Read in : English
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதிய நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், 20-ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ் அலறவிட்டு ஆட்டத்தை வெற்றியில் முடித்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. “இந்தப் புகழ்பெற்ற மாவீரனின் தொன்மக்கதை வளர்கிறது,” என்று வர்ணித்தார் கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே.
இணையம் முழுவதும் பித்துப்பிடித்த கிரிக்கெட் ரசிகர்களின் புகழ்மாலைகள் சுழன்றடித்தன. என்னதான் இருந்தாலும் ’தல தலதான்’ என்று நமக்குச் சொல்லத் தோன்றியது. பழம்பெருமையை சற்று ஒதுக்கிவிட்டு யோசித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ’பிளேஆப்ஸ்’ வாய்ப்பு இன்னும் இல்லை என்பது போலத்தான் தெரிகிறது. ஆனால் முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் விலைமதிப்பில்லாத ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறது; அதுபற்றிப் பின்னர் பேசுவோம்.
இறுதி ஓவரில் சுழன்றடித்து வெற்றி வாகை சூடும் பாணியை தோனி இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்; அதைப் போல யாரும் செய்வதற்கில்லை. எல்லா சீசன்களிலும் 20-வது ஓவர்களில் 300-க்கு மேலான ரன்களை ’தல’ விளாசி எடுத்திருக்கிறார். ஆட்டத்தை முடித்து வைக்கும் ஆகப்பெரிய ‘பினிஷர்’ அவர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டி பெருந்திகிலான ஒன்று. யார் ஜெயிப்பார் என்று மர்மமாகவே இருந்தது. இந்த சீசனில் கீழ்நிலையில் இருந்த இரண்டு அணிகள், ஐபிஎல் போட்டிகளில் தாங்களும் ஓரங்கம் என்பதை எல்லோருக்கும் நினைவுபடுத்தின. மைதானம் முழுக்க நீலமும், மஞ்சளும் கலந்த ஆடைகளுடன் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரண்டு அணிகளும் வெற்றிபெற மகடும்பிரயத்னம் செய்தன. வாஸ்தவத்தில் இரண்டு அணிகளுமே தவறுகள் செய்திருக்கின்றன. ஆனால் அதுதானே விளையாட்டு; முழுக்க முழுக்க ஒரு கேளிக்கை அது. சிஎஸ்கேயைப் போல மும்பை இந்தியன்ஸ் அணியும் பாடம் கற்றுக்கொண்டது. அனுபவத்திற்கு நிகர் எதுவுமில்லை.
வழக்கமாக இரண்டு அணிகளும் வரையறுக்கப்பட்ட, நிலையானதொரு வடிவமைப்பை நம்பியே ஆடின. வெற்றிபெற அனுபவசாலி ஆட்டக்காரர்களையே முன்னிறுத்தின. 12 சீசன்களுக்கு மேல் அவர்கள் இப்படித்தான் செய்திருக்கிறார்கள். தோனி, ரெய்னா, போலார்டு, பிராவோ, மற்றும் மலிங்கா ஆகியோர் பொறுப்பை முதுகில் சுமந்துகொண்டு ஆடினர். வயது அவர்களைத் துரத்த ஆரம்பித்தவுடன் அணி தடுமாறத் தொடங்கியது. டி-10 ஆட்டத்தில் அழகான, வசீகரமான இளைஞர்களை இறக்கிவிடலாம். ஆனால் அனுபவசாலிகள்தானே ஆகப்பெரும் சொத்து. அதிமுக்கியமான ஓர் ஆட்டத்தின் வேகத்தைச் சரியான நேரத்தில் மாற்றிமைக்க அனுபவம்தான் கைகொடுக்கிறது. அதனால்தான் கடைசி ஓவரில் மூன்றாவது பந்தை அடிக்க தோனி வந்தபோது அவரைத் தவிர்க்கவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த சீனியர் ஆட்டக்காரர்கள் ஆடுகின்ற நிலையான பாணியைப் பிரதிபலிக்க அல்லது பிரதிபலிப்பதற்கு முயற்சி செய்ய இளைஞர்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.
தோனிக்கு இந்த சீசன் ஓர் இறுதி ஆட்டம். கூடைப்பந்து மாவீரர் மைக்கேல் ஜோர்டானின் இறுதி சீசனைத் திரும்பப் பார்த்தது, ‘இறுதி ஆட்டம்’ என்ற எம்மி விருது வாங்கிய ஆவணப்படம். அதைப்போல ஒருநாள் சிஎஸ்கேவின் திரைமறைவுக் கதைகள் வரிசைப்படுத்திச் சொல்லப்படும்போது, தோனி என்னும் கேப்டனின் ஆட்டமுறைப் பாணிகளை அறிந்துகொள்ள நமக்கு வாய்ப்புக் கிட்டலாம். கேப்டனாக இருக்கும் தலைமைப் பண்பை யார் வேண்டுமானாலும் பின்பற்றி பேணிக் காக்க முடியும். ஆனால் இறுதி ஓவரில் சுழன்றடித்து வெற்றி வாகை சூடும் பாணியை தோனி இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்; அதைப் போல யாரும் செய்வதற்கில்லை. எல்லா சீசன்களிலும் 20-வது ஓவர்களில் 300-க்கு மேலான ரன்களை ’தல’ விளாசி எடுத்திருக்கிறார். ஆட்டத்தை முடித்து வைக்கும் ஆகப்பெரிய ‘பினிஷர்’ அவர். ஓர் ஆட்டத்தை முடித்து வைப்பது எப்படி என்பதை மீண்டும் செய்து காட்டியிருக்கிறார். இதைப் போல பலரும் முயன்றிருக்கின்றனர். தினேஷ் கார்த்திக் போன்ற சிலர் இந்த ‘பினிஷர்’ பாணியை தங்கள் அணிகளில் பின்பற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் இறுதிக்கட்ட ஓவரில் ‘பினிஷிங்’ என்பது ஒரு வித்தியாசமான பந்து விளையாட்டு. தோனி விலகிப் போன பின்புதான் அவருடைய வலிமையை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி உணரும். இருக்கும்வரை, உலகக் கோப்பையை ஜெயித்த 41 வயதான இந்த கேப்டன் தொடர்ந்து தனக்குப் பிடித்தமான இந்த அணியில் விளையாடுவார்.
கேப்டன் என்ற தலைவர் பொறுப்பு இல்லாமலே, தோனி தான் மேற்கொண்ட வழிகாட்டுநர் வேலையை நன்றாகவே அனுபவித்து செய்கிறார்; ஜடேஜாவுக்குப் பின்னால் தன்னை நிறுத்திக்கொள்கிறார். ஆனால் சிஎஸ்கேவுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அந்தச் சிங்கம் கர்ஜித்து எழுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிதாக நம்பும் அனுபவம் என்ற இரட்டைக் கத்தி வாள் பற்றி இப்போது பேசுவோம். சிஎஸ்கேவுக்குள் வந்தவுடன் அனுபவம் வாய்ந்த தொழில்முறை ஆட்டக்காரர்களுக்கு மீண்டுமொரு பலம் வருவது ஏன்? இதற்கான விடை மிகவும் எளியது. அவர்களை அணி நிர்வாகம் நன்றாகக் கவனித்துக் கொள்கிறது. ராபின் உத்தப்பா பிளே ஆஃப்ஸில் இறுதியில் வாய்ப்பு கிடைக்கும்வரை கடந்த ஆண்டு எல்லா சீசன்களிலும் சும்மா பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஏமாற்றம் இருந்தது உண்மைதான்; ஆனால் அவர் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. ஏனென்றால் அணியின் முக்கிய அங்கமாக தானிருப்பது போன்ற உணர்வு தனக்குள் வந்தது என்று அவரே பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். மற்ற அணிகளிலிருந்து சென்னை அணிக்குள் வரும் ஆட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியது அணியில் இருந்த சகோதாரத்துவ உணர்வுக் கட்டமைப்பு பயிற்சிகள்தான். அநேகமான அதில் அதிமுக்கியமான காரணி குடும்பமாக இருக்கலாம். பழைய ஆட்டக்காரர்கள் சிலர், தங்கள் குடும்பத்தோடும், தங்களின் அன்புக்கு உரியவர்களோடும் நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் விளையாண்டது போதும் என்று விலகிப் போயிருக்கிறார்கள்.
பரபரப்பான ஐபிஎல் ஆட்டங்களின் வரிசை மனச்சோர்வை ஏற்படுத்தலாம். ஆட்டக்காரர்களோடு பயணிக்கும் மனைவி, குழந்தைகள் அடங்கிய குடும்பங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாகவே பாதுகாத்துக் கவனித்துக் கொள்கிறது. அணி நிர்வாகம் நிறைய சம்பளங்களையும், சலுகைகளையும் கொடுத்து 35 வயதுக்கு மேற்பட்ட ஆட்டகாரர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அவர்களை சிறந்த முறையில் ஆட வைப்பதற்கும், அவர்களிடம் விசுவாசத்தை உருவாக்குவதற்கும் அந்த அக்கறை ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது. ராய்டு, பிராவோ, உத்தப்பா, ஆஷிஷ் நெகரா, ஹுசே, ஷேன் வாட்சச்ன், பாப் ஆகிய சென்னை சூப்பர் கிங்ஸின் நேற்றைய, இன்றைய ஆட்டக்காரர்கள் தங்களது முப்பது வயதுக்கு மேற்பட்ட பழைய காலத்தைத் திரும்பிப் பார்ப்பார்கள். அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரர்களின் விசுவாசத்தையும், கடமை உணர்ச்சியையும் சிஎஸ்கே என்றைக்கும் மறவாது.
இப்போது தோனியோடு இதை முடிப்போம். சந்தேகப் பிராணிகளைப் பார்த்து ஆர்ப்பரித்து உறுமுகின்ற ஆட்டத் தலைவனைப் பற்றி மேலும் சொல்வதற்கு இனி என்ன இருக்கிறது? கேப்டன் என்ற தலைவர் பொறுப்பு இல்லாமலே, தோனி தான் மேற்கொண்ட வழிகாட்டுநர் வேலையை நன்றாகவே அனுபவித்து செய்கிறார்; ஜடேஜாவுக்குப் பின்னால் தன்னை நிறுத்திக்கொள்கிறார். ஆனால் சிஎஸ்கேவுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அந்தச் சிங்கம் கர்ஜித்து எழுகிறது. கையுறைகளை லேசாக இழுத்துவிட்டுச் செருகி, கால் பக்கம் உள்ள களத்தின்மீது ஒருபார்வை வீசி. பவுலர்களுக்கு மேலே, இறுதி ஓவரில் மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸரை அடித்து விளாசி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது வெற்றியோடு.
அப்போது அவரது பிடரிக்குப் பின்னால் தெரியும் ஒளிவட்டத்தில் ஒரு கம்பீரம் ஜொலிக்கிறது. தோனி தனது இறுதி ஆட்டத்தைச் சென்னையில் ஆடும்போது மாநகரமே அதகளப்படும். ஆனந்தக் கண்ணீர் வழியும் கண்களோடு ரசிகர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள். ”நாம் தலைவனுக்குத் தலைவணங்க வேண்டுமா?” என்று.
ஆம்.. வேண்டும். ஏனெனில் அவர் ஒரு கிரிக்கெட் சக்ரவர்த்தி!
Read in : English