Read in : English
காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா ஏன் தலைமை ஏற்க வேண்டும்?
காங்கிரஸ் வீழ்ச்சியில் ராகுல் காந்திக்கு முக்கிய பங்குண்டு. சோனியாவின் உடல் நலம் கருதி தலைமை வாரிசுகளுக்கென்றான நிலையில், ப்ரியங்காவையே தேர்ந்தெடுத்திருக்கலாம். கலகலப்பாக பழகக்கூடியவர். அவருக்கும் அவரது பாட்டி இந்திராவிற்கும் கணிசமான உருவ ஒற்றுமை உண்டு. வாக்காளர்களை அவ்வொற்றுமை ஈர்க்கும்....
விடுதலைப் புலிகள் குறித்த வலைப் பதிவுகளை முகநூல் முடக்குவது, கருத்து உரிமைக்கு எதிரானதா?
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடி பேர் கணக்கு வைத்துள்ள முகநூல் (பேஸ் புக்) என்ற சமூக வலைதளத்தில் பகிரப்படும் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் குறித்த தகவல்கள், பிரபாகரனின் புகைப்படம், சர்ச்சைக்குரிய முள்ளிவாய்க்கால் குறித்த தகவல்கள் அல்லது புகைப்படங்கள், தமிழ் தேசியத்தின் கொள்கை ரீதியான...
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் தேவைப்படுகிறது?
கமலா இல்லாத மாளிகை என்னாகும்? சோனியா குடும்பத்தினர் அனைவரும் நீக்கப்பட்டுவிட்டால், காங்கிரஸ் என்னாகும்? காவியமெழுதாத காகிதமாகிவிடுமா? இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? மரணப்படுக்கையில் இருக்கும் கட்சிக்கு புத்துயிர் ஊட்டிவிடமுடியுமா? உயிர்த்தெழும் வித்தை தெரிந்த இயேசு கிறிஸ்து இருக்கிறாரா என்ன?...
கண்ணியமான கிரிக்கெட் ஆட்டத்தில் முறையற்ற விளையாட்டு ஏன்?
உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் விதிகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்த மார்லிபோன் கிரிக்கெட் கிளப் 'மேன்கேடிங்’ என்றழைக்கப்படும் கிரீஸைவிட்டு நகரும் பேட்ஸ்மேனை ரன்அவுட் ஆக்கும் பந்துவீச்சாளரின் செயலை முறையற்ற செயற்பாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இது விதிமுறைகளுக்குப்...
ஆங்கிலம், இந்தியில் நுழைவுத் தேர்வு: தமிழ் வழியில் +2 படித்த மாணவர்களுக்கு மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் எங்கே இடம்?
பிளஸ் டூ படித்து விட்டு, மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பட்டப் படிப்புகளிலோ அல்லது ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்புகளிலோ சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேள்வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,...
சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நழுவவிட்ட ரஞ்சன் என்ற பன்முகக் கலைஞன்!
‘காளிதாஸ்’ திரைப்படத்தோடு தமிழ்சினிமா பேசும்படமானது 1931-இல். ஆனால் பத்தாண்டுகள் கழித்து ஒரு பெரிய சூப்பர்ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார் ரஞ்சன் ; பன்முகத்திறன்களோடும் முதுகலைப் பட்டத்தோடும் உதயமான அந்த மகாநடிகரைப் பார்த்து அரண்டுதான் போனார்கள் புதிய நடிகர்களும் நடிப்புலகில் முத்திரை பதிக்கும்...
கடன் சுமை: எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
ஒரு மாநிலப் பொருளாதாரத்தின் பலங்களும், பலகீனங்களும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ்நாடு ஒரு பெரிய மாநிலம்; அதன் பொருளாதாரம் தேசிய பொருளாதாரத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு...
கோவை மான்ஜாக்: அருகி வரும் அபூர்வமான தாவரத்தை பாதுக்காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நடவடிக்கை
ஜி. குன்ஹி கண்ணன் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் 2001இல் சேர்ந்தபோது, தாவரவியல் தோட்டத்தில் பாலாடைப் போன்ற வெள்ளை நிறப்பூக்களும், ஆரஞ்சுநிறப் பெரிப் பழங்களும் கொண்ட ஒரு தாவரத்தை அவர் காணநேர்ந்தது. அது ஒரு காலத்தில் கோயம்புத்தூர் பகுதியில் மிகப்பிரலமான கோவை மான்ஜாக் (சிறுநறுவிலி)...
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வழங்கும் தானியத்தில் வாழும் நாட்டுப்புறக் கலை!
நாட்டுப்புறக் கலைகளால் நிறைந்தது தமிழகம். வறுமை, வாய்ப்பின்மை, ஆதரவின்மை, நகர்மயமாதல் போன்ற காரணங்களால் பல கலைகள் நலிந்துவிட்டன. பல அழிவின் விளிம்பில் உள்ளன. சுவடுகளே இன்றி மறைந்துவிட்ட கலைகளும் உண்டு. சடங்குகள் சார்ந்து மரபுடன் சில தொடர்கின்றன. சில கால வெள்ளத்தில் எதிர் நீச்சல்...
தனுஷ் நடித்த மாறன்: தயவுசெய்து இந்த மாதிரி பத்திரிகையாளர் திரைப்படங்களை எடுக்காதீர்கள்!
நல்ல போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன; மோசமான போலீஸ் படங்களும் வந்திருக்கின்றன. திருடன் படங்கள்; கிராமத்துப் படங்கள், என்று விதவிதமான படங்களும் வந்திருக்கின்றன. அதைப்போலவே இந்திய சினிமாவில் பத்திரிகையாளர்களை ஒரு கதாபாத்திரமாக்கி வெளிவந்த திரைப்படங்களும் உண்டு. போலீஸ் படங்கள் காவல்துறையினரை...
Read in : English