Read in : English
உலகம் முழுவதும் உணவு விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. கலகம் வெடிப்பது நிச்சயம். துரதிர்ஷ்டவசமாக அதனைத் துரிதப்படுத்தும் சக்தியாக இலங்கை திகழ்கிறது; ஆக்கப்பூர்வமாக அல்ல. அந்தத் தீவுத்தேசத்தில் உணவு விலைகள் பணவீக்கத்தைத் தாண்டி விரைந்து செல்கின்றது. உணவு விலைகளின் அபரிமிதமான ஏற்றம் 2021இல் பணவீக்க விகிதத்தைவிட சுமார் இரண்டு மடங்காக இருந்தது. அது இந்த 2022இல் படுவேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. 2021ஆம் ஆண்டு மார்ச்சில் நிலவிய விலைகளை விட உணவு விலைகள் கடந்தமாத இறுதிக்குள் சுமார் 30 சதவீதம் உயர்ந்துவிட்டதாக ட்ரேடிங் எகானமிக்ஸ் சொல்கிறது.
உலக உணவுவிலையையும், பணவீக்கத்தையும் தாண்டி இலங்கை சென்று கொண்டிருக்கிறது. ஐக்கியநாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் ஐந்து பெரிய உணவுப் பொருட்களின் ஏற்றுமதி விலைக் குறியீட்டு எண்ணை, 2014-16இன் சராசரிக்கும் 40 சதவீதம் மேலானது என்று பிப்ரவரியில் அறிவித்தது. இது ஒரு புதிய உயரம்தான்
நேரடியான ஒப்பீடுகள் சிரமமானவை; அதற்குப் பாதி காரணம், என்ன அளக்கப்படுகிறது, எப்படி அளக்கப்படுகிறது, குடும்ப வருமானத்தின் மீதான பணவீக்கத்தின் தாக்கம் ஆகிய காரணிகள்தான்..
உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான தரவுகளை இன்னும் வெளியிடவில்லை. அவற்றில் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட உணவுவிலைகளின் ஏற்றங்களும் இடம்பெறும். அந்த இரண்டு தேசங்கள்தான் எப்போதுமே மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளர்கள்.
ஆனால் இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த ஐந்து மாதங்களாக உலக விலை விகிதத்தைவிட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன; கூலி உயர்வை விடவும், நுகர்பொருட்களின் விலையுயர்வை விடவும் நான்கு மடங்கு வேகத்தில் உயர்ந்துள்ளன.
2007-2008, 2010-2011 ஆகிய காலகட்டங்களில் நிகழ்ந்த கடுமையான உணவுவிலை உயர்வுகள் குடும்பங்களால் சமாளிக்க முடியாதவையாக இருந்தன; மேலும் அரசின் ஸ்திரத்தன்மையைப் புரட்டிப்போடும் அளவுக்கு அப்போது கலகங்கள் வெடித்தன. இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில்தான், வட ஆப்ரிக்காவையும், மத்திய கிழக்கையும் மாற்றியமைத்த ’அரேபிய ஸ்பிரிங்’ புரட்சி வெடித்தது.
சாதாரண நாட்களிலும், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற உலக நிகழ்வுக் காலங்களிலும், தாறுமாறான விலையேற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றை முடுக்கிவிடும் காரணிகள், சரக்குகளில் நிகழும் ஊக வணிகமும், எரிபொருளுக்கான சாராயத்தைத் தயாரிக்க அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தியதால் மக்காச்சோளவரத்துகளில் ஏற்பட்ட தட்டுப்பாடும்தான். இவ்வாறு நியூ இங்கிலாந்து காம்ப்ளெக்ஸ் சிஸ்டம்ஸ் இன்ஸ்டிடியூட் (நெக்ஸி) தலைவர் டாக்டர் யானீர் பார்-யாம் கூறுகிறார். நெக்ஸி மாஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்டிட்யூட் (எம்ஐடி) வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சரியாகச் சொன்னால், அதுவோர் சுயாதீன நிறுவனம்; அதில் எம்ஐடி ஆசிரியர்கள் பலரின் சேவை பயன்படுத்தப்படுகிறது.

சாதாரண நாட்களிலும், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற உலக நிகழ்வுக் காலங்களிலும், தாறுமாறான விலையேற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றை முடுக்கிவிடும் காரணிகள், சரக்குகளில் நிகழும் ஊக வணிகமும், எரிபொருளுக்கான சாராயத்தைத் தயாரிக்க அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தியதால் மக்காச்சோளவரத்துகளில் ஏற்பட்ட தட்டுப்பாடும்தான். இவ்வாறு நியூ இங்கிலாந்து காம்ப்ளெக்ஸ் சிஸ்டம்ஸ் இன்ஸ்டிடியூட் (நெக்ஸி) தலைவர் டாக்டர் யானீர் பார்-யாம் கூறுகிறார்.
நெக்ஸி நிபுணர்கள் பொருளாதார அறிஞர்கள் செய்வது போல, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வெறும் போக்குகளையும், விளைவுகளையும் இணைத்து சும்மா ஆய்வு செய்வதில்லை. மாறாக, அவர்கள் கணக்கியல் மாடல்களை – சமன்பாடுகளை – உருவாக்கி அவற்றை வைத்து எதிர்காலத்தைச் சரியாகவே கணிக்கிறார்கள். பார்-யாம் தலைமையில் நெக்ஸி ஊழியர்கள் 2007-2008 காலகட்டத்துத் தரவுகளின் அடிப்படையில் ஒரு மாடலை உருவாக்கி அதைப் பயன்படுத்தி அரேபிய ஸ்பிரிங் நிகழ்வதற்கு முன்பே அதைப்பற்றி ஆருடம் சொல்லியிருந்தார்கள்.
இப்போது உலகம் விளிம்பை நோக்கி நகர்ந்துவிட்டது. வெவ்வேறு தொழில் நிபுணர்களும், அரசியல் தலைவர்களும் அறியாமையில் எளிமையாக்கிக் கொண்ட தீர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் செய்யமுடியும்?
முதலில் மக்களைப் பட்டினி போடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்யும்போது இறுதியில் நிலைமையை மோசமாக்கி விடக்கூடாது என்பதில் தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 2007-2008 காலகட்டத்து பொருளாதார நெருக்கடி, எரிபொருட்கள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களில் செய்யப்படும் ஊக வணிகத்தை முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமாக்கியது என்று பார்-யாம் குறிப்பிட்டிருக்கிறார். அதில் வந்த புதிய பணமே உணவு விலை பணவீக்கத்தை துரிதப்படுத்தியது. எதிர்காலத் தேதிகளில் விற்பதாக/வாங்குவதாக போடப்படும் ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படும் எண்ணெய் விலைகள் இரண்டு மடங்காக உயர்ந்து ஒரு பெட்டிக்கு (பேரல்) 150 டாலரைத் தொட்டது. அதன்பின்பு தேவை சரிந்தது.
இலங்கையில் இருக்கும் கொள்கைகள் உணவுப் பஞ்சத்தை மேலும் மோசமாக்கிவிட்டன. ஆம். உணவுக்கான கலகங்கள் வெடித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் பிராந்திய ஸ்திரமின்மை அண்டைநாடுகளுக்கு நல்லதல்ல. இலங்கையின் அருகில் இருக்கும் நாடுகளில் மிகப்பெரிய அண்டைநாடு இந்தியாதான்.
உண்மையில் கொஞ்சம் ஊக வணிகம் விவசாயிகளுக்கும், உணவு உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் முக்கியம். பிற தொழில்களை விட விவசாயிகளின் தொழில் மிக ஆபத்தானது. பருவமழை பொய்த்தல், வெள்ளங்கள், சூறைக்காற்று, பிற இடங்களில் நிகழும் ஆபத்தான நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு விவசாயிகள் பலியாகிறார்கள். அதனால் ‘எதிர்காலம் சார்ந்த ஊகவணிகத்தில்’ (ஃபியூட்சர்ஸ்) ஈடுபட்டு பயிரிடுவதற்குத் தேவையான நிதியை அவர்கள் திரட்டுகிறார்கள். தங்களின் எதிர்காலப் பயிரின் ஒரு பகுதியை ஊகவணிகத்தில் அவர்கள் அடகுவைக்கிறார்கள்.
எதிர்காலப் பயிர்களின் ஒருபகுதிக்கு நிச்சயமான ஒரு விலையை விவசாயிகள் பெறுகிறார்கள். அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்; ஊகவணிகர்கள் கொஞ்சம் அபாயத்தைத் மகிழ்ச்சியாக தாங்கிக்கொள்கிறார்கள்; கருத்தியல்படி பார்த்தால் அவர்களால் அப்படி செய்யமுடியும். உணவுப்பொருட்கள் உற்பத்தியாளர்களும் எதிர்கால ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு குறிப்பிட்ட விலைகளில் பொருட்கள் விற்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். ரொட்டி மற்றும் பிற சரக்குகளை உற்பத்தி செய்வதற்கு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். அதற்கு வழமையான பெயர் ‘ஹெட்ஜிங்’ (இழப்புத் தடுப்பு வணிகம்).
இவ்வாறு மற்ற செயற்பாடுகளைப் போலவே ஊக வணிகம் கொஞ்சம் நல்லதுதான். நிறைய என்றால் ஆபத்து. அதை ஒழுங்குப்படுத்த வேண்டும், குறிப்பாக இன்றைய சோதனைக் காலகட்டத்தில். ஆனால் முற்றிலும் ஒழிக்க
இந்த இலங்கைப் பிரச்சினை வெகுவிரைவில் உலகளாவிய நெருக்கடியாக மாறிவிடும். இந்த நாடுகள் உணவுப்பொருட்களின் ஏற்றுமதிகளைத் தடைசெய்து அல்லது குறைத்து தங்கள் மக்களைச் சமாதானப்படுத்தும் என்றால், அதன் விளைவுகளை அல்லது மனிதாபிமானத்தைப் பற்றி அந்த நாடுகள் யோசிக்கவில்லை என்று அர்த்தம்.
மக்காச்சோளம் போன்ற கடுமையான தட்டுப்பாட்டில் இருக்கும் உணவுப்பொருட்கள் (மோட்டார் எரிபொருளைத் தயாரிக்க மக்காச்சோளம் பயன்படுவதால் உண்டான பெரிய தேவையால்) பயங்கரமான விலையேற்றங்களில் சிக்கித் தவிக்கின்றன. ஏனென்றால் சந்தையைக் கொண்டுசெல்ல சொற்ப ஊகவணிகர்களே போதும். அதனால் குறிப்பிட்ட பொருட்களுக்கு கட்டுப்பாடு என்பது நுட்பமாகக் கொண்டுவர வேண்டும். ஓர் அமெரிக்க குடிமகனாக, நாங்கள் நிறைய பிரச்சினையை உருவாக்குகிறோம் என்று என்னால் சொல்லமுடியும். மக்காச்சோள சாராயம் எரிபொருள் விலைகளை ஓரளவு நிலைநிறுத்த உதவுகிறது. ஆனால் மக்காளச்சோள தயாரிப்புமுறை என்பதே நிறைய ஆற்றல்களை ஈடுபடுத்த வேண்டிய ஒன்று (உதாரணமாக, அதை வளர்க்க நிறைய உரம் தேவைப்படுகிறது). அது எப்போதோ மறைந்திருக்க வேண்டியது. ஆனால் ஏதோவொர் ஆர்வத்தினால் அது இன்னும் இருக்கிறது. அமெரிக்காவில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் மாநிலம் ஐயோவா. அது சாராயத்தினால் பணக்கார மாநிலமாக வளர்ந்திருக்கிறது. ஜனாதிபதிப் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தி முதல் பரிசோதனை செய்த மாநிலம் அது. இங்கே இரண்டு கட்சிகளும் மக்காளச்சோள சாராயத்தை விரும்புவதாகச் சொல்கின்றன.
இப்போது மீண்டும் இலங்கைப் பிரச்சினைக்கு வருவோம். ஆம். இலங்கையில் இருக்கும் கொள்கைகள் உணவுப் பஞ்சத்தை மேலும் மோசமாக்கிவிட்டன. ஆம். உணவுக்கான கலகங்கள் வெடித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் பிராந்திய ஸ்திரமின்மை அண்டைநாடுகளுக்கு நல்லதல்ல. இலங்கையின் அருகில் இருக்கும் நாடுகளில் மிகப்பெரிய அண்டைநாடு இந்தியாதான்.
2.2 கோடி மக்கள்தொகையும், 80 பில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கொண்ட இலங்கை ஒரு சிறிய நாடுதான். அதற்கு உதவ கொஞ்சப் பணம் போதும் என்பது உண்மை. இந்தவார நிலவரப்படி, இலங்கையின் அந்நிய செலவாணிக் கையிருப்பு சுமார் 2 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது. அதாவது நபர் ஒருவருக்கு வெறும் 100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. நாடு திவாலாகும் நிலைக்குள் விழுந்துவிட்டது.
இந்தியாவில் உணவை வாங்குவதற்கு இலங்கைக்குக் கடன் உத்தரவாதம் கொடுக்க இந்தியாவால் முடியுமா? அப்படிச் செய்தால் இந்திய நுகர்வோர்களுக்கான உணவு விலைகளில் அது என்னவொரு தாக்கத்தை ஏற்படுத்தும்? இலங்கை அரசின் வீழ்ச்சியைச் சரிசெய்ய இந்தியாவுக்கு ஆகும் விலையைவிட, அபாயத்தைவிட, இலங்கைக்கான உணவுப்பிரச்சினையை சமாளிக்க உதவிசெய்ய இந்தியாவுக்கு என்ன விலை ஆகும்? என்ன ஆபத்து உருவாகும்? இந்தியாவோடு ஒப்பீடு செய்தால் இலங்கை மிகவும் சிறிய நாடு என்று மீண்டும் சொல்கிறேன். அந்த நாட்டுக்கு உதவுவதற்கு கவனமான ஆராய்ச்சியும், இந்திய அரசின் வெளிப்படைத்தன்மையும், எல்லாவற்றிற்கும் மேலாக வேகமும் இப்போது வேண்டும். ஆனால் ஏற்படப்போகும் நற்பலனைவிட கொடுக்கும் விலை முதல் பார்வையில் சிறியதாகத்தான் தோன்றுகிறது.
இந்த உதவி ஒரு மாடலாக மாறி பாகிஸ்தான், மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் பதற்றத்தையும், ஸ்திரமின்மையையும் குறைக்க உதவலாம். ஆனால் ஒருவேளை இந்தியாவால் அந்தப் பாரத்தைத் தாங்க முடியாமல் போகலாம். தயவுசெய்து மனிதாபிமானத்துடன் பாருங்கள்! சீற்றமான பேச்சுக்கள் தேவையில்லை. இது ஐரோப்பிய யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் பொருந்தும். இந்த இலங்கைப் பிரச்சினை வெகுவிரைவில் உலகளாவிய நெருக்கடியாக மாறிவிடும். இந்த நாடுகள் உணவுப்பொருட்களின் ஏற்றுமதிகளைத் தடைசெய்து அல்லது குறைத்து தங்கள் மக்களைச் சமாதானப்படுத்தும் என்றால், அதன் விளைவுகளை அல்லது மனிதாபிமானத்தைப் பற்றி அந்த நாடுகள் யோசிக்கவில்லை என்று அர்த்தம்.
(பேராசிரியர் ஸ்டீவன் எஸ். ரோஸ், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்திலிருந்து 2005-இல் பணி ஓய்வு பெற்றவர். 85 நாடுகளில் பணிபுரிந்தவர். இந்தியாவில் சென்னையில் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தில் கற்பித்தவர். இங்கே 45 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளித்தொழிலில் ஃபோர்மென்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறார். இயற்பியலிலும், இதழியலிலும் பட்டங்கள் பெற்ற அவர் 19 புத்தகங்களை எழுதியிருக்கிறார்; எடிட் செய்தும் இருக்கிறார்.)
Read in : English