Read in : English
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது குடியரசு தின உரையில் `நீட்’ தேர்வை ஆதரித்து பேசியதற்காக, அவருக்கு எதிராக திமுகவின் கட்சி நாளிதழான `முரசொலி கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருக்கிறது. `நீட்’ தேர்வின் காரணமாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது என்று ஆளுநர் பேசியிருந்தார். இதுகுறித்து விமர்சனம் செய்து `சிலந்தி என்ற புனைப் பெயரில் `முரசொலியில் செய்தி வெளிவந்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது.
முதலாவதாக, ஏற்கெனவே ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்தது பற்றி `தி வயர்’ ஆங்கில இணைய பத்திரிகையில் வெளியாகி இருந்த ஒரு சார்பான முழுக் கட்டுரையையும் `முரசொலி எடுத்தாண்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் கூறியிருப்பதற்கு மாறாக, நாகா அமைதிப் பேச்சுகளில் மத்திய அரசின் முதன்மையான சமரசத் தூதராக ஆளுநர் ரவி முக்கியமான பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார் எனப் பாராட்டப்பட்டிருக்கிறார். போராடி வரும் பிரிவினை அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு ஆளுநர் ரவியால் அழைத்து வர முடிந்திருக்கிறது. நாகாலாந்து மாநிலத்தில் அமைதி நிலவுவதை அவரால் உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது. கையெழுத்தாகி இருக்கும் சட்டகட்டமைப்பு ஒப்பந்தம், 50 ஆண்டுகளாக மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நாகாலாந்தில் ஜனநாயக செயல்முறை ஆழமாக வேரோடுவதற்கு வழிவகுத்திருக்கிறது. ஒரு வகையில் முட்டுக்கட்டை நிலையை நீக்கி, இந்திய ஒன்றியத்துக்குள் நாகாலாந்தின் சிறந்த அரசியல் எதிர்காலத்துக்கு அவரால் வழி அமைத்துக் கொடுக்க முடிந்திருக்கிறது. `தனி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தனிக் கொடி’ என்ற பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுக்களின் கோரிக்கை தொடர்பாக அவர் அசைந்து கொடுக்காமல் உறுதியாக நின்றிருக்கிறார்.
பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும் மிரட்டுகிற அல்லது அவர்களுக்கு கட்டளை இடுகிற ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக் குழுக்கள் செயல்படுகிற மாநிலம் நாகாலாந்து. ஆளுநரின் நேர்மையையும் விவேகத்தையும் கேள்விகேட்பதன் மூலம் திமுக அதே போல செய்ய முயல்கிறதா?
இரண்டாவதாக, `நீட்’ தேர்வை பாராட்டி குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆற்றிய உரைதான், கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ள அந்த முரசொலி கட்டுரைக்கு முக்கிய தூண்டுதல். ஆளுநரின் ஒப்புதலுக்காக நீண்ட காலமாக காத்திருக்கின்ற, `நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அவரது பேச்சு விமர்சிப்பதாக இருக்கிறது. `நீட்’ தேர்வை ரத்து செய்வதை, `சங்கிகள் என அழைக்கப்படுபவர்களைத் தவிர, தமிழ்நாடு முழுவதும் ஆதரிக்கிறது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், ஒரு கருத்தை யாரேனும் எதிர்க்கிறார்கள் என்பதற்காக, விரும்பத்தகாத வகையில் அவர்கள் மீது முத்திரை குத்தும் பாசிச அணுகுமுறையை அவர்கள் இப்போது கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
அரசியலமைப்புச் சட்டம் ஆணையிட்டுள்ளபடி ஆளுநர் என்ற முறையில் அவருக்குள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி அவர் முற்றிலும் அறிந்திருப்பார் என்பதும், மாநில அரசின் ஆளுங் கட்சி அதை அவருக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதும் நிச்சயம்.
உச்ச நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, தேசியக் கொள்கைக்கு எதிராக திமுக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்பதால், தமிழ்நாடு முழுவதுமே `நீட்’ தேர்வுக்கு எதிராக இருக்கிறது என்று அர்த்தமாகாது. இன்னும் மோசம் என்னவென்றால், ஆளுநரின் பங்குப்பணி மற்றும் கடமைகள் குறித்து `முரசொலி கட்டுரை தொடர்ந்து பேசிக் கொண்டே போகிறது. ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் பிரதிநிதி மட்டுமே என்றும், மாநில அரசின் உணர்வுகளை மத்திய அரசுக்கு தெரிவிப்பது மட்டுமே அவரது முதன்மையான கடமை என்றும், மாநில அரசின் கொள்கைகளில் தலையிடக்கூடாது என அவர் மத்திய அரசுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது. குறைகளற்ற அவரது கடந்த பதவிக்காலத்தை வைத்துப் பார்க்கும்போது, அரசியலமைப்புச் சட்டம் ஆணையிட்டுள்ளபடி ஆளுநர் என்ற முறையில் அவருக்குள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி அவர் முற்றிலும் அறிந்திருப்பார் என்பதும், மாநில அரசின் ஆளுங் கட்சி அதை அவருக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதும் நிச்சயம்.
நாகாலாந்தில் – மாநிலத்தின் ஆளுநர் என்ற முறையிலும், அமைதிப் பேச்சுகளுக்கான முதன்மைத் தூதர் என்ற முறையிலும் – இரண்டு சிக்கலான பொறுப்புகளையும் ஏற்று ரவி நடுநிலையோடு செயல்பட்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில், ஆளுநர் என்ற முறையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் பங்குப் பணியாற்றுவதே அவருக்குள்ள கட்டளைப்பொறுப்பே தவிர, மாநில அரசின் கொள்கைகளை கிளிப்பிள்ளை போல திரும்ப பேசிக் கொண்டிருப்பதல்ல. ஜனநாயக செயல்முறைகள் தடையின்றி செயல்படுவதற்காக, அரசு கட்டமைப்புக்குள்ளேயே சமநிலையை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் அமைந்துள்ளன. மேலும், “ ஆளுநர், அவரது விருப்பப்படி தீர்மானிக்கும் உரிமையின் பேரில் செயல்படும்போது, அவரது முடிவே இறுதியானது, மற்றும் அவரது விருப்ப உரிமையின்படி அவர் செயல்பட்டிருக்க வேண்டும் அல்லது செயல்பட்டிருக்க கூடாது என்ற அடிப்படையில் ஆளுநரின் எந்த செயல் குறித்தும் அது செல்லத்தக்கதா என்று கேள்வி எழுப்பக் கூடாது‘’ என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவு குறிப்பிடுகிறது.
ஆட்டுக்கு தாடி அவசியம் இல்லை என்றாலும், பாய்ச்சல் வேகத்தில் செல்லும் குதிரைகளுக்கு கடிவாளங்களும், முகப்பட்டைகளும் சேணங்களும் அவசியம்; இல்லையேல் அவை தறிகெட்டு ஓடும்.
இங்கே, `நீட்’ தேர்வு குறித்து அவர் என்ன கருதுகிறார் என்பதை மட்டும் அவரது பேச்சில் மக்களுக்கு அவர் எடுத்துக் கூறியிருக்கிறார். என்றபோதிலும், அவர் வலியுறுத்தியுள்ள கருத்து திமுகவுக்கு மனக் கலக்கம் ஏற்படுத்தி இருப்பதாகவும், தங்களது விருப்பத்துக்கு ஆளுநரை பணிய வைக்க முயல்வதற்கும் அது தனது கட்சிப் பத்திரிகையை பயன்படுத்தி இருப்பதாகவும் தோன்றுகிறது. ஆனால், ஆட்டுக்கு தாடி அவசியம் இல்லை என்றாலும், பாய்ச்சல் வேகத்தில் செல்லும் குதிரைகளுக்கு கடிவாளங்களும், முகப்பட்டைகளும் சேணங்களும் அவசியம்; இல்லையேல் அவை தறிகெட்டு ஓடும்.
முதலமைச்சர், தன்னுடைய அதிகாரபூர்வ முறையில், ஆளுநரோடு நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முற்படவேண்டும். போலீஸ் பின்னணியில் இருந்து வந்த முந்தைய ஆளுநர்களைப் போலல்லாமல், ரவி உளவுத்துறை நடவடிக்கைகளில் வலுவான பின்னணியைக் கொண்டவர். திமுகவின் திட்டங்களை நீண்டகால முறையில் செயல்படுத்தவேண்டுமெனில் ஸ்டாலின் ஆளுநரோடு இயைந்து செயலாற்றுவது முக்கியம். இணைந்து பணியாற்றும் மனப்பான்மை எப்போதும் மோதல் போக்கைவிட சிறந்தது.
(Dr. J.Jeganaathan, Sr. Assistant Professor of National Security Studies in the School of National Security Studies, Central University of Jammu, J&K-UT. The views expressed here are his personal)
Read in : English