Read in : English

ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் அதன் முதன்மைப் பாத்திரமான ஆலிவர் ட்விஸ்ட் எனக்கு இன்னும் வேண்டும் என்று கேட்டான், அனைவரும் அதிர்ந்துபோனார்கள், அதனால் அவன் தண்டிக்கப்பட்டான். ஆனால், இன்று கடும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை சீனாவின் கதவை மறுபடியும் தட்டுகிறது இன்னும் நிறைய வேண்டும் என்று கேட்கிறது. இலங்கையின் சீனத் தூதுவரான பலிதா கொஹோனா, “வணிகம், முதலீடு, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் நிலையான வளர்ச்சிக்கு உதவ வேண்டி இலங்கை சீனாவைக் கேட்டிருக்கிறது” என்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உடனடியாக 400 கோடி டாலர் பெறுவதற்கான பேச்சுவார்த்தையின்போது கூறியிருக்கிறார். இது சீனாவின் கடன்-வலை ராஜதந்திரம் என்று கூற முடியுமா?

சீனாவிடமிருந்து தொடர்ந்து முடிவில்லாமல் கடன் வாங்கியது தற்போதைய நெருக்கடிக்கு ஒரு முக்கியக் காரணம் என்ற எண்ணம் இருந்தாலும் இலங்கையிலோ வெளியிலோ யாருமே இதனால் வியப்படையவில்லை இதை எதிர்க்கவும் இல்லை. “இலங்கையின் இந்த நெருக்கடி கடந்த 20 ஆண்டுகளாக விளைந்துகொண்டிருந்தது. இதற்குப் பெருமளவு இலங்கையின் உள்நாட்டு நிகழ்ச்சிகள் பழி கூறப்பட்டாலும் சீனாவின் பங்களிப்பும் இந்த நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது. பொதுநல அரசியல்வாதிகளான ராஜபக்ச சகோதரர்கள் நிலையில்லாமல் கடன் வாங்கியதும், உள்கட்டமைப்பில் செய்த தவறுகளும், சீனாவின் பங்களிப்பு இல்லாமல் முழுமை பெறாது” என்று இந்தியாவின் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஆதித்யா கௌதர சிவமூர்த்தி வலியுறுத்துகிறார்.

மேலும் படிக்க:

இலங்கை தேர்தல்: புது அதிபரால் மக்கள் பிரச்சினை தீருமா?

இலங்கைப் போராட்டம்: குடும்ப ஆட்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வாரா புதிய ஜனாதிபதி?

இந்தப் பின்னணியில் இன்மதி இணையதளத்துக்காக அமெரிக்காவின் ‘வில்லியம் அண்ட் மேரி’ பல்கலைக்கழகத்தின் ‘எய்ட் டேட்டா’ என்ற ஆய்வகத்தை அணுகி இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்களுடைய கருத்து என்ன என்று கேட்டோம், அவர்கள் உடனடியாகப் பதில் அளித்தார்கள். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிராட்லி சி பார்க் அளித்த நேர்காணலின் சில பகுதிகள் இங்கே:

சீனாவின் கடன் வலை ராஜதந்திரக் கொள்கை என்ற பரவலான விமர்சனம் எந்த அளவு சரியானது? இதில் இலங்கையின் நிலைப்பாடு என்ன?

இது ஓர் ஊடக மாயை. துறைமுகம், மின்சாரக் கட்டுமானம் போன்ற எளிதாகப் பணமாக மாற்ற முடியாத சொத்துகளை ஈடாகப் பெற்றுக்கொண்டு சீனாவின் பொதுத்துறைக் கடன் நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அவற்றை அவர்கள் பறிமுதல்செய்துகொள்வார்கள் என்பது உண்மையன்று. சீனாவின் பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனங்கள் அதைவிடத் திறமையானவை. உண்மையில் அவை பணமாக மாற்றக்கூடிய சொத்துகளை ஈடாகப் பெற்றுக்கொண்டுதான் கடன்களை வழங்குகின்றன. பொதுவாக, கடன் வழங்கியவர் கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கடன் வாங்கியவர்கள் ஒரு குறைந்த அளவு தொகையை ரொக்கமாக இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். கடன் வாங்கியவர் தவணை செலுத்தத் தவறினால் சீனாவின் பொதுத்துறைக் கடன் வழங்கும் நிறுவனம் ஒரு தீர்ப்பாளர் முன்பு சென்று கடன் வாங்கியவர் சொத்துகள் மீது வழக்கு போட்டு தொல்லைபடுத்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கில் இருந்து அந்தத் தொகையை எளிதாக எடுத்துக் கொள்ளும்.

துறைமுகம், மின்சாரக் கட்டுமானம் போன்ற எளிதாகப் பணமாக மாற்ற முடியாத சொத்துகளை ஈடாகப் பெற்றுக்கொண்டு சீனாவின் பொதுத்துறைக் கடன் நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அவற்றை அவர்கள் பறிமுதல்செய்துகொள்வார்கள் என்பது உண்மையன்று

(சீனா எப்படிக் கடன் வழங்குகிறது என்ற எய்டுடேட்டாவின் ஆய்வைப் பாருங்கள் மேலும், ஆய்வின் முதன்மை முடிவுகளின் சுருக்கம் இங்கே(1)(2)(3))

ஆனால், கடன் வழங்கும் விதிமுறைகளில் ஆபத்தான உட்பொருள்கள் இருந்தால், அந்தக் கடன் வழங்கும் விதிமுறைகளைச் செயல்படுத்துவதற்கு சீனாவிடம் என்னென்ன வழி வகைகள் இருக்கின்றன – குறிப்பாக ஏற்கெனவே திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் சீனா ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக்கொள்ள முடியுமா? முடியாது என்றால் அந்த விதிமுறைகளுக்கு நோக்கம் என்ன? வெற்று மிரட்டல் மட்டும்தானா? சீனா ஆதரவற்று இருப்பதாக மற்றவர்கள் நினைத்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதா, கடன் வாங்கிய மற்றவர்களுக்கும் துளிர் விட்டுவிடாதா?

பிராட்லி சி பார்க்

இலங்கை போன்ற கடன் வாங்கிய நாடுகள் கணிசமான பண நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் அதற்குப் புத்திசாலித்தனமான வழி அந்த நாடுகளுக்குக் கடன் தவணை கட்ட வேண்டிய நாள்களைக் கூடுதலாக நீட்டிப்பது, கடன் திருப்பித் தரவேண்டிய இடைவெளியை இன்னும் கூடுதல் ஆக்குவது, சில ஆண்டுகளுக்கு உள்ளான சிறு தவணைக் கடன்களை வழங்குவது இவற்றின் மூலமாக அந்த நாடுகளைத் தேவையான அளவிற்குத் தண்மையுடன் அணுகுவதுதான் அந்த நெருக்கடியைக் கடப்பதற்கு உதவும் என்ற அனுமானத்தில்தான் சீனா செயல்பட்டு வந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனாவின் மக்கள் வங்கியும் (People’s Bank Of China (PBOC)) சீனா வளர்ச்சி வங்கியும் (China Development Bank (CDB)) இலங்கை அரசைத் தண்மையுடன் அணுகி தங்களுடைய பழைய திட்டக் கடன்களைத் திரும்பப் பெறுவதற்கும் அந்த நாட்டின் கடன் புள்ளிகள் குறையாமல் தவிர்ப்பதற்கும் முயன்றன. இன்னும் குறிப்பாக 2018இல் இருந்து 2022இன் தொடக்கம் வரை சீனா முதலீட்டுக் கடன் வழங்குவதிலிருந்து அயல்நாட்டுச் செலுத்து நிலைக்காகக் (Balance Of Payment – BOP) கடன் வழங்குவதை (எ.கா: உடனடி மீட்புக் கடன்) நோக்கித் திரும்பியது. 2018 அக்டோபரில் இருந்து 2022இன் முதல் பாதி வரை சீனாவின் பொதுத்துறை வங்கிகள் ஏறக்குறைய 480 கோடி டாலர்கள் இலங்கை அரசுக்குக் கடனாக வழங்கி இருக்கின்றன. அந்த 480 கோடி டாலர்களில் வெறும் 100 கோடி டாலர்கள் மட்டும்தான் கட்டமைப்புக்கான திட்டங்களுக்கானவை. மற்ற 380 கோடி டாலர்களும் சீனாவின் மக்கள் வங்கியும் (People’s Bank Of China (PBOC)) சீனா வளர்ச்சி வங்கியும் (China Development Bank (CDB)) கொடுத்தது ஐந்து BOP கடன்களுக்காகத்தான். 2000இல் இருந்து 2017 வரை பெற்ற கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன்களைவிட இந்த BOP கடன்களில் கடன் திருப்பித் தருவதற்கான விதிமுறைகள் சற்றுக் கறாராகவே இருந்தன. (3.5% இருந்து 5.25% வரையான வட்டி விகிதம், 1 முதல் 10 ஆண்டுகளுக்கான முதிர்வுகள்)

கடந்த ஆண்டு எங்களுடைய ஆய்வில் நாங்கள் கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். “முதலில், சீனாவின் ஒப்பந்தங்கள் அசாதாரணமான ரகசியத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அவை கடன் வாங்குபவர்கள் அந்த விதிமுறைகள் என்ன என்று வெளியே கூறுவதற்கும் அந்தக் கடனைப் பற்றியே வெளியே கூறுவதற்கும்கூடத் தடை விதிக்கின்றன. இரண்டாவதாக, கடன் வழங்கியவர் கட்டுப்பாட்டில் இருக்கும் வருவாய்க் கணக்குகள், மொத்த மறு கட்டமைப்பிலிருந்து கடன்களைத் தனியாக வைத்திருக்க வேண்டும் என்ற வாக்குறுதிகள் போன்ற ஈடு ஏற்பாடுகளைப் பயன்படுத்தி சீனாவின் கடன் வழங்குபவர்கள் மற்ற கடன் கொடுத்தவர்களைவிட முன்னுரிமை கோருகிறார்கள். மூன்றாவதாக, சீனாவின் ஒப்பந்தங்களில் உள்ள ரத்து செய்வதற்கோ, முடுக்குவதற்கோ, நிலைப்படுத்துவதற்கோ ஆன சரத்துகள் கடன் கொடுத்தவர் கடன் வாங்கிய நாட்டின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் தாக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. இந்த விதிமுறைகள் எல்லாம் தீர்ப்பு மன்றத்தில் செயல்படுத்த முடியாததாக இருந்தாலும், ரகசியத்தன்மை, மூப்பு, கொள்கையில் தாக்கம் ஆகியவற்றின் இந்தக் கலவை கடன் வாங்கிய நாட்டின் நெருக்கடியைச் சமாளிக்கும் வழி வகைகளைக் கட்டுப்படுத்தி கடன் பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்க முடியும். மொத்தமாகப் பார்த்தால், கடன் கொடுப்பதால் வரும் ஆபத்துகளை நிர்வகிக்கவும் அவற்றைச் செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளைத் தாண்டுவதற்கும் இந்த ஒப்பந்தங்கள் புதுமையான வடிவமைப்புகளைப் பயன்படுத்துகின்றன, சீனாவை ஒரு வலிமையாகவும் வணிக ஆற்றல் பெற்றதுமான கடன் வழங்குபவராக வளர்ந்துவரும் உலகில் முன்னிறுத்துகின்றன.

… பரவலாகக் கடன் வாங்குபவர் ரகசியத் தன்மைக்கு ஒப்புக்கொள்வது, சீனாவின் கடன் வழங்குபவர்களை பாரிஸ் கிளப்பிலும் மற்ற கூட்டு மறு கட்டமைப்பு முயற்சிகளிலும் சேர்க்காமல் இருப்பது, கடன் வாங்கிய நாட்டில் சீனாவின் நிலையை உறுதிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பரவலான கடன்களை இணைத்து ஒரு கடனில் தவணை கட்டவில்லை என்றால் மற்றொரு கடனிலும் கட்டாததாக பதிவுசெய்யும் கிராஸ்-டீஃபால்ட் முறை போன்ற தனித்தன்மையான பகுதிகளை சீனாவின் ஒப்பந்தங்கள் கொண்டிருக்கின்றன.”

BELT முயற்சியில் ஹம்பன்டோட்டாவின் முதன்மைத் தன்மை என்ன? சீனா இப்பொழுது கவலைப்பட வேண்டுமா?

ஹம்பன்டோட்டா நிறைய ஊடகக் கவனத்தையும் கண்காணிப்பையும் 2010இன் தொடக்கத்தில் இருந்து பெற்று வருகிறது. பல இதழ்களின் கட்டுரைகள் விரிவாக என்ன நடந்தது என்று ஆய்வு செய்து எழுதி இருக்கிறார்கள். ஆனால், பன்னாட்டு ஊடகத்தின் தொடர்ச்சியான கவனம் தான் இந்தக் கதையை கடன் வலை வெளியுறவுக் கொள்கையின் எடுத்துக்காட்டாக உயர்த்தி இருக்கிறது. பேராசிரியர் பிரவுடிகம் என்பவருடைய இந்தச் சிறந்த படைப்பைப் படித்துப் பாருங்கள்.

(ஹம்பன்டொட்டா ஒன்றும் சீனா பூதம் கிடையாது, உலகம் மாறுகிறது அதில் நாமும் வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். இது ஒன்றும் நாடு பிடிப்பது கிடையாது, மன்னித்துக் கொள்ளுங்கள்.)

பொதுவாக (IMF) ஐஎம்எஃப் இன் கட்டமைப்பைச் சரி செய்யும் திட்டங்கள் நாட்டின் நிதி நிறுவனங்களைச் சீர்படுத்தி நாட்டின் நிதிக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதைக் குறிவைத்துச் செயல்படும்.

இப்பொழுது இந்த இக்கட்டில் இருந்து வெளியேறும் வாய்ப்புகளை எதிர்நோக்கிப் பார்த்தால், அடித்தட்டு மக்கள் ஆட்சியாளர்களுடைய தவறுகளுக்காக மேலும் துன்பப்படப் போகிறார்கள் என்ற அச்சங்களை எப்படி நியாயப்படுத்த முடியும்?

எய்ட் டேட்டாவின் மூத்த ஆய்வு அறிவியலாளரான அம்மர் எ மாலிக் பதில் கூறுகிறார்:

அம்மர் எ மாலிக்

பொதுவாக (IMF) ஐஎம்எஃப் இன் கட்டமைப்பைச் சரி செய்யும் திட்டங்கள் நாட்டின் நிதி நிறுவனங்களைச் சீர்படுத்தி நாட்டின் நிதிக் கட்டமைப்பை நிலைப்படுத்துவதைக் குறிவைத்துச் செயல்படும். அதாவது, குறிப்பாக வளர்ச்சிக்கு உதவியாக இல்லாத பொத்தாம் பொதுவான எரிபொருள் மானியங்களைக் குறைப்பது போன்ற, செலவுகளைக் குறைத்தும் வருவாயைக் கூட்டியும் அவர்களுடைய நிதிநிலை அறிக்கையைச் சமன் செய்யக் கட்டாயப்படுத்தும். இந்த நடவடிக்கைகள் அரசியல் அரங்கில் அரசுகளுக்குக் கடினமானவை, அதேபோல சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இது மிகுந்த வலியை ஏற்படுத்தும், எ.கா: பணமதிப்பிழப்பு போன்ற கடும் நடவடிக்கைகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஒரே போன்ற தாக்கத்தைச் செலுத்துவதில்லை. அப்படி இருந்தாலும், ஐஎம்எஃப் உடைய வாதம் என்னவாக இருக்கும் என்றால், அந்த நாடுகள் தங்களுடைய கடன்களையும் பணத் தேவைகளையும் தீர்த்துக் கொள்வதற்கான தகுதியைப் பெறுவதற்கும், சீனாவின் அரசுத்துறை, மேற்கத்திய நாடுகளின் தனியார் துறை உள்ளிட்ட மற்ற கடன் வழங்குபவர்களைப் பெறுவதற்கும், கடன் வாங்கும் நாட்டின் மீது நம் கடனைத் திருப்பிச் செலுத்தி விடுவார்கள் என்று மீண்டும் நம்பிக்கை பெறுவதற்கும், இந்தச் சீர்திருத்தங்கள் மிகவும் தேவையானவை என்று கூறுவார்கள். அவர்கள் மேலும், இதுதான் ஐஎம்எஃப் வகிக்க வேண்டிய பாத்திரம், அதாவது பன்னாட்டு நிதி நிலைமை ஏறுக்குமாறாகும்போது அதைச் சமன் செய்வது. நான் கவனித்ததில் இருந்து, முதன்மையாக பாகிஸ்தானில், இதுதான் நடக்கிறது, அனைத்து அரசு மற்றும் தனியார் கடன் வழங்குபவர்கள் ஐஎம்எஃப் அந்த நாட்டோடு ஒப்பந்தம் செய்வதற்காகக் காத்திருக்கிறார்கள், அப்பொழுதுதான் அவர்கள் முன்வந்து அவரவர்களுடைய ஒப்பந்தங்களுக்காகப் பேச்சு வார்த்தையில் இறங்கலாம் என்பதற்காக.

சீனாவின் பாத்திரத்தைப் பொறுத்தவரை, ப்ளூம்பெர்க் டுடே வில் பிராட் பார்க் உடைய கருத்துகளோடு செய்தி வெளியிடப்பட்டதைப் போல, சீனா கிட்டத்தட்ட 2600 கோடி டாலர்கள் உடனடி கடன்களாகக் கடந்த சில ஆண்டுகளில் செலவழித்து இருக்கிறது என்று நாம் கண்டறிந்து இருக்கிறோம். அடிப்படையில் ஏற்கெனவே சீனாவிற்கு கடன் பட்டிருக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மீட்பு வழிகளை வழங்கி இருக்கிறது சீனா.

 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival