Read in : English
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அபார சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன், ஆகப்பெரும் பேட்டிங் ஜாம்பவான்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிய மிகப்பெரிய கிரிக்கெட் கலைஞர். ஆனால் சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு எதிரான அவரது பந்து வீச்சு சாதாரணமாகவே இருந்தது ஆச்சரியம்.
லெக் ஸ்பின் பவுலிங் என்பது ஒருகலை. ஆஃப் ஸ்பின் பந்துவீச்சைப் பலர் செய்யமுடியும். ஆனால் ’லெக் ஸ்பின் பவுலிங்’ வித்தையில் நிபுணத்துவம் அடைந்த ஒருவரால்தான் ஆகப்பெரும் புகழை அடையமுடியும். லெக் ஸ்பின் பவுலிங்கில் கரை கண்ட கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்.
அவரது பந்துவிசைப் பாதை (வளைவு), பந்தை காற்றின் ஊடாய்த் திரிய வைத்தல் ஆகியவை கிட்டத்தட்ட முழுமையானவை. அவரது பந்தின் தாராளமான வீச்சு பேட்ஸ்மனை அதைநோக்கி வரவழைக்கும். ஆனால் பந்து திடீரென்று முன்னால் தூரமாய்ப் போய்விழுந்து பேட்ஸ்மேனைக் குழப்பிவிடும்.
’லெக் ஸ்பின் பவுலிங்’ வித்தையில் நிபுணத்துவம் அடைந்த ஒருவரால்தான் ஆகப்பெரும் புகழை அடையமுடியும். லெக் ஸ்பின் பவுலிங்கில் கரை கண்ட கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்.
ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். மைக் காட்டிங், சந்தர்பால், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோரிடம் அவரது பந்து வீச்சு எடுபடும். ஆனால், சச்சின், திராவிட், கங்குலி அல்லது லட்சுமண் ஆகியோருக்கு எதிராக அவரது பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஆனால், அவரது பந்து வீச்சை அவர்கள் சுலபமாக அடித்து விளையாடியது தீவிர கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
ஷேன் வார்ன் பற்றிய தரவுகள் அவரது மேதமையின் நிஜமான அடையாளம். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஆட்டக்காரர் அவர்தான். சர்ச்சைகள் மட்டும் எழாமல் இருந்திருந்தால் இன்னும் பல நூறு விக்கெட்டுகளாகவாவது எடுத்திருப்பார். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சாதித்த மூன்று தொடர் வெற்றிகளும், 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆட்டத்தில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாத நாடாகத் தோன்றிய தென்னாப்ரிக்காவைத் தடுத்து நிறுத்திய அவரது முதன்மையான பந்து வீச்சுத் தாக்குதலும் கிரிக்கெட் வரலாற்றில் அமரத்துவம் பெற்றவை.
ஆனால், இந்தியர்கள் அவரால் பெரிதும் கவரப்பட்டது போலத் தெரியவில்லை. அவரது ஆஸ்திரேலிய பாணியிலான அதிரடி ஆட்டமும், எதிரியைத் திட்டி கவனத்தைச் சிதறடிக்கும் அவரது உத்தியும், சுழற்பந்தை அடித்துவீசும் இந்திய பேட்ஸ்மேன்களை கலங்க வைக்க முடியவில்லை. அவரது பந்தை எளிதாக எதிர்கொண்டார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள்.
1992இ-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இறங்கிய அவரது முதல் முயற்சியை அவர்கள் எளிதில் கடந்து போனார்கள். ரவி சாஸ்திரி அவரை ஆணித்தரமாகத் தோற்கடித்தார்; அவரது முதல் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலக்கப்பட்டார். இந்தியாவிற்கு எதிரான அந்த முதல்முயற்சி அநேகமாக நல்லதுக்காக இருந்திருக்கலாம். ஷேன் வார்ன் தன் செயற்பாட்டை மீளுருவாக்கம் செய்தார்; தன் திறன்களை மேம்படுத்தினார்; ஒரு முடிவோடு மீண்டும் வந்தார்.
1998-இல் சச்சின் டெண்டுல்கர் உச்சத்தில் இருந்தார். அவர் கடும்வீரியத்துடன் செயற்பட்டிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும். அந்த ஆண்டில், பெரிய கிரிக்கெட் நட்சத்திரமாக வளர்ந்திருந்த ஷேன் வார்ன் சேப்பாக்கத்தில் சச்சினுக்கு இணையான திறனோடு ஆடினார். முதல் இன்னிங்ஸே இந்தியாவுக்குச் சாதகமாகச் சொல்லிவிட்டது, இதோ ஒரு சுழல்பந்து ஜாம்பவான்; இவரை நிச்சயம் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்று.
ஒரு பந்துவீச்சில் நான்கு ரன்கள் அடித்து சச்சின் வார்ன்நுக்கு எதிரான தன்நோக்கத்தை வெளிக்காட்டினார். ஆனால் வார்ன் ஸ்டம்புக்கு பக்கவாட்டில் பந்துகளை வீசி ஒரு பந்தை கால் ஸ்டம்புக்குப் பறக்கவிட்டார். அந்த வீச்சு மிகப்பிரமாண்டமானதாக இருந்தது. அந்தப் பந்தை ‘கவர்’ ஏரியாவின் மேலே அடிக்க எத்தனித்த சச்சின் பந்தை ஓரத்தில் தவறவிட, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் டெய்லர் ரொம்ப சௌகரியமாக அதைக் ‘கேட்ச்’ பிடித்தார்.
சச்சின் கடும் தீவிரத்துடன் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. வெறும் 257 ரன்களோடு இந்தியா வெளியேறியது. வார்ன் நான்கு விக்கெட் எடுத்தார். இந்திய பேட்ஸ்மென்கள் வழக்கமாக எப்படி சுழல்பந்துவீச்சை எதிர்கொள்வார்கள் என்பதை சித்து காட்டினாலும், வார்னின் மாயமந்திர தாக்குதலிலிருந்து இந்தியா மீளப்போவதில்லை என்றுதான் தோன்றியது.
ஆஸ்திரேலியா 328 ரன்கள் எடுத்து 70 ரன்களில் முன்னிலை வகித்தது. இந்தியாவில் வார்ன் தான் வெற்றியாளராக இருக்கப்போகிறாரா என்று தோன்றியது.
மற்ற பவுலர்கள் அப்படி செய்தால், அவர்கள் ஏதோவொரு விரக்தியில் பேட்ஸ்மேனை முடக்கிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் வார்ன் அப்படிச் செய்தால், பேட் சுழற்றியடித்த தூசிப்படலத்தில் ஏறி மோசமான ஏதோவொன்று வருகிறது என்று அர்த்தம்.
சச்சினுக்கு வேறு யோசனைகள் இருந்தன. இரண்டாவது இன்னிங்ஸில், சச்சினுக்குள் தீப்பிடித்தது. வார்ன் எந்தப்பந்தை வீசினாலும், அதைத் தூக்கியடிக்கவும், வீசியடிக்கவும், இழுத்தடிக்கவும், விரட்டியடிக்கவும் சச்சின் ’ஸ்கொயர் லெக்-மிட் விக்கெட்’ வளைவுப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார்.
விக்கெட்டைச் சுற்றி பந்தைச் சுழற்றிடியத்த வார்ன் அதற்குள் ஒருபெரும் தீயசக்தியாக மாறிவிட்டார். மற்ற பவுலர்கள் அப்படி செய்தால், அவர்கள் ஏதோவொரு விரக்தியில் பேட்ஸ்மேனை முடக்கிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்று அர்த்தம். ஆனால் வார்ன் அப்படிச் செய்தால், பேட்டுகள் சுழற்றியடித்த தூசிப்படலத்தில் ஏறி மோசமான ஏதோவொன்று வருகிறது என்று அர்த்தம். ஆனால், வார்னின் அந்தப் பந்துகளை தொடர்ந்து எதிர்கொண்டார் சச்சின்.
இந்தியா 200- ரன்களைத் தொட்டபோது சச்சின் 50 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா 400 ரன்களைத் தொட்டபோது, அவர் 150 ரன்கள் எடுத்திருந்தார். வார்னின் பயிற்சிக் கூட்டாளியான கெவின் ராபர்ட்சன் அப்போதுதான் ஆஃப்-ஸ்பின்னராக வந்திருந்தார். அவரது பந்துகளை எகிறி அடித்தார் சச்சின். 155 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார் சச்சின். எதிர்பார்த்ததைப் போலவே இந்தியா 480 ரன் எடுத்தது. அப்போது தனது 15-ஆவது செஞ்சுரியை அடித்தார் சச்சின்.
ஆஸ்திரேலியா 168- ரன்களில் அவுட்டானது. ராஜேஷ் சௌகான், வேங்கடபதி, மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் எட்டு விக்கெட்களை எடுத்தனர். சேப்பாக்கம் இன்னும் டர்னரின் கனவு விக்கெட் களம்; ஆனால் ஷேன் வார்ன்நுக்கு அல்ல என்று அவர்கள் காட்டினர். ஆட்டத்தில் அம்பயராக இருந்தவர் ஒரு காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிரபல ஆஃப்ஸ்பின்னர். எஸ். வெங்கடராகவன். வார்னேவுக்குக் கொடுப்பதற்கு அவரிடம் அறிவுரை இருந்திருக்கலாம்; ஆனால் அதை அவர் அறிவுரை எதையும் சொல்லவில்லை.
2001ஆம் ஆண்டு தொடர் இந்தியாவுக்கு மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்று. லட்சுமணனும், திராவிட்டும் கொல்கத்தாவில் இந்தியாவை அதிர்ஷ்டத்தின் பக்கம் திருப்பினர்; உலகக் கிரிக்கெட்டில் இந்தியா உயர் அணிகளில் ஒன்று என்பதை நிரூபித்தனர்.
மூன்று ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சச்சின் செஞ்சுரி அடித்தார். ஆஸ்திரேலியாதான் முதலில் பேட்டிங் செய்தது. ஹேடன் இரட்டைச் செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா 391 ரன்களை எடுக்க உதவினார்.
சென்னை இளைஞர் சடகோபன் ரமேஷ் 60 ரன்கள் எடுத்தார். மற்றவர்களும் ரன்களை எடுத்தார்கள். இந்தியா மொத்தம் 501 ரன்களை எடுத்தது. ஷேன் வார்ன் இரண்டு விக்கெட் எடுத்தார்; ரமேஷ், மற்றும் விக்கெட்-கீப்பர் சமீர் டிகே ஆகியோர்தான் அந்த விக்கெட்டுகள். அந்த இரண்டு விக்கெட்டுகளுக்காக வார்னே 40 ஓவருக்கு மேல் கடினமாக பந்து வீச வேண்டியிருந்தது.
பின்பு ஹர்பஜன் எட்டு விக்கெட் எடுத்து, ஆஸ்திரேலியாவை 264 ரன்களிலேயே கட்டுப்படுத்தி இந்தியாவை வெற்றிக்கு அருகே கொண்டுசென்றார். மேலும் தேவைப்பட்ட 155 ரன்களை எடுப்பதற்கு, ஏதோவொரு மிகப்பெரிய வேலை செய்வது போல, இந்தியா அதீதமான சிரமத்தோடு விளையாடியது. இறுதிக்கோட்டைத் தள்ளாடிக் கடப்பதற்கு முன்பு அது எட்டு விக்கெட்டுகளை இழந்தது. வார்ன் ஆறு ஓவர்கள் பந்து வீசினார்; ஆனால் விக்கெட் எதையும் எடுக்கவில்லை.
போதை மாத்திரை உட்கொண்டதற்காக ஓராண்டு தடைசெய்யப்பட்ட வார்ன் 2004-இல் மீண்டும் வந்தார். அப்போது ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்து அவுட்டாகவில்லை. ஷேவாக் 155 ரன் எடுத்து இந்தியாவை ரன் எண்ணிக்கையை 376-க்குக் கொண்டுசென்றார். வார்ன் ஆறு விக்கெட்டுகள் எடுத்தார்; அதற்காக அவர் 40 ஓவர்கள் பந்துவீச வேண்டியதாயிற்று. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியிருந்தால், ஆறு விக்கெட்டுகளை எடுப்பதற்கு பாதிக்கும் குறைவான பந்துகளே அவருக்குப் போதுமானதாக இருந்திருக்கும்.
டேமியன் மார்ட்டின் செஞ்சுரி அடித்ததால் ஆஸ்திரேலியா 369 ரன்களை எடுத்தது. வெற்றி பெற இந்தியாவுக்கு 230-க்கும் குறைவான ரன்களே தேவைப்பட்டது. ஆனால் பருவமழை வந்து நான்காம்நாள் ஆட்டத்தைச் சொதப்பியது. அது அக்டோபர் மாதம்; பொங்கல் நேரமல்ல.
இந்தியாவின் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே முதல் இன்னிங்ஸில் 17 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை எடுத்தார். அவர்தான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
Read in : English