Read in : English
அன்புள்ள விவசாயிகளே! நமது நாட்டில் காய்கறி மற்றும் பழங்களின் தினசரி விற்பனை ரூ.290 கோடி (59 மில்லியன் டாலர்). அதில் தினசரி வீணாகும் காய்கறி மற்றும் பழங்களின் மதிப்பு ரூ. 100 – 140 கோடி (27 மில்லியன் டாலர்). இது மிகப் பெரிய தொகை. அதாவது ஒரு சில இந்திய தொழில் நிறுவனங்களின் தினசரி வருமானத்திற்கு நிகரான தொகை.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகவும், இன்றும், கல்வியறிவு இல்லாத கிராமப்புற மக்களால், தொழில்நுட்ப வசதி இல்லாத வகையில் தான் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் துறையில் மட்டும் தான் தொழில்நுட்பம், குறிப்பிடத்தக்க எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நிறைய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது; பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஒரு கிராமப்புற விவசாயிக்கு அந்த தொழில்நுட்பமும் அவர்களை மேம்படுத்தும் வகையில் இல்லை என்பது தான் சுடும் உண்மை.
வளரும் நாடுகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் ஆடை ஆகியவை அடிப்படை விஷயங்கள். அவையின்றி எதுவும் செய்ய இயலாது. இம்மூன்றில் உணவுக்கு மட்டும் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏன்? காரணம், விவசாயம் வருமானம் மிகுந்த தொழிலாக இல்லை. இந்தக் காரணத்துக்காக மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி நகரத்துக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மிக முக்கியமாக, இளைஞர்கள், விவசாயத்தை ஒரு தொழிலாக கருதுவதில்லை. தொண்ணூறு சதவீத விவசாய மாணவர்கள் விவசாயத்தை செய்ய விரும்பவில்லை. அவர்கள் போட்டித் தேர்வு எழுதவே முனைகின்றனர். மேலும், இத்துறையில் தேவைப்படும் தகவல்கள் இல்லாத காரணத்தால், இத்துறையில் சில விஷயங்களை சீர்படுத்த கடினமாக உள்ளது.
சவால் இல்லாத தொழில் இருக்கிறதா? அதிக சவால் நிறைந்த தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும் அல்லவா ! ஆனால் எதன் அடிப்படையில் மக்கள் விவசாயம் “அதிக சவால் நிறைந்த, வருமானம் இல்லாத தொழில் என்கின்றனர்?”
பலர் விவசாயத்தை சவால் நிறைந்த தொழில் என்கின்றனர். ஆனால், சவால் இல்லாத தொழில் இருக்கிறதா? அதிக சவால் நிறைந்த தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும் அல்லவா ! ஆனால் எதன் அடிப்படையில் மக்கள் விவசாயம் “அதிக சவால் நிறைந்த, வருமானம் இல்லாத தொழில் என்கின்றனர்?”.
சவாலும், நிச்சயத்தன்மை இன்மையும் எல்லாத் தொழிலிலும் தானே உள்ளது. மனிதர்களால் உண்டாக்கப்படும் பேராபத்துக்களுடன் ஒப்பிடுகையில் விவசாய_பொருளாதாரம் ‘இயற்கையாக’ ஒருவரால் முன்கூட்டியே தீர்மானிக்கக்கூடிய விஷயம்தான்.
ஒரு விவசாயிக்கு எதிராக பல விஷயங்கள் இருந்தாலும், இன்றும்; தினசரி நம் நாட்டில் உணவு கிடைக்கிறது. உதாரணத்துக்கு, பண்ணையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.5-10/ கிலோ, பெரு நகரங்களில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை ரூ. 7-10/கிலோவுக்கு கிடைக்கிறது. சில்லறை விலையில் தக்காளி கிலோவுக்கு ரூ.20-25க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு தொழில் துறையிலும், தேவைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இடைத்தரகர்கள் விவசாயத்தை கட்டுப்படுத்துகின்றனர்.
“விவசாயிகளுக்கு பயிரிடுவதில் திட்டமிடுத்தலும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதிலும், நிதி மேலாண்மையிலும் உதவி தேவைப்படுகிறது”
விவசாயிகளுக்கு பயிரிடுவதில் திட்டமிடுத்தலும், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதிலும், நிதி மேலாண்மையிலும் உதவி தேவைப்படுகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக, எந்த உதவியும் கிடைப்பதில்லை. விவசாய நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தான் விவசாயத்தில் உதவி செய்து வருகின்றன. அவை மேலாண்மை தொடர்பான சவால்களை கையாளும் திறன்படைத்தவை அல்ல. நம் விவசாயக் கொள்கைகள் முரணானவை; குழப்பமானவை. நிறைய அமைச்சகங்களும் திட்டங்களும் இருந்தாலும் ஒன்றுக்கொன்று ஒரே போல இருக்கிறது.
இந்த முரண்பாடுகளையும் வேறுபாடுகளையும் அனுமதிப்பதற்க்கு பதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைந்து, முழுமையான திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
ஆனால் இந்த மாற்றத்தை எப்படி உருவாக்குவது ?
ஏறத்தாழ விவசாயத் துறையில் இருக்கும் கணக்கீடுகள், தகவல்கள், புள்ளியில் விவரங்கள் அனைத்து பழையவை; உதவாதவை. குறைந்தபட்சம் 5 வருடங்கள் பழையதாக உள்ளது. அல்லது கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்டவை. நடைமுறைக்கு உதவும் வகையில் எந்த புள்ளியில் விவரங்களும் இல்லை.
நம் வகையில் நாம் விழிப்புள்ள நுகர்வோராக இருக்கலாம். எப்படி ?
கேள்வி கேட்க ஆரம்பிப்போம். அச்சிடப்பட்ட விலை படியல்களை கவனத்துடன் படித்து, விலை உயர்வை உணரவேண்டும். பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை பார்க்கவேண்டும். (உருளைக்கிழங்கு ஊட்டியில் இருந்து வருகிறது என்பார்கள். அவை உண்மையிலுமே அங்கிருந்துதான் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்).
உங்கள் ஊரிலுள்ள விவசாய அதிகாரிகள், விவசாயிகளை சந்தித்தார்களா ? பேசினார்களா? என கேட்க வேண்டும். கேள்வி கேட்போம். சமூக விழிப்புணர்வுடன் இருப்போம். தொடர்ந்து பேசுவோம்….
Read in : English