Read in : English

Share the Article

நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள்  இரண்டாண்டுகள்  நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின்  படிப்பினைகளையும்  ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை நிறுவனருமான  திரு.  பாலாஜி சம்பத்   அவர்களுடன் உரையாடியதிலிருந்து…

 

தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வைக் கண்டு அச்சமடைகிறார்கள் என நினைக்கிறீர்களா?

நீட் தேர்வில் வெற்றியடைவது என்பது கடினமான  விஷயம் அல்ல. இரண்டு வருட மேல்நிலை பள்ளிப் படிப்புக்கு பிறகு படிக்கக்கூடியது நீட் என்று நினைக்கிறார்கள். ஆனால்,   பள்ளியில் படிக்கும் இரண்டு ஆண்டுகளில் தயாரானால் போதும்.

நமது மாநில மாணவர்கள் எங்கு  பின்னடைவு அடைகிறார்கள்?

நமது மாநிலத்தில் மட்டுமல்ல, எல்லாருக்குமே இயற்பியல் கடினமான பாடம். மாணவர்கள் யாருக்கு நல்ல மனப்பாட சக்திஇருக்கிறதோ அவர்களிள் வேதியியலிலும் உயிரியலிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். அவர்களால் வேதியியல்  மற்றும்உயிரியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாவிட்டால் அவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறுவது கடினம்.  இயற்பியல்பாடத்தில் 150 மதிப்பெண் பெறுவதுதான் மிகப் பெரிய சவால். நமது மாணவர்கள் அப்பாடத்தில் 20,30 அல்லது 40 மதிப்பெண்களேபெறுகிறார்கள்.

ஏன் அப்படி? 

கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களில் கணக்குகளைப் போட வேண்டும். அதற்கு அப்பாடங்களை நன்கு புரிந்து வைத்திருந்தால்தான்  அக்கணக்குகளைப் போட முடியும். ஆனால் நீட் பரீட்சை ஜெ.இ.இ. பரீட்சையை விட எளிதானது. என்னுடைய மாணவர்களில்ஒருவரான கீர்த்தனா காசி, நீட் தேர்வில் 676 மதிப்பெண்கள் பெற்று, இந்திய அளவில் 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இயற்பியலில் நல்ல மதிப்பெண் பெறுவதில் தான்  வெற்றி இருக்கிறது.

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற இயலுமா? 

அவர்கள் 11ஆம் வகுப்பிலேயே இதற்கு தயார் செய்ய ஆரம்பித்தால் 450க்கும் மேலான மதிப்பெண்களைப் பெற முடியும்.  ஆனால், அவர்கள் கிராஷ் கோர்ஸ் என்றழைக்கப்படும் குறுகிய கால பயிற்சிக்குச் செல்லக் கூடாது.  இந்த இடைவெளியைதொழில்நுட்பத்தின் மூலம் நாம் பூர்த்தி செய்யலாம்.

Balaji Sampth

‘’மொபைல் ஆப்’ அல்லது ‘டேப்லட்’ மூலம்  பாடங்களை பகிர்ந்து கொள்வதன்மூலம், நீட் தேர்வில் வெற்றியடையலாம். ஆனால் நன்றாகப் படிக்கும் சில மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்குமட்டும் பயிற்சி அளிப்பது நல்ல அணுகுமுறை அல்ல. எல்லா இடங்களிலும் கல்வியின் தரம் மேன்மையடைய வேண்டும்.

தற்போதைய மாநில பாடத்திட்டத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?

நான் ஜெ.இ.இ தேர்வுக்கு கற்றுக்கொடுக்கும் அனைத்தும்,  மாநில அரசின் கணக்கு மற்றும் இயற்பியல் பாடங்களில் உள்ளது. அதில்மேலும் சில பாடங்கள் இருக்கின்றன. நம் பாடத்திட்டத்தில் நாம் பின்தங்கவில்லை.  ஆனால், நம் தேர்வு முறையில் பாடத்தின்  பின்னால் இருக்கும் கேள்விகளை கேட்கும் முறையில் தான் பிரச்சனை. அதேபோல், ப்ளூபிரிண்ட் எனப்படும் மாதிரி கேள்வித்தாள்முறை மாணவர்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தாண்டு,   ப்ளூபிரிண்ட் முறை இல்லை. பாடத்தின் பின்னால்  இருக்கும் கேள்விகள் மட்டுமே. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும் 50 சதவீத கேள்விகள் பாடத்தின்  பின்னால்இருக்கும் கேள்விகளில் இருந்துதான் கேட்கப்படுகிறது.  சிபிஎஸ்இக்கும்  மாநில பாடத்திட்டத்துக்கும்  ஒரே மாதிரியான கேள்விமுறை என்றாலும் அதில் எண்ண்ணிக்கை வேறுபடுகிறது.

செயல்பாட்டு முறையிலும் அதிக சிக்கலாகவும் கேள்வித்தாள்  தயாரிக்கப்பட்டால்  ஏழை கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா? 

என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ஏழை மாணவர்களை  செயல்பாட்டு முறைக்கு  அறிமுகப்படுத்தினால் அவர்கள்நன்றாக செய்வார்கள். அவர்களுக்கு கவனச் சிதறல் குறைவு என்பதால் அவர்கள் இதற்கு பொருத்தமானவர்கள். வசதி படைத்தவர்கள்தான் மனப்பாட முறையை கடைபிடிக்கிறார்கள்.   ஏழை மாணவர்கள் வாய்ப்பு பெறும் இடங்களில் எல்லாம் திறம்படசெயல்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு என்னமாதிரியான தேர்வு யுக்தியை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?

ஒரு பாடத்தில் உள்ள எல்லா தலைப்புகளையும்  கற்கத் தேவையில்லை. சில பாடத் தலைப்பின்  கேள்விகளுக்கு மட்டும் நன்கு பதில்அளியுங்கள். அதன்மூலம் எதிர்மறை மதிப்பெண்களைத் தவிருங்கள். இதனால் 200 மதிப்பெண்களை இழந்தாலும், நல்லமதிப்பெண்களை பெறுவீர்கள். எதை நன்கு படிக்க இயலுமோ  அதனைப்  படியுங்கள்.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day