Read in : English

Share the Article

டிஜிட்டல் இந்தியாவின் மைல்கல்லாகக் கருதப்படும் 5ஜி சேவை இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை, 5ஜி, சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

உள்நாட்டில் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும், கூகுள், அமேசான், நோக்கியா, எரிக்சன், சிஸ்கோ மற்றும் டிசிஎஸ் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் நாட்டில் 5ஜி அமைப்பை வேகமாக நிறுவி வருகின்றன.

1ஜி முதல் 5ஜி வரை
1980களில், நீண்ட ஆண்டெனாக்கள் கொண்ட மொபைல் போன்கள் புழக்கத்தில் இருந்தன. 1G மொபைல் போனின் வேகம் 2.4 kb/s ஆக இருந்தது. அதாவது விநாடிக்கு 2.4 கிலோபிட்கள் மட்டுமே இதனால் பகிரமுடியும். அந்த நேரத்தில் மக்களின் தேவை குறைவு என்பதால், இந்த வேகம் அவர்களுக்குப் பெரிய குறையாகப் படவில்லை.

ஏற்கெனவே 5ஜி போன்கள் இருக்கும் நிலையில், இதன் இணைய வேகம் MB என்னும் அளவிலிருந்து GB அளவாக அதிகரிக்கும். பயனர்கள் எளிதாக 1Gbps வேகத்தை அனுபவிக்க முடியும். இது 4ஜியைவிட 100 மடங்கு அதிகமான இணைய வேகம் கொண்டது என்பதிலிருந்து இதன் சிறப்பு புலப்படும்.

மொபைல் போன்களில் குரல் அழைப்புடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை 2G தந்தது. 2ஜியின் போது ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. வார்த்தைக்கு வரம்பு நிர்ணயம் அப்போது இருந்தது. அந்த வேளையில் போட்டோ பரிமாற்றம் ஆரம்பித்திருந்தது. ஆனால், பரிமாற்ற வேகமும் மீடியா தரமும் மிகவும் குறைவாகவே இருந்தன. 2ஜியின் அதிகபட்ச இணைய வேகம் 100Kbps ஆக இருந்தது. 2ஜி சேவையால், மொபைல் போன்கள் பலரையும் கவர்ந்தன. பாக்கெட்டில் சிறிய அளவு மொபைல்கள் வைப்பதை சிரமமாகக் கருதியோர் அந்த மனநிலையிலிருந்து விடுபட்டனர்.

மூன்றாவது தலைமுறை நெட்வொர்க் என்று அறியப்படும் 3ஜி இணைய வேகத்தை கிலோ-பிட் வேகத்திலிருந்து, மெகா-பிட் ஆக அதிகரித்தது. 2003-2004 ஆம் ஆண்டில் முழுமையாக நுழைந்த 3ஜியால் மல்டிமீடியா மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 3ஜியின் வருகையுடன், மொபைல் போன்களின் வேகம் 2mb/s வரை உயரத் தொடங்கியது.

போனில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமின்றி, 3ஜியில் இணைய வேகம் அதிகரித்தது; முகம் பார்த்துப் (வீடியோ அழைப்பு) பேசும் வசதியும் கிடைத்தது. ஆனால், இதன் இணைய வேகம் யூடியூப் போன்ற சேவைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து HHPA+, HHSPA டர்போ போன்ற பதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வேகம் 42 Mbps வரை உயர்த்தப்பட்டது.

மேலும் படிக்க: ஐபோன் 14: இவ்வளவு ஆர்ப்பரிப்பும் ஆரவாரமும் தேவையா?

முக்கியமாக, 3ஜி வேகத்தை மேலும் அதிகரிக்க, 2009 வாக்கில், 4G தொழில்நுட்பத்தின் கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டன. இக்காலத்தில் மொபைல் போன்கள் கணினிக்கு இணையாயின; ஸ்மார்ட்போன்களாக மாறிவிட்டன. 4G LTE மற்றும் 4G VoLTE பயனர்களுக்குப் பல சேவைகளை வழங்கியது. 4ஜி சேவையின் அதிகபட்ச வேகம் 100Mbps ஆக இருந்தது.

இந்தியாவில் ஏற்கெனவே 5ஜி போன்கள் இருக்கும் நிலையில், இதன் இணைய வேகம் MB என்னும் அளவிலிருந்து GB அளவாக அதிகரிக்கும். பயனர்கள் எளிதாக 1Gbps வேகத்தை அனுபவிக்க முடியும். இது 4ஜியைவிட 100 மடங்கு அதிகமான இணைய வேகம் கொண்டது என்பதிலிருந்து இதன் சிறப்பு புலப்படும். இது எதிர்காலத்திற்கான பல வழிகளைத் திறக்கும். 5ஜி நெட்வொர்க்கின் அதிகபட்ச வேகம் 20Gbps ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

5ஜி சேவையின் தனித்துவமான அம்சங்கள்

  • 5ஜி அலைக்கற்றையின் மூலம் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஒரு மில்லியன் தகவல் சாதனங்களை இணைக்க முடியும்.
  • 5G சேவை மூலம் நம்மால் தானியங்கி கார்கள், டெலி மருத்துவ அறுவை சிகிச்சை போன்றவற்றை நிறுவ முடியும். மேலும், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மருத்துவ மாணவர்கள் எளிதாக அறுவை சிகிச்சைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.
  • மருத்துவ சோதனை முடிவு, மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் இனி இருக்கும் என்பது 5ஜி சேவையின் முக்கியப் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.
  • இணைய தரவுகளின் வேகம் 5ஜி சேவையில் அதிகரிக்கும் என்பதால், வானிலை நிலவரங்களை இன்னும் வேகமாக அறிந்துகொள்ள முடியும்.
  • தொழில்துறைகளில் தகவல் செயல்முறை வேகமெடுக்கும் என்பதால், பயனர்களுக்குக் காத்திருப்பு நேரம் குறையும்.

5ஜி எவ்வாறு செயல்படுகிறது?
இதற்கு ஒரு கதை சொன்னால் உங்களுக்கு எளிதாகப் புரியும் என்று நினைக்கிறேன். 1980களில் நான் பழச்சாறு விற்பனை செய்யும் ஒரு சிறிய கடையைத் தொடங்கினேன். வியாபாரத்தின் பொருட்டு ஒரு செல்போனை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. ஒன்றாம் தலைமுறை அலைக்கற்றையைக் கொண்டு இயங்கும் போன் என்பதால், அதில் குரல் அழைப்பை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது. அதாவது எனது தொழில் 1ஜி எனப்படும் 1ஆம் தலைமுறை அலைக்கற்றையிலிருந்து தொடங்குகிறது.

5ஜி சேவையால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் விரைவான வளர்ச்சியைப் பெறும். இதன் காரணமாக, பொருள்களைத் தயார் செய்யும் முறை இன்னும் எளிமையாகும். அதுமட்டுமில்லாமல், மக்களுக்கு எந்தப் பொருள் எப்போது தேவைப்படும் என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

பின்னர் தொழில் வளர்ச்சி அடைந்தது. வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக சேவையை அளிக்க வேண்டும். இதற்காக 90களில் வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கினேன். அப்போது எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ், அதிவேக அழைப்பு, குறைந்த வேகம் கொண்ட இன்டெர்நெட் வசதி கொண்ட 2ஜி போன் அறிமுகமானது. வாடிக்கையாளர்களின் சேவைக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய இது தேவைப்படும் என்பதால், சேவை மைய ஊழியர்களுக்காக இந்த 2ஜி போனை வாங்கிக் கொடுத்தேன்.

நாள்கள் கடந்தன. தொழில்களை மேம்படுத்தத் திட்டமிட்டேன். போட்டிகள் அதிகரித்ததால், கிடைக்கும் பொருள்களை அதிகப்படுத்த வேண்டும், அதிக அளவில் பயனர்களைக் கவர வேண்டும், பயனர்களுடன் எப்போதும் இணைப்பில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, 2004ஆம் ஆண்டு வாக்கில் 2ஜி போன்கள் அனைத்தும் 3ஜி ஆக மாற்றப்பட்டன. இதன் மூலம் எளிதாக வாடிக்கையாளர்கள் பொருள்களை ஆர்டர் செய்ய முடிந்தது.

பின்னர், 4ஆம் தலைமுறை என்று அறியப்படும் டிஜிட்டல் யுகத்தில் நுழைந்த பிறகு, பொருள்களை ஆன்லைனில் சந்தைப்படுத்துவது, பயனர்கள் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் கவர்வது, ஆர்டர் செய்த பொருள்களுக்கு உடனடியாகப் பணத்தை ஆன்லைனில் பெறுவது போன்ற செயல்பாடுகளால் எனது தொழில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.

தற்போது, அறிமுகம் செய்யப்படும் 5ஜி சேவையால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் விரைவான வளர்ச்சியைப் பெறும். இதன் காரணமாக, பொருள்களைத் தயார் செய்யும் முறை இன்னும் எளிமையாகும். அதுமட்டுமில்லாமல், மக்களுக்கு எந்தப் பொருள் எப்போது தேவைப்படும் என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்ளவும் முடியும். இதற்கு 5ஜி இணையத்தின் வேகம் தான் முக்கியக் காரணமாக அமையும். நொடிக்கு 20ஜிபி வரையிலான அதிவேக சேவையால் பணம் அனுப்புவது முதல் பல செயல்முறைகள் நொடிப்பொழுதில் நடத்திவிடலாம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles