Read in : English
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் மாசு ஏற்படுத்துவதில் ஆவினுக்கு இரண்டாவது இடம். அதாவது, பிளாஸ்டிக் மாசுக்களில் 7 சதவீதம் ஆவின் மூலம் ஏற்படுகிறது. முதல் இடம் யூனி லீவர் நிறுவனத்துக்கு. அது ஏற்படுத்தும் மாசு சதவீதம் 8.3 சதவீதம். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் நடத்திய தணிக்கையில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
2018-லிருந்து இந்தத் தணிக்கையைச் சிஏஜி அமைப்பு செய்து வருகிறது. இந்த ஆய்வைச் செய்தவர்கள் சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர்களான வம்சி சங்கர் கபிலவை, சுமனா நாராயணன் ஆகியோர். 2021-க்கான ஆய்வுமுடிவுகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டன. கோவிட் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக பொதுவெளிகளில் இல்லாமல் வீடுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பிரிட்டானியா, நெஸ்லே, ஐடிசி, மாண்டலெஜ், சக்தி மசாலா போன்றவை பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்தும் இதர நிறுவனங்கள்.
ஆவினில் இருக்கும் ஆறுதலான விஷயம் அதன் பிளாஸ்டிக் பொருட்களில் 98 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படக்கூடியது என்பதுதான். அதிலிருக்கும் எல்டிபிஈ (குறைவான அடர்த்திகொண்ட பாலி எத்லீன்) பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்குத் தகுதியாக்குகிறது. சக்தி மசாலா பாகெட்டுகள் 100 சதவீதம் மறுசுழற்சிக்குத் தகுதியானவை.
ஆவினில் இருக்கும் ஆறுதலான விஷயம் அதன் பிளாஸ்டிக் பொருட்களில் 98 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படக்கூடியது என்பதுதான். அதிலிருக்கும் எல்டிபிஈ (குறைவான அடர்த்திகொண்ட பாலி எத்லீன்) பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்குத் தகுதியாக்குகிறது.
வெற்றுப் பாக்கெட்டுகளைத் திரும்ப வாங்கிக்கொள்வது என்ற கொள்கை ஆவினுக்கு உண்டு. ஆனால் வெற்றுப் பால் பாக்கெட்டுகளை வாங்க உள்ளூர் ஆவின் அலுவலகங்கள் மறுக்கின்றன என்று சம்பவங்களின் அடிப்படையில் சுமனா நாராயணன் கூறுகிறார். பெரும்பாலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை; என்றாலும் சிறிய பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உகந்ததல்ல என்கிறார் அவர். “அவற்றைச் சேகரிப்பதற்கு பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருப்பதால் சிறிய பாக்கெட்டுகளுக்கு சந்தை எதுவும் இல்லை,” என்றும் சொல்கிறார் சுமனா நாராயணன்.
பால்காரர்கள் பாலைப் பாட்டில்களில் கொடுத்தார்களே ஒருகாலம். அந்தக் காலத்திற்குத் திரும்பப் போவதுதான் சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த ஒரே மாற்றுவழி என்று கூறுகிறார் அவர். பாட்டில்களை சுத்தப்படுத்திவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு காலத்தில் ஆவின் பால் பெட்டிக்கடைகள் வைத்திருந்தன. அவை சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்தவை. அங்கே மக்கள் தாங்கள் கொண்டுவரும் பாத்திரங்களில் பாலை நிரப்பிக்கொண்டார்கள். அதைப்போன்ற ஓர் அமைப்பைக் கொண்டிருந்த இங்கிலாந்து பின்னர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மாறியது; மறுசுழற்சிக்குத் தகுதியான பாட்டில்களில் பால்காரர் பாலை நிரப்பித்தரும் பழைய அமைப்புக்கு இங்கிலாந்து இப்போது திரும்பியிருக்கிறது என்கிறார் அவர்.
இந்த ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால், இந்தத் தணிக்கையை வீதிகளில் நடத்த முடியவில்லை. தனிப்பட்ட வீ டுகளில் மட்டுமே நடத்த முடிந்தது.
தேசிய அளவில் பிளாஸ்டிக் கழிவில் தமிழ்நாடு மகாராஷ்ட்ராவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஆண்டுக்கு 4.01 லட்சம் டன் கழிவை உற்பத்தி செய்கிறது தமிழ்நாடு. மகாராஷ்ட்ரா 4.09 லட்சம் கழிவை உற்பத்தி செய்கிறது.
சென்னை தினமும் 429 டன் பிளாஸ்டிக் கழிவை உற்பத்தி செய்கிறது. நீர் நிலைகளில் அமைந்திருக்கும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைமேடுகளில் கிட்டத்தட்ட எல்லா பிளாஸ்டிக் கழிவும் கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்களுக்கு 2018ஆம் ஆண்டு ஜூனில் தமிழக அரசு தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவு 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்டது. பதினான்கு வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பிளாஸ்டிக் ஸ்ட்ராஸ், கிண்ணங்கள், தட்டுகள், மற்றும் கேரிபாக்ஸ் போன்றவை) தடை விதிக்கப்பட்டன. ஆனால் தடை என்பது இவற்றிக்கு மட்டுமே அல்ல. மளிகைச் சாமான்களை அடக்கி வைத்திருக்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் விதிவிலக்கு பெற்றன. தடையுத்தரவு அமலாகி ஒன்றரை ஆண்டு கழித்து, 2020-ஆம் ஆண்டு ஜூனில், மளிகைச்சாமான் பிளாஸ்டிக்குகளும் தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தேசிய அளவில் பிளாஸ்டிக் கழிவில் தமிழ்நாடு மகாராஷ்ட்ராவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஆண்டுக்கு 4.01 லட்சம் டன் கழிவை உற்பத்தி செய்கிறது தமிழ்நாடு. மகாராஷ்ட்ரா 4.09 லட்சம் கழிவை உற்பத்தி செய்கிறது.
2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை சிஏஜி ஆய்வு செய்தது. தடை உத்தரவுகள் அமலாகி முறையே ஓராண்டு கழித்தும், இரண்டு ஆண்டுகள் கழித்தும் தடையின் நடைமுறைச் செயல்பாட்டினை மதிப்பீடு செய்தது ஆய்வு. சென்னையை மையமாகக் கொண்ட அந்த ஆய்வு, நடைமுறையில் தடை எடுபடவில்லை என்பதையும், சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதையும் கண்டுபிடித்தது.
தடை அறிவிக்கப்பட்டவுடனே, கடைகளிலும் சந்தைகளிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் குறிப்பிட்ட அளவு குறைந்துவிட்டன என்கிறார் வம்சி சங்கர் கபிலவை. பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு ஆய்வுகளையும், அதிரடிச் சோதனைகளையும் நடத்தியது. எனினும் ஆரம்பத்தில் தடையை கண்காணிப்பதில் இருந்த அதீதமான கவனமும், ஆர்வமும் நாள் செல்ல செல்ல தேய்ந்து போனதும், அமல்படுத்துவதில் இருந்த தீவிரம் குறைந்து போனதும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் கடைகளுக்கு மீண்டும் திரும்பின. “தொடர்ந்து விடாப்பிடியாக தடையை அமல்படுத்த வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துகிறது,” என்கிறார் அவர்.
இந்தப் பிராண்ட் ஆடிட்டை சிஏஜி, மதர் எர்த், கிரீன்பீஸ் ஃபிலிப்பைன்ஸ், ஜிஏஐஏ ஆகிய அமைப்புகள் 2018-இல் உருவாக்கின. கழிவை ஆய்வு செய்வதின்மூலம் மிகப்பெரிய நெகிழிமாசை ஏற்படுத்தும் நிறுவனத்தைக் கண்டுபிடிக்க விழைந்தது பிராண்ட் ஆடிட். இதுவொரு குடிமக்கள் விஞ்ஞான முனைப்பு; பிரேக்ஃப்ரீ ஃபரம் பிளாஸ்டிக்ஸ் (பிஎஃப்எஃப்பி) என்ற உலக அமைப்பு இந்தத் தணிக்கையை ஒன்றிணைக்கிறது. பிஎஃப்எஃப்பி 2021-இல் 45 நாடுகளில் 440 விதமான பொருட்களில் தணிக்கை செய்துள்ளது.
பிளாஸ்டிக்குகளில் 62 சதவீதம் உணவுப் பாக்கெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. தனிப்பட்ட நலன்சார்ந்த நுகர்பொருட்கள் (16.1 சதவீதம்), வீட்டு நுகர்பொருட்கள் (15.3 சதவீதம்) ஆகியவை பிளாஸ்டிக் பயன்பாட்டில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடிக்கின்றன. பெட்டி அடைப்புகளிலும் (இணையதள கடைகளில் வாங்கும் பொருட்கள்), புகைப்பிடிக்கும் வஸ்துவின் பொருட்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைவு.
இது கடந்த ஆண்டைப் போன்றதொரு போக்குதான் தற்போதும் நிலவுகின்றன. உணவுப் பேக்கேஜிங் 56.7 சதவீதம்; தனிப்படட நலன்சார்ந்த நுகர்ப்பொருட்கள் பேக்கேஜிங் 3.2 சதவீதம்; குறைவான பேக்கிங் பொருட்களும், புகைவஸ்து பேக்கிங்கும் ஒன்றுக்கும் கீழான சதவீதம் என்பது கடந்த ஆண்டு நிலவரம். ஒரு சதவீதத்திற்குக் குறைவாக இருந்த பேக்கிங் மெட்டீரியல் சுமார் ஆறு சதவீதத்திற்கு உயர்ந்திருக்கிறது என்பது சுவாரஸ்யமானதொரு விஷயம்.
Read in : English