Read in : English

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் ஜூலை 29 முதல் நடைபெற்றுவந்த 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இறுதிச் சுற்று நேற்று சுற்று நடந்து முடிந்தது. எதிர்பார்த்திராத பல முடிவுகளைத் தந்த அந்தச் சுற்றுகளின் ஆட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்திய அணி எதிர்பார்த்திராத முடிவுகளைத் தந்த அந்தச் சுற்றுகளின் ஆட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். .  எதிர்பார்த்திராத பல முடிவுகளைத் தந்த அந்தச் சுற்றுகளின் ஆட்டங்களைப் பற்றிப் பார்க்கலாம். 

உஸ்பெகிஸ்தான் 2 ½ – 1 ½ என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. மூன்று போர்டுகள் டிராவில் சென்ற நிலையில், ஜகோங்கிர் வாகிடோவ் மேக்ஸ் வார்மர்டாமை வென்று  ஒலிம்பியாட் போட்டியில் 19 ஆட்டப் புள்ளிகள் பெற்றது,   உஸ்பெக்குகளுக்குத் தங்கம் வெல்வதற்கு எளிதானது.

ஆர்மீனியா ஸ்பெயினை 2 ½ – 1 ½ என்ற கணக்கில் வென்றது. அலெக்ஸி ஷிரோவுக்கு எதிரான கேப்ரியல் சர்கிசியனின் வெற்றி, மற்ற போர்டுகள் டிராவுக்குச்  சென்றதால், இறுதிச் சுற்றின் முடிவில் அணிக்கு உதவியது. ஆர்மீனியா 19 ஆட்டப் புள்ளிகள் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

காப்ரின்டாஷ்வில்லி கப் என்றழைக்கப்படும் சிறந்த கூட்டமைப்புக்கான விருது, முதலிடம் 7 ஆம் தரவரிசையில் இருக்கும் (ஆண்கள் 4, பெண்கள் 3) இந்தியா A -வுக்குச்  சென்றது, அதைத் தொடர்ந்து 9 ஆம் தரவரிசை கொண்ட அமெரிக்கா இரண்டாவது இடத்தையும், 11ஆம் தரவரிசை கொண்ட இந்தியா B மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

மேலும் படிக்க :

முதலிடத்தில் இந்திய மகளிர் அணி

உஸ்பெகிஸ்தானைத் தொடரும் ஆர்மீனிய, இந்திய அணிகள்

இளம் இந்திய வீரர்கள் டி குகேஷ் (பலகை 1) மற்றும் நிஹால் சரின் (பலகை 2) இந்த ஒலிம்பியாட்டில் தங்களது  சிறந்த ஆட்டங்களுக்காகத்  தங்கப் பதக்கங்களை வென்றனர். 

இந்தியா ஏ, அமெரிக்காவுடன் டிரா செய்தது. பென்டலா ஹரிகிருஷ்ணா (எதிர்  ஃபேபியானோ கருவானா) மற்றும் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (எதிர் சோ வெஸ்லி) டிரா செய்தனர். லெய்னர் டொமிங்குஸ் பெரெஸுக்கு எதிராக அர்ஜுன் எரிகைசி வெற்றிபெற்றதன் மூலம் எஸ்.எல்.நாராயணனின் சாம் ஷாங்க்லாண்டின் தோல்வி சமன்படுத்தப்பட்டது. இந்தியா ஏ ஒலிம்பியாட் போட்டியில் நான்காம் இடத்தைப் பிடித்து ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று.

சுற்று 11 இல் லெய்னர் டொமிங்குவேஸ் பெரெஸை வென்று, அர்ஜுன் எரிகைசி தரவரிசையில் 2700 – ஐ எட்டினார், இந்தச் சாதனையை எட்டிய ஏழாம் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆவார். யானைக்கு யானை காவு கொடுத்த  பிறகு, ஒரு பிஷப்பும் இரண்டு குதிரைகளும்  இருந்தன. அர்ஜுன் வெள்ளை ராஜாவுக்கு ஆடினார். குதிரைகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் தனது நகர்வுகளை வலுப்படுத்தி, அவர் கறுப்பு ராஜாவை மூன்று முறை சிறைப்படுத்த முயன்றார். லெய்னர் தற்காப்புடன் பதிலளித்தார். சிப்பாய் ராணியாகக் கூடிய நிலையில், அர்ஜுன் பக்கம் ஆட்டம் வலுவடைய லெய்னர் இறுதி ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்தார்.

இந்தியா பி ஜெர்மனிக்கு எதிராக 3 – 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. நிஹல் சரின் (எதிர் மதியாஸ் புளூபாம்) மற்றும் ரவுனக் சத்வானி (எதிர் லிவியூ டைட்டர் நிசிபியானு) ஆகியோர் தங்கள் பலகைகளில் வெற்றிபெற்றனர், குகேஷ் (எதிர் வின்சென்ட் கீமர்) மற்றும் பிரக்ஞானந்தா (எதிர் ராஸ்மஸ் ஸ்வான்) ஆகியோர் தங்கள் போட்டிகளை டிரா செய்தனர். இந்தியா பி 18 ஆட்டப் புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

 

கஜகஸ்தானுடன் இந்தியா சி டிரா செய்தது. சேதுராமன் (எதிர் அலிஷர் சுலேமெனோவ்) மற்றும் அபிமன்யு பூராணிக் (எதிர் காசிபெக் நோகர்பெக்) ஆகியோர் தங்கள் ஆட்டங்களை டிரா செய்தனர். சூர்யா சேகர் கங்குலியின் தோல்வி (எதிர் ரினாட் ஜுமாபயேவ்) முரளி கார்த்திகேயனின் வெற்றியால் (அரிஸ்டன்பெக் உராசாயேவுக்கு எதிராக) சமப்படுத்தப்பட்டது.

பெண்கள் பிரிவில், உக்ரைன் 18 ஆட்டப் புள்ளிகளுடன் 3 – 1 என்ற கணக்கில் போலந்தையும், ஜார்ஜியா 3 – 1 என்ற கணக்கில் அஜர்பைஜானை 18 ஆட்டப் புள்ளிகளுடன் (ஒரு தோல்வியுடன்) வீழ்த்தியது. இந்தியாவின் தோல்வியும், இவர்களது வெற்றியும், இந்தியாவை வீழ்த்தி உக்ரைன் தங்கம் பெற உதவியானது.

10ஆம் சுற்று வரை முன்னிலையில் இருந்த இந்திய ஏ அணி, அமெரிக்காவுடனான தனது இறுதிப் போட்டியில் 1 – 3 என்ற கணக்கில் தோல்வியடைந்து 17 ஆட்டப் புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது. கோனேரு ஹம்பி (குல்ருக்பெகிம் டோகிர்ஜோனோவாவுக்கு எதிராக) மற்றும் வைஷாலி (எதிராக இரினா க்ருஷ்) ஆகியோர் தங்கள் பலகையில் ட்ரா செய்தனர். தானியா சச்தேவ் (கரிஸ்ஸா யிப் எதிராக) மற்றும் பக்தி குல்கர்னி (எதிர் அப்ரஹாம்யன்) ஆகியோர் தங்கள் பலகையில் தோற்றனர்.

இந்தியா பி ஸ்லோவாக்கியாவுடன் சமன் செய்தது, வந்திகா அகர்வால் (எதிர் ஜுசானா போரோசோவா) மற்றும் மேரி ஆன் கோம்ஸ் (எதிர் ஜுசானா ஹகரோவா) ஆகியோர் தங்கள் போட்டிகளை டிரா செய்தனர். திவ்யா தேஸ்முக் (எதிராக ஸ்வெட்லானா சுசிகோவா) பத்மினி ரௌட்டின் (எவா ரெப்கோவாவுக்கு எதிராக) இழப்பைக் காப்பாற்றித் தனது போர்டில் வென்றார்.

இந்தியா சி கஜகஸ்தானிடம் 1½ – 2½ என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பிரத்யுஷா போடாவின் வெற்றியும் (குலிஸ்கான் நக்பயேவா எதிர்) மற்றும் சாஹிதி வர்ஷினியின் டிராவும் (எதிர் செனியா பாலாபயேவா) நந்திதா பிவி (எதிராக பிபிசரா அஸ்ஸௌபயேவா) மற்றும் ஈஷா கரவாடே (எதிர் ஜான்சயா அப்துமாலிக்) ஆகியோரின் தோல்விகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival