Read in : English
நடப்பு ஆண்டிற்கான(2023-24) மத்திய நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அவசியமானவை என்றாலும் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கப் போதுமான சூழல்களை உருவாக்கவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையானது மக்கள்தொகையில் பெரும் பகுதியாக இருக்கும் இளைஞர்களின் ஆசைகளையும் வாய்ப்புகளையும் விட அதிக புவிசார் பிரச்சினைகளுடன் போராடும் உலகப் பொருளாதாரத்திற்கும் இடையில் சமபலத்தைக் கொண்டு வர நினைக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையானது சுப காலத்திற்கான நிதிநிலை அறிக்கை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடித்துப் பேசினாலும், அது அவ்வாறான நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அரசின் உறுதிமொழிகளுக்கும் அதன் சாதனைகளுக்கும் இடையிலான இடைவெளி கடந்தாண்டுகளில் காணப்பட்டதேயாகும். குறிப்பாக இளைஞர்களின் திறன் வளர்ப்பு என்று வரும்போது, அதன் அடித்தளம் எவ்விதமான இலாபங்களையும் அளிக்க இயலாது பலவீனமாக உள்ளது.
நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு “இளைஞர்கள்” என்று பலமுறை குறிப்பிட்டாலும் ஒருமுறை கூட “திறன்” என்று குறிப்பிடவில்லை. மக்கள்தொகையில் பெரும்பகுதியான இளைஞர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சியை கொண்டு வரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். அச்சொல்லானது மத்திய அரசின் உறுதிமொழிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்பினையைத்தான் காட்டுகிறது. அவை வெறும் உதட்டளவிலான உறுதிமொழிகளாக முடிந்து விடுகிறது.
நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு “இளைஞர்கள்” என்று பலமுறை குறிப்பிட்டாலும் ஒருமுறை கூட “திறன்” என்று குறிப்பிடவில்லை
இளைஞர் திறனை வளர்க்க ஏராளமான முயற்சிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன:
அவற்றில் உள்ளடங்குவன:
அ) பாரம்பரியமான கைவினைக்கலைஞர்களுக்கு மேம்பட்ட திறன் பயிற்சியை அளிப்பது
ஆ) உடல்நலக் கல்விக்கு 150 புதிய செவிலியர் கல்லூரிகள்
இ) பன்னாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பயிற்சி அளிக்க பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0
ஈ) தேவை அடிப்படையிலான முறைசார்ந்த திறன் வளர்ப்பினை இயலச் செய்யவும் நடுத்தர, சிறு/குறு தொழில் முனைவர்களுடன் வேலைவாய்ப்பிற்காக இணைக்கவும் ஒருங்கிணைந்த ஸ்கில் இந்தியா டிஜிட்டல் பிளாட்ஃபார்மை ஏற்படுத்துவது
எ) தேகோ அப்னா தேஷ் திட்டத்தின் இலக்குகளை அடையத் தொழில்முனைவோர் திட்டங்களையும், துறை சார்ந்த குறிப்பிட்ட திறன்களை அணுகச் செய்யவும் வசதி ஏற்படுத்துவது போன்றவையாகும்.
இருப்பினும், இந்த முயற்சிகள் இளைஞர்களுக்கு யதார்த்தப்பூர்வமாக உதவியளிக்க வருடங்கள் பல ஆகும். இவர்களின் நேரம் மற்றும் ஆற்றல் நாட்டின் வளர்ச்சிக்கு விலைமதிப்பற்றதாகும்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொழில்கள் பெரிதாக வளராமல் இருப்பதேன்?
இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பினை அளிக்க வலுவான அமைப்பு ரீதியிலான வழிமுறைகளை முறைசார்ந்த கல்வியுடன் திறன் வளர்ப்புடன் இணைத்து நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவோ அல்லது சந்தையில் போட்டியிடும் தொழில்முனைவோராக விளங்கச் சுய வேலைவாய்ப்பினை நிதி உதவிகளுடன் அளிப்பதாகவோ கட்டமைக்க வேண்டும்.
இலட்சக்கணக்கான மாணவர்கள் அல்லது எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளி இடைநிற்றலைச் செய்பவர்கள் கைத்திறன் பயிற்சியைப் பெற இயலாதவர்களாகவும், அப்பயிற்சியைக் கொண்டு சந்தையில் நல்ல கூலியைப் பெற இயலாதவர்களாகவும் உள்ளனர். அவர்களே எதிர்காலத்தில் எளிதில் பாதிப்புறக்கூடிய தொழிலாளர் ஆற்றலாக இருக்கின்றனர்.
தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு எனும் நேஷனல் ஸ்கில் குவாலிஃபிக்கேஷன் ஃபிரேம்வொர்க் (National Skill Qualification Framework) போன்ற அமைப்பு சார்ந்த முயற்சிகள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி நிலையங்கள் என்று இன்னமும் அடிமட்டத்தை அடையவில்லை.
தேசிய, மாநில, தாலுகா அல்லது மாவட்ட அளவிலான அமைப்புச் சார்ந்த வசதிகளின் பலவீனமே இதற்குக் காரணமாக உள்ளன. அமைப்பு சார்ந்த நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களையும் பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தினால் அவை இளைஞர்களுக்கு உதவலாம். எடுத்துக்காட்டாக, பிஎம்கேவிஒய் 3.0 (PMKVY 3.0) திட்டத்தின் கீழ் மாவட்டத் திறன் கமிட்டிகளை (District Skill Committees -DSCs) பாரம்பரியக் கலைகள் மற்றும் கைத்திறன்கள் உள்ளிட்ட திறன் வளர்ப்புகளை வலுப்படுத்த உள்ளூர் வாய்ப்புகளை அடையாளப்படுத்தும் திட்டமாக, ஒருஅடிமட்டத் திட்டமாக உருவாக்கினர். ஆனால் அதன் முடிவு தமிழ்நாடு போன்ற மிக அதிகமாக தொழில்மயப்பட்ட மாநிலங்களில் பெரும்பாலும் தோல்வியுற்றது.
2015ஆம் ஆண்டில் 400 மில்லியன் இளைஞர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சி அளிப்பதற்காக ஸ்கில் இந்தியா மிஷன் துவங்கப்பட்டது; அதன் சாதனைகள் இப்போது வரை ஊக்கமளிப்பதாக இல்லை
கடந்த 2015ஆம் ஆண்டில் ஸ்கில் இந்தியா மிஷனானது 400 மில்லியன் இளைஞர்களுக்குப் பல்வேறு திறன்களில் பயிற்சி அளிப்பதற்காகத் துவங்கப்பட்டது. ஆனால் அதன் சாதனைகள் இப்போது வரை ஊக்கமளிப்பதாக இல்லை. பிஎம்கேவிஒய் 1.0 2015-16ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது, அதுபோல பிஎம்கேவிஒய் 2.0 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும், பிஎம்கேவிஒய் 3.0 2021-22 ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் தகவல்களின்படி 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வரை 1.42 கோடிப் பேர் பதிவு செய்தனர், 1.37 கோடி பேர் பயிற்சி பெற்றனர், 1.24 கோடி பேர் சோதிக்கப்பட்டனர், 1.10 கோடி பேர் (77.46%) சான்றிதழ்களைப் பெற்றனர்.
கடைசிக் கட்டத் தகவலின்படி (14.03.2022 இல் மக்களவையில் கேட்கப்பட்ட திறன் வளர்ப்பு இந்தியா திட்டத்தின் மீதான கேள்வியில்) பிஎம்கேவிஒய் 1.0 வின் கீழ் 18.04 லட்சம் பேர் பதிவு செய்து பயிற்சியளிக்கப்பட்டதில், 13.32 இலட்சம் பேருக்குத் திறன் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும் 2.53 இலட்சம் பேர் அல்லது 19% பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர். பிஎம்கேவிஒய் திட்டம் 2.0 கீழ் இந்த எண்ணிக்கை அதிகரித்து 52.8% ஆக இருந்தது. மொத்தமாக 41.08 லட்சம் பேர் சேர்ந்தனர், அதில் 38.11 இலட்சம் பேர் பயிற்சி அளிக்கப்பட்டனர், 31.84 லட்சம் பேர் திறன் சான்றிதழ் பெற்றனர். அதில் உண்மையிலேயே 18.05 இலட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றனர்.
மேலும் படிக்க: மேம்போக்கான பட்ஜெட்: ஆத்ரேயா விமர்சனம்!
இருப்பினும், பிஎம்கேவிஒய் 3.0 கீழ் வேலை வாய்ப்பு 20.5% ஆகக் குறைந்தது. இத்திட்டத்தின் கீழ் 4.98 இலட்சம் பேர் சேர்ந்தனர், அதில் 4.45 இலட்சம் பேர் பயிற்சி பெற்றனர், 1.72 இலட்சம் பேர் சான்றிதழ் பெற்றனர்; அதில் 15,450 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
அனைத்து அம்சங்களிலும் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. இதில் சேர்க்கை, பயிற்சி, சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள பயிற்சி நிறுவனங்களில் ஊழல், முறைகேடுகள், போலிச் சேர்க்கை போன்ற காரணங்களால் வீழ்ச்சி காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தது. பிஎம்கேவிஒய் 1.0 திட்டத்தில் 12,218 பயிற்சி நிறுவனங்கள் இருந்தது, பிஎம்கேவிஒய் 2.0 திட்டத்தில் 9,030 ஆகக் குறைந்தது. மேலும் பிஎம்கேவிஒய் 3.0 வில் அது 683 ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்தமாக, பிஎம்கேவிஒய் திட்டத்தின் பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை 2015-16 ஆண்டில் 20.3% ஆகவும், 2016-17ஆம் ஆண்டில் 13.2% ஆகவும், 2017-18ஆம் ஆண்டில் 38.2% ஆகவும், 2019 – 20ஆம் ஆண்டில் 44.6% ஆகவும், 2020-21ஆம் ஆண்டில் 2021-22ஆம் ஆண்டில் 70.6% ஆகவும் இருந்தது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு 2015-16ஆம் ஆண்டில் 37.7% ஆகவும், 2016-17ஆம் ஆண்டில் 44.1% ஆகவும், 2017-18ஆம் ஆண்டில் 56.4% ஆகவும், 2019-20ஆம் ஆண்டில் 82.5% ஆகவும், 2020-21ஆம் ஆண்டில் 42.6% ஆகவும், 2021- 22ஆம் ஆண்டில் 53.4% ஆகவும் இருந்தது.
ஆகையால், பிஎம்கேவிஒய் 4.0 இளைஞர் திறன் வளர்ப்பிற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைக் குறையப் போவதாகச் சுட்டப்படுகிறது. இளைஞர் மக்கள் தொகையானது (24-29 வயதினர்) அடுத்த பதினைந்து ஆண்டுகளில் 10% ஆகக் குறைந்து 2021ஆம் ஆண்டில் 53% ஆகவும், 2036ஆம் ஆண்டில் 43% ஆகவும் குறையும் என்று யூத் இந்தியா 2022 எனும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வயது 40யைக் கடந்த பின்னர் திறனின்றி போவதால் இந்தியாவிற்கு இளைஞர் ஆற்றல் எனும் சாதகக் கதை இல்லாமல் போகும்.
மத்திய மாநில அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறத் தகுந்த திறன் வளர்ப்பு பயிற்சியை அளிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் நாடு அதன் மக்கள் தொகையின் அடிப்படையிலான பலன்களை ஈட்ட முடியாமல் போகும்.
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English