Read in : English
கிரிக்கெட் விளையாட்டு என்றாலும் கோடிக்கணக்கில் பணம் கொடிகட்டிப் பறக்கும் பெரிய வியாபாரம். ஐபிஎல் என்கிற இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்கு, சந்தைகளில் பொருள்களை ஏலம் போடுவதைப் போல கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுகிறார்கள். தங்களுக்குத் தகுந்த சிறந்த வீரர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏலத்தில் வாங்குகின்றன அணிகளின் உரிமையாளர்கள். போட்ட காசை வட்டியும் முதலுமாய் அள்ளுவதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன சமூக நோக்கம் இருக்கப் போகிறது அந்த அணி உரிமையாளர்களுக்கு? கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்ப்பவர்களைவிட, கோடிக்கணக்கானவர்கள் தொலைக்காட்சி மூலம் பார்க்கிறார்கள். அதன் மூலமும் விளம்பரங்கள் மூலமும் கோடிக்கணக்கில் பணம் கொட்டும். இப்போது, கிரிக்கெட் மிகப் பெரிய வியாபாரம். இதை விளையாட்டா நினைச்சுடாதீங்க!
Read in : English