Read in : English
சிறிய இடங்களிலிருந்துவரும் திறமையான மனிதர்களும் மிகஉயர்ந்த நிலைக்கு ஆசைப்படமுடிகிற இன்றைய இந்தியாவின் பிரதிநிதி தோனி என்கிற மகேந்திர சிங் தோனி. ஒரு நம்பிக்கையான இந்தியன் தோனி. இந்திய ‘ஜூகாத்’ (இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி பிரச்சினையைத் தீர்க்கும் முறை) நிர்வாகப் படிப்பைக் கற்றுக்கொடுக்கும் கல்வி நிலையங்களில் ஆராயப்படுகிறது. ஆனால் தோனி அதை விளையாட்டு மைதானத்தில் கொண்டுவந்தார். ஆடைமாற்றும் அறையில் உருவாக்கப்படும் உத்திகளையும், தந்திரோபாயங்களையும் விக்கெட்டுகளுக்குப் பின் பரப்பரப்பான சூழலில் அவர் மீளூருவாக்கம் செய்தார். உள்ளுணர்வு, சிறந்தவற்றில் இரண்டாவதை வைத்துக்கொண்டு ஆகச்சிறந்ததைச் செய்தல், எதிராளியை ஆச்சரியப்படுத்தித் திக்குமுக்காடச் செய்தல் ஆகியவை தோனியின் வெற்றிச் சூத்திரத்தின் ரகசியம். ரெய்னா போன்ற ஒரு சாதாரணமான பந்து வீச்சாளர், தோனியின் கீழ் விளையாடும்போது ஓர் அசாதாரணமான பவுலிங் துருப்புச்சீட்டாக முன்னேறிவருவார். அம்பயருக்குப் பின்னால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘ஃபீல்டர்’ பேட்ஸ்மேனின் கவனத்தைத் திசைதிருப்புவார். தெருமுனை கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் தந்திரங்கள், பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கப் பயன்படுத்தப்படும். .
உள்ளுணர்வு, சிறந்தவற்றில் இரண்டாவதை வைத்துக்கொண்டு ஆகச்சிறந்ததைச் செய்தல், எதிராளியை ஆச்சரியப்படுத்தித் திக்குமுக்காடச் செய்தல் ஆகியவை தோனியின் வெற்றிச் சூத்திரத்தின் ரகசியம்.
தோனியின் தலைமையில் இருக்கும் இன்னொரு இந்தியத் தன்மை ÜE சார்ந்த இயக்கத்தைக் கட்டமைத்தல். இந்தக் ‘கட்டமைப்பில்’ பொருந்தாத மனிதர்களும் இதில் இடம் கிடையாது. இதில் சில திறமைசாலிகள் பெரிதாக வளர்ந்திருக்கிறார்கள்; பலர் தள்ளாடிப் போயிருக்கிறார்கள்.
சமீபகாலங்களில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கேப்டன்களில் தோனியும் ஒருவர். இந்தியர்கள் மிகவும் மென்மையான பசங்க; அவர்களுக்கு அடாவடியாக விளையாட வராது என்று வெளிநாட்டார் கொண்டிருந்த சிந்தனையைத் தடாலடியாக மாற்றியவர் சௌரவ் கங்குலி. தோனி உட்பட பல நட்சத்திரங்களை வளர்த்தெடுத்த நல்ல மனம் கொண்ட குழுஆட்டக்காரர் திராவிட். தோனியை ஆரம்பத்திலே இனங்கண்டது அவரது தலைமைப்பண்புதான்.
அதனால் தலைமைப்பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு வெறும் 25 வயதுதான். ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அவர் உள்ளே வந்தார், வெற்றிபெறுவதற்காக மட்டுமல்ல, எதிர்காலத்தை மனத்தில் வைத்துக்கொண்டு ஒரு நீண்ட செயற்முறையை உருவாக்கவும்தான். தன்னுடன் பயணிக்கக்கூடிய, தன் தொலைநோக்குப் பார்வையைப் பங்குபோட்டுக் கொள்ளக்கூடி, தனது சொந்த பாணியோடு இணக்கமாய் ஒத்துப்போகக்கூடிய நபர்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
பலவழிகளில், கீழ்ப்படியும் பண்புகொண்டவர்களை உடைய குழுவின்மூலம் இயங்கக்கூடிய ஒரு வழமையான இந்திய மேலாளர் போன்றவர் தோனி. அவர் வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கும்வரை, அவரது குழுசார்ந்த அணுகுமுறை சரியானதாகத் தோன்றியது. அவர் வெற்றிபெறாதபோது, ஒதுக்கப்பட்ட கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஞாபகத்திற்கு வந்தனர்.
தோனிக்கு ஆட்டத்தின் முடிவுதான் எல்லாமும் என்பதுபோலத் தோன்றவில்லை. சக ஆட்டக்காரர்களின் சுதந்திரமான ஆட்டம்தான் முக்கியம். அதனால் வெற்றிஇலக்கு என்பது அவரது அணியினரின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாட்டின் தலை சிறந்த வீரர்கள் பரிசீலனை செய்யப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்களும் விளையாட விடாமல் காத்திருப்போர் பட்டியலிலேயே உள்ளனர்.
தோள்களிலிருந்து கழன்றுவிட்ட மிகப்பெரிய பாரம். வெற்றிக்கு இட்டுச் செல்லும் நீண்டகாலச் செயற்முறையில்தான் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. தன் சீடர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து அவர் கொடுக்கும் ஊக்கச்சொற்கள் மிகவும் பிரபலமானவை: “பிண்டாஸ் கெலோ யார் (சுதந்திரமாக விளையாடு)”. அப்படிப்பட்ட நம்பிக்கையை ஒரு பாஸ் தரும்போது அது நம்பப்பட்டவர்களிடம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. அவர்களின் ஆட்டத்தை வேகப்படுத்துகிறது; அவர்களை அவர்களால் முடியாத பலவிஷயங்களைச் சாதிக்க வைக்கிறது. ஆனால் நம்பிக்கை இழந்தவர்கள் துரதிர்ஷ்டவசமாகத் தோற்றுப் போய்விடுகிறார்கள்.
ஆரம்பத்தில் தோனிக்குக் கிடைத்த ஆதரவு எதிர்பாராமல் வந்தது. 2005- 07-இல் தோனி பலனடைந்தார்கங்குலி இடத்திற்கு . ராகுல் திராவிட் வந்தபோது, சுயநலமில்லாத ஒரு குழு மனிதனாக அவர் இருந்தார். அவர்தான் ஒரு ஜுனியரை முன்னேற்றுவதற்காக தன் சொந்த இடத்தைத் தியாகம் செய்துவிட்டு தோனியை பேட்டிங்கில் இறக்கிவிட்டார்.
கங்குலி வனவாசம் போய்விட்டார். மேற்கு இந்தியத் தீவுகள்அணியிடம் பெற்ற பெருந்தோல்வி அவமானத்தில் திராவிட் குமைந்துவிட்டார். அப்போது தோனி தலைமைப் பதவியில் ஏற்றிவைக்கப்பட்டார். எதையும் கணக்குப்போடும் மனதைக் கொண்ட தோனி, தன் ஆட்களைக் கொண்டே 2011 உலகக்கோப்பைக்கான குழு ஒன்றை கட்டமைக்கத் தீர்மானித்தார். திராவிட்டும், கங்குலியும் மெதுவான ‘ஃபீல்டர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டு கழற்றிவிடப்பட்டனர். தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவாளரான என் சீனிவாசன் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவரானார். தோனி தனது நெடுங்காலத் தொலைநோ`க்குப் பார்வையைக் கட்டமைக்க அவர்தான் உதவினார்.
சீனியர்களைக் கையாள்வதும் அவர்களைக் குழுவிற்குள் ஒன்றிணைப்பதும் ஓர் இந்திய கேப்டனுக்கு அவசியமான விசேஷத்திறன் என்று கொஞ்சகாலத்திற்கு முன்பு கருதப்பட்டது. சீனியர்களைக் கையாள்வதில் அசாருதீன் பாணி இன்னும் ஒரு பாடமாகவே இருக்கிறது. ஏழு ஆண்டு மூத்தவரான கும்ப்ளே, தொடர்ந்து கங்குலியின் குழுவில் இணைக்கப்பட்டார். முந்தைய யுகத்தைச் சார்ந்த சச்சின் திராவிட்டோடும், கங்குலியோடும் நன்றாகவே இணைந்து செயல்பட்டார்; அவர்கள் அச்சமூட்டும் ’மூவர்’ ஆனார்கள். தோனியைப் பொறுத்தவரையில் ஒன்று அவரது வழி; இல்லையென்றால் வழியேதும் இல்லை.
2012-க்குப் பின்பு, கம்ஃபீரும் சேவாக்கும் 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஆடப்போவதில்லை என்று அவர்களுக்குப் புரியவைக்கப்பட்டது. அது அவர்களை உற்சாகம் இழக்கவைத்தது. சேவாக், சச்சின், கம்ஃபீர் ஆகியோருக்கு தோனி ஒரு சுழல்முறையைக் கொண்டுவந்தார். அதன்படி அந்த மூவரும் சேர்ந்து ஒன்றுபோல அணியில் இடம் பெறவில்லை. சச்சின் 2013-இல் ஓய்வு பெற்றார்.
யுவராஜும், ஜாகீர்கானும் தோனிக்குக் கீழே அவரின் ஆட்களாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் யுவராஜ், தோனிக்குச் சமமானவர்; மேலும் அவரின் முந்தைய காலத்து போட்டியாளர். மேலும் இதில் ஒரு வர்க்க ரீதியான பரிமாணமும் இருக்கக்கூடும். சேவாக், சச்சின், கம்ஃபீர், மற்றும் யுவராஜ் ஆகியோர் மரபுரீதியிலான மேட்டுக்குடிகள்; தோனி அப்படியல்ல.
ரெய்னா, முரளிவிஜய், அஸ்வின், ஜடேஜா, பத்ரிநாத் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பின்பு இந்திய அணிக்குத் தாவியவர்கள். கொல்கத்தாவின் மனோஜ் திவாரி, பெங்களூரு மணீஷ் பாண்டே, கேரளாவின் சஞ்சீவ் சாம்ஸன் ஆகியோருக்கு ஆதரவுதர யாருமில்லை. அஸ்வின் முன்களத்திற்கு வந்து பிரதானமானபோது, ஹர்பஜன் சிங் மெதுவாக ஓரங்கட்டப்பட்டார். ஆனால், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போராட்டம் அரையிறுதிச் சுற்றோடு முடிந்தது. அதுபோலத்தான் பின்தொடர்ந்த டி-20- போட்டியும்.
இந்தியா 2016-17 சாம்பியன் வெற்றிக்கோப்பையை பாகிஸ்தானிடம் தோற்றது. கேப்டன் கோலிக்கு அதுதான் முதல் பெரிய வெளிப்புறப் போட்டி. அனேகமாக தோனி பதுங்கிப்போவதற்கு அது சரியான நேரமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் பதுங்கிப்போகவில்லை. அவரை உச்சத்தில் வைப்பதற்கு நிறைய ஆதரவுகளும் அளவுக்கு அதிகமான ’பிராண்ட்’ மதிப்பும் இருந்தன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் ஆட்கள் நன்றாக ஆடினர். ஆனால் தமிழகத் திறமைசாலிகள் உட்பட பலர் ஏலத்திற்குக்கூட தேர்வு செய்யப்படவில்லை; அப்படியே உள்ளே கொண்டுவரப்பட்டாலும், அவர்கள் வெறும் பதிலிகளாகவே நடத்தப்பட்டனர். இந்திய அணியிலிருந்து தனது ஓய்வை அவர் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தபோதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சீனியர்கள் ஆகிவிட்ட தனது ஆட்களோடு தொடர்ந்து ஒரே பாதையில் போய்க் கொண்டிருந்தார். இளைய, புத்தம் புதிய திறமையின் ஆதரவாளரான அவர், திடீரென்று பழமைக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தார்.
தோனிக்கு அடுத்து யார் என்ற கேள்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் யோசித்துப் பார்த்திருக்கலாம். எதிர்காலத்திற்கான இந்திய அணியை உருவாக்குவதற்கு, இந்தியரல்லாத ஒரு கேப்டனை அவர்கள் கொண்டுவந்தால் மிக நன்றாக இருக்கும்.
தோனிக்கு அடுத்து யார் என்ற கேள்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் யோசித்துப் பார்த்திருக்கலாம். எதிர்காலத்திற்கான இந்திய அணியை உருவாக்குவதற்கு, இந்தியரல்லாத ஒரு கேப்டனை அவர்கள் கொண்டுவந்தால் மிக நன்றாக இருக்கும்.
சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியில் ஒரு கேன் வில்லியம்சனும், ஒரு டேவிட் வார்னரும்தான் நடராஜனை ஆதரித்தார்கள். ஓர் ஓயன் மார்கன்தான் வருண் சக்ரவர்த்தியை ஆதரித்தார். மிகவும் தனித்துவமிக்க அணி பாணி ஆட்டத்திற்குப் பதிலாக, நடுநிலைமனம் கொண்ட ஒரு கேப்டன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாக இருப்பார். அந்தக் கேப்டன் எல்லா குறைபாடுகளையும் சரி செய்து, மாற்றுக் கருத்துகளையும் காதுகொடுத்துக் கேட்டு, குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய, தொழில்முறையில் ஆரோக்கியமானதோர் சூழலைக் கட்டியமைக்க வேண்டும்.
(கட்டுரையாளர், ஒரு கிரிக்கெட் ஆய்வாளர்).
Read in : English