Read in : English

தமிழர்கள் மிகவும் அபூர்வமாகச் சில பொருள்களைத்தான் யானை என்று அழைப்பார்கள். அவர்கள் மிகவும் பிரியத்துடன் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் ‘குட்டியானை.’ டன் கணக்கான சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு மனிதர்களுக்கு உதவுகின்ற டாடா ஏஸ் மினி-ட்ரக் தமிழ்நாட்டின் தொழில்துறையோடு பிரிக்க முடியாதவோர் உறவைக் கொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் ‘சோட்டா ஹாத்தி’ என்றழைக்கப்படும் இந்த வாகனத்தைத் தமிழர்கள் குட்டியானை என்று பாசத்துடன் சொல்கிறார்கள். தொலைக்காட்சியில் காட்டப்படும் டாட்டா ஏஸ் விளம்பரம் நம்மில் பலருக்கு மலரும் நினைவுகளைத் தரும்.
உலகம் முழுவதும் நிகழும் மின்வாகனப் புரட்சியில் இப்போது குட்டியானையும் சேர்ந்துகொண்டது. இந்த ஆண்டு, டாட்டா ஏஸ் என்ற பெயரில் ஒரு மின்சார மினி-டிரக் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

வணிக மினி-டிரக் தொழில்துறை பற்றிய ஒரு பார்வை
‘குட்டியானை’ என்ற அடையாளப் பெயருடன் டாட்டா ஏஸ் விற்கப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. நம் புரவலர்களில் ஒருவர் ‘க்விக்கார்ஸ்’ இணையதளத்தில் இப்படியொரு நிகழ்வைப் பார்த்திருக்கிறார். ‘ஓஎல்எக்ஸ்’-சில் குட்டியானை விற்பனைக்காக இடம்பெறுவதும் உண்டு.

2005-ல் டாட்டா ஏஸ் தொடங்கப்பட்டது; அன்றிலிருந்து ‘குட்டியானை’ செயற்களத்தில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இடப்பெயர்வுத் தொழில் முனைவோர்களுக்குப் பொருள்களை இடம்மாற்றிக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கிறது; பண்ணை உரிமையாளர்களின் விளைபொருள் போக்குவரத்திற்கும் உதவுகிறது; சாலையில் பழுதாகிக் கிடக்கும் இருசக்கர வாகனங்களை இழுத்துக்கொண்டு போவதற்கும், பல்வேறு கனரக வேலைகளைச் செய்வதற்கும் குட்டியானை பேரளவில் பயன்படுகிறது.

டாடா ஏஸ் வாகனம் குட்டி யானை என்னும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி விற்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன. அண்மையில் சக ஊழியர் ஒருவர் QuikrCars இல் இப்படியொரு விற்பனைச் சம்பவத்தைப் பார்த்தார்.

சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருக்கும் சரக்கு இடம்பெயர்வு நிறுவனங்களும், வணிக வாகன வாடகை நிறுவனங்களும் தங்கள் வணிகப் பெயர்களில் ’குட்டியானை’ என்னும் சொல்லை இடம்பெறச் செய்து டாட்டா ஏஸுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ‘சோட்டா ஹாத்தி’ என்றழைக்கப்படும் இந்த வாகனத்தைத்  தமிழர்கள் குட்டியானை என்று பாசத்துடன் சொல்கிறார்கள். தொலைக்காட்சியில் காட்டப்படும் டாட்டா ஏஸ் விளம்பரம் நம்மில் பலருக்கு மலரும் நினைவுகளைத் தரும்

‘குட்டியானை’ ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களிலும் பரவிக் கிடக்கிறது. சிலர் டாட்டா ஏஸுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தவும், சிலர் தங்களின் டாட்டா ஏஸ் வாகனங்களைச் சந்தைப்படுத்துவதற்கும், சிலர் வெறும் புகழ்மாலை சூட்டவும் குட்டியானை ஹாஷ்டாக்கைப் பயன்படுத்துகிறார்கள்.பெரும்பாலான வணிக மினி-டிரக் உரிமையாளர்களுக்குள் இந்தக் குட்டியானை ‘ஹாத்தி மேரா சாத்தி’ எழுப்பியது போன்ற ஓர் உணர்வை எழுப்புகிறது.

OLX இலும் இப்படியான விற்பனை நிகழ்ந்துள்ளது

ஓர் அசாதாரணமான இருப்பு
டாட்டா ஏஸ் சந்தையில் பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. யானை மரத்தடிகளைச் சுமப்பது போல் இந்த வாகனம் அதிகப்படியான எடையையும் அநாயாசமாக எடுத்துச் செல்லும் இழுவைத் திறன் கொண்டது என்பதே இதன் பெருமை. அதனால்தான் அது குட்டியானை என்று அழைக்கப்படுகிறது.

மினி டிரக் வாகனத்துறையில் உயர்ந்த இயக்கவிசை இன்ஜின் அற்புதங்களை நிகழ்த்துகிறது. ஏஸின் பல்வேறு வடிவ வாகனங்கள் தங்களின் எடைக்கும் மேலான சரக்குகளையும் சுமந்துசெல்லக்கூடியவை என்று டாட்டா நிறுவனம் சொல்கிறது.
டாட்டா ஏஸ் 750 கிலோகிராம், முக்கால் டன், எடையைச் சுமக்கக்கூடியது என்று அந்த நிறுவனம் சொல்கிறது.

ஆனால், நடைமுறையில் ஒரு டன் அளவுக்குச் சரக்குகளை ஏற்றிச்செல்லும் குட்டியானை உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் இருக்கிறார்கள்.அண்மையில் வந்த டாட்டா ஏஸ் மின்ட் பெரியதோர் இன்ஜினைக் கொண்டிருப்பதால் அந்த வாகனம் ஒரு டன் எடையுள்ள சரக்குகளையும் சுமந்துசெல்கிறது. ஆனால், அது அசல் டாட்டா ஏஸைப் போன்ற உற்சாக உணர்வைக் கொடுப்பதில்லை.

அசலான டீசல் குட்டியானை நிமிடத்திற்கு 2,000 சுழற்சி விகிதத்தில் (ஆர்பிஎம்) 45 நியூட்டன் மீட்டர் இன்ஜின் இயக்கவிசையை உருவாக்குகிறது. பெட்ரோல் குட்டியானை நிமிடத்திற்கு 2,500 சுழற்சி விகிதத்தில் (ஆர்பிஎம்) 55 நியூட்டன் மீட்டர் இன்ஜின் இயக்கவிசையை உருவாக்குகிறது. இந்த இயந்திர வலிமையால்தான் குட்டியானை பெரும் பாரத்தையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

சமீபத்தில் வந்த டாட்டா ஏஸ் கோல்ட் எச்டி பிளஸ் வாகனம் நிமிடத்திற்கு 2,750 சுழற்சி விகிதத்தில் (ஆர்பிஎம்) 85 நியூட்டன் மீட்டர் இன்ஜின் இயக்கவிசையை உருவாக்குகிறது. மேலும், 36 பாகைக் கோணத்தில் மேலேறும் திறன் கொண்டது. இதில் குளிர்சாதன வசதியும் இருக்கிறது. அதனால் வியர்வை சிந்தாமல் சரக்குகளைக் கொண்டு செல்ல முடியும். டாட்டா ஏஸின் சிறப்பான புகைபோக்கிக் கட்டமைப்பு சரக்கு இடம்பெயர்வு வணிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க:
தமிழகத்தில் டாப் கியரில் ஒரு மின்சார வாகனப் புரட்சி: உபயம் சீன நிறுவனம்

அம்பாசடர் மீண்டு(ம்) வருகிறது, மின்சாரக் கனவோடு

பசுமையாகும் குட்டியானை
இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான டாட்டா ஏஸ் ஈவி (மின்சார வாகனம்), சிறிய வணிக வாகனத்துறையில் தொடர் இடப்பெயர்வுத் தொழிலுக்குப் புதியதோர் அர்த்தத்தைத் தந்திருக்கிறது. போதுமான அளவுக்குச் சிறப்பான அம்சங்கள் கொண்ட மின்மயமான குட்டியானையில் புகை வெளிப்பாடு பூஜ்யம்தான்.

154 கி.மீ. வீச்சு கொண்டது என்று சான்றளிக்கப்பட்டிருப்பதால் மாநகரத்தில் சுற்றி ஓடுவதற்கு உகந்தது குட்டி யானை. மின்மயமான குட்டியானையால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர் போன்ற சென்னையின் துணைக்கோள் நகரங்களுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற சற்றுத் தொலைவிலிருக்கும் நகரங்களுக்கும் சரக்குகளைக் கொண்டுபோக முடிகிறது.

நீரும், தூசும் அண்டாது என்று இன்ஜினிலிருந்து சக்கரங்களுக்கு அல்லது அச்சுக்குக் கடத்தப்படும் மின்சக்திக் கட்டமைப்புக்கு ஐபி67 (இங்ரெஸ் புரடக்க்ஷன்) தரமதிப்பைப் பெற்றிருக்கும் இந்த டாட்டா ஏஸ் மின்வாகனத்தில் சில கைப்பிடிகள், லீவர்கள், பொத்தான்கள் தவிர, உள்பகுதி முழுவதும் மின்னணுமயமானது. எளிதாகவும் பாதுகாப்பாகவும் மின்னேற்றம் செய்வதற்கு ஏதுவாக ஒரு மின்னேற்ற உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிக்கப்பட்ட ஓர் ஆணை மையத்தின் மூலமாக நேரலைக் கண்காணிப்பு வசதி இருப்பதால் தொடர்புகொள்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

டாட்டா ஏஸ் ஈவி குன்றிலிருந்து சரிவுப் பாதையில் கீழே இறங்கிவரும்போது மிகவும்  தேவையான பிரேக் கட்டமைப்பு மின்சார மீளுருவாக்க அம்சத்தைக் கொண்டிருக்கிறது

சுமக்கக்கூடிய சரக்கின் எடை 750-லிருந்து 600 கிலோகிராமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தூரங்களைக் கடக்க இந்த மின்வாகனம் மலிவானதொரு மாற்றுதான். 22 பாகைக் கோணத்தில் மேலேறும் இதன் திறன் கிட்டத்தட்ட அசல் ஏஸைப் போன்றது.

டாட்டா ஏஸ் ஈவி குன்றிலிருந்து சரிவில் கீழே இறங்கிவரும்போது மிகவும் தேவையான பிரேக் கட்டமைப்பு மின்சார மீளுருவாக்க அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரியை 105 நிமிடத்திற்குள் (இரண்டு மணி நேரத்திற்கும் குறைவானது) விரைவாக 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதத்திற்கு மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்; 20-லிருந்து 100 சதவீதத்திற்குச் செய்யப்படும் வழக்கமான மின்னேற்றத்திற்கு சுமார் 7 மணிநேரமாகும்.

மொத்தத்தில், புதிய மின்சாரக் குட்டி யானை தொடர் வணிக இடப்பெயர்வுத் தொழிலுக்குப் பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுத்திருக்கிறது. அமைதியான இந்தப் புதிய குட்டியானை புகைமாசு இல்லாத ஓர் எதிர்காலத்துக்குள் நம்மைக் கொண்டுபோகிறது. மூத்த குட்டியானைகள் அனைத்தும் அந்தப் பசுமை உலகத்தை வடிவமைக்கப் பெரிதும் உதவும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival