Read in : English
உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் விதிகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்த மார்லிபோன் கிரிக்கெட் கிளப் ‘மேன்கேடிங்’ என்றழைக்கப்படும் கிரீஸைவிட்டு நகரும் பேட்ஸ்மேனை ரன்அவுட் ஆக்கும் பந்துவீச்சாளரின் செயலை முறையற்ற செயற்பாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இது விதிமுறைகளுக்குப் புறம்பானது அல்ல என்றாலும், ஒருவரை மேன்கேடிங் செய்வது சரியானதல்ல. நியாயமான விதிகளை மீறாமல் பெறும் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்ட கண்ணியவான்களின் விளையாட்டு கிரிக்கெட்.
நுட்பமாகப் பார்த்தால் பந்து வீசப்படும் முன்பு ரன் எடுக்கும் ஆட்டக்காரர் கிரீஸைவிட்டு நகர்ந்துவிடுவதால் அவர் அவுட்டாகிறார். ஆனால் அவர் சற்றுமுன்னே நகர்ந்து, ரன் எடுக்க முடியாத நிலையிலும் திருட்டுத்தனமாக ரன் எடுக்க நினைத்து அநியாயமாக தன்னைப்பலப்படுத்திக் கொள்ளப்பார்க்கிறாரா அல்லது ரன் எடுக்கமுடிகிற நிலையில் அதற்குத் தயாராக தன்வேகத்தைக் கூட்டுவதற்காக மட்டுமே அவர் ‘பிட்சிலிருந்து’ அடியெடுத்து நகர்கிறாரா என்பதை அளந்து பார்க்கவேண்டும். அவரது நோக்கம்தான் முக்கியமே தவிர, செயல் அல்ல.
இப்படி ரன் எடுக்கும் ஆட்டக்காரர் ஒரு ரன்னை எடுக்க முயலும்போது சில பௌலர்கள் அவர்களை எச்சரித்திருக்கிறார்கள். இதற்குச் சரியான உதாரணம் 1987-ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் நிகழ்ந்த கோர்ட்னீ வால்ஷ் மற்றும் சலீம் ஜாஃபர் கேஸ்தான். வால்ஷ், ஜாஃபரை ‘மேன்கேடிங்’ செய்திருந்தால், மேற்கிந்திய அணி கால் இறுதிப் போட்டியில் வென்றிருக்கும். ஜாஃபர், திருட்டுத்தனமாக ரன் எடுக்க முயன்றார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்போது வால்ஷ் பந்தை வீசி ஸ்டம்புகளை அடித்து வீழ்த்தியிருக்கலாம். ஆனால் வால்ஷ் அப்படிச் செய்யவில்லை; அதன்மூலம் ஒரு கண்ணியவானை விடவும் அதிக மதிப்புள்ள மனிதராகவே அவர் தெரிந்தார்.
அப்படிப்பட்ட போட்டியுணர்வும், விதிமீறலும் உலக கிரிக்கெட் போட்டிகளிலும், அதிகமான பணயம் வைக்கப்படும் ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு விதியாகவே மாறிவிட்டது என்பது ஒரு முரண்நகை. பஞ்சாப் கிங்ஸ்- அணியில் இருந்த ஹர்பஜனும், ஸ்ரீசாந்தும் ஐபிஎல்லில் மோதிக்கொண்டது அந்த பிரிமீயர் லீக் போட்டியின் போக்கைத் தீர்மானித்தது.
எதிராளியை மனம்நோகும்படி பேசுவது, அவுட்டானாலும் வெளியேறாமல் இருப்பது, வீசப்பட்ட பந்து பயணிக்கும் பாதையிலே ஓடி பந்து ஸ்டம்புகளை வீழ்த்த விடாமல் தடுப்பது – இப்படி பல விஷயங்கள் விளையாட்டின் நிஜ உணர்வுக்கு ஏற்றதல்ல
நியாயமான விளையாட்டு விருது ஒன்று உருவாக்கப்பட்டது. ஏனென்றால் விளையாட்டின் நிஜமான நல்லுணர்வைக் கெடுப்பதை போட்டி நடத்தியவர்கள் விரும்பவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், அந்த விருதை மற்ற அணிகளைவிட அதிகமாக வென்றது என்பது தோனியின் தலைமைக்குச் சாட்சியம்.
எதிராளியை மனம்நோகும்படி பேசுவது, அவுட்டானாலும் வெளியேறாமல் இருப்பது, வீசப்பட்ட பந்து பயணிக்கும் பாதையிலே ஓடி பந்து ஸ்டம்புகளை வீழ்த்த விடாமல் தடுப்பது – இப்படி பல விஷயங்கள் விளையாட்டின் நிஜ உணர்வுக்கு ஏற்றதல்ல; ஆனால் அவைதான் உயர்நிலைகளில் சாதாரணமாகவே நிகழ்கின்றன. உள்ளூர் லீக் போட்டியிலும் மாநில அளவில் நடக்கும் போட்டியிலும் விஷயமே வேறு.
ஒருவரை முதன்முதலில் ‘மேன்கேடிங்’ செய்தது வினு மன்காட்தான். நம் காலகட்டத்தில் கபில்தேவ் தென்னாஃப்ரிக்காவின் பீட்டர் கிர்ஸ்டனை 1992-இல் ’மேன்கேடிங்’ செய்தார். முந்தைய போட்டியில் வெறுமனே அவருக்கு எச்சரிகைதான் கொடுத்தார் கபில்.
இங்கே யாரும் ‘மேன்கேடிங்’ செய்வதில்லை. யாராவது ஒரு ஆட்டக்காரர் அப்படி சரிந்து ஓடினால், அவர் அடையாளம் காணப்படுவார்; பின் கண்ணியமற்ற அவரது செயல் வாழ்நாள் முழுவதும் அவரைத் தொடர்ந்துவரும். இதுவோர் சின்ன உலகம். இங்கே ஆட்டக்காரர்களுக்கு ஒருவரை ஒருவர் நன்றாகவே தெரியும். அடிக்கடி டீம் மாறுவார்கள். மேலும், பெரிய நிறுவனங்கள் நீண்ட பாரம்பரியம் கொண்ட லீக் டீம்களை நடத்துகின்றன. ஓர் ஆட்டக்காரர் கண்ணியவானாக இல்லை என்றால் அவர்களின் பெயர்தான் கெட்டுப்போகும். அம்பயர்கள் எப்போதும் தோழமை உணர்வோடு செயல்பட்டு நல்ல உறவைப் பேணிக் காப்பார்கள். ரசாபாசமாகும் சூழல்களில் அவர்கள் தலையிட்டு சாந்தப்படுத்துவார்கள். அவர்களின் தொழில்வாழ்க்கையும்தான் பணயம் வைக்கப்படுகிறது.
சென்னை தெருக் கிரிக்கெட்டில்கூட ‘மேன்கேடிங்’ சர்வசாதாரணம். மாநகர் முழுக்க 10 ஓவர், ஆறு ஓவர் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இரண்டு அடிகள்தான் அதில் பிரதானமான விதி. ரன் எடுப்பவர் இரண்டு அடிகள்தான் எடுக்க முடியும். ரன் எடுக்க வாய்ப்பு தெளிவாக இருந்தால் மட்டுமே அவர் பாய்ந்து ஓட முடியும். இரண்டு அடிகளுக்குமேல் அவர் பாய்ந்தால், அவர்மீது நடவடிக்கை பாயும்.
கிரிக்கெட்டை நிஜமாகவே விளையாடி அதைத் தொழிலாகப் பின்பற்ற ஆசைப்படுபவர்கள் விளையாட்டின் நிஜ உணர்வை உள்வாங்கிக் கொள்கிறார்கள். நேரந்தவறாமை பேணப்படுகிறது; ஒழுக்கக்கட்டுப்பாடு பிரதானமானது. கத்துக்குட்டிகள் தங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருக்கக் கற்பிக்கப்படுகிறார்கள். ஒருவர் தன்னை நட்சத்திர பந்துவீச்சாளராகக் கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் ’கோச்’ அவரை நோக்கிப் பந்துவீசும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சக நண்பர்கள் தரும் அழுத்தம் வேறு உண்டு.
மைதானத்திற்கு அப்பால் தேநீர்க் கடைகளிலும், பேசும் இடங்களிலும் ஒருவர் விளையாட்டின்போது நடந்துகொண்ட மோசமான நடத்தை பெரிதாக விவாதிக்கப்படுகிறது. அவருக்கு வாழ்நாள் முழுக்க தீராத ஒரு களங்கம் வந்து சேருகிறது.
கிரிக்கெட்டை நிஜமாகவே விளையாடி அதைத் தொழிலாகப் பின்பற்ற ஆசைப்படுபவர்கள் விளையாட்டின் நிஜ உணர்வை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
விளையாட்டு மைதானத்தில் திட்டக்கூடாது அல்லது விவாதம் செய்யக்கூடாது என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தும் கோச்சுகள் ஆசிரியர்கள்தான். நேராக விளையாடும்படியும், மிகையான உத்திகளைத் தவிர்க்கும்படியும் அவர்களுக்கு அந்த ஆசிரியர்கள் சொல்லித்தருகிறார்கள். கிரிக்கெட்டின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளும்போது குறுக்கு மட்டை அடிகளையும் தலைகீழான வீச்சுகளையும் தவிர்க்க வேண்டும். இந்த விதிகளோடு விளையாட்டின் நிஜஉணர்வும் அவர்களுக்குள் ஊட்டப்படுகிறது. இதை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்றுகிறார்கள்.
கண்ணியமான நடத்தைக்குத் தமிழ்நாடு பெயர் பெற்றிருக்கிறது. தென்மாநில நட்சத்திர ஆட்டக்கார்களும் படிப்பிலும் கெட்டிதான். கும்ப்ளே பிரபலமான ஒரு பொறியியல் கல்லூரியில் பயின்றவர். ஸ்ரீகாந்த் ஒரு பொறியாளரும்கூட.
முழுக்க ஒரு கண்ணியவானாக விளையாடிய பாபு அழகனன் பற்றி நிறைய உள்ளூர்க் கதைகள் சொல்கின்றன. நெறியான விளையாட்டில் அவர் விதிமீறாமல் இருப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். அவ்வப்போது அவர் கோல்ஃப் விளையாடுவார். அந்த விளையாட்டில் அவர் நடந்துகொள்ளும்விதம் ஒரு தொன்மம் போல பேசப்படுகிறது. விதிமுறைகளுக்கு மாறாக அவர் பேட்டிங் செய்ததில்லை.
தமிழ்நாட்டுக் கிரிக்கெட்டில் நன்னடத்தைக்கு ஒரு வரலாறே உண்டு. சமயங்களில் சூடான சம்பவங்களும் வெடித்திருக்கின்றன,. கெம்ப்ளாஸ்ட்டும், ஜாலி ரோவர்ஸும் முதல் பிரிவில் சண்டை போட்டுக் கொள்வார்கள். சில கேப்டன்கள் ஆகச்சிறந்த திறமையை வெளிக்காட்ட தங்களது தனிப்பட்ட விரோதங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் அது அத்தோடு முடிந்துவிடும். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. யாரும் யாரையும் திட்டுவதில்லை. எந்த ஸ்பின்னரும் ஓடிப்போய் பந்து வீசும்போது அம்பயரின் பார்வையை மறைப்பதில்லை. பந்து வரும் பாதையிலே எந்த பேட்ஸ்மேனும் ஓடுவதில்லை.
ரன் எடுப்பவரின் பாதையை எந்தப் பந்து வீச்சாளரும் வழிமறிப்பதில்லை. அப்படி வழிமறிக்காவிட்டால் பேட்ஸ்மேன் ரன் எடுக்கும்போது பந்து தன்வசம் வருவதில்லை என்று பௌலருக்கு நன்றாகவே தெரியும்தான். இறுதியாக, உள்ளூரில் கிரிக்கெட் விளையாண்ட காலங்களில் அஸ்வின் ஒருபோதும் யாரையும் ‘மேன்கேடிங்’ செய்ததில்லை.
Read in : English