Read in : English

ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக நாம் உண்ணும் பழக்கத்தை, வழக்கத்தை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது. உணவகம் தேடிச் சென்று இடம்பிடித்து அமர்ந்து ஆர்டர் பண்ணிக் காத்திருந்து பின்பு உணவுண்டு முடித்துவிட்டு வீடுதிரும்பும் நேரம் இப்போதெல்லாம் பெருமளவு மிச்சமாகிவிட்டது.

காரணம் இந்த ஆவிச் சமையலறை ஏற்படுத்தியிருக்கும் டிரெண்ட். சென்னை, கோயம்புத்தூர் உட்பட உலகத்தில் உள்ள எல்லா பெரிய மாநகரங்களிலும் உணவுண்ணும் முறையில் ஏற்பட்டிருக்கிறது இந்தப் புதிய வழக்கம்.

ஆவிச் சமையலறை கூட உணவகம்தான்; ஆனால் செங்கல், சிமிண்டால் கட்டப்பட்ட உணவகம் அல்ல. அங்கே அமர்ந்து உண்பதற்கு இடமும் இல்லை. நம்வீட்டுச் சமையலறைக்குப் பதில் ஆவிபோலக் கண்ணுக்குத் தெரியாத எங்கோ இருக்கிற சமையலறையில் ஆக்கப்பட்ட உணவுகளை மொத்த உணவுத்திரட்டு நிறுவனங்கள் நம்வீட்டு வாசலில் வழங்கும் இந்தப் புதிய தொழில் போக்கு 2019-ல் உருவானது.

ஸ்விக்கி, சமோட்டோ போன்ற மூன்றாம்நபர் அலைபேசி செயலிகள் மூலம் உணவை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்குகின்றன இந்த ஆவிச் சமையலறைகள். அல்லது தாங்களாகவே அவை உணவை வழங்கியும் வருகின்றன.

நம்வீட்டுச் சமையலறைக்குப் பதில் ஆவிபோலக் கண்ணுக்குத் தெரியாத எங்கோ இருக்கிற சமையலறையில் ஆக்கப்பட்ட உணவுகளை மொத்த உணவுத்திரட்டு நிறுவனங்கள் நம்வீட்டு வாசலில் நமக்கு வழங்கும் இந்தப் புதிய தொழில் போக்கு 2019-ல் உருவானது.

எல்லாமும் இணையமாகிவிட்ட மின்னணு யுகத்தில் இந்தப் புதிய உணவுத்தொழிலும் இப்போது ஐக்கியமாகி விட்டது. ஆனால் உணவகங்களில் மேஜைக்கு வந்து உணவு பரிமாறுகின்ற பாரம்பரியத்திற்கு இதுவோர் பலத்த அடிதான். இது சம்பந்தமான கேள்விகள் பல உண்டு.

சென்னைகிளவ்ட் சமையலறைகளும், ஆவிச் சமையலறைகளும், வளர்ந்துவரும் மாநகர உணவுத்தொழிலின் புதிய உச்சங்கள். அவை உணவைப் பற்றி இந்தியா சிந்திக்கும் பாரம்பரிய வழிகளை மாற்றியமைக்கின்றன. கோவை ஃபுட்டிஸ் என்ற இணையதளம் உலகில் நிலவும் உணவுப்போக்குகளைக் கண்காணிக்கிறது.

மேகத் தொழில்நுட்பம் (கிளவ்ட் டெக்னாலஜி) இணையத்தின் அடிநாதம். அதனால் இணையத்தின் மூலம் நடைபெறும் உணவுப் பரிமாறலுக்கான சமையலறைகள் மேகச் சமையலறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தத் தொழிலில் வீட்டுப்பெண்கள் போன்ற சிறு தொழில் முனைவோர்களுக்கும், பெரிய தொழிலதிபர்களுக்கும் ஆகப்பெரும் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

ஆவிச் சமைலறை மேகச் சமையலறை என்றும், நிழல் சமையலறை என்றும், மெய்நிகர் சமையலறை என்றும் அழைக்கப்படுகின்றன. அது பெரும்பாலும் மூன்றாம் நபர் ஒருவர் வாடகைக்கு விட்ட அறையில் இயங்குகின்றன. அது கடையோ அல்லது வாடிக்கையாளர் அமர்ந்து உண்ணும் இடமோ அல்ல.

ஆனாலும் ஆவிச் சமையலறை என்பதற்கும் மெய்நிகர் உணவகத்திற்கும் வித்தியாசம் உண்டு. முன்னது எந்தவோர் உணவகத்திற்குமான தனிப்பட்ட பிராண்டு அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட உணவக பிராண்டுகளுக்காக இடமும், வசதிகளும் கொண்ட ஆவிச் சமையலறை அது. மேலும் ஆவிச்சமையலறை என்பது மையப்படுத்தப்பட்ட சமையலறை. அது ஒரு பகுதியில் மெய்நிகர் உலகத்தில் இருப்பது; முக்கியமாக இணையவழி ஆர்டர்களுக்கு உணவு வழங்குவது; பெரிய வாடிக்கையாளர் கூட்டத்தைக் கொண்டிருப்பது அது.

அதனால், உங்கள் கைப்பேசியைத் தட்டினால் போதும்; உணவகப்பொருள் தரத்துடன் கூடிய உணவை வீட்டிலிருந்தே நீங்கள் சுவைக்கலாம். அதுவும் குறைந்த விலைகளில். ஏனென்றால் ஆவிச் சமையலறை நடத்துபவர்களுக்கு பெளதீக உணவகங்களுக்கு இருக்கும் உட்கட்டமைப்பு மற்றும் சேவைச் செலவுகள் கிடையாது. இந்த ‘நெட்ஃபிளிக்ஸ் அண்ட் சில்’ யுகத்தில் இதுவோர் கிளுகிளுப்பான உணவு உண்ணும் முறை.

”மேக சமையலறைகள் மூலம் நடைபெறும் உணவக விரிவாக்கம் பல விசயங்களை எளிமையாக்குகிறது. முக்கிய பகுதிகளில் அமைக்க வேண்டிய உணவு உண்ணும் இடவசதிகள், பரிமாறும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுப்பது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது, சந்தைத்தகுதி போன்ற பல தடைகள் விலக்கப்படுகின்றன,” என்கிறார் விஷால் பாஷியா. நாட்டிலுள்ள முன்னணி உணவுத்திரட்டு நிறுவனமான ஸ்விக்கியின் தலைமைச் செயல் அதிகாரி விஷால். “கரோனா காலத்துக் கட்டுப்பாடுகளால் வெளியே சென்று உணவருந்த முடியாதபோதுதான், இந்த மேகச் சமையலறை தொழில் உச்சம் தொட்டது. இங்கிருக்கும் மக்கள், தாய்லாந்து உணவுகள், சீன உணவுகள், சுஷி, துருக்கிய சிக்கன் கெபாப்கள், ஃபலஃபெல் ராப்ஸ், ஆப்ரிக்கன் ஜாலாஃப் அரிசி, மாஞ்சோ சூப், லில்பென் சிக்கென், மிளகாய்ப் பூண்டு அரிசி, தாய் பேசில் நூடுல்ஸ், கடலுணவு வகைகள் என்று புதுசு புதுசாய் உண்ண விரும்பினர்.

ஆனால் அவர்களுக்கு வழியில்லை. இந்த ஆவிச் சமையலறைகள் தென்னிந்திய உணவுகளை ஆக்குவதில்லை. ஆனாலும் அவற்றின் பரீட்சார்த்த உணவுகள் ஒவ்வொரு வாரமும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.”

கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் உணவுத் தொழில்நுட்ப உந்துசக்தி பெற்ற மேகச் சமையலறைத் துறை படுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய உணவு மற்றும் குடிபானத் தொழிலில் இது துரிதகதியில் இயங்குகின்ற பிரிவு. இது வெறும் ஆரம்பம் மட்டுமே. ஆனால் ஒன்று. மக்களுக்கு நேரடியாகப் பரிமாறி அவர்கள் உண்ணும்போது வெளிப்படுத்தும் எதிர்வினைகளைக் கவனிக்கும் வாய்ப்பு இப்போது இல்லை. உணவரங்கத்தில் சுறுசுறுப்பாகப் பரபரப்பாக நடமாடும் மக்களின் நடமாட்டங்களை காணும் வாய்ப்பை நாம் நிஜமாகவே தவறவிட்டு விட்டோம்.

ஆவிச் சமைலறை மேகச் சமையலறை என்றும், நிழல் சமையலறை என்றும், மெய்நிகர் சமையலறை என்றும் அழைக்கப்படுகின்றன. அது பெரும்பாலும் மூன்றாம் நபர் ஒருவர் வாடகைக்கு விட்ட அறையில் இயங்குகின்றன. அது கடையோ அல்லது வாடிக்கையாளர் அமர்ந்து உண்ணும் இடமோ அல்ல.

ஆவிச் சமையலறை நன்மைகள்:
·
துரிதமான தொடக்கம்: பெரிதான புதுமைகள் அவசியமில்லை. சமையலறை அமைப்பு உங்களுக்காக தயார்நிலையில் இருப்பதால், சில வாரங்களிலே, மாதங்களில் அல்ல, உங்களால் ஒரு உணவகப் பிராண்டை உருவாக்கிக் கொள்ள முடியும்.

· செலவுகள் குறைவு: பரபரப்பான ஓர் இடத்தில் கவர்ச்சியான கட்டிடத்தில் உணவகம் ஆரம்பிக்க விரும்புபவர்களிடம் பணம் இருப்பதில்லை. அந்தக் கவலை ஆவிச் சமையலறை ஆரம்பிப்பதில் இருப்பதில்லை. வேலையாட்களுக்குச் சம்பளம், இடத்தைப் புதுப்பித்தல் போன்ற கவலைகளும் இல்லை.

· இடம்: செங்கல், சிமெண்டில் கட்டப்பட்ட ஓர் உணவகத்தின் வெற்றி அங்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களையும், அது பெற்றிருக்கும் நல்ல பெயரையும் பொறுத்தது. ஆனால் ஆவிச் சமையலறை ஆரம்பிக்க அந்தக் கவலைகள் கிடையாது. அதிக டெலிவரி நடக்கச் சாத்தியமுள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்தால் போதும்; விற்பனை பிச்சிக்கிட்டுப் போகும்.

ஆவிச் சமையலறைகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது; உணவை இணையத்தில் தேடும் நுகர்வோர்களின் எண்ணிக்கையும் ஏறிவிட்டது. அதனால் டெலிவரி செயலிகள் மத்தியில் உங்களின் செயலி உடனே நுகர்வோர் கண்ணுக்குத் தட்டுப்படும் நிலையில் இருக்க வேண்டும்.

அப்போதுதான் போட்டியைச் சமாளிக்க முடியும். கடந்த வருடங்களில் பாரம்பரிய முறை உணவகங்களை விட இணையவழி உணவு கேட்கும் பழக்கம் 300 சதவீதம் உயர்ந்துவிட்டது. இன்னும் ஏறும் இது. டெலிவரி மட்டுமே என்ற வகையில் நிறைய தேர்வுகள் இப்போது இருக்கின்றன. அதனால் உணவக முதலாளிகள் தங்கள் தொழிலுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு தருவதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழிகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓர் ஆவிச் சமையலறை வைத்து தொழில் செய்யும்போது, மாதம் ரூ.10 இலட்சம் வியாபாரம் நடந்தால் 10 சதவீதம் இலாபம் கிட்டும். ஆறு மாதங்களிலே போட்ட முதலை எடுத்துவிடலாம்.

இணையத்திலே ஏராளமான உணவகங்கள் இருப்பதால், ஆவிச் சமையலறைக்குத்தான் இனி எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான மாநகரங்களில் வாடகைக்கு சமையலறை பிடித்து தொழில் செய்யலாம். பின்பு உங்கள் உணவகத் தொழிலுக்கு வானமே எல்லை என்றாகிவிடும். பெளதீக உணவகம் இல்லாமலே நிறைய வாடிக்கையாளர்கள் இருப்பதால் தொழிலில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்கும். பின் உங்களால் புதிய சந்தைகளுக்கு விரிவடைய முடியும்.

பெரும்பாலான மக்கள் ஸ்விக்கி, சுமாட்டோ போன்ற இணையதள டெலிவரி செயலிகளை நம்பியிருக்கிறார்கள். எனினும் நேரடியாக உறவுகளோடும், நட்புகளோடும் உணவகத்தில் உண்ணும் சுகானுபவம் அதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்.

பல உணவகங்களின் வருமானம் பார்சல் உணவை வாங்கி எடுத்துச் செல்பவர்கள் மூலமாகவே வருகிறது. பெருந்தொற்றுக் காலத்திலிருந்து மேகச் சமையலறைகள் நல்ல பேர் வாங்கி விட்டன. ஏனென்றால் மக்களுக்கு வீட்டுச்சாப்பாட்டின் சுவை, ருசி, தரம் அவற்றின் மூலம் கிடைக்கின்றன.

இப்போது ஜிஆர்டி கிளவுட் கிட்சன்ஸ், கிட்சன் ஃபிட் மற்றும் ரூஸ் ஃபுட் கான்செப்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணையவழி உணவை ஆர்டர் செய்வதற்கு ஏதுவாக இருக்கின்றன. தேவைப்பட்டால் ஐந்துநட்சத்திர உணவக உணவுகளையும் அவை வழங்குகின்றன. பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றி ஆரோக்கி்யமான சமையலறைகளில் உணவுகள் தயாரிக்கப் படுகின்றன.

அண்ணா நகரில் இருக்கும் கிளவுட் சமையலறையான ’ஹெல்தி செஃப்’ நிறுவனர் மரியா பிரியங்கா ரவீந்திரனைப் பொறுத்தவரை, வழக்கமாக்குதல் என்னும் கருத்தாக்கமே அவரது தொழிலின் உந்துசக்தி. தன் வீட்டுச் சமையலறையில் அந்தப் பெண்மணி வழக்கமாக்கப்பட்ட குறைவான கார்போஹைட்ரேட் கொண்ட மதிய உணவு, ’டின்னர் பவுல்’ உணவு ஆகியவற்றைத் தயாரிக்கிறார்.

பெரும்பாலான மக்கள் ஸ்விக்கி, சுமாட்டோ போன்ற இணையதள டெலிவரி செயலிகளை நம்பியிருக்கிறார்கள். எனினும் நேரடியாக உறவுகளோடும், நட்புகளோடும் உணவகத்தில் உண்ணும் சுகானுபவம் அதில் கிடைப்பதில்லை என்பது உண்மைதான்

நல்ல சமையலறையின் அடிப்படைகள்
நாம் இன்னும் பல வகையான கலப்பு மாடல்களைப் பார்க்க நேரிடலாம். முழுச்சேவை செய்யும் ஒரு பெளதீக உணவகம் ஓர் ஆவிச் சமையலறையுடன் கூட்டுச் சேர்ந்து தனது பார்சல் சேவையை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். சில பிராண்டு உணவகங்கள் மற்ற பிராண்டுகளுக்கு தங்கள் சமையலறைகளை ஆவிச் சமையலறைகளாகக் கொடுத்து இலாபத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

ஆவிச் சமையலறையோ, பாரம்பரிய சமையலறையோ – எந்த மாடலாக இருந்தாலும், ஒரு நல்ல சமையலறை நிர்வாகத்திற்குச் சில அடிப்படைகள் உண்டு. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ஆழ்ந்த ஆராய்ச்சி, மற்ற தீர்வுகளை இணைத்துக் கொள்ள தயாரான மனநிலை ஆகியவை உணவகத் தொழிலில் இருப்பவர்களுக்கு சரக்கு, உணவுப் பட்டியல்கள் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்த பெருமளவு உதவும். செலவீனங்களையும், சேதாரங்களையும் பலமாக நிர்வகிப்பது அவசியம். அப்போதுதான் உங்கள் விற்பனைகள் ஆரோக்கியமான இலாபத்தை அடையும்.

உணவகத் தொழில் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று எவருக்கும் தெரியாது. என்றாலும் அது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது. தொழில் ரீதியாகவும், வாடிக்கையாளர் கோணத்திலும் எழுகின்ற சவால்களை எதிர்கொள்ளும் உணவகங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவை நன்முறையில் தயார்செய்து கொடுக்க எல்லா வழிகளையும் ஆய்வுசெய்து செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த இலக்கை அடைய ஆவிச் சமையலறை பெரிதும் உதவும். உணவக விரிவாக்கத்திற்கு ஒரு நல்ல வழியாகவும் அது இருக்கும். புதிய உணவகங்கள் அதிக அபாயங்கள் இல்லாத முறையில் வெற்றிகரமாக தொடங்கப்பட ஆவிச் சமையலறை ஆகப்பெரும் உதவியை அளிக்கும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival