Read in : English
கடந்த அதிமுக ஆட்சியில், ஊழல் புகார்கள் தலைதூக்கின. அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு உட்பட ஊழல்களை அம்பலப்படுத்துவதிலும், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதிலும் அறப்போர் இயக்கம் முன்னணியில் இருந்தது. தற்போது, முந்தைய அதிமுக அரசில் பதவி வகித்த அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது. ஊழல் விவகாரத்தைக் கையாள்வதில் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
கேள்வி: ஊழல் விவகாரத்தில், திமுக அரசின் நடவடிக்கைகளை மதிப்பிடுவது சற்று முன்கூட்டியதாக இருக்கலாம் ஆனால் என்ன சாதகமான அறிகுறிகளை நீங்கள் காண்கிறீர்கள்?
ஜெயராமன் வெங்கடேசன்: சென்னை மாநகராட்சி டெண்டர் டும் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ், ஒப்பந்தங்களை ஏலம் எடுப்பவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நேரடியாக எந்தத் தொடர்பு இல்லை. முழு செயல்முறையும் ஆன்லைனில் நடக்கிறது. டெண்டரில் முறைகேடு நடக்க மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. சிறந்த போட்டி உள்ளது. இதன் விளைவாக, டெண்டர்களின் இறுதி ஏல விலையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது ஒரு மாற்றம். சிறிய டெண்டர்களில், இது நடந்துள்ளது. பெரிய டெண்டர்களில், நிபந்தனைகள் உள்ளன. மேலும் பிரச்சினைகள் அங்கேயே இருக்கின்றன.
நாம் காணும் இரண்டாவது முன்னேற்றம் என்னவெனில், கடந்த காலங்களில் சாலையின் மேற்பரப்பை மில்லிங் எனப்படும் முறையில் சுரண்டி அகற்றாமல் பழுதுபார்க்கப்பட்டது. ஒப்பந்ததாரர் சாலையின் மேற்பரப்பை அகற்றாமல், இருக்கும் சாலை மீதே மீண்டும் புதிய சாலை அமைத்து பணத்தை எடுத்துக் கொள்வார். இது தற்போது நின்று விட்டது. இப்போது சாலை மட்டமும் உயரவில்லை. பொதுவிநியோகத் துறையில், ஏகபோகம் போய்விட்டது. கடந்த காலங்களில், ஒரே நிறுவனத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கும் வகையில், டெண்டர் முறை நிர்ணயிக்கப்பட்டது. மே 5ஆம் தேதி, ஆட்சி மாற்றத்திற்கு முன்பு, இந்த நிறுவனம் ஒரு கிலோ பருப்புக்கு ரூ.145 என்று கூறியபோது, சந்தை விலை ரூ.80 முதல் 90 ஆக இருந்தபோது டெண்டர் விடப்பட்டது. புதிய அரசால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டு மீண்டும் டெண்டர் விடப்பட்டது. அதே நிறுவனம், 20 நாட்களில், ஒரு கிலோவுக்கு 90 ரூபாய் என்ற விலையுடன் மீண்டும் வந்தது. நாங்கள் ஆதாரங்களை அளித்துள்ளோம். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முறையான டெண்டர் மூலம், பொது விநியோகத் திட்டத்தில் சுமார் 1300 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: இப்போது நல்லாட்சி நடப்பதாகச் சொல்வீர்களா?
ஜெயராமன் வெங்கடேசன்: நல்லாட்சியின் முக்கிய அம்சம் பொறுப்புணர்வாகும். ஒரு குடிமகன் ஒரு கேள்வியை எழுப்பினால், அரசாங்கம் விரைவாகப் பதிலளிக்க வேண்டும். சென்னை மாநகராட்சியிலும், ரேஷன் துறையிலும் நேர்மையாக செயல்படும் அதிகாரிகளையே நியமித்துள்ளனர்.
கேள்வி: அரசு நிர்வாகம் முழுவதும் இப்படி இருக்கிறதா?
ஜெயராமன் வெங்கடேசன்: துரதிருஷ்டவசமாக, இல்லை. ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இடையேயான தொடர்பை நீக்குவதற்கு வழிவகுக்க வேண்டும். இதற்காக, அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ்நாடு முழுவதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இ–டெண்டர்களை பரிந்துரைக்கிறோம். இதற்கு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் தேவை. நிதியமைச்சர் உட்பட அரசு அதிகாரிகளுக்கு எங்கள் பரிந்துரையை வழங்கியுள்ளோம். இந்தத் திருத்தத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
இப்போது, நேரடித் தொடர்பு உள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும், இ-டெண்டர் மூலம் அல்ல. டாஸ்மாக் மற்றும் பொதுப்பணித்துறையில் பெட்டி டெண்டர் இன்னும் நீடிக்கிறது. டெண்டர் ஆவணங்கள் மூலம், ஏலம் எடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. சில ஏல டெண்டர்களின் ஆவணங்கள் சிதைக்கப்பட்டு, அவை தகுதியற்றதாக ஆக்கப்படலாம். அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை இருந்தால், டெண்டர் செயல்முறையை எளிதில் மாற்ற முடியாது. சென்னை மாநகராட்சி மற்றும் ரேஷனில் மட்டும் இ-டெண்டர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எல்லா இடங்களிலும் அதை அமல்படுத்த விரும்புகிறோம்.
கேள்வி: இது கொண்டு வரக்கூடிய பெரிய நன்மைகளை எங்கள் வாசகர்களுக்கு விளக்குங்கள்?
ஜெயராமன் வெங்கடேசன்: சிறந்த போட்டி இருக்கும் என்பதால், ஏலத் தொகைகள் 20 சதவீதம் வரை வரும் என்று மதிப்பிடுகிறோம். மாநில பட்ஜெட்டைப் பார்த்தால், திட்டங்களுக்காக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதல்1 லட்சம் கோடி ரூபாய் வரை அளிக்கப்படுகிறது. 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தினால், அதுவே அரசுக்குச் சேரும் மிகப்பெரிய தொகையாகும். ஊழலைக் குறைப்பதன் மூலம் செயல்திறனை நேரடியாக உயர்த்த முடியும் என்கிறீர்கள். அதுமட்டுமின்றி அரசின் நிதி நிலையிலும் ஊழல் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தயவுசெய்து விளக்குங்கள் மின்சாரத் துறையையும் அது எதிர்கொள்ளும் அனைத்து நிதிப் பிரச்சினைகளையும் எடுத்துக்கொண்டால், ஊழல் நடவடிக்கைகளுக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது. டான்ஜெட்கோ ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது. அதில் ஐம்பது சதவிகிதம் டான்ஜெட்கோ 10 நிறுவனங்களுடன் கையெழுத்திட்ட பெரிய மின் கொள்முதல் ஒப்பந்தத்திலிருந்து ஏற்படுகிறது. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என பல்வேறு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். டான்ஜெட்கோ ஊழலைக் களைவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது அதன் நிதி நிலைமையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேள்வி: நீங்கள் சமீபத்தில் அரசு TNERC அதிகாரியை நியமிப்பதில் இரட்டை ஆதாயப் பதவி பிரச்சினையை எழுப்பினீர்கள்?
ஜெயராமன் வெங்கடேசன்: ஆம், பல குற்றச்சாட்டுகளில் விசாரிக்கப்பட்டு வரும் இந்த அதிகாரி 10 பெரிய நிறுவனங்களில் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால், அவருக்கு நேரடியான இரட்டை ஆதாயம் உள்ளது. இந்த உறுப்பினர் நேர்மை விஷயத்திலோ அல்லது இரட்டை ஆதாயப் பதவி விஷயத்திலோ தேர்ச்சி பெறவில்லை என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். இந்த ஆண்டு ஜனவரியில் அவரது நியமனம் தற்போதைய அரசாங்கத்தின் சாதனையில் ஒரு கரும் புள்ளி.
Read in : English