Read in : English
சென்னை உயர்நீதிமன்றம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அளித்த மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஜூன் 14, 2018 இளைப்பாறுதல் கிடைத்திருக்கிறது. இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இது, எதிர்முகாமில் இருக்கும் 18 எம்.எல்.ஏக்களையும் அணுகி தங்கள் பக்கம் சேர்க்க போதுமான நேரத்தை வழங்கியுள்ளது.
தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி ‘இந்த வழக்கில் சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்’ என்று தீர்ப்பளிக்க, அந்த அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், ‘சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது’ என்று கூறியுள்ளார். அதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் செல்கிறது.
தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி ‘இந்த வழக்கில் சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்’ என்று தீர்ப்பளிக்க, அந்த அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், ‘சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது’
அதிமுக வட்டாரம், தினகரன் அணியில் உள்ள 18 எம்.ஏல்.ஏக்களில் சிலரை தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே கடந்த சில நாட்களாக சட்டப்பேரவை நடந்து வந்த நிலையில் தற்போது 10 நாட்கள் இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் 18 பேரையும் அணுக இயலும் என்பது கூட காரணமாக இருக்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் செய்தது போல், இந்த சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் மன்னிப்புக் கடிதம் கொடுத்து இணையலாமென்றும் அதிமுக வட்டாரம் எதிர்பார்க்கிறது. தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவராக இருந்த ஜக்கையன், கவர்னரை சந்தித்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்தார்.
மூன்றாவது நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை இதே அரசியல் சூழல் தொடர்ந்து நிலவும்.
ஆனால், தான் தவறாக வழிநடத்தப்பட்டதாலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாலும் தான் அக்கடிதத்தை கொடுக்க நேர்ந்தது என சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தில் குறிப்பிட்டார். அதன்பிறகு, ஜக்கையனின் விளக்கம் எற்றுக்கொள்ளப்பட்டு, அவர் சட்டமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கு சபாநாயகர் தனபால் அனுமதித்தார். ஜக்கையன் உருவாக்கியுள்ள இந்த மாதிரி மற்றவர்களாலும் பின்பற்றப்படலாம்.
மூன்றாவது நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை இதே அரசியல் சூழல் தொடர்ந்து நிலவும். அதேவேளையில், இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது. தினகரனின் அமுமுக-வுக்கும் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை காத்திருப்பு தொடரும்.
Read in : English