Read in : English
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் போடடிகளில் எடுத்த 434 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் தமிழகக் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின்.
இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர், மற்றும் முன்னோடியான ஆட்டக்காரர். இந்தியர்களாலும் படுவேகமாகப் பந்துவீசி ஜெயிக்க ஆசைப்பட முடியும் என்பதை நிருபித்துக் காட்டியவர் கபில்தேவ். படுவேகமாக நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதும், தன்னைப் பற்றிய படிமத்தை அடித்து நொறுக்குவதும், சில நுட்பமான மாற்றங்களும் வெற்றியின் திறவுகோல்கள்; அவையெல்லாம் மிகவும் தேவைப்படும் டி-20 போட்டிகளில் அஸ்வின் தனது முத்திரையைப் பதித்தவர்.
சுழல்பந்துவீச்சின் வழக்கமான அணுகுமுறையை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போட்டவர் அஸ்வின். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவதற்கான சாத்தியம் உள்ள 35 வயதான அஸ்வின் கும்ப்ளேவின் 619 விக்கெட் சாதனையை முறியடிக்கக்கூடும்.
சுழல்பந்துவீச்சின் வழக்கமான அணுகுமுறையை முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போட்டவர் அஸ்வின். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடித்துள்ளார்.
எம்.எஸ். தோனி, கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணுகுமுறையைக் கொண்ட ஒரு சிறு நகரத்து மனிதர். ஆனால், எஸ்எஸ்என் கல்லூரியின் பட்டதாரியான அஸ்வின் ஒரு பொறியாளர். பகுத்தறிந்து ஆராயும் தன்திறனைப் பயன்படுத்தி கலையாக இருந்த சுழல்பந்து வீச்சை ஒரு விஞ்ஞானமாக மாற்றியவர்.
கபில்தேவ் மாதிரியே, அஸ்வினும் ஒரு சாம்பியன் பவுலர்; பயிற்சிபெற்ற பேட்ஸ்மேன். கபில்தேவின் பேட்டிங் அபாரமானது; அதைப்போலத்தான் அஸ்வினின் பேட்டிங்கும். அவர் தனது முதல் டெஸ்ட் தொடரிலே சதமடித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, இரண்டாவது சதத்தை அடித்தார்; டெஸ்ட் போட்டிகளில் 2,905 ரந்கள் குவித்துள்ளார்.
அஸ்வின் அசலான, அசத்தலான ஒரு பேட்ஸ்மேன். இன்றுகூட, அவர் ஓர் உண்மையான பேட்ஸ்மேனாகத்தான் விளையாடுகிறார்; ஏதோ கொஞ்சம் பேட்டிங் செய்யத் தெரிந்த ஒரு பவுலர் அல்ல அவர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2001ஆம் ஆண்டு தொடரில் இந்திய அணிக்குப் புத்துயிர் கொடுத்த ஹர்பஜன் சிங்கைப் பார்த்து அப்போது 15 வயதில் இருந்த அஸ்வின் சுழல்பந்தைக் கையில் எடுக்க ஆர்வம் கொண்டார்.
அஸ்வின் தமிழ்நாட்டிற்காக 2006-இல் விளையாடினார். நான்கு ஆண்டுகளுக்குள், இந்தியாவிற்காக விளையாட ஆரம்பித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதை இந்தியன் பிரிமிரியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள்.
டி-20 போட்டிகளில் அவர் பேட்ஸ்மேன் என்பதையும் தாண்டிச் சிந்தித்தார். ஒரு சதுரங்க ஆட்டக்காரர்போல எதிராளிகளின் உத்தி, அணுகுமுறை, களத்தில் அவர்கள் நடந்துகொள்ளும்விதம் ஆகியவற்றை அவதானித்து அவர்களின் அடுத்த அசைவுகளையும் எளிதாக கணித்தார் அஸ்வின். அவருக்கு முடிசூட்டிய தருணம் என்பது 2011ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நிகழ்ந்தது. அப்போது அதிவேகத்தோடு வந்த கிரிஸ் கெய்லை வெளியேற்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல அவர் உதவினார்.
2016இல் அவர் டிஎன்சிஏ லீக் கிரிக்கெட்டில் இந்தியா சிமெண்ட்ஸ் அணியில் விசுவாசமாக இல்லாததால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறினார். 2018, 2019-ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவர், தற்போது தில்லி டேர் டெவில்ஸ்க்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பெரும்பாலான ஆஃப் ஸ்பின்னர்கள் குறிப்பிட்ட பாணியிலும், ‘டூஸ்ரா’ (இரண்டாவது) என்றழைக்கப்படும் பந்துவீச்சிலும் ஈடுபடுவார்கள். அஸ்வினும் குறிப்பிட்ட பாணியிலான பந்துவீச்சில் ஈடுபட்டார். ஆனாலும் குறிப்பாக டி-20- போட்டியில் அந்தப் பாணிக்கு அவர் அபூர்வமாகத்தான் திரும்பினார். ஒரு ஓவரில் ஆறு வித்தியாசமான பந்துகளை அவரால் வீச முடியும். அஜந்தா மெண்டிஸ் உலகக் கிரிக்கெட்டில் ’காரம் பந்தை’ மறுஅறிமுகம் செய்தார் என்றால், அஸ்வின் அதைத் தன்பாணியில் மாற்றியமைத்து அதற்குச் ‘சொடுக்குப் பந்து’ என்று பெயரிட்டார். சொடுக்கு என்ற தமிழ்ச்சொல்லுக்கு விரல்களைச் சொடுக்குவது என்று அர்த்தம். கட்டைவிரலிலிருந்தும், நடுவிரலிலிருந்தும் மின்னல் வேகத்தில் கிளம்பும் பந்து படுவேகமாகப் பயணித்து ‘பிட்சிங்’ ஆகி எந்த வழியிலும் திரும்பிப் போகலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிமாணம் அடைந்து மிகவும் மரபார்ந்த வடிவத்திற்குத் தன்னால் ஈடுகொடுத்து ஆடமுடியும் என்பதை அஸ்வின் நிரூபித்தார். அகழியில் இருப்பதுபோன்று பாதுகாப்பாக விளையாடி, தன்நிலையைத் தக்கவைத்துக்கொண்டு ஒரு முற்றுகைப் போரை அவரால் உருவாக்க முடியும். பேட்ஸ்மேன் தவறு செய்யும் வரை பொறுமையாகக் காத்திருந்து அவரால் பறந்து பறந்து பந்துவீச முடியும்.
66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட் எடுத்த அதிவிரைவு ஆட்டக்காரர் அவர்தான். அவர் ஒன்பது ‘தொடர் ஆட்டநாயகன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது இந்திய டெஸ்ட் போட்டி வெற்றிகளுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பிற்கு ஆகப்பெரும் நிரூபணம்.
18 டெஸ்ட் போட்டிகளில் நூறு விக்கெட்டுகளை எடுத்தார். 45 டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை எடுத்து வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியின் சாதனை முறியடித்தார். 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வேகமாக எடுத்த வீரரான முரளிதரனைப் போன்று இவரும் ஒருவர். 66 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட் எடுத்த அதிவிரைவு ஆட்டக்காரர் அவர்தான். அவர் ஒன்பது ‘தொடர் ஆட்டநாயகன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது இந்திய டெஸ்ட் போட்டி வெற்றிகளுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பிற்கு ஆகப்பெரும் நிரூபணம்.
ஆனால் அஸ்வினின் தொழில் வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. உயரமாகவும், மெலிந்தும் காணப்பட்ட அவர் உடல் வலிமைமிக்க புதுயுகத்து இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் அல்ல. அவரது ‘ஃபீல்டிங்’ 90களைச் சார்ந்தது; அதற்காகவே அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் நிகழ்த்திய பெரும்பாலான அற்புத ஆட்டங்கள் இந்தியாவிலேயே நிகழ்ந்தன. எஸ்ஜி பந்தின் மாஸ்டர் அவர்; ‘கூக்கபுரா’வோ, டியூக்ஸோ அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு தென்னாப்ரிக்கா விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களில் ஒருவராக அவர் இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர் இந்தியாவில் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல்.
தோனியுடன் நல்ல நட்புடன் இருந்ததால், அவர் இந்தியாவுக்காக விளையாட முடிந்தது. ஸ்டம்புகளின் பின்னால் நிற்கும் தோனி அடிக்கடி அஷ் என்று சொல்வதை நாம் கேட்டிருக்க முடியும்.
ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் எல். பாலாஜி, எஸ். பத்ரிநாத், எம். விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் நல்ல தொடர்பு உண்டு. பாபா சகோதரர்கள், வாஷிங்டன் சுந்தர், விஜய சங்கர், எம்.அஸ்வின் போன்ற தமிழக இளம் கிரிக்கெட் வீரர்களை அவர் ஊக்குவிப்பார்.
அஸ்வின் ஒரு போராட்டக்காரர்; கடினமான உழைப்பால் சாதனை நிகழ்த்துபவர். இங்கிலாந்திற்கு இந்திய அணி பயணம் செய்வதற்கு முன்பாக அவர் ஆங்கிலச் சூழலைப் பரிச்சயம் செய்துகொள்வதற்குக் ‘கவுண்டி கிரிக்கெட்’ ஆடினார்.
அவரிடம் இருக்கும் அழுத்தமும் ஆழமும் புறவெளியில் வெளிப்படுகின்றன. தன்னை யாராவது நோகடித்தால் அவர் சண்டையில் இறங்கிவிடுவார். ஜூனியர் சாய் கிஷோரிடமும் பிரபலமான உலகக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களிடமும் அவர் சண்டையிட்டிருக்கிறார். எச்சரிக்கை ஏதும் தராமல் மன்காட் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்து வெளியேற்றியிருக்கிறார்.
விராத் கோலியின் யுகத்தில் அஸ்வின் விலகியே இருந்திருக்கிறார். சாம்பியன் டிராபியில் இந்தியா பாகிஸ்தானிடம் 2017-இல் தோற்றபின்பு, சிறிய போட்டிகளில் அவர் கண்டுகொள்ளப்படவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஐபிஎல்-லில் நன்றாக ஆடியவர்தான்.
அவர் தொடர்ந்து தன்னைத் தக்கவைத்துக் கொண்டார். தனக்காக தனது ஐபிஎல் சாதனைகள் பேசட்டும் என்று விட்டுவிட்டார். ரோஹித் சர்மா தலைமையில், எல்லா வகையான ஆட்டங்களிலும் அவர் கலந்துகொண்டு கலக்கலாம். மேலும் அஸ்வின் எதிரிகளின் இடத்தில் விளையாடும் தன் ஆட்டச் சரித்திரத்தை மாற்ற விரும்பலாம்.
ஆகப்பெரிய இந்திய ஆட்டக்காரர்களான கபில்தேவ், சச்சின் தெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரைப் போலல்லாமல், அஸ்வின் விளையாட்டுப் போட்டிகளில் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு பெறுவது என்றுகூட தீர்மானிக்கலாம்.
Read in : English