Read in : English
புரோ கபடி லீக் விளையாட்டு விதிகளைப் பலவிதமாக மாற்றியுள்ளது. விளையாட்டு விதிகளும் ஸ்கோரிங் அமைப்புகளும் இப்போது மாறுபட்டுள்ளன. ஆடும் திறன்நிலைகளும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. நீண்ட நாளைக்கு முன்பு என்று சொல்லமுடியாத ஒரு காலகட்டத்தில் கபடி ஆட்டக்காரர்கள் பண்டிகை காலங்களில் கிராமங்களில் பொது வசூல் பண்ணிய நிதியை வைத்து காலந்தள்ளினார்கள். ஆனால் இப்போது லீக் ஏலங்களில் அவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
இதனுடன் கபடி விளையாட்டில் சில மோசமான அம்சங்களும் எளிதாக நுழைந்துவிட்டன. காரணம் கிரிக்கெட்டில் இருப்பதுபோன்ற கட்டமைப்பு ஒழுங்கும் நிறுவனத் தன்மையும் கபடியில் இல்லை என்பதுதான். ஆட்டமுடிவை ஏற்கனவே நிர்ணயித்தல், பந்தயம் கட்டுதல், அராஜகக் கும்பல் குணம் போன்ற சில மோசமான வழக்கங்கள் தொழில்முறை கிரிக்கெட்டில் ஒருகாலத்தில் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தன; அவை தற்போது கபடியிலும் நுழைந்துவிட்டன. கிரிக்கெட் அந்த கெட்ட பெயரிலிருந்து மீண்டுவிட்டது. அதைப்போல கபடியும் மீண்டுவர வேண்டும்; அந்த விளையாட்டின் பிரபல்யம் நிலைக்க வேண்டும் என்றால்.
தமிழ்நாடு கபடிக்கு உரிமை கொண்டாட முடியும் என்றாலும், அந்த விளையாட்டு இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவி வெளிநாடுகளிலும் புகழ்பெறத் தொடங்கிவிட்டது. ஒருவரைக் கைகளால் பிடித்தல் என்று பொருள்படும் தமிழ் வார்த்தை ‘கைப்பிடி’தான் கபடியாக மருவியது என்று சொல்லப்படுகிறது. அது உலக விளையாட்டாக முன்பே இருந்திருக்கிறது. 1936இ-ல் பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்பட்டது.
1950-களிலிருந்து கபடி கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1973-இல் அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைக்கப்பட்டு விளையாட்டு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. 1980-இல் விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டன. 1985-இல் முதல் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கபடி பிரபலமானது.
விளையாட்டு அரங்கத்தில் கபடி அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு சின்ன விளையாட்டாகவே இருந்தது, புரோ கபடி லீக் உருவாகும்வரை.
ஆனால், விளையாட்டு அரங்கத்தில் கபடி அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஒரு சின்ன விளையாட்டாகவே இருந்தது, புரோ கபடி லீக் உருவாகும்வரை. இந்தியன் பிரீமியர் லீக்கோடு தொழில்முறையிலான, உரிம அடிப்படையிலான விளையாட்டு நிகழ்வுகளை நடத்த இந்தியர்கள் கற்றுக்கொண்டபின்பு, அந்த அனுபவமும், திறன்களும் மற்ற விளையாட்டுகளையும் தொற்றிக் கொண்டது. அடிமட்டத்து விளையாட்டுகளை ஆதரிக்கும் தொழிலதிபரான ஆனந்த் மஹிந்த்ரா கபடியில் ஈடுபடத் தொடங்கியவுடன், அவர் ஐபிஎல் நிகழ்வுகளை நடத்தும் நிபுணத்துவத்தை புரோ கபடி லீக்கிற்குள் கொண்டுவந்தார். உதாரணமாக, ஐபிஎல்லில் பெயர் பெற்றவர்களான அனுபம் கோஸ்வாமி, சாரு ஷர்மா போன்றவர்கள் புரோ கபடி லீக்கை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கபடி என்பது சஞ்சீவனி, காமினி, மற்றும் அமர் கபடி என்று பல்வேறு வடிவங்களில் ஆடப்படுகிறது. ஆனால் இன்று அந்த விளையாட்டு தரப்படுத்தப்பட்டிருப்பதற்குப் பாதிகாரணம் புரோ கபடி லீக்தான்.
கடந்த காலத்தில் கபடி விளையாட்டில் தாக்குதல் தொடுப்பதற்கான கால அளவு இல்லை. 1980-களில் கொண்டுவரப்பட்ட விதிமுறையின்படி, ஒரு தாக்குதல் தொடுப்பதை 30 வினாடிகளுக்குள் முடிக்க வேண்டும். 20 வினாடிகளுக்குள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1983-இல் முற்றுக்கோட்டிற்கும், தப்பான கோட்டிற்கும் இடையில் ஒரு போனஸ் கோடு வரையப்பட்டது. அந்தப் போனஸ் கோட்டை தாக்குதல் செய்யவருபவர் கடந்துவிட்டால், அவருக்கு ஒரு புள்ளி வெகுமானமாகக் கிடைக்கும்.
முன்பெல்லாம் கபடி, மண்ணில் விளையாடப்பட்டதால், ஆட்டக்காரர்கள் அடிக்கடி காயப்பட்டார்கள். கால்மூட்டுகளில், தோள்பட்டைகளில், விரல்களில் எல்லாம் சிராய்ப்புகள் ஏற்பட்டன.
2002-இல் மலேசியா ஓப்பன் போட்டி செயற்கை நுரை மைதானத்தில் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து அதுவொரு தரஅளவுகோல் ஆனது. ஆட்டக்காரர்களுக்கு இணக்கமான விளையாட்டாக கபடி மாறியது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட போட்டிகள் பாய்கள் மேவிய தரையில் நடத்தப்பட்டன.
கடந்தகாலத்தில் கபடி ஆட்டக்காரர்கள் விவசாய நிலங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டார்கள். வெண்ணிலா கபடிக்குழு (2009) திரைப்படம் கபடியின் நிஜங்களை வெளிக்கொணர்ந்தது. கோயில் திருவிழாக்களில் கிராமத்தார்கள் நிதி திரட்டி போட்டிகள் நடத்தினார்கள். அந்த நிதியிலிருந்து வெற்றி பெற்றோர்களுக்குப் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.
இன்று கபடி ஆட்டக்காரர்கள் லட்சக்கணக்கான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். ஜீவக்குமார் மற்றும் சேரலாதன் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள்.
புகழ்பெற்ற தமிழக கபடி ஆட்டக்காரரான மனதி கணேசன் அர்ஜுனா விருது பெற்றவர். கிராமம் கிராமமாக ஓடி மிகவும் கஷ்டப்பட்ட எழுச்சிக் கதை அவருடையது. தமிழகத்தில் முதன் முதலில் அர்ஜுனா விருது பெற்றவர் எஸ். ராஜரத்தினம்.
இன்று கபடி ஆட்டக்காரர்கள் லட்சக்கணக்கான விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். ஜீவக்குமார் மற்றும் சேரலாதன் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். ’ஜூனியர் தமிழ் தலைவாஸ்’ என்னும் அமைப்பு தமிழர்களில் சிறந்த கபடி ஆட்டக்காரர்களைத் தேடுவதில் ஈடுபட்டிருக்கிறது.
பிரதீப் நார்வால் என்னும் கபடி ஆட்டக்காரர் உபி யோதாவால் 1.65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். பயிற்சி முறைகள் நிறைய முன்னேறியிருக்கின்றன. கபடியில் ஏராளமாகப் பணம் சம்பாதிக்கலாம். கிராம விளையாட்டு என்ற முத்திரையிலிருந்து அதிகதூரம் கபடி விலகிவிட்டது.
கபடி பார்வையாளர் விளையாட்டு. அதில் இருக்கும் போர்போன்ற பரபரப்பான சூழல் டிவி பார்வையாளர்களையும் தொற்றக்கூடியது. புரோ கபடி லீக் அமைக்கப்பட்டதின் விளைவாக, மாநகர அபாரட்மெண்ட்டுகளிலும் கபடி விளையாடப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.
தாக்குதல் தொடுப்போர் காயப்படும் வாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்பவர்களிடமிருந்து விலகி ஓட அதிரடியான அதிவேகமான அசைவுகளில் ஈடுபடுவதால் விளையாட்டின் துரிதகதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவதானிக்கும் ஆற்றலுக்கு அங்கே அதிக வேலை இருக்கிறது; எதிராளியின் அசைவுகளைக் கணநேரத்தில் கணிக்கும் திறன் மிகவும் முக்கியம்.
சங்கிலிப்பிடி பெரும்பாலும் வெற்றியைத் தருவது. இதெல்லாம் செயற்கை நுரை மைதானத்தில் ரொம்பவே எடுபடுகின்றன. காலுக்குக் கொடுக்கப்படும் வேலை மிக முக்கியம். உடல்ரீதியிலான ஸ்பரிசங்களும், பிடிப்புகளும் நிறைந்த விளையாட்டு என்பதால் இது நிறைய திறன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. என்றாலும் இயற்கையான மண்ணில் ஆடுவதுதான் அதிக சுவாரஸ்யம் கொண்டது என்று பழைய ஆட்டக்காரர்கள் சொல்கிறார்கள்.
வடக்கில் கபடி ‘அகட’ கலாச்சாரத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்தக் குழிகளில் பயிற்சி எடுக்கும் ஆஜானுபாகுவான ஆண்கள் அடிக்கடி கபடிக்கு மாறுகிறார்கள். அந்தப்பகுதிகளில் கபடியின் ஆக்ரோஷமான அம்சம் மிகவும் அழுத்தமாகவே தெரிகிறது. என்றாலும், தேசிய, மாநில, மாவட்ட கூட்டமைப்புகளுக்குப் பெரிதாகப் பலமில்லை. அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இல்லை. குறைவான இலக்குகளோடு செயல்படும் தனிமனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகள் பல உண்டு. அதன் விளைவாக, தொழில்முறை நேர்த்தி பரவலாக்கப்படவில்லை.
புரோ கபடி லீக் போட்டிகளின் ஆரம்ப சீசனில் 435 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர்; ஐபிஎல்- போட்டிகளுக்கு 560 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர்.
பணயம் வைத்து பந்தயம் கட்டுபவர்கள் ஆட்டக்காரர்களை அணுகுவது போன்ற தவறான வழக்கங்களைத் தடுத்து நிறுத்த, ஐபிஎல்-லிடமிருந்து புரோ கபடி லீக் பல அம்சங்களைக் கொண்டுவந்து கபடி விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கினாலும், நிறைய மீறல்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் ஓர் அறநெறி அதிகாரி இருக்கிறார். என்றாலும் அவர் குழு மேலாண்மைக்குக் கட்டுப்பட்டவர். அவர் சுதந்திரமாகக் செயல்படுவதில்லை.
புரோ கபடி லீக்கை அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவும், இண்டர்நேஷனல் கபடி ஃபெடரேஷனும் ஆதரிக்கின்றன; ஆனால் அதைப் பொறுப்பெடுத்து நடத்துவதில்லை, கிரிக்கெட்டில் இருப்பதைப் போல.
கபடி விளையாட்டு மேலும் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் கிரிக்கெட்டுக்கு இருப்பதைப் போலவொரு கட்டமைப்பு தேவைப்படுகிறது. இதை எல்லா நிலைகளிலும் கட்டமைக்க அதிகாரப்பூர்வமான, பலமானதோர் அமைப்பு வேண்டும்.
இந்தப் புள்ளிவிவரங்களைச் சற்று ஆராய்ந்து பாருங்கள். புரோ கபடி லீக் போட்டிகளின் ஆரம்ப சீசனில் 435 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர்; ஐபிஎல்- போட்டிகளுக்கு 560 மில்லியன் பார்வையாளர்கள் இருந்தனர்.
Read in : English