Read in : English

Share the Article

தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் முன்னாள்  சென்னை மாநகராட்சி மேயருமான மா. சுப்ரமணியன்,  மாரத்தான் ஓட்டங்களில் ஆர்வமாகப் பங்கேற்பார். அதேபோல, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளில் ஈடுபடுவதில் அக்கறை செலுத்துவார்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடத்திய, சுதந்திரமாக நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் போட்டியில் தலைவர்களின் ‘பிரிவில்’ முதல் ஐந்து பேர்களில் மூன்றாவது இடத்தைப் பெற்று  வெண்கலப்பரிசை வென்றவர் மா. சுப்ரமணியன். அவர் எடுத்த ஸ்கோர் 390 கிலோமீட்டர்.

’ஓட்டப்பந்தயப்’ பிரிவில் 403 கிமீ ஸ்கோருடன் சென்னை இரண்டாவதாக வந்தது. முதலாவதாக வந்தது பிரபலமாகாத ’கோட்டா’ (ராஜஸ்தான்); அதன் ஸ்கோர் 979 கிமீ. ஓடுவதிலும், சைக்கிள் ஓட்டுவதிலும், நடப்பதிலும் தங்களுடைய ஆகச்சிறந்த திறமையை வெளிக்காட்டுவதற்குத் தயாராக இருக்கும் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கும் மத்திய அமைச்சகத்தின் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. மாநகரங்களில் மக்கள் புழங்கும் வழிமுறைகளில் நீண்டகால மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் இந்தத் திட்டத்தின் லட்சியம். மாநகரங்களில் மக்களை வதைக்கும்  நெருக்கடியைக் குறைப்பது, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவர்களைச் மகிழ்ச்சியாக வைத்திருப்பது இதன் நோக்கம்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் 26 வரை இந்த நிகழ்ச்சியை ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன், போக்குவரத்து மற்றும் முன்னேற்றக் கொள்கை இன்ஸ்டிட்யூட்டுடன் இணைந்து நடத்தியது. 75-ஆவது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தைக் குறிக்கும்விதமாக இந்நிகழ்வு நடந்தது. இவையெல்லாம் அந்த நிறுவனம் தந்த தகவல்.

ஒரு சராசரி சென்னைவாசிக்கு பொதுவெளியில் தினந்தினம் மாரத்தான் ஓட்டந்தான். பேருந்து நிலையத்தைபுகைவண்டி நிலையத்தை  அடைவதற்குள் சாலையில் வாகனங்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளாமல் அம்புபோல வளைந்து வளைந்து ஓடுவதுநடப்பதற்கு ஏதுவான நடைமேடையைக் கண்டுபிடிக்கப் போராடுவது – இப்படியே நடக்கிறது அந்த மாரத்தான்.

ஆனால் நடைமுறையில் பார்த்தால், எந்தப் பேரும் புகழும் பெறாத முகந்தெரியாத ஒரு சராசரி சென்னைவாசிக்கு பொதுவெளியில் தினந்தினம் மாரத்தான் ஓட்டந்தான். பேருந்து நிலையத்தை, புகைவண்டி நிலையத்தை  அடைவதற்குள் சாலையில் வாகனங்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளாமல் அம்புபோல வளைந்து வளைந்து ஓடுவது; நடப்பதற்கு ஏதுவான நடைமேடையைக் கண்டுபிடிக்கப் போராடுவது – இப்படியே நடக்கிறது அந்த மாரத்தான். மாநகரத்தில் உள்ளார்ந்த பகுதிகளில் நடைமேடைகள் இல்லையென்பதால் வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நொந்துபோன இந்தக் குடிமக்களும்தான் இன்று ஓட்டுப் போட போகிறார்கள். ஏனென்றால் புதிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆட்சிமன்றக் குழு அமைக்கப்படும்போது அவர்களின் குடிமைச் சமூகத் துயரங்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும் என்று தேர்தல் பரப்புரைகளில் வேட்பாளர்கள் உரத்த குரலில் வாக்குறுத்தி கொடுத்திருக்கிறார்கள்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் அண்ணாசாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பாதசாரிகள் நடந்து செல்ல அகலமான நடைமேடைகள் பல இருந்தன. நடைமேடையின்  தனித்துவப் பிரித்துக்காட்ட சிமெண்ட்  கைப்பிடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் கார்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்களும் தொடுத்த சாலை யுத்தத்தில் பாதசாரிகளுக்கான வெளி ரொம்பவே சுருங்கிப்போனது. கடமையுணர்வோடு மைய நீரோட்ட ஊடகங்கள் ஊதிஊதிப் பெரிதாக்கிய “சாலையை அகலப்படுத்துதல்” என்ற சித்தாந்தம் செல்வாக்குப் பெற்றது. ஒருகாலத்தில் சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உரிய  இடம் இருந்தது. குறைந்தபட்சம் பிரதானமான சாலைகளில் போக்குவரத்து சமிக்ஞைகளில் இருக்கும் நிறுத்தக்கோடுகளுக்கு முன்பாக சிறிய வெள்ளைப் பெட்டி வரையப்பட்டிருக்கும். சைக்கிள் ஓட்டுநர்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கென்று உண்டான ஏற்பாடு அது. முழுமானவை அல்ல என்றாலும்  அவை சாதகமான குறியீடுகள்.

முன்பு சைக்கிள்களை மணிக்கணக்கு அடிப்படையில் வழங்கும் வாடகைச் சைக்கிள் கடைகள் இருந்தனஇப்போது அந்தக் கடைகள் இல்லை.

இன்று பாதசாரிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் இடத்தோடு சாலை வெளியை சரிசமமாகப் பிரித்துவைக்க வேண்டிய பிரச்சினையை மாநகரத் தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்குச் “சவால்களும்”, “விருதுகளும்” தேவைப்படுகின்றன. பல தசாப்தங்களுக்கு முன்பு, பலமான, எளிமையான, கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கக்கூடிய சைக்கிள் மாடல்கள் பல இருந்தன (சென் ராலே, அட்லஸ், ஃபிலிப்ஸ், ஹீரோ, பிஎஸ்ஏ, எஸ்எல்ஆர் – இவையெல்லாம் ஞாபகம் இருக்கிறதா). ஆனால் இன்று பொழுதுபோக்கிற்காக இல்லாமல் தேவையின் நிமித்தம் சைக்கிள் ஓட்டுபவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு சைக்கிள் விலை மிக அதிகமாகி விட்டது.  இவ்வளவுக்கும் அவர்கள் ஷிமானோ கியர்கள், நியான் சக்கரங்கள் கேட்கவில்லை. முன்பு சைக்கிள்களை மணிக்கணக்கு அடிப்படையில் வழங்கும் வாடகைச் சைக்கிள் கடைகள் இருந்தன; இப்போது அந்தக் கடைகள் இல்லை. இப்போது இருப்பவை ”ஸ்மார்ட் பைக்” வாடகை நிறுவனங்கள். ஆனால் பெரும்பாலான மாநகரவாசிகளால் அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடிவதில்லை; ஏனென்றால் முன்பண வைப்புக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது; மேலும் பல சிக்கலான அடையாள நெறிமுறைகள் இருக்கின்றன.

பிரச்சாரத்திற்காகவும், போராட்டத்திற்காகவும் அரசியல் கட்சிகள் அவ்வப்போது சைக்கிள் பேரணி நடத்துகின்றன,. முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாலை சைக்கிள் சவாரியின்போது கண்ணில் தென்படும் சென்னைவாசிகளில் சிலரைச் சந்திக்கிறார். ஆனாலும் பொதுவாக சைக்கிள் ஆர்வலர்களுக்கு நிலைமை சரியில்லை. பிரதானமான சாலைகளில் சைக்கிள் பாதை அமைக்கக் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் முரட்டுத்தனமான மோட்டார் வாகனங்களின் அசுரவேகத்தில் அதலபாதாளத்திற்கு  வீழ்ச்சியடைந்து விட்டன.

சென்னை பாண்டி பஜாரில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் பைக்குகள்.

ஆனால் நெதர்லாந்தில் இப்படியில்லை. அங்கே சைக்கிள் அதிமுக்கிய பிரதானமான போக்குவரத்து முறையாகக் கருதப்படுகிறது (தினசரி போக்குவரத்துகளில் 27 சதவீதம் ‘பெடல்’ சக்தியில் இயங்குகின்றன). அந்த நாட்டில் பழைய சாதாரணமான சைக்கிள் இன்னும் உயிர்ப்போடுதான் இயங்குகிறது. டட்ச் சைக்கிள் எம்பசி நிறுவனத்தின் சந்தை மேலாளர் கிரிஸ் புரூண்ட்லெட்

சமீபத்தில் சொன்னது இது: “எங்கள் தேசம் தட்டையாக இருப்பதினாலோ அல்லது அறநெறியில் உயர்ந்து  நிற்கிறது என்பதினாலோ அல்லது எங்களது வானிலை வித்தியாசமாக இருப்பதினாலோ சைக்கிள் பயன்பாட்டை நாங்கள் தூக்கிப்பிடிக்கவில்லை. மாறாக சைக்கிள் ஓர் உட்கட்டமைப்பு. நாட்டிலுள்ள சைக்கிள் பாதைகளில் பாதி கடந்த 25 ஆண்டுகளில் கட்டப்பட்டவை.”

சென்னையில் இருக்கும் பிரச்சினை என்ன? புதிதாக உருவாக்கப்பட்ட பெருநகரத் திட்டக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களாக இருக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 243-இஜட் ஈ சொல்கிறது. பொதுநலத்திற்குப் பாடுபடுவதைக் கொள்கையாகக் கொண்ட அந்தக் குழு நடைப்பயிற்சிக்கும், சைக்கிளுக்குமான படிமத்தை மாற்றியமைக்குமா? இந்தக் கேள்வி எல்லா மாநகராட்சிகளுக்கும் பொருந்தும். அவையும்  அரசியலமைப்புச் சட்டவிதிகள் கீழேதான் வருகின்றன. இதைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் 2020-இல் சுட்டிக் காட்டியுள்ளது.

நடைப் பயிற்சிக்கான இடங்கள்சைக்கிள் ஓட்டுவதற்கான வழிகள்மாற்றுத்திறனாளிகளுக்கான புழங்குவெளிஆண்டுதோறும் சென்னையை முடமாக்கிப் போடும் வெள்ளம் ஆகியவற்றைப் பற்றி தேர்தல் பரப்புரைகள் எதுவுமே பேசப்படவில்லை.

ஆனாலும் சென்னை மாநகராட்சித் தேர்தல் பரப்புரையில் இவையெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நடைப் பயிற்சிக்கான இடங்கள், சைக்கிள் ஓட்டுவதற்கான வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான புழங்குவெளி, ஆண்டுதோறும் சென்னையை முடமாக்கிப் போடும் வெள்ளம் ஆகியவற்றைப் பற்றி தேர்தல் பரப்புரைகள் எதுவுமே பேசப்படவில்லை. வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் இவற்றைச் சற்றுப் பொதுவாகப் பேசிவிட்டுக் கடந்து போய்விட்டனர்.

எல்லா விவாதங்களின் மையமும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வரைக்கும் விரிவடைய வேண்டும். மோட்டார் அல்லாத போக்குவரத்து முறையின் மீதான ஒரு புதிய அணுகுமுறை உருவாக வேண்டும். அதன்படி நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், பொதுவெளியில் நிறுத்தும் கார்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் வசதிகள், சாலைக் குழப்பங்களைத் தீர்க்க நடைபாதை வியாபாரிகளுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் விதிப்படி உரிமம் வழங்கும் நடைமுறை ஆகிய பிரச்சினைகளில் எல்லா மாநகரவாசிகளையும் ஈடுபடுத்த வேண்டும்.

கார்கள் இல்லாத நாட்கள் என்ற சித்தாந்தத்தில் கட்டமைக்கப்பட்டு, நடக்க, சைக்கிள் ஓட்ட நடத்தப்படும் ”சவால்” விளையாட்டு என்பது இயல்பாகவே நிறைய மாநகரவாசிகளைத் தெருக்களில் புழங்கவைத்துவிடும். எதிர்கால ஆதரவுக் குரல்கள் அமைதியான இந்தப் பெரும்பான்மையோரைப் பலப்படுத்துவதற்காக ஒலிக்க வேண்டும்.

சுதந்திரமாக நடைப் பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் போட்டி என்ற போட்டி 2021 லும், சமீபத்திலும் என்ன சாதித்தன என்பதைப் பற்றி, போக்குவரத்து மற்றும் முன்னேற்றக் கொள்கை இன்ஸ்டிட்யட்டின் தெற்காசியா இயக்குநர் அஸ்வதி திலீப் சொன்னது இது: “ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷனின் லட்சியங்களுக்கேற்ப, மாநகரத் தலைவர்கள் நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். மாநகரங்கள் 2023-க்குள் மிக நீண்டகால சாதனைளை இலக்காக்கிக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன. நகரங்களின் வடிவமைப்புகளின் மையத்தில் ஆரோக்கியமான தெரு பற்றிய கொள்கைகளையும் இது கொண்டுவரும்; மேலும் நடைப்பயிற்சிப் பாதைகளைத் துரிதமாக உருவாக்க இது உதவும். முக்கியமாக, நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான சுதந்திரம் மாநகரவாசிகளுக்கு ஒரு பெரும் சவாலை உருவாக்கி வைத்திருக்கிறது. பசுமையான சுற்றுப்புறச் சூழலுக்கான நடவடிக்கைகளின் ஓரங்கமாக, மாநகரத்து பொது வெளியில் தங்களுக்கான இடத்தை மக்கள் வலியுறுத்த வைத்துள்ளது


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles