Read in : English
————நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து கோதாவரி, காவிரி நதி இணைப்பை பற்றி பேசியுள்ளார். மகிழ்ச்சியான செய்திதான். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை 1983இல் கொடுத்தவன் என்ற முறையில், ஏன் அந்த இணைப்பை காவிரியுடன் நிறுத்தாமல், வைகை, தாமிரபரணி நெய்யாற்றோடு இணைந்து கங்கை குமரி மாவட்டத்தை தொட வேண்டும் என்பது தான் கோரிக்கை. இதைப் பற்றி ஆராயுங்கள். இதுகுறித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் எனது வழக்கில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அறிவுறுத்தியது. காவிரியோடு நிற்காமல் அது தெற்கே வைகையும், தாமிரபரணியும், இறுதியாக குமரி முனையை சேர வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை.
கேரளாவிலிருந்து அச்சன்கோயில் பம்பை படுகைகளை, கிழக்கு முகமாகத் திருப்பி, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் வழியாக திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சாத்தூர், வைப்பாறுடன் சேர்த்தால் தென்மாவட்டங்கள் அனைத்தும் குமரி வரை குடிநீர் கொடுக்கவும், ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்கள் வரைக்கும் குடிநீர் வசதி செய்யலாம்.
மேலும் என்னுடைய உச்ச நீதிமன்ற வழக்கில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இந்த இணைப்போடு, கேரளாவிலிருந்து அச்சன்கோயில் பம்பை படுகைகளை, கிழக்கு முகமாகத் திருப்பி, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் வழியாக திருவேங்கடம், வெம்பக்கோட்டை, சாத்தூர், வைப்பாறுடன் சேர்த்தால் தென்மாவட்டங்கள் அனைத்தும் குமரி வரை குடிநீர் கொடுக்கவும், ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டங்கள் வரைக்கும் குடிநீர் வசதி செய்யலாம். அந்தத் திட்டம் ஒரு முக்கியமான நீண்ட கால திட்டம். அது உள்ளடக்கியதுதான், நான் கொடுத்த கங்கை மகாநதி, கோதாவரி, காவிரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு திட்டங்களாகும். இதை நவலவாலா குழு ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவ்வறிவிப்பு செய்தது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இந்தக் கோரிக்கையையும் கவனிக்க வேண்டும்.
கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணையாறு, பெண்ணையாறு- காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையால் தயாரிக்கப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் உபரி நீரை, காவிரி ஆற்றுக்கு திருப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட உள்ளது.
அங்கிருந்து ,கால்வாய் அமைத்து கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீர் எடுத்து வர வேண்டும். இதற்கு மாற்றாக ஜனம்பேட்டியில் இருந்து குழாய் வழியாக நாகர்ஜுனா சாகர் அணைக்கு நீரை எடுத்து வரும் திட்டமும் உள்ளது.
நாகர்ஜுனா சாகர் அணையில் இருந்து, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோமசீலா அணைக்கு நீர் எடுத்து வருவதற்கு கால்வாய் அமைக்கப்படவும் உள்ளது.
சோமசீலா அணையில் இருந்து தமிழகத்திற்கு பாலாற்றின் வழியாக கால்வாய் அமைத்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் காவேரி ஆற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சோமசீலா அணையில் இருந்து தமிழகத்திற்கு பாலாற்றின் வழியாக கால்வாய் அமைத்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் காவிரி ஆற்றுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று வகையில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்த, 1,200 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி 20 கிலோ மீட்டருக்கு சுரங்க நீர் பாதை அமைக்கவும் திட்டம் வகுக்கப்படும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 60 ஆயிரத்து 361 கோடி ரூபாய் தேவை. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 361 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைய உள்ளது.
தமன்கங்கா-பிஞ்சால், பர்தபி-நர்மதாஞ் , கோதாவரி-கிருஷ்ணா, கிருஷ்ணா பெண்ணாறு, பெண்ணாறு, காவேரி நதிகள் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் பயன்பெறும்.
மொத்தம் ஐந்து நதிகள் இணைப்பு திட்டமும் உள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ள கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கு ரூ.44,605 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 62 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும். மேலும் 103 மெகாவாட் நீர்மின் சக்தி மற்றும் 27 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக 2021-22ஆம் ஆண்டில் ரூ.4,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1,400 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(கே.எஸ். ராதாகிருஷ்ணன் வழக்கறிஞர், சமூகச் செயல்பாட்டாளர்)
Read in : English