Read in : English

தமிழக அரசு நீடித்த, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறது எனில், தற்போதைய இலஞ்சலாவண்யங்களிலிருந்தும் பல ஆண்டுகளாகச் செய்திருந்த மோசமான நிர்வாகத்திலிருந்தும் விடுபட்டு, மின்துறை போன்ற அதிமுக்கிய பொருளாதார உட்கட்டமைப்புத் துறைகளை சீர்திருத்த வேண்டும்.  தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) நுகர்வோர்கள் முறையாகக் கட்டணம் செலுத்தாததால், அது நாட்டிலே மிகவும் மதிப்பிழந்த மின்சாரப் பகிர்மான நிறுவனங்களிலே ஒன்றாக இருக்கிறது.

2011-12 ஆண்டில், தமிழக மின்துறையின் மொத்த நட்டம் ரூ. 18,954 கோடியாக இருந்தது. கடந்த பத்தாண்டில், இது ரூ. 94,312 கோடியாக உயர்ந்துவிட்டது. 2022 மார்ச் முடிவில், ஒட்டுமொத்த நட்டம் ரூ. 1,13,266 கோடி. முக்கியமாக, 2011-12-ல், தமிழக மின்துறையின் மொத்தக் கடன் ரூ43,493 கோடி. இது மும்மடங்கு அதிகரித்து 2021-22-ல் ரூ. 1,59,823 கோடியாக உயர்ந்துவிட்டது. இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதமாகும்.

2011-2012 காலகட்டத்து நிலவரப்படி, தமிழக மின்துறையின் மொத்த நட்டம் ரூ. 18,954 கோடியாக இருந்தது. கடந்த பத்தாண்டில், இது ரூ. 94,312 கோடியாக உயர்ந்துவிட்டது. 20222 மார்ச் முடிவின் நிலவரப்படி, ஒட்டுமொத்த நட்டம் ரூ. 1,13,266 கோடி.

2011-12-ல் தமிழக மின்துறை வாங்கிய கடனுக்காகச் செலுத்திய வட்டி ரூ. 4,5888 கோடி. இது, 2020-21-ல் ரூ. 16,511 கோடியாக உயர்ந்து, பத்தாண்டில் 259 சதவீதம் அதிகரித்தது. மேலும், கடந்த பத்தாண்டில் புதிய முதலீட்டு மின் திட்டங்களில் ஏற்பட்ட அதிகப்படியான கால தாமதத்தால், கட்டுமானக் காலகட்டத்தில் செலுத்திய வட்டித்தொகை ரூ.12,647 கோடியாக உயர்ந்தது. கடன் பலூன் போல ஊதிப் பெருகியதற்குக் காரணம் புதிய மின்னாலைத் திட்டங்களை நிறைவேற்றவதில் ஏற்பட்ட தாமதம்தான்.

மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேவை-வழங்கல் தொடர்பான மாற்றங்களுக்கேற்ப, சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்றால், தமிழகம் தனது அண்டை மாநிலங்களுடன் போட்டிபோடும் அளவுக்குக் கொண்டிருந்த நல்ல அம்சங்களை இழந்துவிடும். நாட்டிலே மிகச்சிறப்பான பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், கர்நாடகமும் ஆந்திரப் பிரதேசமும் சந்தைக்குப் பொருத்தமான சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு மாநில அளவில் மேன் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க:

மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

‘மின்தடைகளுக்கு திமுக ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்’

தமிழக மின்துறை கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருக்கிறது. அதனால்தான் எட்டு ஆண்டுக்குப் பின்பு இப்போது தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.

பெரும்பான்மையான ஊடகங்கள் தவறவிட்ட அம்சங்கள் பின்வருமாறு:

  1. தமிழக அரசு மின்கட்டணக் கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்; டான்ஜெட்கோவின் கடன்நிலுவைகளைக் குறைக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஒன்றிய அரசின் மின்மானியம் (ரூ.10,793 கோடி) கிடைக்காது என்று ஒன்றிய அரசின் மின்சார அமைச்சகம் தமிழக அரசிற்கு 28க்கும் அதிகமான முறை கடிதம் எழுதியிருக்கிறது.
  2. கடன்நிறுவனங்கள் டான்ஜெட்கோவிற்குக் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. மேலும், தமிழகத்தின் டான்ஜெட்கோ உட்பட எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் கடன் கொடுப்பதை நிறுத்தும்படி ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
  3. தமிழக மின்துறையில் சீர்திருத்தங்கள் செய்யாததால், ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடமிருந்து நிதியைத் (0.5 சதவீதக் கூடுதல் கடன்) தமிழகத்தால் பெறமுடியவில்லை. ஏற்கெனவே ஒன்றிய அரசு தமிழகத்திற்கு ரூ. 30,230 கோடி ஒதுக்கியிருந்தது. ஆனால், தமிழக மின்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாததால், ஒன்றிய அரசு ரூ. 3,4235 கோடி நிதியைத் தமிழகத்திற்கு வழங்கவில்லை.
  4. ’உதய்’ திட்டத்தின்படி தமிழக மின்துறையை மீள்கட்டமைப்பு செய்ததால், 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் ரூ. 22,815 கோடி நிதியைப் பெற்றுப் பலனடைந்தது.
  5. நிலக்கரி மின்சார ஆலைகளுக்கான (மொத்தம் 15) புகை வெளியீட்டுத் தரவிதிகளைப் பின்பற்ற 2024 டிசம்பர்வரை கால அவகாசம் பெற டான்ஜெட்கோ சமீபத்தில் முயன்றது. ஆனால், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்னாலைகளை வகைப்படுத்தும் குழு அந்த வேண்டுகோளை நிராகரித்தது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழகத்தின் மின்கட்டணங்கள் மிகக் குறைவானவை என்று தமிழக மின்துறை சொல்கிறது. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் மின்துறையில் ஏற்படும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த நட்டங்கள் தமிழகத்தில்தான் மிக அதிகம்.

பின்வரும் தரவுகள் அந்த நட்டங்களைச் சதவீதத்தில் சொல்கின்றன:

தமிழகம் – 18 சதவீதம்; ஆந்திரப்பிரதேசம் – 12; கேரளா – 10; கர்நாடகம் – 14.

வடமாநிலங்களில் ஏற்படும் நட்டங்கள் (சதவீதத்தில்) பின்வருமாறு:

குஜராத் – 14.58; ராஜஸ்தான் – 14; உத்தரப்பிரதேசம் – 15; ஹரியானா – 15; டில்லி – 12; மஹாராஷ்டிரம் – 14; மத்தியப் பிரதேசம் – 15.

ஆதலால் தமிழக மின்துறையில் ஆண்டுதோறும் ஏற்படும் நட்டங்கள் மற்ற மாநிலங்களைவிட மிக அதிகம் என்பது தெளிவாகிறது.

மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தேவை-வழங்கல் தொடர்பான மாற்றங்களுக்கேற்ப, சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்றால், தமிழகம் தனது அண்டை நாடுகளுடன் போட்டிபோடும் அளவுக்குக் கொண்டிருந்த நல்ல அம்சங்களை இழந்துவிடும்.

மத்திய மின்சார ஆணையம் விதித்திருக்கும் முறைப்படி, தமிழக மின்துறையில் ஏற்படும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த நட்டங்களைச் சரியாகக் கணக்கிடும் போதும் அது தொடர்மான தரவுகளைச் சேகரிக்கும்போதும், தமிழகம் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. மின்னுற்பத்திச் செலவும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றப்பட்டது. ஆனால், கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மின்கட்டணங்களோடு மெல்ல மெல்ல மாற்றப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கட்டமைப்பில் இருக்கும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். செலவீனங்கள் அதிகமாவதும் குறைந்திருக்கும். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் இலவச மின்சார வழங்கல் முறை மாற வேண்டும்; திறன்மிக்க மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்; மின்கசிவைத் தடுக்க வேண்டும்.

ஆதலால் தற்போதைய மின்கட்டண உயர்வு தமிழக மின்துறையின்  நட்டங்களையும், கடன்களையும் சரிசெய்யப் போவதில்லை. ஆயினும், செயல்படாமல் போய்விட்ட மின்துறையைப் பலப்படுத்தும் ஒரு திருத்த நடவடிக்கையாக மின்கட்டண உயர்வைக் கொள்ளலாம்.

(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்).

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival