Read in : English

திராவிட மாடல் பொருளாதாரம், சமூகநீதி குறித்து அரசு பேசி வந்தாலும், அதுசம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் இல்லை.

நாட்டிற்கே முன்மாதிரி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் கூட மாவட்ட அளவில் முக்கியமான பிரச்சினைகள் குறித்த பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

மாநில அரசும் முடிவெடுக்கும் அதிகாரத்தை பரவலாக்கவில்லை. நகர, ஊராட்சி மட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட மக்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் வளங்களின் சமமான பகிர்வு இருக்க முடியாது.

2023-24-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களுக்குமான சமமான வளர்ச்சி, மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைத் தடுக்கும் பல சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைத்திருக்க வேண்டும். இருப்பினும், மாநிலத்தின் வருவாய் மற்றும் நிதித் தரவுகள் அந்தச் சாத்தியங்களைக் குறித்து தெளிவாக எதுவும் சொல்லவில்லை.

திராவிட மாடல் பொருளாதாரம், சமூகநீதி குறித்து அரசு பேசி வந்தாலும், அதுசம்பந்தமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையில் இல்லை

மின்சாரத் துறையும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் பெரும் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாலும் தமிழ்நாடு பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் அதிக இலவசங்களையும், மானியங்களையும் அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படைத்தன்மையோ, பொறுப்புணர்வோ இல்லை.

மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட் நம்பிக்கை அளிகிறதா?

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால், நடப்பு ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ஆண்டு வருவாய் பற்றாக்குறையை ரூ 62,000 கோடியிலிருந்து ரூ 30,000 கோடியாக அரசாங்கம் குறைத்துள்ளது என்று மாநில நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டார்.

2023-24 ஆம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை ரூ 37,540.45 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ 74,524.64 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது நடப்பு ஆண்டிற்கான மாநில மொத்த உற்பத்தியில் 3% ஆகும். வரும் ஆண்டில், நிதிப் பற்றாக்குறை ரூ .92,074.91 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது மாநில மொத்த உற்பத்தியில் 3.25% ஆகும், இது மாநில மொத்த உற்பத்தியில் 0.25% அல்லது ரூ .17,550.27 கோடி அதிகமாகும்.

வரும் 2023-24 ஆம் ஆண்டில், மாநில அரசு கடன்களைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. நிகர கடன்கள் ரூ 91,866.14 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதில் வெளிச்சந்தைக் கடன்கள் ரூ.82,625.96 கோடியும் பிற ஆதாரங்களிலிருந்து பெறும் கடன்கள் ரூ .9,240.18 கோடியும் அடங்கும். மக்களுக்கு இலவசங்கள், கொடைகள் வழங்குவதற்காக ஆண்டுதோறும் வாங்கப்படும் இந்தக் கடன்களால், வட்டி ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பட்ஜெட்டில், ஊழியர்களின் சம்பளத்திற்கான செலவு 2023-24 ஆம் ஆண்டில் ரூ 77,240.31 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 14.14% அதிகரித்துள்ளது. மேலும், 2024-25 ஆம் ஆண்டில் சம்பளத்திற்கான செலவு ரூ 84,964.34 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ரூ 94,460.78 கோடியாகவும் அதிகரிக்கும். ஆதலால் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி சொற்பமாகிவிடும்.

2023-24 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால நன்மைகளுக்கான செலவின ஒதுக்கீடு ரூ 36,973.02 கோடியாகும். இது 2024-25 ஆம் ஆண்டில் ரூ 39,930.86 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ரூ 45,524.64 கோடியாகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு சீராகவே உள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிறுவனரீதியிலான சீர்திருத்தங்கள் அல்ல; மேலும் பெரிய சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை தமிழ்நாடு பட்ஜெட் முன்வைக்கவில்லை

2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மானியங்கள் மற்றும் உதவித்தொகை பரிமாற்றங்கள் காரணமாக செலவினங்கள் ரூ 1,22,088.19 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 ஆம் ஆண்டில் இந்தச் செலவினம் ரூ 1,25,426.34 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ரூ 1,29,204.59 கோடியாகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய ஆண்டுகளில் திரட்டப்பட்ட பொதுக் கடனுக்கான வட்டி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது 2023-24 ஆம் ஆண்டில் ரூ.55,431.49 கோடியாகவும், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.61,876.73 கோடியாகவும், 2025-26 ஆம் ஆண்டில் ரூ.68,598.91 கோடியாகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட்: இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்!

2023-24 ஆம் ஆண்டில் ரூ 1,43,197.93 கோடி கடன் வாங்கவும், ரூ 51,331.79 கோடியை திருப்பிச் செலுத்தவும் தமிழ்நாடு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த அதிகரித்த செலவுகளுக்கு தமிழ்நாடு நிதியளிக்க வரி வருவாயை எவ்வாறு பெருக்குவது என்பது குறித்து பட்ஜெட்டில் விவாதிக்கப்படவில்லை. மாநிலத்தின் நிதி நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது அது எப்படி ஒரு முன்மாதிரி மாநிலமாக இருக்க முடியும்?

சொத்து பதிவு விகிதங்கள் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்திற்குக் குறைக்கப் பட்டிருக்கின்றன. இதனால் சற்று கூடுதல் வருவாய் கிடைக்கும். ஆனால் அதிகம் இல்லை.

நிறுவனத் திறன்களை மேம்படுத்துதல், தொழில் துறையின் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த திறன் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

ஆனால், சந்தை சார்ந்த திறன்களை பயிற்சியின் மூலம் அதிகரிக்கச் செய்யும் திட்டத்தை மாவட்டத் தலைநகரங்களில் செயல்படுத்துவதில் இருக்கும் ஊழல் பிரச்சினையைப் பற்றி தமிழ்நாடு பட்ஜெட் கண்டுகொள்ளவில்லை.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நிறுவனரீதியிலான சீர்திருத்தங்கள் அல்ல; மேலும் பெரிய சவால்களைச் சமாளிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை தமிழ்நாடு பட்ஜெட் முன்வைக்கவில்லை. மாநகரங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகரித்து வரும் நகராட்சி திடக்கழிவுகள், மின்னணுக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், கழிவுநீர் வெளியேற்றம் ஆகியவற்றை மேலாண்மை செய்வது குறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லை. அந்தக் கழிவுகள் ஏற்படுத்தும் மாசுபாடு, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

“கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுப்பது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எஸ்டிபி) கட்டுவது போன்ற துப்புரவு நடவடிக்கைகள்” பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை காலாவதியான வழிமுறைகள். தமிழக அரசால் வழமையான வழிமுறைகளுக்கு அப்பால் சிந்திக்க முடியவில்லை. மற்ற மாநிலங்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என்னும் கருத்திலிருந்து விலகி மாசுபாட்டைக் குறைக்க புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகின்றன. நகரங்கள் மற்றும் நகர்ப்புற மையங்களில் மாசுபாட்டைக் குறைக்கப் புதிய தொழில்நுட்பங்களில் மூலதன முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

மெட்ரோ திட்டங்கள், புதிய சர்வதேச மையங்கள், ’எழில்மிகு கோவை’, “மாமதுரை, தமிழ்நாடு டெக் சிட்டி, நியோ-டைடல் பூங்காக்கள் போன்றவை. மோசமான சுகாதார அமைப்புகளுடன் மாநிலத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்ற முடியாது. 54% க்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிப்பதால், திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்தால் தமிழகம் எதிர்காலத்தில் பெரிய விலையை கொடுக்க நேரிடும்.

மாநில அரசின் நிதிநிலை அறிக்கை இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக்கிய பிரச்சினைகளைப் புறக்கணிப்பது வளர்ச்சி அரசியலை கேலிக் கூத்தாக்கிவிடும்.

(கட்டுரையாளர் பொருளாதார நிபுணர் மற்றும் பொதுக் கொள்கை வல்லுநர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival