Read in : English
இலங்கைகுப் புதிய பிரதமர் கிடைத்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. இலங்கையினர் பலர் வெறுக்க விரும்பும் புதிர்போன்ற ரணில் விக்ரமசிங்கேதான். ஆறாவது தடவையாக நேற்று அவர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவினால் பதவிப்பிரம்மாணம் செய்துவிக்கப்பட்டார்.
விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர். இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்துக் கிடக்கும் போதெல்லாம் அவரைத்தான் எல்லோரும் நாடினார்கள்.
2001-ல் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா செயல் ஜனாதிபதியாக இருந்தபோது தேசம் கிட்டத்தட்டத் திவாலானது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேதான் அதைச் சரிசெய்தார்.
மறுபடியும் 2015-ல் மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் இலங்கை கிட்டத்திட்டத் திவாலானபோதும், இதே ரணில் விக்ரமசிங்கேதான் வந்திறங்கிக் காப்பாற்றினார்.
எனினும் 2001-லும், 2015-லும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க வந்த ரணில் விக்ரமசிங்கேவின் முயற்சிகள் எதிர்க்கட்சிகளால் கெட்டுப்போயின.
ரணில் விக்ரமசிங்கே பணம் கொழுத்த பிரபுத்துவ அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இலங்கையின் முதல் செயல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் உறவினர். அவர் சிலோன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவுடன், 1970-களின் ஆரம்பத்தில் சிலோன் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞர் ஆனார். இலங்கையின் பழம்பெருமைக் கட்சியான யூஎன்பி-யில் இணைந்து அரசியலில் மும்முரமாக ஈடுபட்டார்.
ரணில்விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர். இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்துக் கிடக்கும் போதெல்லாம் அவரைத்தான் எல்லோரும் நாடினார்கள்.
ரணில் விக்ரமசிங்கே 1977 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போதைய ஜனாதிபதியும் அவரது உறவினருமான ஜெயவர்த்தனா அவரை வெளியுறவுத்துறையில் துணை அமைச்சராக்கினார். பின்பு விக்ரமசிங்கே இளைஞர்கள் விவகாரம் மற்றும் பணித்துறை மந்திரியானார். அப்போது இலங்கை மந்திரிசபையில் அவர்தான் மிகவும் இளையவர். அதன்பின்பு, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்கே பிரேமதாசா அவரை பாராளுமன்றத் தலைவராகவும், தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராகவும் ஆக்கினார்.
பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டவுடன், அப்போது பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்கே ஜனாதிபதி ஆனார்; ரணில் விக்ரமசிங்கே பிரதமரானார். முதல்தடவையாக பிரதமரான விக்ரமசிங்கே நாட்டில் பெரும் பொருளாதார மாற்றத்தைக் கொண்டுவந்தார்.
யூஎன்பி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான காமினி திசநாயக்கே 1994-ல் படுகொலை செய்யப்பட்ட பின்பு, விக்ரமசிங்கே யூஎன்பி தலைவரானார்.
1999 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே யூஎன்பியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். மக்கள் கூட்டணிக் கட்சி என்ற வானவில் அமைப்பின் தலைவராக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கா அப்போது எதிர்முகாம் ஜனாதிபதி வேட்பாளர். ஒரு விடுதலைப்புலி தற்கொலைப் படையாளின் தாக்குதலில் வலதுகண்ணை இழந்த சந்திரிகா குமாரதுங்கா பின்பு எழுந்த அனுதாப வாக்கு அலையில் ஜனாதிபதி ஆனார்.
குமாரதுங்கா அரசு ஆறாண்டு நிலைத்தது. விடுதலைப்புலிகளிடம் பெற்ற ராணுவ தோல்விகள் மற்றும் தள்ளாடிய பொருளாதாரம் ஆகிய இரண்டு விசயங்களுக்காக அவரது அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதனால் 2001 பாராளுமன்றத் தேர்தலில் யூஎன்பி வென்றது; ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் 17-ஆவது பிரதமர் ஆனார். அப்போது வேறு கட்சியைச் சார்ந்த சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதி; வேறொரு கட்சியைச் சார்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர். ஆனாலும் தன்னுடைய மந்திரிசபையை உருவாக்க ரணில் விக்ரமசிங்கேவால் முடிந்தது.
பதவிக்கும் வந்து மூன்றுமாதம் கழித்து, ரணில் விக்ரமசிங்கே அரசு விடுதலைப் புலிகளுடன் நார்வே உதவியுடன் போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதனால் உலக நாடுகளின் ஆதரவைப் பெற்ற ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார். அந்தப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விளைவாக, போரழிவு கொண்ட நாட்டை மீளுருவாக்கம் செய்யும் டோக்கியோ நன்கொடையாளர் மாநாட்டில் விக்ரமசிங்கே 4.5 பில்லியன் டாலர்க்கும் மேம்பட்ட தொகையை உதவியாகப் பெற்றார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் பல்லாண்டுகாலப் போர்ச்சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் இலங்கையில் சுற்றுலாத்துறை செழித்து வளர ஆரம்பித்தது.
ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் 17-ஆவது பிரதமர் ஆனார். அப்போது வேறு கட்சியைச் சார்ந்த சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதி; வேறொரு கட்சியைச் சார்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர். ஆனாலும் தன்னுடைய மந்திரிசபையை உருவாக்க ரணில் விக்ரமசிங்கேவால் முடிந்தது.
வடக்கிருக்கும் யாழ்ப்பாணத் தீபகற்பத்தை தெற்கோடு இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையான ஏ9 நெடுஞ்சாலை 18 ஆண்டுக்குப் பின்பு திறக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுடன் 2002-2003-ல் ரணில் விக்ரமசிங்கே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்குழப்பங்களை ஏற்படுத்தி அதைப் பலகீனமாக்கியவர் ரணில் விக்ரமசிங்கே. எல்டிடிஈ-யின் மீது உலகநாடுகள் வெறுப்பை வளர்க்கும் அளவுக்கு விக்ரமசிங்கே தனது வெளியுறவுக் கொள்கையைத் தகவமைத்துக்கொண்டார். உலகநாடுகளுடன் ஒப்பந்தங்கள் போட்டு இலங்கையின் ராணுவப்பயிற்சி, ராணுவத் தொழில்நுட்பம், உளவுத்துறை, தீவிரவாத முறியடிப்பு பயிற்சி, ராணுவ வளர்ச்சி ஆகியவற்றிற்கான நிதியுதவியை ரணில் விக்ரமசிங்கே பெற்றார்.
இலங்கையின் ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றைப் பலப்படுத்த அவசியமான பரிந்துரைகளை அமெரிக்க பசிபிக் கமாண்ட் குழுவிடமிருந்து ரணில் விக்ரமசிங்கே பெற்றுக் கொண்டார்.
விக்ரமசிங்கே விடுதலைப்புலிகளுடன் கொண்ட ஒப்பந்தத்தை எதிர்க்கட்சியினரும், தேசிய இயக்கங்களும் எதிர்த்தன. அதனால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா ரணில் விக்ரமசிங்கேவின் மூன்று மந்திரிகளை பணிநீக்கம் செய்தார். அதன்மூலம் பொருத்தமில்லாத அரசியல் கூட்டணிக்கு சந்திரிகா முற்றுப்புள்ளி வைத்தார்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் யூஎன்பியின் வேட்பாளாராக ரணில் விக்ரமசிங்கே போட்டியிட்டார். அவரை எதிர்த்து அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச இலங்கை சுதந்திராக் கட்சியின் (எஸ்எல்எஃப்பி) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தான் பிரதமர் ஆவதற்கு நான்கு நிபந்தனைகள் விதித்தார். அவற்றில் ஒன்றுதான் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ராஜினாமா பண்ண வேண்டும் என்பது. இதனால் கடுப்பான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்கி விட்டார்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை விடுதலைப்புலிகள் வாக்களிக்க விடவில்லை. அதனாலே மகிந்த ராஜபக்ச மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்தில் தேர்தலில் வென்று நாட்டின் செயல் ஜனாதிபதி ஆனார்.
ரணில் விக்ரமசிங்கேவுக்குத் தோல்விகள் அதிகமாகிவிட்டதால், அவரது யூஎன்பி கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து எஸ்எல்எஃப்பி கட்சியின் செக்ரட்டரி ஜெனரலான மைத்ரிபால சிரிசேனாவை 2015 ஜனவரியில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்துவது என்று 2014-ல் முடிவு செய்தது. தேர்தலில் சிரிசேனா ஜெயித்து இலங்கையின் 7-ஆவது ஜனாதிபதி ஆனார்; கொடுத்த வாக்குறுதிப்படி ரணில் விக்ரமசிங்கேவை அவர் பிரதமராக்கினார்.
2015 பிப்ரவரியில் இலங்கையின் மத்திய வங்கியின் பத்திர ஊழல் வெடித்தது. அப்போது ஜனாதிபதி சிரிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோற்றார். அப்போதிருந்து இருவருக்கும் ஆகவில்லை.
ஜனாதிபதி சிரிசேனா ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக்கினார். ஆனால் உச்சநீதிமன்றமும், மேல்முறையீட்டு நீதிமன்றமும் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கேவை மறுபடியும் பிரதமர் பதவியில் அமரவைத்தன.
2019 ஜனாதிபதித் தேர்தலில் யூஎன்பி துணைத்தலைவர் சஜித் பிரேமதாசா வேட்பாளராக நின்றார். ஆனால் அப்போது பிரபலமான கோத்தபய ராஜபக்ச அவரைத் தோற்கடித்தார்.
அதன்பின்னர் சஜித் பிரேமதாசா, 77 உறுப்பினர்களைக் கொண்ட யூஎன்பி கட்சியிலிருந்து 52 பேரோடு வெளிவந்து சமாகி ஜன பாலவேகயா (எஸ்ஜேபி) – ஐக்கிய மக்கள் அதிகாரம் – என்ற கட்சியை ஆரம்பித்தார். எஸ்ஜேபி 2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) பெருவாரியான வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் பழமையான பெரிய கட்சி யூஎன்பி வரலாறு காணாத அளவுக்கு ஆகமோசமான தோல்வியைச் சந்தித்தது. தேசியப் பட்டியல் மூலம் பெற்ற ஒரு சீட்டைத் தவிர யூஎன்பியால் பாராளுமன்றத்தில் ஒரு சீட்டைக்கூட பெறமுடியவில்லை. அந்த ஒற்றைத் தேசியப் பட்டியல் சீட்டின் மூலமாகத்தான் ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றத்திற்குத் திரும்பினார்.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து வெளியேறிய பின்பு, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தான் பிரதமர் ஆவதற்கு நான்கு நிபந்தனைகள் விதித்தார். அவற்றில் ஒன்றுதான் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ராஜினாமா பண்ண வேண்டும் என்பது.
இதனால் கடுப்பான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக்கி விட்டார்.
ஆறாவது தடவையாக பிரதமர் ஆகிவிட்ட ரணில் விக்ரமசிங்கே செய்ய வேண்டிய பணி ஆகக்கடுமையான ஒன்று. இலங்கையின் அந்நியச் செலாவணி வெறும் 50 மில்லியன் டாலர்க்குச் சரிந்துவிட்டது என்று முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
மே 7 அன்று ஐஎம்எஃப் வேறு இலங்கையின் கடன் அவ்வளவு எளிதாக அடைபடக்கூடியதல்ல என்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிட்டது. அதனால் ஐம்எம்எஃப் நிதியுதவி வேண்டுமென்றால் இலங்கையால் கடன்களை அடைக்கமுடியும் என்று இலங்கை உறுதிமொழிகள் தரவேண்டும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது.
1948-ல் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்றபின்பு, இந்த அளவுக்குப் படுமோசமான பொருளாதாரச் சிக்கலை இலங்கை சந்தித்தது எழுபதுகளின் ஆரம்பத்தில் மட்டும்தான்; அப்போது சிரிமாவோ பண்டாரநாயக்காவின் எஸ்எல்எஃப்பி ஆட்சி செய்துகொண்டிருந்தது.
Read in : English