Read in : English

தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் சர்ஃபிங் என்று பெயரில் அழைக்கப்படும் அலைமிதவைச் சவாரி பிரபலமடைந்து வருகிறது. இந்த சர்ஃபிங் விளையாட்டு உள்ளூர் மக்களை மட்டுமல்ல சர்வதேச சுற்றுலா பயணிகளையும் வசீகரித்து வருகிறது.

மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து அலைகடல் ஓர் அதிசயம்தான். அதில் ஆடுவதும் ஓடி விளையாடுவதும் ஆனந்தமயமான கேளிக்கை. தற்போது, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள சர்ஃபிங் விளையாட்டு இடங்கள்

அனைத்து மட்டங்களிலும் உள்ள சர்ஃபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளன. கடல் அலைகளில் சவாரி செய்ய விரும்பும் சர்ஃபர்கள் உலகத்தின் சொர்க்கமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும், சுற்றுலாத் துறையும் பெரும் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றன.

கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன், ஜான்டி ரோட்ஸ் போன்ற சர்வதேச பிரபலங்களை தமிழக சர்ஃபிங் மையங்கள் ஈர்க்கத் தொடங்கியுள்ளன. மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள சர்ஃபிங் பள்ளிகளில் பயிற்சி பெற்ற இளம் சர்ஃபர்கள் சோழ மண்டலக் கடற்கரை, மலபார் கடற்கரை, கொங்கன் கடற்கரை பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் பதக்கங்களையும் கோப்பைகளையும் ரொக்கப் பரிசுகளையும் வென்று வருகின்றனர்.

கடல் அலைகளில் சவாரி செய்ய விரும்பும் சர்ஃபர்கள் உலகத்தின் சொர்க்கமாகத் தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு அரசும், சுற்றுலாத் துறையும் பெரும் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றன

கடந்த வாரம் மங்களூரில் நடைபெற்ற நான்காவது தேசிய ஓபன் சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தமிழகத்தின் இளம் சர்ஃபிங் வீரர்கள் முதலிடங்களைப் பிடித்தனர். கிரண்குமாரும், கமலியும் தமிழக சர்ஃபர்களைத் தலைநிமிரச் செய்திருக்கின்றனர்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை கடற்கரைகளில் சர்ஃபிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பெரும் ஊக்கம் அளித்து வருகிறது.

சர்ஃபிங் வசதிகளை விளம்பரங்கள் மூலமாக சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கிறது சுற்றுலாத் துறை. ”வெளிநாடுகளில் நடக்கும் அனைந்திந்திய திருவிழாக்களில் தமிழ்நாடுக் கடற்கரையில் இருக்கும் சர்ஃபிங் இடங்களை சுற்றுலா துறை பிரபலப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து கூட சர்வதேச சர்ஃபர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்.

மேலும் படிக்க: பாலூட்டி கடற்பசுவைக் காப்பாற்றிய மீனவர்கள்

சர்ஃபிங் போட்டி நடைபெறும் காலங்களில் மாநிலத்திலிருக்கும் சர்ஃபிங் பயிற்சிப் பள்ளிகளிலும், சர்ஃபிங் நடைபெறும் இடங்களிலும் சர்வதேச சர்ஃபர்கள் நிரம்பி வழிகிறார்கள்,” என்று அரசாங்க ஒருங்கிணைப்பாளர் முத்துராமன் கூறினார்.

ஒரு திரைப்பட நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனராக பணிபுரியும் நியூசிலாந்தைச் சேர்ந்த சர்ஃபர் மைக்கேல் ஹச்சின்ஸ் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளுக்குச் செல்கிறார். “தமிழ்நாட்டின் சர்ஃபிங் வசதிகள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பையும், சிலிர்ப்பையும் வழங்குவதை நான் காண்கிறேன். இந்தியாவின் பிற பகுதிகளை விட தமிழகக் கடற்கரையில் இருக்கும் சர்ஃபிங் வசதிகள் மிகவும் சிறந்தவை; தங்குமிடங்களின் வாடகைகளும் மலிவு,” என்கிறார் அவர்.

புராதனக் கோயில்களுக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், சர்ஃபிங் வசதிகளையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது

சென்னைக்கு அருகிலுள்ள ஒரு அழகிய கிராமத்தில் அமைந்துள்ள கோவளம் அழகிய கடற்கரைகளைக் கொண்டிருக்கிறது. ஆரம்பநிலை சர்ஃபர்களுக்கான லட்சிய ஸ்தலம் இதுதான். அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டிருக்கும் சர்ஃப் பயிற்சிப் பள்ளிகள் புதியவர்களை சர்ஃபிங் உலகிற்கு இட்டுச் செல்கின்றன.

கடந்த வாரம் மங்களூரில் நடைபெற்ற நான்காவது தேசிய ஓபன் சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தமிழகத்தின் இளம் சர்ஃபிங் வீரர்கள் முதலிடங்களைப் பிடித்தனர்

முக்கியத்துவம் வாய்ந்த ராமேசுவரம் நகரம் சிலிர்ப்பூட்டும் சர்ஃப் அனுபவம் பெறுவதற்கான மற்றுமொரு இடம். ஆர்ப்பரிக்கும் அலைகள் மத்தியில் ஒரு ஜீவத்துடிப்பான சர்ஃபிங் கலாச்சாரத்தை இங்கே அனுபவமிக்க சர்ஃபர்கள் கட்டமைக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மணப்பாடு நெரிசல் இல்லாத அலைகளுக்கிடையே அமைதியான சர்ஃபிங் அனுபவத்தைத் தருகிறது. ஒதுக்குப்புறமான இந்த ஊர் இயற்கையுடன் இணைவதற்கும், அலைகளில் இடையூறு இல்லாமல் சவாரி செய்வதற்கும் மிகவும் ஏற்ற இடம்.

தமிழகத்தில் வளர்ந்துவரும் சர்ஃபிங் உள்கட்டமைப்பு இந்த விளையாட்டின் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் சீராக வளர்ந்து வருகிறது. சர்ஃப் பயிற்சி மையங்கள் கடற்கரைகளில் உருவாகியுள்ளன. இவை சர்ஃபிங்கை ஊக்குவிப்பதிலும், ஆரம்பநிலைப் பாடங்களை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் படிக்க: தந்த வர்த்தகமும் கடத்தலும் இன்னும் முற்றிலும் அழியவில்லை

நாடு முழுவதிலுமிருந்தும், அதற்கு அப்பாலும் சர்ஃபர்களை ஈர்க்கும் சர்ஃபிங் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. மாநிலத்தில் முதன்முதலாக சர்வதேச சர்ஃபிங் போட்டி 2011இல் நடந்தது. . இந்த நிகழ்வுகள் உள்ளூர் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை அளிப்பதுடன்

மட்டுமல்லாமல், சர்ஃபர்களிடையே சமூக உணர்வை வளர்ப்பதோடு, தமிழ்நாட்டில் சர்ஃபிங் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இந்தத் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள், உணவு ஸ்டால்கள் மற்றும் துடிப்பான சர்ஃபிங் காட்சியைக் கொண்டாடும் பிற நடவடிக்கைகளும் அடங்கும்.

தமிழ்நாட்டில் உள்ள சர்ஃபிங் விளையாட்டுக் கடைகளில் பலவிதமான சர்ஃபிங் கியர் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. உங்களுக்கு ஒரு புதிய போர்டு, வெட்சூட் அல்லது பாகங்கள் தேவைப்பட்டாலும், இந்தக் கடைகளில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உயர்தர தயாரிப்புகள் உள்ளன. அவை உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்கின்றன.

சர்ஃபிங்கில் பாதுகாப்பு மிக முக்கியமானது. மேலும் சர்ஃபர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதன் முக்கியத்துவத்தை தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. சர்ஃபிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சர்ஃபிங்கின் நிர்வாக அமைப்பாகும்.

கர்நாடக சர்ஃபிங் அசோசியேஷன் (கேஎஸ்ஏ), ஒரிசா சர்ஃபிங் அசோசியேஷன் (ஓஎஸ்ஏ) மற்றும் தமிழ்நாடு சர்ஃபிங் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (ஸ்வாட்) ஆகியவை மாநில சங்கங்களாகும். தமிழக அரசும் அனைத்து தரப்பு சர்ஃபர்களின் பாதுகாப்பு அம்சங்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

கோவளம் பாயிண்ட் சர்ஃப் திருவிழா என்பது சென்னை கோவளம் கடற்கரையில் உள்ள சர்ஃப் டர்ஃப் அருகே நடைபெறும் வருடாந்திர நிகழ்வாகும். இந்தத் திருவிழா லாங்போர்டு, ஷார்ட்போர்டு மற்றும் ஸ்டாண்ட்-அப் துடுப்பு பலகை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டியிடும் தேசிய மற்றும் சர்வதேச சர்ஃபர்களை ஈர்க்கிறது. உலகெங்கிலும் இருந்து சர்ஃப் ஆர்வலர்களை ஈர்க்கும் இந்த திருவிழா ஒரு முக்கிய சுற்றுலா வசீகரமாக மாறியுள்ளது.

ஆரோவில், பிக் ராக், செராய் கடற்கரை, ஹவாஸ் கடற்கரை, கன்னியாகுமரி, கோவளம், மகாபலிபுரம், மணப்பாடு, பாபநாசம் கடற்கரை, பாண்டிச்சேரி, பூவார், ராமேஸ்வரம், தொட்டப்பள்ளி, திருச்செந்தூர், வர்கலா, வாசுவின் வத்திக்கோட்டை ஆகியவை சிறந்த சர்ஃப் சர்பிங் விளையாட்டு இடங்களாகும்.

தமிழகத்தில் வளர்ந்துவரும் சர்ஃபிங் உள்கட்டமைப்பு இந்த விளையாட்டின் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் சீராக வளர்ந்து வருகிறது. சர்ஃப் பயிற்சி மையங்கள் கடற்கரைகளில் உருவாகியுள்ளன

சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலையில் 45 நிமிட பயணத்தில் அடையக் கூடிய கோவளம் ஒரு விசித்திரமான மீனவ கிராமம். இது இந்தியாவின் முதல் சர்ஃபிங் கிராமமாக மாறியுள்ளது. இங்கே நீருக்கடியில் உள்ள பாறைகள் ஆண்டு முழுவதும் ஆனந்தமயமான சர்ஃபிங் அனுபவத்தைத் தருகின்றன. கோவளத்தில் நடத்தப்படும் ஆண்டு விழாக்கள் மற்றும் போட்டிகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில்முறை சர்ஃபர்கள் மற்றும் ஆர்வலர்களை ஈர்க்கின்றன. உள்ளூர் சர்ஃபர்களின் கவனிப்பு மற்றும் மக்களின் விருந்தோம்பல் கோவளத்தை சர்ஃபர்களின் மனம்கவர்ந்த ஸ்தலமாக மாற்றியுள்ளது.

மூழ்கிப்போன சில புராதன கோயில்கள் மீது அடித்துக் கொண்டிருக்கும் அலைகளில் சவாரி செய்யும் கற்பனை எப்போதாவது உங்களுக்கு இருந்திருக்கிறதா? தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரைகளில் அமைந்துள்ள மகாபலிபுரம், வங்காள விரிகுடா அலைகளில் சவாரி செய்யும் தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. பல்லவ வம்சத்தின் பண்டைய துறைமுக நகரமான மகாபலிபுரத்தில் பல சர்ஃபிங் பள்ளிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளன. பள்ளிகள் ஆரம்பநிலை சர்ஃபர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன.

கடல் மற்றும் நாட்டின் கலாச்சார, கட்டடக்கலை மற்றும் பாரம்பரிய அதிசயங்களைச் சமமாக நேசிக்கும் சாகசக்காரர்களுக்கு வரலாற்று நகரமான ராமேஸ்வரம் சிறந்த இடமாகத் திகழ்கிறது. இந்தியப் பெருங்கடலின் தெளிவான நீல நீரலைகளுக்கு அருகில் அமைந்துள்ள ராமேஸ்வரம், காற்று சர்ஃபிங் மற்றும் ஸ்டாண்ட்-அப் போர்டிங் ஆகிய வசதிகளை வழங்குகிறது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival