Read in : English
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள 5 ஆயிரம் தமிழர்கள் உள்பட 20 ஆயிரம் இந்திய மாணவர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன கங்கா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் மாணவர்கள், இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட குறைவு என்பதால் உக்ரைன் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பவர்கள் அவர்கள்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க, விமானப்போக்குவரத்து அமைச்சர் ஜோராதித்யா அனுப்பப்பட்டுள்ளதற்குக் காரணம் அவரது துறைதான். அங்குள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்கு விமானங்கள் தேவைப்படுகின்றன. முன்பு மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த இருந்த கிரண் ராஜிஜு துரிதமாகச் சிந்தித்து செயல்படக்கூடியவர். ஈராக்கை ஐஎஸ்ஐஎஸ் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்த நர்சுகளை இங்கு கொண்டு வருவதற்காக சிறப்பாகச் செயல்பட்டவர் வி.கே. சிங். ஹர்தீப் சிங் புரிக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுபவம் இருக்கிறது. அவர் பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
வெளியுறவு ராஜதந்திர பணிகளையும் விசா பிரச்சினைகளையும் அவரால் பார்த்துக் கொள்ள முடியும். இந்த நான்கு அமைச்சர்களும், இந்திய மாணவ, மாணவிகளைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டிய பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பொறுப்பை அவர்களால் நிறைவேற்ற முடியுமா?
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு பெரிய நெருக்கடி உள்ளதாகத் தெரிகிறது. தகவல் கட்டுப்பாட்டு அறை (கால் சென்டர்) அமைப்பது, ஆலோசனைகளை வழங்குவது என்பதைத்தவிர, அது செய்யக்கூடியது பெரிதாக இல்லை.
ஆபரேஷன் கங்கா திட்டம் வெற்றி அடைந்தாலும் தோல்வியடைந்தாலும், கடந்த ஏழு ஆண்டுகளாக நரேந்திர மோடி கட்டமைத்த ஆட்சிமுறை, முன்னுரிமைகள், விருப்பத்தேர்வு முறையில் அது நேரடியாக எதிரொலிக்கும். ஆனால், அங்குள்ள நமது குடிமக்களை இந்தியாவால் மீடக முடியும்.
அரசியல் லாபத்துக்காக தற்போதைய இந்த அரசு எதையும் செய்தது கிடையாது. இந்த வழியில் ஆட்சி அதிகாரம் செயல்படுகிறது. கங்கா என்ற வார்த்தை உத்தரபிரதேசத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. ஆரம்ப கட்டத்தில் கிடைக்கும் எந்த வெற்றியும்கூட கொண்டாடப்படும். மீட்கப்பட்டவர்கள் மோடியின் பெயரைச் சொல்வதையும் பாரத மாதா கீ ஜே என்ற குரலையும், தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவார்கள்.
பாகிஸ்தானில் பாலக்கோட்டில் இந்தியா நடத்திய விமானத் தாக்குதல் போன்றது இது. அத்துடன், உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை எந்தவிதத்திலும் இது பாதிக்காது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்ற அச்சம்தான் நிலவுகிறது. மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த பிறகு வாட்ஸ் ஆப் வீடியோக்கள், செல்பிக்கள் போன்றவை உடனடியாக அரசியல் நோக்கத்துக்குப் பயன்படாது.
வி.கே. சிங்கின் பணி முக்கியமானது. இந்தியத் தூதரகங்களும் வெளிநாட்டு சேவைகளும் எப்படி செயல்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தூதர் அல்லது ஹை கமிஷனர் தான் தூதரகத்துக்குத் தலைமை வகிப்பர். அதைத் தொடர்ந்து முதல்நிலை செயலாளர், இண்டாம் நிலை செயலாளர், மூன்றாம் நிலை செயலாளர் ஆகியோர் அவருக்கு உதவி செய்வதற்காக இருப்பார்கள். இவர்கள் ஐ.எப்.எஸ். அதிகாரிகள். அவர்களுக்கு உதவியாக செயல்படுவதற்கு ஊழியர்கள்.
அதையடுத்து, பாதுகாப்புத் துறை தொடர்பாளர் (டிபன்ஸ் அட்டாச்சி) என்று ஒருவர் இருப்பார். அவர் ஒருங்கிணைக்கும் பணியையும். மக்கள் தொடர்புப் பணியையும், ராணுவ மற்றும் புலனாய்வுப் பணியையும் செய்வார். வெளிநாடுகளில் அவர் வீதிகளில் மக்களைச் சந்திப்பார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். விருந்துகளை அளிப்பார் அல்லது விருந்துகளில் கலந்து கொள்வார். இவர் மற்ற நாடுகளில் உள்ள பாதுகாப்புத் துறை இணைப்பாளர்களுன் தொடர்பு வைத்து கொள்வார். அந்த நாடுகளில் உள்ள ராணுவத்தினருடன் தொடர்புகளை கட்டமைப்பார்.
ஐஎஸ்ஐஎஸ் ஆபரேஷன் நடவடிக்கையின்போது, ஈராக்கில் இருந்த இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாளர்கள் சதாம் ஹுசேனின் ராணுவத்தினருடன் பல ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருந்த தொடர்புகளை வி.கே. சிங் பயன்படுத்தினார். சதாம் ஹுசேனின் படையிலிருந்த பெரும்பாலானவர்களும் கமாண்டர்களும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துவிட்டனர். பழைய தொடர்புகளை வைத்து அவர்களை அணுக முடிந்தது.
போலந்துடன் இந்தியாவுக்கு மிக நல்ல உறவு உள்ளது. அதேசமயம், ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவேகியா ஆகிய அண்டை நாடுகளுடன் அந்த அளவுக்கு நல்ல உறவு இருப்பதாகச் சொல்ல முடியாது. பெரும்பாலான மாணவர்கள், ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள கார்கீவ் நகரிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு இருந்தாலும்கூட, போர் தொடுக்கும் நாடான ரஷ்யா வழியாக இந்திய மாணவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவது என்பது எளிதாக காரியம் இல்லை. உக்ரைன் பிரச்சினைக்காக இந்திய மாணவர்கள் கவலையடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு இருந்தாலும்கூட, போர் தொடுக்கும் நாடான ரஷ்யா வழியாக இந்திய மாணவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவது என்பது எளிதாக காரியம் இல்லை.
இந்திய ராணுவத்துக்காக ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஒரு சாதனத்துக்காக உக்ரைனுடன் 1 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் உக்ரைனுடன் செய்துள்ளது. சோவியத் காலத்திலிருந்து உருவாக்கிய நெருக்கமான பொருளாதார, ராணுவ உறவுகள் இருந்தாலும்கூட, தற்போது தற்போது இந்த இரண்டு நாடுகளும் போரில் இறங்கியுள்ளன. தற்போது உக்ரைனிலும் ரஷ்யாவிலும் உள்ள ராணுவத் தொடர்புகள் மூலம் வி.கே. சிங் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பெரிய நெருக்கடி உள்ளது போல தோன்றுகிறது. தகவல் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்துவதைத் தாண்டி, ஆலோசனைகளை வழங்குவதைத்தாண்டி அவர்கள் செய்யக்கூடியது பெரிதாக இல்லை. உக்ரைனில் பதுங்கு குழிகளில் தூங்குவதாகவும் கீழ்த்தளததில் சூடு ஏற்படுத்தற்கு எந்த வசதியும் இல்லாமல் குளிரில் அவதிப்படுவதாவும் அங்குள்ள தமிழர்கள் கூறியதாகச் செய்திகள் வந்துள்ளன. தங்களுக்கு எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் அந்த மாணவர்கள். உள்ளூர் மக்களும் உக்ரைனிய அதிகாரிகளும் அனுதாபத்துடன் நடந்து கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
போலந்து உக்ரைன் எல்லைப் பகுதியில் இந்திய மாணவர்கள், அவர்கள் தமிழர்கள் இல்லை, தாக்கப்பட்டதாகவும் செய்திகள் உண்டு. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியாவின் நடவடிக்கைகளைக் காரணம் சொல்கிறார்கள். ஆனால், மொழிப் பிரச்சினையும் விசா இல்லாததும்தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்ற தகவலும் உண்டு. உக்ரைன் மக்களை அனுமதிக்கும் அண்டை நாடுகள், விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை அனுமதிக்கத் தயங்குகிறார்கள்.
இந்திய பாஸ்போர்ட்டுகள் குறித்து அந்த அண்டை நாடுகள் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இதற்கு நமது மீட்புக் குழு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்தியாவுக்கு பிரான்ஸ் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரலாம். ஸ்டார் நாட்டுடன் நல்ல உறவு உள்ளது. அவர்களது ராணுவ சரக்கு விமானங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை அல்லையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள ஏர் இந்தியா, அண்டை நாடுகளில் உள்ள பயணிகள் விமானத்தைத் திரட்ட முடியும்.
கலாச்சார ஆளுமை குறித்து மோடி அரசு பெருமை கொள்ள முடியும். வெளிநாட்டு சேவைகளில் முந்தைய மெத்தனத் தன்மை தற்போது இல்லை. தொழில் முறை, செயல் அடிப்படையில் என்பதுதான் தற்போதைய வாசகங்கள்.
ஆனால், பழைய மாதிரி கெடுபிடிதன்மையும், கடமையே என்று வேலை செய்யும் போக்கும் எதிர்மறையாக இருக்கும். பொருளாதார ரீதியாக பெரிய சக்தி வாய்ந்ததாகவோ அல்லது பெரிய ராணுவ சக்தியாகவோ இந்தியா இருந்ததில்லை. ஆனால், கலாச்சாரத்தையும், நல்லுறவையும் பயன்படுத்தி மற்ற நாடுகளுடன் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நல்ல தொடர்புகளை இந்தியா பயன்படுத்த முயலுகிறது.
வெளிநாடுகளில் இந்தியா என்றால் உணவு, கலாச்சாரம், இசை, கலை என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது நல்லுறவை மேம்படுத்தவும் தொடர்புகளை ஏற்படுத்தவும் இது பெரிதாக உதவும். அந்த செயல்பாடுகளை மீண்டும் கொண்டு வர மோடி நிர்வாகம் உறுதி உள்ளது. இந்திய பொருளாதார, ராணுவ சக்தியைவிட, இந்தக் கலாச்சாரத் தொடர்புகளை வளர்த்துள்ளது.
ரஷ்ய ராணுவத்திலிருந்து டாங்கிகளையும் ஏவுகணைகளையும் வாங்குவதற்கு நாம் ஒப்பந்தம் செய்திருக்கிறோம் என்பதைவிட, கலாச்சார ரீதியாக ரஷ்யாவிடம் கொண்டுள்ள உறவுகளே, நமது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது, ரஷ்ய ராணுவ வீரர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும்.
(Dr J Jeganaathan, is Sr. Assistant Professor of National Security Studies in the School of National Security Studies, Central University of Jammu, J&K-UT. The views expressed here are his personal)
Read in : English