Read in : English

சென்னையிலுள்ள ஆற்று முகத்துவார சூழல் அமைப்புகளில் மிக முதன்மையானது அடையாறு சிற்றோடை. மீன் பண்ணை தொழிலில், அனைந்திந்திய திட்ட அமைப்பின் கீழ், இந்த சிற்றோடைக்குப் பக்கத்தில் மீன் மற்றும் இறால் பண்ணைகள் அமைக்கும் வேலைகளில், 1950களில் ஈடுபட்டது தமிழக அரசின் மீன்வளத்துறை. தென் இந்தியாவில் இதுதான் முதல் உவர்நீர் இறால் பண்ணையாக இருந்தது. ஆனால், அதன் பிறகு சென்னையின் நகரமயமாக்கல் காரணமாக, அடையாற்று முகத்துவாரம், வளர்ச்சி ரீதியான ஆக்கிரமிப்பின் காரணமாகவும், சுத்திகரிக்கப்படாத கழிவுகளின் காரணமாகவும், சாயக் கழிவுகளின் காரணமாகவும், திடக் கழிவுகளின் காரணமாகவும் அதன் தேவை நல்நிலையை இழந்துவிட்டது.
இத்தகைய சூழல் அழிப்பின் காரணமாக, உவர்நீர், அதைச் சுற்றியிருந்த தாவர சூழல், செதில் மீன்கள், மட்டி மீன்கள் போன்ற வளங்களும் அழிந்திருக்கின்றன. அடையாற்று முகத்துவாரத்தின் சூழலை மறுபடி மீட்க, தமிழ்நாடு அரசு பல முக்கிய மீட்பு முயற்சிகளை எடுத்துவருகிறது. அடையாற்று சிற்றோடையின் சூழலை மீட்பதற்காக, ஜனவரி 2008ல், 58 ஏக்கர் பகுதியை சேர்ந்த சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை (சி.ஆர்.ஆர்.டி), 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், 2015ல், இந்திய அரசுக்குக் கீழ் இயங்கும், ஐ சி ஏ ஆர் செண்ட்ரல் இண்டிட்யூட் ஆஃப் ப்ராக்கிஷ்வாட்டர் அக்வாகல்ச்சர் (CIBA), சி.ஆர்.ஆர்.டியுடன் இணைந்து நீர் தரத்தையும், உயிரியல் கூறுகளையும் ஆய்வு செய்யும் ஒரு கூட்டு ஆய்வுப்பணியை மேற்கொண்டது. சிற்றோடையின் பயாட்டிக் மற்றும் ஏபயாட்டிக் கூறுகள் அனைத்தும் தேவையான அளவுகளில் இருப்பதாகவும், உவர்நீர் அக்வாகல்ச்சர் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில் இருப்பதாக முடிவுகள் தெரிவித்தன. 2016-2017ல், இந்த நீர்நிலையில் பண்ணை அமைப்பதற்கான தகுதியான இனத்தைக் குறித்து மதிப்பிடுவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட செதில் மீன்கள் மற்றும் மட்டி மீன்கள் கேஜ் மற்றும் பென் முறையில் வைத்து சோதனை தொடங்கப்பட்டது. பால் மீன், மிஸ்டஸ்குலியோ, சீபாஸ், ஸ்னாப்பர், பெர்ல்ஷாட் மற்றும் நண்டு ஆகியவையும் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டன.
சி.ஆர்.ஆர்.டியால் எடுக்கப்படும் இந்த சிற்றோடை மீட்பு முயற்சி பலனளிப்பதாகவும், ஆற்று முகத்துவார சூழல் மறுபடியும் தனது நிலையில் மீண்டுவருவதாகவும், மீன்கள் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தது இந்த ஆய்வு. இந்த திறனைக் கருத்தில்கொண்டு, பென் மற்றும் கேஜ் உவர்நீர் அமைப்புகளைக் கொண்டு நிலையான பண்ணை முறைகளைப் பயன்படுத்தி, உகந்த செதில் மற்றும் மட்டி மீன் வளர்ப்பதற்கான சூழல் இருப்பதை தெரிவித்தது CIBA அமைப்பு. அடையாறு சிற்றோடைக்குப் பக்கத்தில் இருக்கும் சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம் மற்றும் முள்ளிமாநகர் ஆகிய பகுதி மக்கள், வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் நிலையான உவர்நீர் அக்வாகல்ச்சருக்கான பங்குதார கிராமங்களாக அறியப்பட்டிருக்கிறது.
உவர்நீர் பென்கல்ச்சர் மற்றும் கேஜ் பண்ணைமுறை ஆகியவை, டிசம்பர் 2017 மற்றும் ஃபிப்ரவரி 2018ன் போது,  பால் மீனுக்கும், நண்டு பண்ணையத்திற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. CIBA விஞ்ஞானிகள், அதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமத்தினருக்கு வழங்கி வந்தனர். அடையாறு பார்மெளத் மூடியதன் காரணமாக அடையாற்று சிற்றோடையை நோக்கிய கடல் நீர்வரத்து ஜனவரியிலிருந்து கணிசமாக நின்றிருக்கிறது. கடல்நீர் மற்றும் அடையாற்று சிற்றோடைக்கு இடையிலான நீர் போக்குவரத்தை மணல் மேடுகள் தடுப்பதால், நீர் தரம் கெடுவதற்கும், சிற்றோடையில் உயிர்களுக்கான சூழலை தடுத்து மீன்கள் இறப்பிற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த கேடுகள் இருப்பினும் கூட, கிராமங்களில் உள்ள பயனாளிகள், 18, 785 ரூபாய் மதிப்பிலான மீன் மற்றும் நண்டுகளை பிப்ரவரி 2018ல் பெற முடிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கிராமங்களுக்கு அருகிலுள்ள சுய உதவிக்குழுக்களின் ஆதரவுடன், CIBA மற்றும் அடையாற்று முகத்துவார CIBA-இன் உவர்நீர் அக்வாகல்ச்சர் முயற்சிகள், வருவாயை ஈட்டும், தொழிலை உருவாக்கும் உணவு உருவாக்கும் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. எனினும், குறிப்பாக கோடை நாட்களில், அடையாற்று பார்மெளத் பகுதி அடைத்திருப்பதன் காரணமாக, மணல்மேடு உருவாகுதல் ஒரு தடையாகவும், அக்வாகல்ச்சர் நடைமுறை மற்றும் ஆரோக்கியமான உயிர்நிலைக்கு தடையாகவும் உருவெடுத்திருக்கிறது.

கோடை நாட்களில், அடையாற்று பார்மெளத் பகுதி அடைத்திருப்பதன் காரணமாக, மணல்மேடு உருவாகுதல் ஒரு தடையாகவும், அக்வாகல்ச்சர் நடைமுறை மற்றும் ஆரோக்கியமான உயிர்நிலைக்கு தடையாகவும் உருவெடுத்திருக்கிறது

ஆற்று முகத்துவாரத்தில் உயிர்நிலை சூழலை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டும், அக்வாகல்ச்சரை மேம்படுத்தி உணவு, வருவாய், தொழில்வாய்ப்பை  அருகிலுள்ள கிராம மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டும், சி ஆர் ஆர் டி , சென்னையின் இதயமான அடையாறு சிற்றோடைப் பகுதியில் எழில் மீட்புப் பணிக்காக, 60 கோடியை ஏற்கனவே செலவழித்திருக்கிறது. தொடர்புடைய அரசுத் துறை மற்றும் சி ஆர் ஆர் டி இணைந்து செய்யும், தொடர்ச்சியான நீர் வரத்து மற்றும் தாராள நீர்வழி ஏற்படுத்துதல் முயற்சிதான், இந்த திட்டத்திற்கான ஆதாரத் தேவையாகும். 
மாநில அரசினால் சிரத்தையுடன் மேற்கொள்ளப்படும்  அடையாறு சிற்றோடை மீட்பு மற்றும் சுத்திகரிப்புப் பணிகளும், நீரின் மூலமாக வாழ்வாதார உணவு உருவாக்க பணிகளும், நகர அமைப்புகளில் ஆற்று முகத்துவார நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முன்மாதிரியாக விளங்குகிறது.
(இந்தக் கட்டுரையை எழுதியவர்கள் செண்ட்ரல் இண்டிட்யூட் ஆஃப் ப்ராக்கிஷ்வாட்டர் அக்வாகல்ச்சரை (CIBA) சேர்ந்த பி மகாலக்‌ஷ்மி, சி பி பாலசுப்ரமனியன், ம கைலாசம், ர சரஸ்வதி, த ரவிசங்கர், அரித்ர பேரா, சி வி சாய்ராம், ர அரவிந்த், ச சிவஞானம், க க விஜயன்)
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival