Read in : English
கார்னிவல் சினிமாஸில் வெறும் பத்து பேர் மட்டுமே காலா திரைப்படத்தைக் காண வந்திருந்தனர். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் அதிகஅளவில் தமிழர்கள் இல்லாதது கூட பார்வையாளர்களின் வருகை குறைவுக்கு காரணமாக இருக்கக் கூடும் . அந்த சனிக்கிழமை இரவு 11:30 காட்சியைக் காண வந்த வெகுசிலரில் 5 பேர் கொண்ட ஒரு குடும்பமும் அடக்கம். அவர்கள் தாங்கள் தமிழர்கள் அல்லாத போதும் சென்னையில் குடியேறியவர்கள். அதனால், கொல்கத்தாவுக்கு கோடை விடுமுறைக்கு வந்த சூழலில், காலா வெளியாகவே அதனைக் காண இங்கு வந்தோம் என்று கூறினர். மேலும், ரஜினியின் திரைப்படங்களைத் தவறவிட்டது இல்லை என்றும் அதனால் குடும்பத்துடன் வந்தோம் என கூறினர். அவர்களுக்கு சென்னையின் சூழல் அங்கு அமையவில்லை. அதனை நேர்செய்ய, அவர்களுடைய இளைய மகன் திரையில் எல்.இ.டி விளக்குகளால் உருவாக்கப்பட்ட ரஜினி என்ற பெயரைக் கண்டதும் விசில் அடித்தார்.
காலாவில் ரஜினி ஸ்டைல் அதிகமாக இருந்தது. ஒருவேளை கபாலியில் குறைத்துக் காண்பிக்கப்பட்ட ரஜினி ஸ்டைலை காலாவில்அதிகப்படுத்தியிருக்கலாம். இதில் ஃபேண்டஸியும் இருக்கிறது. உண்மையை விட பெரிய பிம்பமான ரஜினி, அனைத்துகாட்சிகளிலும் ஆக்கிரமித்திருக்கிறார். வாள்கள் புவியீர்ப்பு விசையையும் மீறி எதிராளியின் வயிற்றுக்குள் பாய்கிறது. முதிய ரஜினி தன்னை தாக்க வருபவர்களை நொறுக்குகிறார்.
கபாலியில் சிறிதே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அரசியல், காலாவில் முக்கிய கருப்பொருளாக மாறியிருந்தது. கபாலியின் உடையை வைத்தும், ஆங்காங்கே அம்பேத்கரை சுட்டிக் காட்டியதை வைத்தும் தமிழ்நாட்டின் உள்பகுதிகளிலும் வெளிமாநிலங்களிலும் கூட கபாலி ஒரு தலித் அடையாளத்தைப் பேசும் படம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
கபாலி திரைப்படத்தைப் போல் அல்லாமல், காலாவில் அரசியல் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது. படத்தின் மையம், தலித்கருத்தியல் சார்ந்ததாக உள்ளது. தற்போது இந்தியாவில் அம்பேத்கரிஸ்டுகளும் இடதுசாரிகளும் என்ன கருத்துகளை பேசிவருகிறார்களோ அதுவே மையச் சரடாக உள்ளது. குறிப்பாக நரேந்திர மோடி, அவரது அரசியல் பார்வை, ஆளுமை, விளிம்புநிலைமக்களுக்காக எதிராக அவர் செயல்படும் விதம் குறித்து பேசப்பட்டுள்ளது.
கபாலியில் அரசியல் இல்லாமல் இருந்ததை காலாவில் காண்பித்திருக்கிறார்
காலாவில் ஹரி அபியாங்கர் என்ற கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் மோடியை ஒத்திருந்தது. அதே நேரம் காலாவில் காட்டப்பட்ட தாராவியைச் சேர்ந்த மக்கள் அரசியல், சமூக, பண்பாட்டுக் கூறுகளில் ஹரி அபியாங்கருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். இது, சுத்தமான, வளர்ச்சியடைந்த, இந்து என்கிற மோடியின் கருத்தாக்கங்களை மறுக்கிறது. தாராவியில் இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கத்துடன் வாழ்கிறார்கள். தாராவி என்பது ஸ்லம் அல்ல; அது ஒரு சேரி-பறையர்கள் என அறியப்படும் தமிழர்களின் குடியிருப்பு.
நரேந்திர மோடி, அவரது அரசியல் பார்வை, ஆளுமை, விளிம்புநிலைமக்களுக்காக எதிராக அவர் செயல்படும் விதம் குறித்து காலாவில் பேசப்பட்டுள்ளது.
மொத்த இந்தியாவிலும், தமிழ்நாடு மட்டும்தான் தன்னுடைய அடையாளத்துடன் இயங்கி, மோடியை எதிர்க்கும் மாநிலமாக உள்ளது. சங்பரிவாரங்களில் உள்ள எந்த பெயரும் தமிழ்நாட்டில் மோடி அலையை உருவாக்கவில்லை. மோடி அலை உச்சத்தில்இருந்தபோதும், ‘லேடியா’, ‘மோடியா’ என்ற நிலை உருவான போது மக்கள் ‘லேடி’யைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். காலாவில் கரடுமுரடான, அழுக்கான தமிழ் சேரியான தாராவி… ஹரி அபியாங்கருக்கு எதிராக போராடி, அழித்து, இடதுசாரிகளின் கனவை நனவாக்குகிறது.
ஆனால், நிஜத்தில் ரஜினிகாந்த், காலாவுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாதவர். அவர் கருத்தியல் அடிப்படையிலும் நிலையற்ற மனநிலையுடனும் மோடியின் பக்கம் இருக்கிறார். காலாவில் காண்பிக்கப்பட்ட எந்த கருத்தாக்கமும் ரஜினியிடம்இல்லை. ரஜினி காந்த், காலாவாக உருவாக அவர் அரசியலில் தலைகீழ் மாற்றத்தை அதாவது குட்டிக்கரணம் அடிக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியையும் ரஜினி எடுப்பதாகத் தெரியவில்லை.
காலா ரஜினிக்கும் நிஜ ரஜினிக்கும் தொடர்பில்லாத காரணத்தால் தான் இப்படத்துக்கு தமிழ்நாட்டில் சொல்லும்படியான வரவேற்பு கிடைக்காமல் போயிருந்திருக்கக் கூடும்.
தமிழர்கள் ரஜினியை நேசிக்கலாம். காலாவுக்கு ஆதரவான மன நிலையிலேயே அவரது அரசியலுக்கும் ஒப்புதலும் அளிக்கலாம்.
காலா திரைப்படமானது, ரஜினி அரசியலில் நுழைவதற்கு தளமாக மாற ரஜினி காலாவாக மாற வேண்டும். ஆனால் அது நிகழ்வதாகத் தெரியவில்லை.
Read in : English