Read in : English
மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கைத் தவிர்க்க ஆளுநருடன் திமுக மென்மை போக்கா?
ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்பது திமுக நிறுவனரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாவின் பிரபலமான வாசகம். Ñமாநிலங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை அதிகாரத்தை ஒடுக்குவதற்காக ஆளுநர் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்பதற்காக அவர் அப்படிக்...
பாரம்பரிய நெல்: மக்கள்மயமாக்க என்ன செய்ய வேண்டும்?
மரபு நெல்லினங்களை சாகுபடி செய்யும் உழவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுணி ஆகிய நெல்லினங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், மதுரை, தஞ்சாவூர் என்று அனைத்து மாவட்டங்களிலும் மரபு நெல்...
மசூதிகளை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது கோவில்களை இந்துக்கள் நிர்வகிக்க கூடாதா?: உண்மையை மறைக்கும் பிரச்சாரம்!
இஸ்லாமிய மத நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நிர்வகிக்கும் போது இந்து கோவில்களை ஏன் அரசு நிர்வகிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இஸ்லாமிய மத நிறுவனங்களையும், அதற்கு கொடுக்கப்படும் நன்கொடைகளையும் சொத்துகளையும் அரசுதான் நிர்வகிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை போல,...
சூராதி சூரர்களின் ரகசியம்
பேச்சு வழக்கில், 'இவரு பெரிய சூரனா..’ என்ற சொற்றொடரை உபயோகிப்பது, தமிழகம் முழுதும் சாதாரண நடைமுறை. சிலரை, 'வீராதி வீரன்... சூராதி சூரன்...' என புகழ்ந்து உரைப்பதும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக, ‘சூரன்’ என்ற சொல்லை, ‘அறிவில் சிறந்தவன்’ என பொருள் கொள்கிறது விக்சனரி என்ற தமிழ் அகராதி. நாய்,...
கிராமபோன் தமிழ் இசைத்தட்டுகள்: காலவெள்ளத்தில் காணாமல்போன இசை வரலாற்றைத்தேடி நெடும் பயணம்
ஒரு காலத்தில் கல்யாண வீடுகளிலும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்னும் முழங்கிய இசைத் தட்டுகளும் அந்த இசைத் தட்டுகளை இசைத்த கிராமபோன் பெட்டிகளும் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து மறைந்து எங்கோ ஒரு சில வீடுகளில் வெறும் அலங்காரப் பொருளாக மாறிவிட்டன....
கொரோனா பாதிப்பு: புதிய திருடர்கள் உருவாகிறார்களா?
கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதரங்களை இழந்த ஒரு சிலர் புதிய திருடர்களாக உருவாகியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோவைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைப் பார்க்கும்போது இந்த சந்தேகம் மேலும் உறுதியாகிறது. வணிகர்களும் நில உரிமையாளர்களும் அதிமாக வாழும் கோவையில்...
ருத்ரய்யாவின் படத்தில் நடிக்க மறுத்தாரா ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புடன் தீபாவளி நாளில் வரவிருக்கிறது. ரஜினியின் தீபாவளிப் படங்களில் மறக்கமுடியாதது அவள் அப்படித்தான். அது பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவில்லை. பெரிய வெற்றியையும் பெறவில்லை. அது இயக்குநருக்கு முதல் படம். அண்ணாத்த போல் அது வணிக...
பிரிட்டிஷ் ராணியின் சொந்த பறையர் ரெஜிமென்ட்
வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அம்பேத்கருடன் கலந்துகொண்ட அய்யா இரட்டைமலை ஸ்ரீனிவாசனுக்கு பல பெருமைகள் உண்டு. நான் தாழ்த்தப்பட்டவன் தானே என்று பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ்க்கு கைகொடுக்க மறுத்தவர். 1931 - 32 வட்டமேசை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனிப்...
நெல்லும் மரபும்: பாரம்பரிய நெல் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
'சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே' இப்படியாக கரிகால் பெருவளத்தானை, முடத்தாமக்கண்ணியார், பொருநராற்றுப்படையில் அழைக்கின்றார். இங்கு நாம் நோக்க வேண்டிய செய்தி, சாலி நெல் என்ற சொற்கோவை. வேலி நிலத்தில் ஆயிரம் கலம் விளையும் சாலி என்ற நெல்லைப் பற்றிய...
சசிகலா பயணம்: அதிமுகவில் ஜாதிய மோதல் தீவிரமாவதன் அடையாளமா?
தமிழ்நாட்டில் தேவர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அவரது ஆட்சிக் காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் முப்பது ஆண்டுகளுக்கு மேல் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதற்கு பதிலடி கொடுக்கும்...
Read in : English