Read in : English

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலஞ்சென்ற அவரது தந்தையாரைவிட மதச்சார்பின்மை என்னும் கொள்கையில் பிடிப்புகொண்டவரா? அப்படித்தான் நாம் நம்ப விரும்புகிறோம்; ஆனால், அப்படி உடனே முடிவுசெய்வது சரிதானா என நமது உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கிறது. இப்போது நாடு முழுவதும் மதச்சார்பின்மை ஓர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிட்டது. சில எதிர்க்கட்சி முகாம் முதலமைச்சர்கள் மட்டும்தான் இந்த முற்போக்குச் சித்தாந்தத்தில் உறுதியோடு அசைந்து கொடுக்காமல் இருக்கிறார்கள். நமது நம்பிக்கைக்குரியவர்களாக நிதிஷ் குமாரும், ஸ்டாலினும் இருக்கிறார்கள். எப்போதுமே பினராயி இருக்கிறார்; ஆனாலும் அவரும் சமரசம் செய்ய விரும்பினால் அவர் கட்சி மாற வேண்டியிருக்கும்!

பாஜக ஆளாக கூட்டணியில் இருந்தாலும் நிதிஷ் வகுப்புவாதச் சக்திகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து தனது நம்பகத்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். அதனால் சந்தேகமே இல்லாமல் அவர் பாராட்டுக்குரியவர்தான். ஆனால், இங்கே நமது கவலை எல்லாம் ஸ்டாலின் பற்றித்தான்; சித்தாந்தரீதியாகவும் வேறுவகையாகவும் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கிடையே அவர் செயற்படும் சூழல் பற்றிய கவலைகள் நமக்குண்டு.

தேசிய புலனாய்வு முகமை, தேசம் முழுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இஸ்லாமிய அமைப்பின் மீது அதிரடிச் சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து சில இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அதனால், சட்ட ஒழுங்கைக் காக்கும் தலைவனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் ஒரு முதலமைச்சர் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் கோபத்துடன் கடுமையாக எச்சரித்திருக்க வேண்டும், ஆனால் ஸ்டாலின் அப்படிச் செய்யாமல் மெளனம் சாதிக்கிறார். ஆனால், திமுகவின் அதிகார ஏடான முரசொலி, காவல்துறை “இந்தச் சம்பவங்களில் பாஜக நிர்வாகிகளின் பங்கைப் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது” என்று மட்டுமே சொன்னது.

பாஜக ஆளாக இருந்தாலும் நிதிஷ் வகுப்புவாதச் சக்திகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து தனது நம்பகத்தன்மையை நிலைநாட்டியிருக்கிறார். சித்தாந்தரீதியாகவும் வேறுவகையாகவும் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கிடையே  ஸ்டாலின் செயற்படும் சூழல் பற்றிய கவலைகள் நமக்குண்டு.

2017இலிருந்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தொடர்புடைய சம்பவங்களின் 12 செய்தித் துண்டுகளை அந்த நாளேடு மீள்பிரசுரம் செய்திருக்கிறது. இனக்கலவரங்களைத் தூண்டும் நோக்கத்தோடு அவர்கள் தாங்களாகவே தங்களுக்கு இழைத்திருந்த நாசமே அந்தச் செய்தித் துணுக்குகளில் தென்பட்ட பொதுவான அம்சம்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கண்டும் காணாமல் போய்விடும், நமக்குப் பழக்கப்பட்ட, ஒரு போலியான மதச்சார்பின்மையா இது என்பதைப் பொறுத்துத்தான் அவதானிக்க வேண்டும். ஆனால், இனத்துவேஷம் என்னும் கிருமிக்குத் தமிழ்நாடு பேரளவில் பலியானதில்லை என்பதுதான் உண்மை. இந்த விஷயத்தில் கட்டுப்பாடாகச் செயலாற்றுவதுதான் புத்திசாலித்தனமானது. இச்சூழலில் இந்தக் கணத்தில் ஸ்டாலின் பாராட்டுக்குரிய ஆளுமை.

