Read in : English

முப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்தும், அவரின் மனைவி மற்றும் 12 அதிகாரிகளும் உயிரிழப்பதற்கு காரணமான Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முப்படைகள் விசாரணை நீதிமன்றக் குழு (Tri-services Court of Inquiry – COI) அதனுடைய முதல்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான அந்த விசாரணைக் குழு, முதல் கட்ட விசாரணையில் முக்கியமாக கண்டறிந்தவை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கிக் கூறியுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் கண்டறிந்தவை பற்றிய முழு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றாலும், “கறுப்பு பெட்டி’’ எனப்படும் விமான ஓட்டிகள் அறையிலான பேச்சுக்களை பதிவு செய்யும்  விமானப் பயணத் தரவுகள் பதிவு சாதனத்தில் உள்ள விவரங்களையும் மற்ற சாட்சியங்களையும் ஆய்வு செய்த விசாரணைக் குழு, விபத்துக்கு இயந்திரக் கோளாறோ, சீர்குலைவு நடவடிக்கைகளோ, கவனக் குறைவோ காரணம் அல்ல என்று கூறியிருப்பதாக ,  மத்திய செய்தி தகவல் பிரிவின் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீலகிரி குன்னூர் மலை பள்ளத்தாக்குப் பகுதியில் எதிர்பாராதவிதமாக வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மேகக் கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் புகுந்ததன் விளைவுதான் விபத்துக்கான உண்மைக் காரணம் என்று விசாரணைக் குழு அறிக்கை கண்டறிந்துள்ளது.

நீலகிரி குன்னூர் மலை பள்ளத்தாக்குப் பகுதியில் எதிர்பாராதவிதமாக வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக மேகக் கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் புகுந்ததன் விளைவுதான் விபத்துக்கான உண்மைக் காரணம் என்று விசாரணைக் குழு அறிக்கை கண்டறிந்துள்ளது. அந்த நிலவரத்தை அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்திருந்தது அப்போது சமூக ஊடகத் தளங்களில் பரவலாக பரவியது குறிப்பிடத் தக்கது.

Gen Rawat

ஜெனரல் பிபின் ராவத் (Source Wikipedia)

இந்த சாட்சியத்தின் அடிப்படையில், திடீர் வானிலை மாற்றம்தான் விமான ஓட்டி தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹெலிகாப்டரை தடம் மாறி ஓட்டிச் சென்று தரைப் பகுதியில் மோதியதற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணை அறிக்கை முடிவாகக் குறிப்பிட்டுள்ளது. சில பரிந்துரைகளையும் விசாரணைக் குழு செய்திருக்கிறது என்றாலும் அது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. அந்தப் பரிந்துரைகளை முப்படைகள் பரிசீலனை செய்யும்.

இதே காரணத்தை, சில பிரதான பத்திரிகைகளும் யூகங்களாக தெரிவித்திருந்தன. தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹெலிகாப்டரை தடம் மாறி ஓட்டிச் சென்று நிலப் பகுதியில் மோதுவது (Controlled Flight into Terrain – CFIT) என்பதற்கு , “விமான ஓட்டியின் கட்டுப்பாட்டில் விமானம் இருக்கும்போது, எந்தவித உள்நோக்கமும் இல்லாமலே தடம் மாறி ஓட்டிச் சென்று (தரை, மலை, நீர் நிலை அல்லது ஏதேனும் தடைகள் உள்ள) நிலப் பகுதியில் மோதுவது. பெரும்பாலும் விமான ஓட்டியோ, விமானப் பணியாளர்களோ எதிர்வரும் ஆபத்தை உணராமல், அறியாமல்தான் இருப்பார்கள். அப்படி அறிய நேரும்போது அது காலம் கடந்துவிட்டதாக இருக்கும்’’ என்று பொருள் என அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம்  விளக்கம் அளித்திருக்கிறது.

ஆனால், இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என அக்கறை கொண்ட எல்லோர் மனத்திலும் எழுகின்ற மிக முக்கியமான கேள்வி இதுதான்: இந்தப் பிரச்சினையில் இந்த விசாரணைக் குழுவின் முடிவுதான் இறுதியானது என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது மற்ற அமைப்புகள் மூலம் இதுபற்றி மேலும் விசாரணை நடத்தப்படுமா?

விசாரணைக் குழுவின் முதல் கட்ட அறிக்கையில் உள்ள விஷயங்கள் என்ன என்பதும், இந்தப் பிரச்சினையில் அடுத்த நடவடிக்கை என்ன என்பதும்  நமக்குத் தெரியாத நிலையில், விசாரணைக் குழுவின் குறைபாடுகள் பற்றி இந்தக் கட்டத்தில் யூகங்கள் தெரிவிப்பது தவறானதாகிவிடும்.

என்றபோதிலும், கடந்த காலத்தில் நேரிட்ட Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்துகள் பற்றி மேலும் விரிவான புலன்விசாரணை அவசியம் என்பதையும், விபத்துகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் அலசி ஆராய்ந்து அதை ஓர் அறிக்கையாக மக்களின் பரிசீலனைக்கு வெளியிட வேண்டும் என்பதையும் நிலைமை வலியுறுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில்  5-க்கும் அதிகமான விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. MiG-21 விமானம் போல இதுவும் “பறக்கும் சவப்பெட்டிகள்’’ ஆக மாறிவிடக் கூடாது என நம்பிக்கை கொள்வோம்.

VVIP-க்களுக்கும் கூட விபத்துக்களில் இருந்து பாதுகாப்பில்லை என்பதை இந்த விபத்து வெளிப்படுத்தி இருக்கிறது. சாதாரண வானிலையிலும் கூட ஹெலிகாப்டரில் பயணம் செய்வது குறித்து VVIP-க்களுக்கு இது எச்சரிக்கையும் செய்திருக்கிறது. தற்போது பல்வேறு நிலப் பகுதிகளில் வெவ்வேறு வானிலைகளில் 151 Mi-17 V5 ஹெலிகாப்டர்களை முப்படைகள் இயக்கி வருகின்றன என்பதை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.  10 ஹெலிகாப்டர்கள் VVIP-க்களுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசம் உள்ளன என்பது கவனத்தை கவரும் இன்னொரு தகவல்.

பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா விமான நிலையத்திலிருந்து  தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்குச் செல்வதற்காக, ஜெனரல் ராவத் பயணம் செய்த அதே மாதிரி ஹெலிகாப்டரில் மோடியும் பயணம் செய்வதாக இருந்தார்

பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா விமான நிலையத்திலிருந்து  தேசிய தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள ஹுசைனிவாலாவுக்குச் செல்வதற்காக, ஜெனரல் ராவத் பயணம் செய்த அதே மாதிரி ஹெலிகாப்டரில் மோடியும் பயணம் செய்வதாக இருந்தார். மோசமான வானிலை காரணமாக, சாலை வழியாகச் செல்வதற்கு சிறப்புப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.  போதிய பாதுகாப்பு

Modi tour programme

பிரதமர் மோடியின் பயணத்திட்டம்

ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், சாலை மறியல் போராட்டம் காரணமாக அவர் பயணம் ரத்தாகிவிட்டது. “விமான நிலையம் வரை என்னால் உயிருடன் திரும்பி வர முடிந்தது. இதற்காக உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று சொல்லிவிடுங்கள்” என்று பஞ்சாப் போலீசாரிடம் பிரதமர் மோடி கூறிச் சென்றதாகச் செய்திகள் வெளியாயின என்பதும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

இந்த விபத்து எழுப்பும் இன்னொரு முக்கிய பிரச்சினை முப்படைகளில் ஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி பற்றியதாகும். நவீன இயந்திரங்கள் மற்றும் சாதனங்களைக் கையாள்வதற்கு நம்மிடம் பயிற்சி பெற்ற பைலட்டுகள் போதிய அளவுக்கு இருக்கிறார்களா? CIFT பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் வகையில் விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் பைலட்டுகளின் பயிற்சிக் கையேடுகளில் இடம் பெற வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. விமானம் ஓட்டிய மணி நேரங்களின் அடிப்படையிலான பணி மூப்பின் காரணமாக, எந்தவித திடீர் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு தங்களுக்குள்ள ஆற்றல் குறித்து பைலட்டுகளிடம் காணப்படும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை, ஒருவேளை சுற்றியுள்ள நிலைமை குறித்து விழிப்புணர்வு வராமல் போவதற்கு காரணமாக இருக்கலாம்.

எப்படியிருந்தபோதிலும் விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நேரிடக் கூடாது. மனிதத் தவறுகள் அல்லது தொழில்நுட்பத் தவறுகள் –  எந்தத் தவறுகள் ஆக இருந்தாலும் அதற்கு பதில் காரணமாக CIFT முன்வைக்கப்படக் கூடாது. இல்லாவிடில், VVIP-க்கள் மத்தியிலும் சாதாரண மக்கள் மத்தியிலும் “ஹெலிகாப்டர் பீதி’’ ஏற்பட்டுவிடலாம். விமான போக்குவரத்து பாதுகாப்பு கொள்கைகைளையும் நிலையான செயலாக்க விதிமுறைகளையும் அவ்வப்போது முப்படைகள் ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும். VVIP-க்கள் என வரையறுக்கப்பட்டவர்களுக்காக என்றே, சிறந்த பயிற்சி பெற்ற ஹெலிகாப்டர் பைலட்டுகளைக் கொண்ட தனி ஹெலிகாப்டர்களை இயக்குவது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்யலாம்.

(Dr. J.Jeganaathan, Sr. Assistant Professor of National Security Studies in the School of National Security Studies, Central University of Jammu, J&K-UT. The views expressed here are his personal)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival