Read in : English
காய்கறிகளும் பழங்களும் தோட்டத்திலிருந்து வந்த காலம் மலையேறிவிட்டது. இன்று மாவட்டங்கள் தோறும் மாடித்தோட்டம் அமைப்பது பெரிய அளவில்நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. நூற்றுக்கணக்கான மாடித் தோட்டங்கள் தனி வீடுகளில் மட்டுமில்லாது அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உருவாகி வருகிறது. எந்த தோட்டம் அல்லது நிலமாக இருந்தாலும் அடிப்படியாகத் தேவைப்படுவது மண்புழு உரம். நகரங்களில் உள்ள நர்சரிகளில் மண்புழு உரம் ரூ. 20- 25க்கு விற்கப்படுகிறது. அரசு நர்சரிகளில் இதைவிட குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. தொட்டிகள், பைகள், தோட்டம் அல்லது நிலம் என எங்அகு வளர்த்தாலும் மண்முழு உரத்தை பெறுவது எளிய விஷயமல்ல. இதனை எந்த இடத்திலிருந்து பெற முடியும் என்பதை ஒருவர் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறை பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் சிறு மண்புழுவை பயன்படுத்தி உரமாக்குவதற்கு கொஞ்சம் ஞானமும் நிபுணத்துவமும் தேவை. காரணம் மண்புழு, அது வளர்க்கப்படும் படுக்கையிலுள்ள ஈரம் மற்றும் வெப்பத்துக்கு ஏற்ப எதிர்வினை புரியும் என்பதால் அதனை வளர்க்க சரியான கவனம் தேவை. மண்புழு படுக்கையின் மீது நேரடியாக சூரியஒளி படும்போது அது விரைவில் காய்ந்துவிடும். அப்போது மண்புழு ஈரமுள்ள படுக்கைக்கு நகரும். ஆகையால், மண்புழு உரத்தை நிழலிலோ அல்லது மேல்கூரை உள்ள இடத்திலோ தான் தயார் செய்வார்கள்.
‘மைராடா’ திட்டத்தின் மூத்த விஞ்ஞானியும் தலைவருமான முனைவர். பி.அழகேசன் கூறுகையில், “மண்புழு உரத் தயாரிப்பில் புதிதாக ஈடுபடுகிறவர்கள் சந்திக்கும் பிரச்சனை குழியில் அல்லது தொட்டியில் நீரை வெளியேற்றுவது, படுக்கையிலிருக்க வேண்டிய ஈரப்பதம், படுக்கையினுள்ளே மாறும் தட்ப வெப்பம், படுக்கையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம், மண்புழுக்களின் எண்ணிக்கை குறைதல், மண்புழுக்களைத் தனியாகப் பிரித்தெடுப்பது ஆகியவைதான்’’ என்றார்.
ஆகையால் கிரிஷி விஞ்ஞான் கேந்திரா மண்புழு தயாரிப்பில் வெற்றிகரமான தொழில் முனைபவர்களையும் முன்மாதிரி தோட்டத்தையும் உருவாக்க வேண்டும். பெரும்பாலான மண்புழு உரத் தாயாரிப்பு இடங்கள், மோசமான மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப உதவியின்மையால் தோல்வியடைந்துள்ளன. திரு.ரவி, ‘மைராடா’ திட்டத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான விவசாயி. இவர் நிலத்த வேளாண்மையின் கீழ், மண்புழு உரம் தயாரித்து வருகிறார். திரு.ரவி, எளியமியான முறையில்( பிளாஸ்டிக் டப்பா முறை) மண்புழுக்களை பெரிய அளவில், பல காலம் செய்து, உருவாக்கி வருகிறார். மண்புழு உரத் தயாரிப்புக்குப் பதிலாக, மண்புழுத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், இதனை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்து வருகிறார்.
பாதி அழுகிய நிலையிலுள்ள உணவை முழுவதுமாக மட்கச் செய்வதற்கு, மண்புழு உதவி புரிகிறது. அதனால் துர்நாற்றம் வீசாமல், உரம் விரைவில் மட்கி விடுகிறது. “நுண்ணுயிர் ஊட்டம் முறை மூலம் மண்புழுக்களை பெரிய அளவில் உற்பத்தி செய்வது நிலைத்த வேளாண்மையின் கீழ் மண்புழு உற்பத்தி செய்வதில் சிரமமானது. அதற்கு மாறாக சாணம், பப்பாளி, புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து ஒருவாரம் நொதிகக் விட்டால், நுண்ணுயிர்கள் பெருகும். இதனை மண்புழு படுக்கையின் மீது தெளித்தால், மண்புழுக்கள் அதிக அளவில் உருவாகும்’’ என்று விவரிக்கிறார் திரு.ரவி.
மண்புழுக்களின் முதன்மை தாய் படுக்கையில், மண்புழுக்கள் இங்குமங்கும் நகராமல் இருக்க தொடர்ந்து அவற்றுக்கு ஊட்டமளித்துக்கொண்டிருக்க வேண்டும். படுக்கையை ஒவ்வொரு 4-5 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் மண்புழு உருவாவது அதிகரிக்கும். மேலும், பூச்சிகள் மற்றும் எலிகளால் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். இந்த முறையில் மண்புழுக்கள் உருவாக 60 நாட்கள் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றும் விவசாயியால் சராசரியாக மாதத்துக்கு 35-50 பெட்டிகளை(ஒரு பெட்டிக்கு 4,000-5,000 மண்புழுக்கள்) உருவாக்க முடியும். அதனை ஒரு பெட்டி 2,500 ரூபாய்க்கு விற்கலாம். இதுவரை அவரின் தோட்டத்துக்கு 5,000க்கும் மேற்படட்வர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இதைக் குறித்த தங்கள் நடைமுறை அறிவை மேம்படுத்தியுள்ளனர்.
இதொன்றும், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பம் இல்லை. சிறு விவசாயிகளும் பெரு விவசாயிகளும் இந்த தொழிலை முயன்று பார்க்கலாம். இது கூடுதல் வருமானத்தை தரும்; அவருடைய தொழிலில் திருப்தியையும் தரும். தற்போது இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருவதால், இதை விற்பனை செய்வது சிரமமாக இருக்காது. இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கை வேளாண்மையில் ஈட்படும் விவசாயிகள் இருக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
முனைவர் பி. அழகேசனை தொடர்புகொள்ள : myradakvk@gmail.com, போன் : 04285 241626, 241627 & திரு.ரவியை தொடர்புகொள்ள: ravi@organiccomposting.com, செல்போன் 9443724779.
Read in : English