Read in : English
ஏப்ரல் 12ஆம் தேதி இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணிகள் மோதிய 22-வது லீக் ஆட்டம், சிஎஸ்கே எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டிய ஓர் ஆட்டம். உண்மையான சென்னை சூப்பர் கிங்ஸ் பாணியில் அந்த அணியினர் மீண்டு வந்து வெற்றிக்கொடி நாட்டிவிட்டனர்.
கேப்டனான ஜடேஜாவுக்கு இது முதல் வெற்றி. தீபக் சஹாரும், ஆதம் மில்நேயும் வாங்கிய காயங்களிலிருந்து மெல்ல மீண்டுகொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிஎஸ்கே 12 ஆண்டுகளுக்கு முன்பு 2010-இல் தனது முதல் வெற்றிக்குப் பயன்படுத்திய சூத்திரத்தை இப்போது மீண்டும் பயன்படுத்தியிருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்.
ஷிவம் துபேயும், உத்தப்பாவும் கூட்டுசேர்ந்து 150-க்கும் மேலான ரன்களைக் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 216 ரன்களை எடுக்க வைத்தனர். இதுவரை எந்த அணியும் அடையாத அதிகபட்ச மொத்த ரன் இது.
சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆட்டத்தில் மிகவும் போராடிக் கொண்டிருந்தது. அவர்களின் முன்னாள் ’ஆரஞ்சு கேப்’ பேட்ஸ்மன் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஆறு ஓவர்களிலே மீண்டும் புறந்தள்ளப்பட்டார். ஆனால் அடுத்து நிகழ்ந்ததுதான் சாதனைப் புத்தகங்கள் பதிவு செய்ய வேண்டியது. ஷிவம் துபேயும், உத்தப்பாவும் கூட்டுசேர்ந்து 150-க்கும் மேலான ரன்களைக் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 216 ரன்களை எடுக்க வைத்தனர். இதுவரை எந்த அணியும் அடையாத அதிகபட்ச மொத்த ரன் இது. தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் தோற்ற கதைக்கு இத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
நாம் இதுபோன்ற ஒன்றை முன்னால் பார்த்திருக்கிறோமா? இந்தத் தடவை அமைந்த அணி அமைப்பும், பேட்டிங் வரிசையும் 2010-இல் கோப்பையை வென்ற அணியோடு அற்புதமாக ஒத்துப்போகின்றன. அதை ஆராய்வோம்.
இந்தத் தடவை அமைந்த அணி அமைப்பும், பேட்டிங் வரிசையும் 2010-இல் கோப்பையை வென்ற அணியோடு அற்புதமாக ஒத்துப்போகின்றன
2010ஆம் ஆண்டு நடந்த இறுதிஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முரளி விஜயுடனும், மாத்யூ ஹேடனோடும் பேட்டிங்கை ஆரம்பித்தது. ரெய்னா மூன்றாவதாகப் பேட்டிங் செய்தார்; பின்பு பத்ரிநாத், தோனி மற்றும் மோர்க்கெல் ஆகியோர் அவரைத் தொடர்ந்தனர். அதாவது உச்சத்திலிருக்கும் ஐந்து பேரில் மூன்று இடது கையாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
செவ்வாய் கிழமை நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கெய்க்வாட், உத்தப்பா ஆகியோரை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தைத் துவக்கியது. மோயீன், துபே, ஜடேஜா ஆகியோர் பின்பு வந்தனர். இப்போதெல்லாம் தோனி ஆறாவதாக பேட்டிங் செய்கிறார். மீண்டும் மூன்று இடதுகையாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் போராட்டத்தைச் சந்தித்ததால், 2010இல் பயன்படுத்திய ஒரு ஏமாற்றுவித்தையை இப்போது அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதாவது, சுழல்பந்துவீச்சை எதிர் கொண்டு அழுத்தத்தை வெளியேற்ற நடுப்பகுதியில் இடதுகையாளர்களை வைத்து நிரப்பிக்கொள்ளும் தந்திரவித்தை அது. மோர்க்கெல்லைப் போலவே துபேயும் பிஞ்ச் எனப்படும் சோதனையான நேரத்தில் களமிறங்கி பேட்டிங் செய்பவர். சிஎஸ்கே, ஆர்சிபி மோதிய ஆட்டத்தில் துபே எட்டு சிக்ஸர்களும், ஐந்து ஃபோர்களும் எடுத்து மொத்தம் 96 ரன்கள் குவித்தார்.
சுரேஷ் ரெய்னா, எதிர்வரும் பந்துகளை அதிரடியாக அடித்து விளையாடக்கூடியவர். உலக கிரிக்கெட் வீரரும், அஞ்சா நெஞ்சமும் அனுபவமும் கொண்டவருமான மோயீனை வைத்துக்கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அதையே செய்தது. ஆட்டத்தில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை அணி இழந்தால், அந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ராய்டு, பத்ரிநாத் போன்ற பேட்ஸ்மென்களை களத்தில் இறக்கிவிடுவார்கள். 2010-இல் இந்த உத்தி வேலை செய்தது; இதோ 2022இல்கூட அது வேலை செய்திருக்கிறது.
சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதிய ஆட்டத்தில் இலங்கையின் அமானுஷ்ய சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பௌலிங்கைத் தொடங்கிவைத்தது கொஞ்சம் ஆச்சரியம்தான். சஹார் இல்லாததால் இந்த முடிவு பாதி வலிந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் தீக்ஷனா, ஆர்சிபி பேட்ஸ்மேன்களைச் சுற்றி ஒரு மாயத்திரையை எழுப்பி அப்படியே நான்கு விக்கெட்டுகளை எடுத்ததால் இந்த உத்தி சரியாகவே வேலை செய்திருக்கிறது.
சுழல்பந்து வீச்சாளர்கள் இரண்டு முனைகளிலிருந்தும் சுற்றி சுழலும்போது, தோனி இரண்டு மடங்கு அளவிலான கேப்டனாகச் செயல்பட்டார் என்பதை முன்பு நாம் பார்த்திருக்கிறோம். உலர்ந்த சேப்பாக்க மைதான பிட்சுகளில் சிஎஸ்கே பயன்படுத்திய மத்திய ஓவரில் திணறடிக்கும் அதிரடிப்பிடியே இதற்குச் சாட்சியாகும். ஆனால், கோவிட், மற்ற பிரச்சினைகள் காரணமாக 2018-லிருந்து சிஎஸ்கே சென்னைக்கு வெளியேதான் விளையாட வேண்டியிருந்தது. இது குழுவின் சுழற்வீச்சுத் தாக்குதல் திறனை மட்டுப்படுத்தியது. முதல், இடை, இறுதி ஓவர்களில் சுழல்பந்து வீச்சுக்கென்று மோயீன், ஜடேஜா மற்றும் தீக்ஷனா என்னும் அருமையான ஓர் மூவர் அணியை சிஎஸ்கே வைத்திருக்கிறது. ஆர்சிபிக்கு எதிராக இந்த மூவர் அணி ஆடியவிதம் அஷ்வின், ஜகடி, மற்றும் முரளிதரன் ஆகியோரின் ஞாபகங்களைக் கிளறியது. மத்திய ஓவர்களில் எதிரிகளைக் கட்டுப்படுத்தி இரண்டு டைட்டில்கள் வென்ற ஐபிஎல் சீசன்களில் இந்த மூவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது.
இலங்கையின் புகழ்பெற்ற ஆட்டக்காரர் முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 40 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த அணிக்கான உரிமத்தில் இன்னும் தொடர்ந்து விளையாடும் ஒரே வெளிநாட்டுச் சுழல்பந்து வீச்சாளர் முரளிதரன் மட்டுமே (இன்னொருவர் இம்ரான் தாஹீர்; ஆனால் அவர் 2020 சீசனில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை). ஃபாஃப்பின் பிரிவும், ஒரு ஓப்பனராக உத்தப்பாவின் மறுபிறபும், சிஎஸ்கேவை தீக்ஷானவுக்கான இடத்தைப் பெற்றுத்தர வைத்தன. அந்த அமானுஷ்ய சுழற்பந்து வீச்சாளர் நிறைய விக்கெட் எடுக்கும் வழிகளைத் தருகிறார். இறுதி ஓவர்களில் பிராவோ, ஜோர்டான் ஆகியோரை ஜடேஜாவால் தடுத்து நிறுத்த முடிகிறது.
இந்த ஐபிஎல் சீசன் போகப்போக, மும்பையின் துரிதகதியான, துள்ளித்துள்ளிச் செல்லும் வேகம்கொண்ட ஆடுகளம் உலர்ந்துபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சிஎஸ்கேவின் சுழல்பந்து வீச்சாளர்கள் இந்த போட்டிக்குள் வந்துவிடுவார்கள். ஒரேவொரு ஆட்டத்தை வைத்து தீர்மானம் செய்ய முடியுமென்றால், சுழல்விசை அடிப்படையிலான, மத்திய ஓவர்களில் ’பிஞ்ச்- ஹிட்டிங்’ ஆட்டத்தை வடிவமைக்கும் இந்தத் திட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இழந்த வேகத்தை நிச்சயம் மீட்டுத்தரும்.
Read in : English