துணைநிலை ஆளுநர் என்பவர் அமைச்சரவைச்யின் நியதிகளுக்கு கட்டுப்பட்டவர் என கூறியுள்ளனர். பிரதம மந்திரி அலுவலகம் சொல்வதை செய்யும் கிளிப்பிள்ளைகளாக துணை நிலை ஆளுநர்கள் செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, பாஜக அல்லாத எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் துணைஒலை ஆளுநர்கள் இடைஞ்சலை உருவாக்குகிறவர்களாகவே உள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது என்பது தெளிவு. அதே தேர்தலில் ஆம் ஆத்மிகட்சிக்கும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மக்கள் மகத்தான வெற்றியைக் கொடுத்தனர்.
டெல்லி துணை நிலை ஆளுநர், கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களுக்கு குறுக்கே வந்து இடைஞ்சலை ஏற்படுத்தினார். அதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், அம்மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் முதல்வரான வி.நாராயணாசாமிக்கு எதிராக பல போர்களை நிகழ்த்தினார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புதுவை முதல்வர் நாரயணசாமியும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் வெகுவாகப் பாராட்டினர்.இதுகுறித்து நாராயணசாமி கூறுகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசின் ஒவ்வொரு செயல்களையும் முடிவுகளையும் தடுத்தார் என்றார்.’’நாங்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்லபடுத்த நினைத்தபோது அவை ஒவ்வொன்றுக்கும் கிரண் பேடி முட்டைக் கட்டைபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை புறம் தள்ளி செயல்பட முனைந்தார்’’ என கூறினார். புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏக்களை பாஜக சார்பாக நியமிக்கப்பட்டதை நாராயணசாமி அரசு எதிர்த்தது. காரணம், கடந்த காலங்களில் இந்த நியமனத்தை ஆளும் கட்சி தான் செய்யும். ஆகையால் சபாநாயகர் இந்த நியமன எம்.எல்.ஏக்களின் சட்டசபை வருகை தடுத்தார். இம்மூவரின் நியமனம் பாஜகவின் உயர்மட்ட குழுவாலெடுகக்பப்ட்ட முடிவு என்பது அனைவரும் அறிந்ததே.
ஜனநாயகத்துக்கும் சர்வதிகாரத்துக்கும் இடையேயான போரை, ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து நடத்தியபோது நட்டின் பலபகுதிகலீல் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தேசிய எதிர்க்கட்சி தலைவர்களான மம்தா பேனர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிடட் பல தலைவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில் வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்கள் விநியோகம், சிசிடிவி கேமரா க்டுத்தகொடுப்பது உள்லீட்ட பல்வேறு நலத்திட்டங்களை உடனே செயல்படுத்த முடியும் என்றார். டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிஸோடியா கூறும்போது, முதல்வரின் ஆணையை ஏற்று மூத்த அரசு அதிகாரிகளின் இடமாற்றத்தை உடனே அறிவிக்க முடியும் என்றார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, காவல்துறை,ம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்க வேண்டுமே ஒழிய இந்த விஷயத்திலவரின் முடிவு தேவையில்லை என கூறியுள்ளது. இந்த தீர்ப்புக்குபிறகு தேர்ந்தெக்கப்பட்ட அரசின் செயல்பாடுகள் மீது அத்துமீறுவதை றுகிரண்பேடி நிறுத்துவார் என எதிர்பார்ப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவிக்கிறார். 15 நாட்களுக்கு முன்பு பிரதமருடன் நடைபெற்ற கூட்டத்தில், நாரயணசாமி இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது பிரதமர் அக்கேள்வியை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை மக்கள் இனிமேல் அரசு அறிவித்த நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு ம்ப்ப்தல் போக்கை கைவிட்டு, மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமா? புதுச்சேரி அரசும் முதல்வரும் செயல்படுவதற்கான வழி உண்டாகுமா? துணைநிலை ஆளுநர்கள் இனியும் அரசுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தினால் புதுவை காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமியும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வதைடர்த் தவிர வேறு வழியில்லை.
Read in : English