Read in : English
இந்திய அளவில் திராவிட மாடல் சித்தாந்தத்தை உருவாக்குவதுதான் பாஜகவைத் தோற்கடிக்க உதவும் ஆகச்சிறந்ததொரு வழி என்று சில ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்றழைக்கப்படும் அரசியல் என்பது உயர்சாதிகளுக்கு எதிராக மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசியல் அதிகாரம் தருவதையும், பொருளாதார ஜனரஞ்சகத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்று மட்டுமே நினைத்து மிகவும் எளிமையாக்கப்பட்ட ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
ஒன்றிய அரசு அதிகாரம் கொண்ட கட்சி என்ற தனது சாதகமான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டில் தனக்கான இடத்தைப் பிடிக்க இன்னும் மிகப்பெரும் வெற்றியைப் பெறுவதற்கு பாஜக போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டின் மீதான திராவிடக் கட்சிகளின் இறுக்கமான பிடிதான் என்று மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் சொல்கிறார்கள். அதனால் தேசிய அரசியலில் திராவிட மாடல் சித்தாந்தத்தைக் கொண்டுவர தேசிய அளவிலான மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் விரும்புகிறார்கள்.
திராவிட மாடல் சித்தாந்த சிம்மாசனத்திற்கு நான்கு கால்கள் உண்டு. அவை மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அரசியல் அதிகாரம் தருவது; பொருளாதார ரீதியாக ஜனரஞ்சகத் திட்டங்கள்; தமிழ் மொழிப்பற்று; மற்றும் தமிழ் இன அடையாளத்தைக் கட்டமைப்பது. நான்காவது கால்தான் அடையாள அரசியலில் ‘நாமா, அவர்களா’ என்ற ஒரு சமன்பாட்டை உருவாக்குகிறது; அது மூன்றாவது காலுக்கு அதிமுக்கியமானது.
தமிழர்களாகிய நாம் பிராமணரல்லாதவர்கள். ’நம்மவர்கள் அல்லாத அவர்கள்’ ஆரியர்கள்; பிராமணர்கள்; சம்ஸ்கிருதமும் அதன் கிளைமொழியுமான இந்தியும் பேசுபவர்கள். மேலும் அவர்கள் வடஇந்தியர்கள். இதுதான் திராவிட மாடல் சித்தாந்தத்தின் நிலைப்பாடு; பெரும்பாலும் உண்மையையும் சரித்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாடு. இதிலிருக்கும் அடிப்படைச் சிந்தனை, வேதமதம், சாதீய அமைப்புக்கு வழிவகுப்பதால் அதை எதிர்க்க வேண்டும் என்பதே.
திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டை 55 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கின்றன. அதற்கு 50 ஆண்டுகள் முன்தாக அந்தக் கட்சிகள் தோன்றின. அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக, திராவிடம் என்ற கருத்தாக்கம் உருவாக ஆரம்பித்துவிட்டது. அதாவது, திராவிடம் என்ற கருத்தாக்கம் தோன்றி 150 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.
திராவிட அரசியல் என்பது சரித்திரத்தின், ஆதிகால அடையாளங்களின் மீட்டெடுப்பு. தமிழ் எவ்வளவு பழமையானது; எவ்வளவு சுதந்திரமானது; எவ்வளவு தனித்துவமானது என்பதை ஆராய்ந்த அறிஞர்களின் படைப்புகள் நிறையவே இருக்கின்றன. ஒரு தமிழ் கிராமத்தில் வழங்கும் பல்வேறு தெய்வ வழிப்பாட்டு முறைகள் பல்வேறு காலத்திலிருந்து வழிவழியாக வந்தவை; ஒன்றோடு ஒன்று இணைந்து வடிவம் எடுத்தவை. வேதகாலத்திற்கும் முந்திய காலகட்டத்தைச் சார்ந்த தமிழர்களின் சரித்திரம் இன்றளவும் செழித்தோங்கிக் கொண்டிருக்கிறது.
திராவிடக் கட்சிகள் ஒரு சமூகநீதி அமைப்பை உருவாக்கியிருக்கின்றன. அது வெறும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் தாண்டிய ஓர் அமைப்பு.
திராவிடக் கட்சிகள் ஒரு சமூகநீதி அமைப்பை உருவாக்கியிருக்கின்றன. அது வெறும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டையும் தாண்டிய ஓர் அமைப்பு. உதாரணமாக, அபூர்வமாக காது கோளாறுகளோடு பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கும் திட்டம் ஒன்று தமிழ்நாடு அரசிடம் உண்டு.
பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் ஆரம்பகாலத் திமுக அரசின் திட்டங்களில் ஒன்று. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் சீர்திருத்தங்களில் ஒன்று வேத சடங்கு முறையில் இல்லாமல் நடத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டப்பாதுகாப்பையும் அந்தஸ்தையும் கொடுத்ததுதான்.
திராவிடக்கட்சிகள் நவீனத்தை எதிர்க்கும் பத்தாம்பசலிகள் அல்ல. அவை பலமான, நவீனமான சக்திகள். ஒன்றிய அரசில் முக்கிய பதவிகளை வகித்தபோது இந்தியாவில் உலகமயமாதலைக் கொண்டுவருவதற்கு திமுக உதவியிருக்கிறது. பரப்புரைக்கும், தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் திமுக முன்னணியில் இருக்கிறது.
தனது பதின்பருவக்காலத்தில் மு. கருணாநிதி ஒரு செய்தித்தாளைத் தொடங்கினார். தமிழ் அடையாளத்தையும், தமிழர்கள் அடக்கப்படுவதையும், வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் மக்களிடம் எளிமையான ஆனால் வலிமையான மொழியில் சொன்ன திமுகவின் சரித்திர, சமூக நாடகங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்திழுத்தன. 1950களில் திமுக தலைவர்கள், மக்கள் ஆதரவு பெற்று பிரபலமான திரைப்படத்துறையைத் தங்கள் பரப்புரைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள தலைப்பட்டார்கள். திமுக நாடகங்கள் மக்களைக் கூட்டங்கூட்டமாக ஈர்ப்பதைப் பார்த்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் திராவிடப் பிரச்சாரத்தில் தங்களுக்கானதொரு தொழில் வாய்ப்பைக் கண்டெடுத்தார்கள்.
மாறன் சகோதரர்களின் சன் டிவி இந்தியாவின் முதல் கேபிள் டிவி சானல்களில் ஒன்று. அதற்கு முன்பு அந்தச் சகோதரர்கள் நியூஸ்ட்ராக் போன்ற காணொளிச் செய்தி இதழ்களில் தொழில் செய்துகொண்டிருந்தார்கள்.
மற்ற தலைவர்களுக்கு முன்பாகவே கருணாநிதி டிவிட்டரில் எழுத ஆரம்பித்துவிட்டார். இன்று திமுக ‘சூம்’ சந்திப்புகளை நடத்தி தன் கருத்துகளைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது
மற்ற தலைவர்களுக்கு முன்பாகவே கருணாநிதி டிவிட்டரில் எழுத ஆரம்பித்துவிட்டார். இன்று திமுக ‘சூம்’ சந்திப்புகளை நடத்தி தன் கருத்துகளைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 2019 தேர்தல்களில், இணைய விளம்பரங்களுக்காகச் செலவழிப்பதில் தேசிய அளவில் கவனம்பெற்ற பாஜகவுக்கு அடுத்த இடத்தில் இருந்தது பிராந்திய மையம் கொண்ட திமுக.
தகவல்களை மக்களுக்குக் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தியது; அரசியல் தொழில்முறை ரீதியாக இயங்கியது. காவிக்கட்சியின் விளையாட்டில் கலந்துகொண்டு அதையே வெல்லும் அளவுக்கு, பாஜகவைப் போலவே டிவிட்டரில் டிரெண்டுகளை உருவாக்க திமுகவால் முடிந்தது.
முந்தைய காலகட்டத்து திமுக தலைவர்களின் மகன்களும், மகள்களும், பேரக்குழந்தைகளும் இப்போது கட்சியில் இரண்டாம்கட்ட, மூன்றாம்கட்ட தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கட்சி சித்தாந்தத்தில் பயிற்சிபெற்றவர்கள்தான்; ஆனால் தொழில்நுட்ப உணர்வோடு படித்தவர்கள். புதிய சென்னை மேயர் சென்னையிலிருந்த அந்நாளைய திமுக தலித் தலைவரின் பேத்தி.
தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து திமுக சாதித்த வெற்றிகள் எல்லாம் இன்றளவும் தாக்குப்பிடிக்கும் ஒரு 150- ஆண்டு காலத்து மரபின் – மக்களிடம் பலமாகவே எடுத்துரைக்கப்படும் ஒரு மரபின் – விளைச்சல்.
தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்த்து திமுக சாதித்த வெற்றிகள் எல்லாம் இன்றளவும் தாக்குப்பிடிக்கும் ஒரு 150- ஆண்டு காலத்து மரபின் – மக்களிடம் பலமாகவே எடுத்துரைக்கப்படும் ஒரு மரபின் – விளைச்சல். தமிழ்நாட்டில் நரேந்திர மோடிக்கு கவர்ச்சி இல்லாமல் போனதற்குக் காரணம் அவர் ஒரு பகட்டான, இந்தி பேசும் வட இந்தியர் என்பதுதான்.
திமுக பெரும் பாரம்பரியம் கொண்ட கட்சி. முரண்பாடுகள் இல்லாத கட்சிக்கொள்கைகளை அது அரசியல்ரீதியாகப் பயன்படுத்துகிறது. சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், திமுக ’நீட்’டை நோக்கி விவாதத்தைத் திறமையாக நகர்த்தி, அதில் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான கட்சி பாஜக என்று சாமர்த்தியாகச் சித்தரித்தது. உள்ளூர்ப் பிரச்சினைகள் ஒதுக்கப்பட்டன; எனினும் திமுக பெரும்வெற்றியைச் சாதித்தது.
திமுகவின் சரித்திரம், அடையாள அரசியல், உயிர்ப்பான சமூகக் கட்டமைப்புகள் ஆகியவற்றை அவ்வளவு எளிதாக மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும், தேசிய அளவிலான திராவிட மாடலை உருவாக்க வேண்டுமென்றால், அது நிற்பதற்கு இன்னும் இரண்டு கால்களைக் கண்டுபிடிக்க வேண்டுமே. அப்படியொரு தேசியத் திராவிடக் கட்டமைப்பு உருவானால், அது எந்த வரலாற்றைப் பேசும்? எந்த இன அரசியலைப் பேசும்? காலத்தை வென்ற லட்சியம் என்று எந்த லட்சியத்தைப் பேசும்? முக்கியமாக, அந்தக் கற்பனாவாதக் கட்டமைப்பு எதை எதிர்த்துப் போராடி முரசுமுழங்கும்?
ஆனால் திராவிட மாடலுக்குப் பிராந்திய வடிவங்கள் உண்டு. தெலுங்கு தேசம் பாஜகவைப் புறந்தள்ளும் ஓர் இணையான அமைப்பைக் கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான ஒரு தேசிய திராவிடக் கட்டமைப்பை அதிகாரமிக்க, தொடர்ந்து செல்லக்கூடிய ஓர் அரசியல் சக்தியாக உருவாக்க பல தசாப்தங்கள் ஆகலாம். அதற்கு கருத்தியல் பலம் வேண்டும்; சமூக அடித்தளம் வேண்டும்; இதைக் கொண்டு செல்வதற்கு மிகப் பெரிய அடையாள பிணைப்பும், அந்த அடையாளத்துக்கு எதிர்வினையும் வேண்டும்.
ஆனால் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு மாற்றுச் சக்தியைத்தான் கருத்தியல் எழுத்தாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆம் ஆத்மி, மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரு கூட்டணிச் சக்திதான், நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய அதிகபட்சம் சிறப்பான ஒருவழி.
Read in : English