69 வயது நிரம்பிய அந்தத் தலைவர் தனது தந்தையாரை விடவும் மதச்சார்பின்மைப் பண்பாட்டில் பிடிப்புகொண்டவர் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். உறுதியான சித்தாந்தத் தெளிவு கொண்டவராகவோ தன்னைச் சிந்தாந்தவாதியாக மார்தட்டிக்கொண்டவராகவோ அவர் ஒருபோதும் பொதுவெளியில் அதீதக் கவனம் ஈர்த்தவர் அல்லர் என்ற பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, அவரது தற்கால மதச்சார்பின்மை வெளிப்பாடு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.

மேலும் படிக்க: அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக கரை சேருமா?

1980-களில் முதல் தடவையாக அவர் சட்டமன்ற உறுப்பினரானபோது தன்னை அதிகம் முன்னிறுத்திக்கொள்ளவில்லை. சாந்தமாகவும் பாந்தமாகவும் சட்டசபை அலுவலகம் வந்து அன்றைய நாளின் வேலைகளை முடித்துவிட்டுச் செல்வார்; யாராவது வணக்கம் சொன்னால் பவ்வியமாகத் தலையசைத்துக் கடந்துபோவார். உதவியாளர்களின் துணையேதும் இல்லாமல் தனது இருக்கையில் சென்று அமர்வார்; சட்டசபை நிகழ்வுகளை அமைதியாக அவதானிப்பார்; இடையிடையே குறுக்கிடுவதில்லை. சபை கலைந்ததும் சத்தமே இல்லாமல் அவரும் வெளியேறிவிடுவார். இதெல்லாம் நிகழ்ந்த காலகட்டத்தில் அவர் முதலமைச்சர் ஒருவருடைய மகன்; அரசியல் வாரிசும்கூட.

அதன்பின் நீண்டகாலம் அவர் பின்புலத்திலே தங்கியிருந்தார். மற்ற மாநிலங்களில் முதலமைச்சர்களுடைய மகன்கள் செய்த வழக்கமான அதிகார அடவாடித்தனங்கள் அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலினிடம் இல்லை. ஆனால், அப்போது அவரது மூத்த சகோதரர் மு.க. அழகிரி தெற்கே மதுரையில் ஒரு குட்டி ஆட்சி நடத்தினார்; அழகிரி கட்சிக்கும், தந்தைக்கும் கெட்டபெயரைச் சம்பாதித்துக் கொடுத்தார்.

ஸ்டாலினை இலக்கிய கூட்டங்களிலோ அரசியல் சந்திப்புகளிலோ காண்பது அரிது. அவரது நடத்தையில் கொஞ்சங்கூட ‘திராவிடத்தன்மை’ இருந்ததில்லை. ஆனால், தோற்றம் நம்மை ஏமாற்றக்கூடியது; உண்மைதான். திமுக தொண்டர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய அனல் பேச்சாளர் வைகோ குற்றம்சுமத்தப்பட்டுக் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்; காரணம் தனது வாரிசுத் திட்டத்திற்குக் கட்சியில் சவாலாக உருவாகும் எவரையும் கருணாநிதி விரும்புவதில்லை.

மதச்சார்பின்மை திமுகவின் கொள்கை என்றால் அதில் கருணாநிதியைவிடச் சிறப்பாகப் பரிமளித்தவர் ஸ்டாலின்தான்

‘அடக்கி வாசிக்கும் பிம்பம்’ கொண்ட ஸ்டாலினுக்குக் கட்சியில் அப்படியொரு செல்வாக்கு இருந்தது. அதனால், 2001 சட்டசபைத் தேர்தலில் சாதியமைப்புகளோடு திமுக கொண்டிருந்த கூட்டணிக்கும், அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட தேர்தல் சீட்டுகளுக்கும் காரணம் ஸ்டாலின்தான் என்று கூறி கருணாநிதியின் மனசாட்சியும் மருமகனுமான முரசொலி மாறனே வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். கொஞ்ச காலம் மாறன் கொதித்துப் போயிருந்தார்; ஒருகட்டத்தில் தீவிர அரசியலிலிருந்து விலகப்போவதாகவும் அச்சுறுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் மாறனின் கருத்துகளைச் சரியென நிரூபித்தது தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற படுதோல்வி. ஆயினும், ஏறுமுகத்தில் இருந்த ஸ்டாலினின் அதிர்ஷ்டத்தை அது பெரிதாகப் பாதிக்கவில்லை.  தனது இரண்டாம் மகனுக்குப் ‘பட்டாபிஷேகம்’ வெகுவிரைவில் நடத்தப்படும் என்பதைத் தந்தையார் 2007-08இல்தான் சற்று வெளிப்படையாகவே அறிவித்தார். அதற்கு முன்பு ஸ்டாலினை அரசியல் வாரிசாக கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தபோதெல்லாம் அழகிரி கடுப்பாகிக் கட்டுப்பாட்டை இழந்து பேசுவார். அப்போது கருணாநிதி பின்வாங்கிவிடுவார். ஆனால், ஸ்டாலினைத் தடுத்து நிறுத்தும் சக்தி ஏதுமில்லை. இறுதியில் அவர் துணைமுதல்வரானார். பின்பு ஒருகாலகட்டத்தில் தந்தை பேசமுடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்ட பின்பு ஸ்டாலின் கட்சியின் முடிசூடா மன்னரானார்.

மேலும் படிக்க: தி மு க விற்கு வலை வீசுகிறது பா ஜ க : ‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’

அப்போது அழகிரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கருணாநிதியின் மகள் கனிமொழியும் சாதனையாளர்தான்; ஆனால், அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதிருப்தியில் கொதித்த அழகிரியோடு அவர் கைகோக்க விரும்பவில்லை. கட்சியில் தனக்கென்று கிடைத்த ஓரிடத்தில் அவர் சந்தோசமாக இருப்பது போலவே தெரிகிறது. திமுக சார்புநிலை கொண்ட ஒரு பத்திரிகையாளர் ஸ்டாலின் பயனற்றவர் என்றும் அவரால் கட்சி நாசமாகும் என்றும் கூறிவந்தார். அவர் இப்போது தனது ஆருடம் பொய்த்துவிட்டது என்று வெட்கித் தலைகுனிந்துகொண்டிருப்பார்.

அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்டாலின். அதைத் தவிர அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும் அவர் கருணாநிதியின் மகன் என்று சொல்வதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. ஆனால், மதச்சார்பின்மை திமுகவின் கொள்கை என்றால் அதில் கருணாநிதியை விட சிறப்பாகப் பரிமளித்தவர் ஸ்டாலின்தான். கருணாநிதி ஆட்சியின்போது 1998இல் கோயம்புத்தூர் ஆறுமணி நேரத்திற்குள் நிகழ்ந்த 12 குண்டு வெடிப்புகளால் அல்லோலகல்லோலப்பட்டது. அப்போது 58 பேர் பலியாயினர்; 200க்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.

மதஅடிப்படைவாதக் குழுவான அல்உமா தனது வேர்களை ஆழமாக இந்த மண்ணில் ஊன்றிக்கொண்டிருந்தபோதும், கோயம்புத்தூர் மாநகரத்தில் இனக் கலவரங்கள் வெடித்தபோதும், மாநில அரசு வினோதமான முறையில் அலட்சியமாகவே இருந்தது. பின்பு அதிரடி வேட்டையில் அரசு இறங்கி நிரபராதிகளைச் சிறையில் அடைத்துப் பல குடும்பங்களை நாசமாக்கியது. அப்படிச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 17 பேர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள்.

ஸ்டாலின் ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் இடம் கொடுப்பதில்லை. தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தன்நிலையைப் பலப்படுத்திக்கொள்கிறார்

ஆனால், சிறிதுகாலத்திற்குப் பின்பு கருணாநிதி பாஜகவுடன் கைகோத்து 1999இல் பாஜக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகித்தார். கோத்ரா கலவரம் பற்றிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில் சொல்லித் தவிர்த்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவந்த போதுதான் அடிப்படைவாதத்தின் ஆபத்துகளை அவர் உணர்ந்தார். பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையையும் ஆட்டிவிடுவது; இதுதான் கிட்டத்தட்ட கருணாநிதியின் ஆளுமையில் ஓர் அம்சம். தமிழகத்தில் பாஜக பெரியதொரு சக்தியாக இல்லாத காலகட்டத்தில், மோடி தேசிய அரசியல் மேடையேறாத காலகட்டத்தில் கருணாநிதியின் போக்கு அப்படித்தான் இருந்தது. எந்தக் கட்டாயமும் இல்லாத நேரத்தில் நீண்ட தயக்கத்திற்குப் பின்பு அவர் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார்; அதனால் அவரது மதச்சார்பின்மை பிம்பம் கேலிக்காளானது.

ஆனால், தற்காலம் மிகவும் வேறுபட்டது. மோடி கிட்டத்தட்ட தேச அடையாளமாகிவிட்டார். எங்கும் வியாபித்திருக்கிறது பாஜக. ஏறக்குறைய காங்கிரஸ் கட்சியை ஏறக்கட்டியாகிவிட்டது. தமிழ்நாட்டில் தனது தொடக்ககாலப் புகழைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டது அஇஅதிமுக; காங்கிரஸ் தேசிய அளவைவிட மாநில அளவில் பலவீனமாகிவிட்டது; இச்சூழலில் பாஜகவிற்கான இடம் காலியாகவே கிடக்கிறது.  குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு ஸ்டாலினுக்கு எதிர்ப்பேதும் இல்லை. அஞ்சி அஞ்சி சாவதற்கு இங்கே எம்ஜியாரும் இல்லை; ஜெயலலிதாவும் இல்லை. ஆனால், இன்றைய கட்டத்தில் இந்து மத வாத சக்திகளின் ஊடுருவல், வலிமை குறித்து யார்தான் உறுதியாகக் கூற முடியும்?

மேலும், அவரது குடும்பத்தை எப்போதுமே அச்சுறுத்திக்கொண்டிருப்பது ஊழல் குற்றச்சாட்டுகள்தாம். ஒன்றிய அரசின் முகமைகளை ஏவிவிடுவதற்கும் மோடி ஒருபோதும் தயங்க மாட்டார். தன் நிலையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு ஸ்டாலின் அனுமதிக்கும் விஷயம் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்குக் கொடுத்திருக்கும் சிறிய அளவிலான சுதந்திரம் மட்டுமே. கடந்தகால திமுக ஆட்சிகளில் கொடுக்கப்பட்டதைவிட இது சற்று அதிகமானது. எந்த விஷயத்திலும் அவர் மோடிமீது மிகத் தீவிரமான விமர்சனத்தை முன்வைப்பதில்லை.

ஆனாலும், ஸ்டாலின் மதச்சார்பின்மை விஷயங்களில் ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் இடம் கொடுப்பதில்லை. தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தன்நிலையைப் பலப்படுத்திக் கொள்கிறார்; ராகுலின் ஜோடோ யாத்திரைக்காக அவரை வாழ்த்துகிறார்; ராகுலை பிரதமர் வேட்பாளராக அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்; மார்க்சிஸ்ட் பினராயோடு தோளோடு தோள் உரசிக் கைகோக்கிறார்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாஜகவுடன் கூட்டு இல்லை என்று அறிவிக்கிறார். பழிவாங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடுக்காமல் அவரது அரசு இனவாதச் சக்திகளை அடக்கிவைக்க நடவடிக்கைகள் எடுக்கிறது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.

பல அக்னிப் பரீட்சைகளை எதிர்கொண்டு வென்ற அவரது தந்தையாரைவிட ஸ்டாலின் அதிக நிர்வாகத்திறன் கொண்டவர் எனவும், அதிக மதச்சார்பின்மையைக் கொண்டவர் எனவும் எப்படிக் காட்டிக்கொள்ள முடிகிறது? பதில் சொல்வது சிரமம். ஒருவேளை அவர் சரியான பாடங்களைக் கற்றிருக்கலாம். அதனால்தான் நாம்மேம்பட்ட நிலையில் இருக்கிறோம்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival