Read in : English

பசுமையான சென்னையை உருவாக்க எந்தத் திசையில் மாநகரம் பயணிக்கும் என்பதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரை குறைந்த அளவு நிலத்தில் நிறைந்த அளவு மரங்களை வளர்க்க உதவிய மியாவாகி (ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகி கண்டுபிடித்த உத்தி) முறையைக் கைவிட்டு, இயற்கை வனப்பு நிலப்பரப்பை மீட்டெடுக்கும் மரபு ரீதியிலான சுற்றுப்புறச்சூழல் கருத்தாக்கத்துக்கு சென்னை நகர்ந்துவிட்டது.

சென்னைப் பெருநகர மாநகராட்சி, தாய் மண் சார்ந்த மர வகைகளை மட்டுமே நட்டு மாநகரைச் சுற்றிலும் பாரம்பரிய நிலப்பரப்புகளை உருவாக்க இருக்கிறது. புதுயுகக் காடுகளைக் அது கட்டமைக்கப்போகிறது. உள்ளூர் பிரதேசத்தின் இயற்கைச் சூழலியலுக்குப் பொருத்தமாக இருக்கும் அந்தக் காடுகள். பெருநகர அமைப்பு அந்த மாதிரி 1,000 இடங்களில் காடுகளை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது.

சூழலியலுக்கு மிகமிக இணக்கமாக இருக்கும் இந்த அணுகுமுறை. எனினும் இது அழுத்தமாகவும் அதிக எண்ணிக்கையிலும் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மியாவாகி காடு வளர்ப்பு முறை ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். மரம் வளர்ப்பு மூலம் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் மாநகரத்தின் முயற்சிகளில் எதிர்மறை தாக்கம் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் நீண்ட காலம் கரிமத்தை தேக்கி வைக்கும் ஆலமரம் போன்ற மரங்களின் வகைகளும் அதில் இருக்கும்.

மண்ணுக்கேற்ற மரங்களை நடுவதுதான் சரியான அணுகுமுறை. கலாச்சார ரீதியாகப் பார்த்தால், சென்னைப் பிரதேசம் முல்லையும் (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தலும் (கடலும் கடல் சார்ந்த இடமும்) ஆகும்

சென்னையின் பசுமைக்காடு என்பது அடர்த்தியான காடு என்ற கருத்தியலிலிருந்து வேறுபட்டதாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த மாநகரத்தின் தட்பவெப்பநிலை ஈரமும், உலர்வும் கொண்ட வெப்பமண்டலத் தன்மையைக் கொண்டது. இதன் மரபு ரீதியிலான பசுமை முறை, கடலோரச் சுற்றுச்சூழலுக்குப் பொருந்தும்வண்ணம் பரிணாமம் அடைந்த ஒன்று.

பள்ளிக்கரணை அநேகமாக நமக்குத் நன்றாகத் தெரிந்த நகர்ப்புறக் கடலோர சுற்றுப்புறச்சூழல் அமைப்பின் எச்சம். ஆயினும் அதன் ஈரப்புல்வெளி, கட்டுப்படுத்தாத வளர்ச்சியாலும் ஆக்கிரமிப்பாலும் கடுமையாகச் சுருங்கிவிட்டது. பிரம்மஞான சபை காடுகளோடும், கிண்டி தேசியப் பூங்காவோடும் ஒப்பிடும்போது, பள்ளிகரணை அதிகமாக எவருடைய மனதிலும் தங்குவதில்லை. நீர்ப்போக்கிற்குத் தடையான காங்கிரீட் கட்டுமானங்கள், அதைச் சுற்றிக் கிடக்கின்றன. சென்னை மாகரத்தின் விளிம்புகளில் இருக்கும் நன்மங்கலப் புதர்க்காடும் கவனம் பெறுவதில்லை. மாதவரம் ஏரியின் ஆத்மாவான தாவரங்களும், காட்டுயிர்களும் அதிகமாகவே தொலைந்துவிட்டன. நதிநீர்ச் சுத்தம் செய்தல் போன்ற நிறைய மீட்டெடுப்புத் திட்டங்கள் ஏரிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம்.. திட்டமிடாமல் செய்யப்பட்ட தூர்வார்தல் மூலம் ஏரிப் பகுதியில் உள்ள தாவரங்கள் துவம்சம் செய்யப்படுகிறது.

Great egret (Ardea alba) at Pallikaranai, Chennai

“மியாவாகி காடுகள் பற்றிய சென்னை மாநகராட்சியின் முடிவு வரவேற்கத்தக்கது. மண்ணுக்கேற்ற மரங்களை நடுவதுதான் சரியான அணுகுமுறை. கலாச்சார ரீதியாகப் பார்த்தால், சென்னைப் பிரதேசம் முல்லையும் (காடும் காடு சார்ந்த இடமும்), நெய்தலும் (கடலும் கடல் சார்ந்த இடமும்) ஆகும்,” என்கிறார் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற தாவரயியல் பேராசிரியரான டி. நரசிம்மன். அவர் தமிழ்நாடு பல்லுயிர்க் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

கேர் எர்த் டிரஸ்ட்டைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்களான ஆர். ஜே. ரஞ்சித் டேனியல்ஸ் மற்றும் அஞ்சனா வெங்கடேசன் ஆகியோர் ‘மாங்கபே – இந்தியா’வில் பின்வருமாறு எழுதியுள்ளனர்: “சென்னையின் வரலாற்று நிலப்பரப்பு மீளுருவாக்கம் செய்யப்பட்டால் அதில் பனைமரங்களும் ஈச்சமரங்களும் இடையிடையே புதர்களோடு இருக்கும். இடையில் இருக்கும் வெளியில் புல்வெளியும், மூலிகைகளும் படர்ந்திருக்கும். இந்தச் சூழலில்தான் நீர் வெள்ளப் பெருக்கு இருக்காது. மரங்கள் உள்ளூர் மரங்களாக இருக்கும்; குறைவாகவே வளரும். அதில் ஆலமரம் இருந்தால் அதுவும் அப்படித்தான் இருக்கும்” (2020).

இந்த மாதிரியான குறிப்பிட்ட வாழ்விடத்தில் குறிப்பிட்ட வனஉயிர்கள் குடியிருக்கும். புல்வாய் (மானினம்), விசிறித்தொண்டை ஓணான், சுருட்டைவிரியன் போன்ற விலங்குகளும், சிரிக்கும்புறா, இந்திய திண்காற்பறவை போன்ற பறவைகளும்தான் அந்த வனஉயிர்கள். மாந்தோப்புகளும், ஏரிகள் கொண்ட பகுதிகளும் பதிவு செய்யப்பட்டன. “பல இடங்களில் நதியோரம் மாந்தோப்புகள் இருப்பது சாத்தியம். அவற்றில் சில அழிந்துவிட்டன. ஏனென்றால் அவற்றின் பயனைப் பற்றிய அறிவு போதுமானதாக இல்லை. மேலும் நீர்ப்போக்கிற்கு அவை தடை என்றும் கருதப்பட்டன,” என்கிறார் டாக்டர் நரசிம்மன்.

காலனித்துவ காலத்துப் பதிவுகள் சுவாரஸ்யமானவை. 1790களின் பிற்பகுதியில் மெட்ராஸ் ஆவணங்களில் பல இனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட தாவர இனங்களைத் திரட்டியவர் ஸ்ட்ராஸ்போர்க்கிலிருந்து வந்த ஜோஹான் பீட்டர் ராட்லர்; அவர் 1776-இல் தரங்கம்பாடி மிஷனில் சேர்ந்தார். ஜோஹான் கெர்கார்டு கோனிக் என்பவர் முன்பு செய்த பதிவுகளோடு, இந்த மிஷன் செய்த கண்டுபிடிப்புகளும் சேர்ந்து சோழ மண்டல கடலோரப்பகுதியின் தாவர இனங்களைப் பற்றிய அறிவை மேம்படுத்தின.

இந்தத் தாவரங்கள் இன்று மாம்பலம் என்று அழைக்கப்படும் அன்றைய மார்மெலான், கல்லாபுரம் ஆட் மாண்டஸ் (பல்லாவரம்), செங்குன்றம், ஆளுநர் இல்லம், நுங்கம்பாக்கத்தின் ஆண்டர்சன் பூங்கா, சைதாபேட்டை ஆகிய இடங்களிலிருந்து திரட்டப்பட்டவை. மேலும் இன்றைய திருவள்ளூர், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களிலிருந்தும் அவை திரட்டப்பட்டன (ராமன் மற்றும் பிரசாத், 2010). இந்தத் தாவரங்களைப் பற்றிய் ஆய்வின் பின்புலத்தில் ஜெர்மன் மொழியில் வில்டிநவ் 1803இல் ஒருகட்டுரை எழுதினார்.

அதற்கும் முன்னால், புனிதர் ஜார்ஜ் கோட்டையில் அறுவைச் சிகிச்சை மருத்துவராக இருந்த சாமுவேல் பிரவுன் என்பவரும், ஜேம்ஸ் பெடிவேர் என்பவரும் இணைந்து 1700-1701-இல் ஒரு கட்டுரை எழுதினர். ஆனால் அந்தக் கட்டுரையில் தாவரங்கள் இரட்டைப் பெயர்களோடு இனம் பிரிக்கப்படவில்லை; அவற்றிற்கு உள்ளூர் பெயர்கள் அல்லது கார்ல் லினீயஸ்க்கு முந்திய காலகட்டத்து முறையிலான விவரணைகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. (கார்ல் லினீயஸ் என்ற ஸ்வீடன் நாட்டு தாவரயியலாளர்தான் முதன்முதலில் தாவரங்களுக்கு இரட்டைப்பெயர் கொடுத்தவர். அவருக்கு முந்திய காலம்வரை பொத்தாம்பொதுவான பெயர்கள் மட்டுமே இருந்தன). சென்னை (மெட்ராஸ்) தாவரங்களைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் 1929, 1938, 1994 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து பதிவுகள் உருவாக்கப்பட்டன.

சென்னையிலும் சென்னையைச் சுற்றிலும் உள்ளூர் மரபுத் தாவரங்களை மீண்டும் காடுகளை வளர்த்தெடுக்கும் அணுகுமுறை எவ்வளவுதூரம் பலன் அளிக்ககூடியது? செயற்கைக்கோள் படிமங்கள் தருகின்ற தரவுகளும், தகவல்களும் மாநில அரசுக்கும், உள்ளாட்சி அரசுகளுக்கும், தாவரங்களுக்குத் தகுதியான இடங்களை அடையாளம் காணவும், முன்பு இருந்ததைப் போன்ற சதுப்புநிலங்களை உருவாக்கவும் உதவிசெய்யுமா?

சென்னை மண்டலத்துக்கு 60 தாவர இனங்கள் பொருந்தக்கூடியவை என்று டாக்டர் நரசிம்மன் சொல்கிறார். சென்னையைச் சுற்றி முன்பு வளர்க்கப்பட்ட மருத்துவ மூலிகைத் தாவரங்களை மீட்டெடுத்து வளர்ப்பதற்கு ஓர் உந்துசக்தியைக் கொடுக்கலாம்.

சென்னை மண்டலத்துக்கு 60 தாவர இனங்கள் பொருந்தக்கூடியவை என்று டாக்டர் நரசிம்மன் சொல்கிறார். மரக்காணத்தில் இருக்கும் ஒரு சுயஉதவிக் குழுவால் தற்போது 50-60 இனங்களின் மரக்கன்றுகளைத் தரமுடியும். “வனத்துறை 140 இனங்களை விநியோகிப்பது சாத்தியம். அது 1,400 வெவ்வேறு தாவர இனங்களைக் கொண்ட தமிழ்நாட்டின் மொத்த மரபுத்தொகையில் பத்து சதவீதமாக இருக்கும், என்கிறார் அவர். தற்போது விநியோகத்தில் இருக்கும் சில தடைகள் காரணமாக, அதிக விலை கொடுத்து அண்டை மாநிலங்களிலிருந்து உயரமான மரக்கன்றுகள் வாங்கப்படுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சென்னையைச் சுற்றி முன்பு வளர்க்கப்பட்ட மருத்துவ மூலிகைத் தாவரங்களை மீட்டெடுத்து வளர்ப்பதற்கு ஓர் உந்துசக்தியைக் கொடுக்கலாம்.

வில்டிநவ் 1803-இல் மற்ற தாவரங்களைத் தவிர, 14 வகையான மரங்களை ஆவணப்படுத்தினார். ஆனால் பிற்காலத்துப் பதிவுகள் அவற்றில் ஆறு மரங்களை மட்டுமே 1929-ஆம் ஆண்டிலும், 1994-ஆம் ஆண்டிலும் அடையாளம் காட்டியுள்ளன என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். அந்த ஆறு மரங்களில் பின்வருவனவும் அடங்கும்: Ficus repens (படரும் அத்தி), Gardenia gummifera (கம்மி கார்டெனியா என்னும் மலர்ச்செடிவகை), Semecarpus anaccardium (கொட்டைமர வகை), Uvaria cerasoides (பூச்செடிவகை) மற்றும் Vitex appendiculata (மயிலைநொச்சி). இவையெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட பதிவுகள் தந்த தரவுகள். (மரங்களின் பொதுபெயர்கள் பல தரவுத்தளங்களிலிருந்து பெறப்பட்டவை).

ராட்லர் திரட்டிய மூலிகைகளோடு ஒப்பீடு செய்தால், 1929 மற்றும் 1994 ஆண்டுகளின் ஆவணங்கள்படி சில முக்கிய மதிப்புள்ள மூலிகைகள் காணாமல் போய்விட்டன. அவற்றில் காஸ்டஸ் ஸ்பெசியாசஸ் என்ற (கோஷ்டம்) கிரீப் இஞ்சியும் அடங்கும். இதில் அழற்சியையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும் மருத்துவக் குணங்கள் உண்டு. இன்று செங்கல்பட்டைச் சுற்றி ஏராளமான மருத்துவத் தாவரங்கள் திரட்டப்படுகின்றன. அவற்றை மேலும் பல தகுதியான பகுதிகளில் வளர்த்தால் நகர்ப்புற தோட்டவியலாளர்களுக்கு வருவாய் வரும் வழியாகக்கூட அது மாறலாம்.

காடு மீட்டெடுப்புத் திட்டம் சென்னையில் தவறாகப் போகாது. ஏனென்றால் நடுவதற்கென்று சுமார் 60 இனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாவரங்களும் மரங்களும் காலம் செல்ல செல்ல, பறவைகள், விலங்குகள் என்ற பல்லுயிர்க் கட்டமைப்பை மீளுருவாக்கம் செய்து சுற்றுப்புறச் சூழலுக்கு ஆகப்பெரும் சேவையை நிச்சயமாகச் செய்யும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival