Read in : English
வனவிலங்கு சரணாலயங்கள், புலிக் காப்பகங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இடைப்பட்ட மண்டலங்களை (பஃபர் மண்டலங்கள்) அமைக்கும் அரசின் முயற்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாடு-கேரளா எல்லையில் இருக்கும் நீலகிரி
உயிர்க்கோளம் முழுவதும் விவசாயிகளின் போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. தங்களுக்குப் பிடித்தமான பயிர்களை வளர்ப்பதற்கும், கட்டடங்களைக் கட்டுவதற்கும், நிலங்களை விற்பதற்கும், வீடுகளைப் புதுப்பிப்பதற்கும் உள்ள தங்கள் உரிமைகள் பறிபோய்விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட காடுகளைச் சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்குள் இடைப்பட்ட மண்டலங்கள் (Buffer Zones) அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி
பரிந்துரைத்தது. அந்த மண்டலங்களில் சுரங்கங்களை வெட்டுவது, ஆலைகளை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளைத் தடைசெய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. 2023ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதிக்குள்
மாநிலங்கள் தங்கள் கருத்துகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது உச்ச நீதிமன்றம். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டதிலிருக்கும் காடுகள் உட்பட பல காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது இந்தப் பரிந்துரையை வழங்கியிருக்கிறது.
பஃபர் மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை கேரளாவில் வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களை மிகவும் பாதிக்கும்
ஆனால், இந்த பரிந்துரை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சரிவுகளில் இருக்கும் கேரள மாவட்டங்களிலும், வயநாடு மாவட்டத்தின் அருகிலிருக்கும் நீலகிரி மாவட்டத்திலும் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏற்கனவே இந்த விவசாயிகள் நிதிநெருக்கடியாலும், மோசமான வானிலையாலும், விளைபொருட்களின் விலை வீழ்ச்சியாலும், உரம், பூச்சிக்கொல்லி போன்ற வேளாண்மைப் பொருட்களின் விலையேற்றத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீதிமன்ற பரிந்துரையால் வனப்பகுதிகளில் நிலவிற்பனைகள் நின்றுபோயின. நிலங்களை அடகுவைத்து விவசாயிகள் கேட்கும் கடன்களை வழங்குவதை வங்கிகள் நிறுத்திவிட்டன. ஆதலால் நீதிமன்றம் விதித்திருக்கும் காலக்கெடுவுக்குள் (ஜனவரி 3, 2023) கருத்து சொல்ல வேண்டிய மாநிலங்கள் மீது அந்தப் பரிந்துரையை மாற்றியமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமென்று விவசாய அமைப்புகள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ரிசர்வ் காடுகளின் பஃபர் மண்டலங்களில் தொழில் செயற்பாடுகளின் மீதான கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு தளர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உச்ச நீதிமன்றத்திலிருந்து இந்த பரிந்துரை வந்திருக்கிறது. 2022, டிசம்பர் 14 அன்று வெளியிட்ட ஆணையின் மூலம், பஃபர் மண்டலங்கள்
மேலும் படிக்க: நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!
என அறிவிக்கப்படும் பகுதிகளில் கனிம வளங்களை வெட்டி எடுத்தல் மற்றும் மண்ணைத் தோண்டும் நடவடிக்கைகளை அனுமதித்தது. இதற்காக 1959-ஆம் ஆண்டு கனிம வளங்கள் சலுகை விதிகளை தமிழக அரசு திருத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் காடுகளைச் சுற்றி ஒரு கிமீ சுற்றளவுக்குள் பஃபர் மண்டலங்கள் உருவாக்கப்பட
வேண்டும் என்று இதே தமிழக அரசு அறிவித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பஃபர் மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை கேரளாவில் வயநாடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களை மிகவும் பாதிக்கும். அந்த மாவட்டங்களில் ஏற்கனவே வீடுகட்டுதல் மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவது சம்பந்தமான பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
வயநாடு மாவட்டத்தில் மக்கள்தொகை அடர்த்தியான சுல்தான் பத்தேரி நகராட்சி பஃபர் மண்டலத்திற்குள் வந்துவிடும் என்பதால் அங்கே அதிக அளவு கிளர்ச்சி எழுந்துள்ளது.
வனப்பகுதிகளுக்கு அருகே நிலங்களில் வசிக்கும் விவசாயிகளை விரட்டும் வனத்துறை யின்முயற்சிகளுக்கு எதிராக கோழிக்கோடு மாவட்டத்தில் சக்கிட்டபாரா பஞ்சாயத்தில் மனிதசுவர்ப் போராட்டம் நடந்தது.
பஃபர் மண்டலங்கள் அமைக்கும் பகுதிக்குள் 3.8 லட்ச ஏக்கர் நிலங்கள் வரும் என்று கேரள அரசின் ஆய்வு சொல்கிறது. இதுசம்பந்தமாக தங்கள் குறைகளைச் சொல்வதற்கு மக்களுக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது
பஃபர் மண்டல விதிமுறைகள் சுமார் இரண்டு லட்சம் விவசாயிகளைப் பாதிக்கும் என்று தோராயமான மதிப்பீடுகள் சொல்கின்றன. ஒரு கிமீ பஃபர் மண்டல வரைபடத்தைத் தயார் செய்ய ஒரு மின்னணு ஆய்வு வரைபடத்தை கேரள அரசு 2021-இல் வெளியிட்டது. இந்த வரைபடத்தில் பள்ளிகள், தேவாலயங்கள், தொழில் நிலையங்கள் உட்பட பல பெரிய கட்டடங்கள் காணாமல் போய்விட்டன.
சுல்தான் பத்தேரி நகராட்சியில் மக்கள் தொகை அடர்த்தியான பல பகுதிகள் பஃபர் மண்டல வரைபடத்தில் இடம் பெற்றிருக்கின்றன. திருநெலி புல்பள்ளி, பூதடி போன்ற பல பஞ்சாயத்துகளின் பெரும்பாலான பகுதிகளும் பஃபர் மண்டலத்தின்கீழ் வருகின்றன. 14,619 கட்டுமானங்கள் மட்டுமே பஃபர் மண்டலப் பகுதிகளில் வருமென்று மின்னணு வரைபடம் அடையாளப் படுத்தியிருக்கிறது. ஆனால் உண்மையில் இன்னும் நிறைய இருக்கும் என்று செயற்பாட்டாளர்கள் சொல்கின்றனர்.
மேலும் படிக்க: தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!
பஃபர் மண்டலங்கள் அமைக்கும் பகுதிக்குள் 3.8 லட்ச ஏக்கர் நிலங்கள் வரும் என்று கேரள அரசின் ஆய்வு சொல்கிறது. இதுசம்பந்தமாக தங்கள் குறைகளைச் சொல்வதற்கு மக்களுக்கு ஜனவரி 7ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், பஃபர் மண்டலங்கள் குறித்த பிரச்சினை பற்றி அறிக்கை தயார் செய்ய கேரள அரசு நியமித்திருக்கும் நிபுணர் குழுவிடம் இதுவரை மின்னணு ஆய்வு பற்றி 20,000 புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன (மின்னஞ்சல் மூலம் 17,000; தபால் மூலம் 3,000). இதுகுறித்த சீராய்வு மனுவொன்றை ஜனவரி 11 அன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
இதற்கிடையில், பஃபர் மண்டலங்கள் சம்பந்தமான மூன்றாவது வரைபடத்தை வெளியிட கேரள அரசு தயாராக இருக்கிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட இரண்டு வரைபடங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டன. பஃபர் மண்டலங்க ள் என்று வரையறுக்கப்படும் பகுதிகளில் இடம்பெறப் போகும் நிலங்களின் சர்வே எண்கள் மூன்றாவது வரைபடத்தில் கொடுக்கப்படும்.
மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பகுதிகளை பஃபர் மண்டலங்களாக மாற்றும் எண்ணம் இல்லை என்று கேரள அரசு உறுதியளித்திருக்கிறது.
பஃபர் மண்டலங்கள் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட 89 பஞ்சாயத்துகளில் 39 பஞ்சாயத்துகள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி நகராட்சியிலும், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சந்தன்பாரா, மரியபுரம் ஆகிய பகுதிகளிலும், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சக்கிட்டபாரா பஞ்சாயத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தொட்டத்தில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவின் காலவரம்பை இரண்டு மாதத்திற்கு நீட்டித்து 2023 பிப்ரவரி 28 வரை காலக்கெடு விதித்திருக்கிறது கேரள அரசு. முன்பு அந்தக் குழுவிற்கு 2022 டிசம்பர் 30 வரை காலக்கெடு தரப்பட்டிருந்தது.
2021-ஆம் ஆண்டு இந்திய வன அறிக்கைப்படி, கேரளாவின் மொத்த வனப்பகுதி 9,679 சதுர கிமீ ஆகும். இது அந்த மாநிலத்தின் மொத்த புவியியல் பரப்பில் 24.91 சதவீதம். மொத்த மரங்களின் பரப்பு 21,253 சதுர கிமீ; புவியியல் பரப்பில் இது 54.7 சதவீதமாகும். ஆனால் இந்தியாவின் மொத்த மரங்களின் பரப்பு வெறும் 24.62 சதவீதமே; வனப்பகுதி 21.71 சதவீதம்.
ஒன்றிய அரசின் வனக்கொள்கை நாட்டின் மொத்த புவியியல் பரப்பில் 33 சதவீதத்தை வனங்களின் மற்றும் மரங்களின் நிலங்களாக மாற்றும் இலக்கை விதித்திருக்கிறது.
Read in : English