Read in : English
”நீ என்ன உண்ணுகிறாயோ அதுதான் நீ,” என்பது உலகவழக்கு. அதை நாம் எல்லோரும் அறிந்திருப்போம். அதன் ஆழமான அர்த்தம் ஆரோக்கியமாகவும், உடல்நலத்துடன் இருப்பதற்கு நல்ல உணவைச் சாப்பிட வேண்டும் என்பதுதான்.
உண்பதன் நோக்கம் உடலைப் பேணிக்காப்பது. “நீங்கள் உண்ணும் உணவு மிகவும் பாதுகாப்பான, நல்ல மருந்தாக இருக்கலாம்; அல்லது மெதுவான விஷமாக இருக்கலாம்,” என்பது ஆன் விக்மோரின் மேற்கோள்.
தைராய்டு கோளாறு நம்நாட்டில் 4.2 கோடி மக்களைத் தாக்குகிறது. இந்தியாவில் மிகவும் பரவலான தைராய்டு கோளாறு ‘ஹைப்போதைராய்டிசம்’.
அதிகமான தைராய்டு கேஸ்கள் கொண்ட மாநிலங்களில் கேரளா உச்சத்தில் இருக்கிறது. தெலங்கானா நான்காவது இடத்தையும், ஆந்திரபிரதேசம் ஆறாவது இடத்தையும், தமிழ்நாடு ஏழாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. முதல் பத்து மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம் இடம் பெறவில்லை.
இந்தக் கோளாறு பொதுவாக குடும்ப மரபணு ரீதியாகப் பெண்களுக்கு அதிகமாகக் கடத்தப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்ப மரபில் யாருக்கும் இது இல்லையென்றாலும்கூட தைராய்டு பாதித்த பெண்களும் உண்டு.
தைராய்டு கோளாறு நம்நாட்டில் 4.2 கோடி மக்களைத் தாக்குகிறது. இந்தியாவில் மிகவும் பரவலான தைராய்டு கோளாறு ‘ஹைப்போதைராய்டிசம்’.
கலப்பட எண்ணெயில் சமைத்த துரித உணவு (ஜங் ஃபுட்) பெண்களுக்குக் முன்கழுத்துக்கழலையை ஏற்படுத்துகிறது. தைராய்டு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதற்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம.
புனே செல்லாராம் நீரிழிவு நோய்க் கழகத்தின் தலைமை உட்சுரப்பியியல் நிபுணரான அம்பிகா கோபாலகிருஷ்ணன் உன்னிகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார்: “உலகம் முழுவதும் அயோடைசேஷன் வந்தவுடன், ஆட்டோ இம்யூன் நோய் ஹைப்போ-தைராடிசத்திற்குக் காரணமாகிவிட்டது.”
தைராய்டு பிரச்சினைகள் அயோடின் பற்றாக்குறையால் (முன்கழுத்துக்கழலை) உருவாகலாம். அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தியால் உருவாகும் ஆட்டோ இம்யூன் நோய்கள், ஹைப்போதைராய்டிசத்தில் அல்லது ஹைப்பர்தைராய்டிசத்தில் (ஹாஷிமோட்டோ நோய்கள் என்ற மிகையான நோயெதிர்ப்புச் சக்தி நோய்களால் உருவாகும்) போய்முடிகின்றன.
தைராய்டு என்பது நம் உடலில் சிறிய வடிவிலிருக்கும் நாளமில்லாச் சுரப்பி. அதுதான் உடலின் வளர் சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது; ஹார்மோன்களையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் இருக்கும் எல்லா உள்ளுறுப்புகளும் அமைப்புகளும் இந்தச் சின்ன உறுப்பை மறைமுகமாகச் சார்ந்திருக்கின்றன. உடலின் வெப்பநிலையை, வளர்சிதை மாற்றத்தை, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருக்க தைராய்டு உதவுகிறது. ஞாபகசக்திக்கும், ஆற்றல் நிலைக்கும், எலும்புமஜ்ஜை இயக்கத்திற்கும் இதயம் வேலை செய்வதற்கும், குடல்களின் சரியான அசைவுகளுக்கும் மற்றும் முக்கியமான பணிகளுக்கும் தைராய்டு அவசியம்.
உங்கள் உணவிலிருக்கும் அயோடின் என்னும் வேதியல் தனிமத்தை இந்தச் சின்ன சுரப்பி எடுத்துக்கொண்டு அதை உடலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு ஹார்மோன்களாக மாற்றுகிறது. அதனால் தைராய்டு சுரப்பி தவறாக இயங்கும்போது, உடல் அலைபாய்வது போன்ற மாறுதல்களுக்கு ஆளாகிறது.
சரியாகச் சொன்னால் தைராய்டு கோளாறுகளுக்கு சிகிச்சை ரீதியிலான குறிப்பிட்ட உணவுப்பழக்கம் என்று எதுவுமில்லை. ஆனால் சில உணவுவகைகள் உங்களுக்குள் ஆரோக்கிய உணர்வை ஏற்படுத்தும். நிஜத்தில் அதை நீங்கள் தவிர்க்கவே விரும்புவீர்கள்.
தைராய்டு சுரப்பி சரியாக இயங்க, உடலின் தேவைகளுக்குப் போதுமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய அயோடின் தேவை. அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் முன்கழுத்துக் கழலை அல்லது ஹைப்போதைராய்டிசம் ஏற்படும். போதுமான அயோடின் உடலுக்குக் கிட்டாதபோது, தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக வேலைசெய்து தைராய்டு சுரப்பியை உற்பத்தி செய்கிறது. அதன் விளைவாக அந்தச் சின்ன சுரப்பி பெரிதாகிவிடுகிறது.
அயோடினை இயல்பாக அதிகமாக்கும் உணவுவகைகள்
பிரேசில் கொட்டைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை உங்கள் அயோடின் குறையை நீக்க உதவும் உணவுவகைகள். அவற்றில் செலினியம் நிறையவே இருக்கிறது. இந்தச் செலினியம்தான் தைராய்டு சுரப்பியின் வளர்சிதை மாற்றத்த்திற்கும், ஆன்டி-ஆக்ஸிடாண்ட் பணிகளுக்கும் பொறுப்பு.
அயோடின் மண்ணிலும் கடல்நீரிலும் காணப்படுவதால் மீன் இந்த ஊட்டச்சத்தின் இன்னொரு ஆதிமூலம். கடலில்லாத பெரும் மலைப்பகுதிகளில் வசிக்கும் தூரதேசத்து மக்களுக்கு முன்கழுத்துக்கழலை நோய் அபாயம் அதிகம். மத்திமீன்கள், ஆளிவிதைகள் (தினம் 50கிராம்) ஆகியவற்றில் ஒமெகா-3 என்ற கொழுப்பு அமிலம் நிறையவே இருக்கிறது. அது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக் கட்டமைப்பு தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்; குறிப்பாக ஹாஷிமோட்டா நோயாளிகளுக்கு மிகவும் அது அவசியம்.
அதிகமான சோடியம் கொண்ட பதப்படுத்திய உணவுகளும், பொரித்த கொழுப்புச்சத்து உணவுகளும் (கலப்பட எண்ணையில் சமைத்த உணவுகள் இன்னும் மோசம்) தைராய்டு சுரப்பி போதுமான அளவுக்கு ஹார்மோனை தயாரிப்பதைத் தடைசெய்துவிடும்.
கிரேக்க தயிரில் தைராய்டை எதிர்க்கக்கூடிய அயோடினும் (தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்திக்காக), டி வைட்டனும் இருக்கின்றன. முட்டையும் ஆரோக்கியமான தைராய்டு சுரப்பிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைத் தருகிறது. அதில் அயோடின், செலினியம் மற்றும் ஒமெகா-3 கொழுப்பு அமிலமும் இருக்கின்றன. அதனால் ஆரோக்கியமான உணவுத்திட்டத்தில் முட்டைக்கும் இடம்கொடுக்க வேண்டும்.
ஆப்பிள் பழங்களிலும் ஆரோக்கியமான் சுரப்பிக்குத் தேவையான அயோடின் இருக்கிறது. கோழி இறைச்சியில் புரோட்டீனும் துத்தநாகமும் உண்டு. தைராய்டு ஹார்மோன்களின் ஒழுங்கான இயக்கத்திற்கு துத்தநாகம் அவசியம்.
ஹைபோதைராய்டிசம் நோய்க்கு ஆளானவர்களின் உடலுக்குள் செல்களைச் சீரழிக்கும் தனித்தியங்கும் மூலக்கூறுகள் அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு ஆன்டி ஆக்ஸிடாண்டுகள் கொண்ட ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி, கோஜிபெரி, கிரான்பெரி ஆகியவை சிறந்த உணவுவகைகள். யோகா, தைராய்டு சுரப்பியை சரிசெய்யகூடும் என்பதற்கு தெளிவான விஞ்ஞான சான்றுகள் இல்லை.
தைராய்டு கோளாறு கொண்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
அதிகமான சோடியம் கொண்ட பதப்படுத்திய உணவுகளும், பொரித்த கொழுப்புச்சத்து உணவுகளும் (கலப்பட எண்ணையில் சமைத்த உணவுகள் இன்னும் மோசம்) தைராய்டு சுரப்பி போதுமான அளவுக்கு ஹார்மோனை தயாரிப்பதைத் தடைசெய்துவிடும். அளவுக்கு அதிகமான மதுவும் அதுமாதிரியே செயல்படும்.
தைராய்டு கோளாறுகள் கொண்ட நோயாளிகள் வழக்கமாக முட்டைகோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கிறார்கள். ஏனென்றால் அவை தைராய்டு சுரப்பியைப் பெரிதாக்கிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு நிஜமான விஞ்ஞானச் சான்றோ, பரிந்துரையோ கிடையாது. இந்தக் காய்கறிகளில் ஏராளமான ஆரோக்கிய பண்புகள் உண்டு. ஆயினும் அவை தைராய்டு சுரப்பியின் பணியை சற்று மெதுவாக்கிவிடுகிறது. தைராய்டு, ஹார்மோன் உற்பத்திக்குத் தேவையான அயோடினை உடல் பயன்படுத்துவதை இந்தக் காய்கறிகள் சற்று கடினமாக்கிவிடுகிறது. சோயாவை மிதமாகப் பயன்படுத்தலாம்.
எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான விஷயம் இதுதான்: எல்லாம் அளவோடு இருந்தால் நலம்தான். பெரும்பாலும் உணவு, தைராய்டு சுரப்பியின் பணியைப் பாதிப்பதில்லை. சரியான முறையில் நோயைக் கண்டுபிடித்து சரியான உணவு வழக்கத்தையும், மருத்துவத்தையும் மேற்கொண்டால், தைராய்டு கோளாறைச் சரிசெய்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும்.
Read in : English