Read in : English

உயர் செயல்திறன் குழு இருக்கும் ஒரு தொழில் நிறுவனம் வர்த்தக ரீதியாக பயனடைகிறது மற்றும் நிதி வளர்ச்சி அடைகிறது. உண்மையில் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் இதுபோன்ற ஒரு குழுவை வைத்திருக்கவே விரும்புகின்றன. உயர் செயல்திறன் கொண்ட குழுவை கட்டமைப்பது குறித்து நாம் சில விஷயங்களை விரிவாக ஆராய்வோம். அவை:

  • வர்த்தகம் அல்லது தொழிலில் ஒரு தலைவர் உயர் செயல்திறன் கொண்ட குழுவை எவ்வாறு வளர்க்க முடியும்?
  • உயர் செயல்திறன் கொண்ட குழுவை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும்?
  • உயர் செயல்திறன் கொண்ட குழுவை அமைக்கத் தேவையான காரணிகள் என்ன?

உங்கள் குழுவை அடுத்த கட்ட செயல்திறனுக்கு கொண்டு செல்ல எளிமையான கட்டமைப்பு உள்ளது. இதற்கு அணி உறுப்பினர்களின் செயல்திறன் மற்றும் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் உயர் செயல்திறன் குழுவை உருவாக்க முடியும். அணியினரின் திறமையும் செயல்திறனும் ஒன்று சேரும்போது அது குழுவிற்குள்ளும், நிறுவனத்துக்குள்ளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் குழுவின் பலத்தை, வலிமையை வெளிக்கொணர்வது எப்படி? உயர் செயல்திறன் கொண்ட குழுவின் பண்புகள் என்ன? உங்கள் உயர் செயல்திறன் குழுவை தூண்டிவிடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.

உயர் செயல்திறன் குழுவின் பண்புகள்
தொழில் திறன்

-செயல்திறன்

சிந்தனை செயல்முறை செயல்படுத்துதல்  மேலாண்மை
தலைமைத்துவம் -நோக்கம் சார்ந்த செயல்பாடு

– புதுமைகள்

-ஒருங்கிணைப்பு

– கண்காணிப்பு      

-மதிப்பூடு

– மோதல் தீர்வு

தொடர்புகள் தரவுகள் மாற்றம்               வெற்றிப் பரிமாணங்கள் -பங்குகள்& பொறுப்புகள்

-செயல்படுத்துதல்

-நம்பிக்கை

-பாராட்டு

வளர்ச்சி – பாதுகாப்பான சூழல் தீர்வுகள் -கூட்டுறவு                       

-பணி நிறைவு

-ஆற்றல் வளம்

-தனித்திறன் வளர்ச்சி       

உயர் செயல் திறன் கொண்ட குழுவை கட்டமைப்பதன் மூலம் நீங்கள் ஒரு தலைவராக வெற்றிபெற முடியும். நிறுவனத்தின் நிதி ஆதாரங்களையும் வலுப்படுத்த முடியும். குழு உறுப்பினர்களும் தாங்கள் மதிக்கப்படுவதாக உணர்வார்கள், நிறுவனத்தின் வளர்ச்சியில் தங்களது பங்களிப்பும் இருப்பதாக நினைப்பார்கள். இதன் மூலம் நிறுவனம் நிதி ரீதியாக வளர்ச்சி பெற்று லாபம் ஈட்ட முடியும். அதன் தொடர்ச்சியாக குழு உறுப்பினர்களுக்கு வெகுமதியும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழில்முறை தலைவர்கள் சிலர், குழு உறுப்பினர்கள் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. முதலீடு செய்யவும் விரும்புவதில்லை. ஒருவரை தொழில்திறன் பெற்றவர்களாக உருவாக்கினால் அவர் தற்போதுள்ள வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்கு சென்றுவிடுவாரோ என்ற பயம் ஒருபுறம் அல்லது அந்த நபர் தொழில் போட்டியாளராக மாறிவிடுவாரோ என்கிற பீதியும் இதற்கு காரணமாகச் சொல்லலாம்.

தொழில்முறை தலைவர்கள் சிலர், குழு உறுப்பினர்கள் வளர்ச்சியில் ஆர்வம் காட்டுவதில்லை. முதலீடு செய்யவும் விரும்புவதில்லை. ஒருவரை தொழில்திறன் பெற்றவர்களாக உருவாக்கினால் அவர் தற்போதுள்ள வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்கு சென்றுவிடுவாரோ என்ற பயம் ஒருபுறம் அல்லது அந்த நபர் தொழில் போட்டியாளராக மாறிவிடுவாரோ என்கிற பீதியும் இதற்கு காரணமாகச் சொல்லலாம். எனினும் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் நிறுவனத்தில் தொடர்ந்தால், அவர்கள் துரிதமாகவும், துடிப்பாகவும் செயல்படாவிட்டால் இழப்பு நமக்குத்தான்  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொழிலில் ஒருவர் எப்போதும் பல்வேறு வகையான இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு நல்ல ஊழியரை இழப்பதும் மறைமுக இடர்பாடுதான். எனவே ஒரு தொழில்முனைவோராக / தொழில் தலைவராக, உங்கள் குழு உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக முதலீடு செய்தல், குழுவை வடிவமைத்தல், அவர்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை இடர்பாடுகள் இருந்தாலும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பொதுவான இந்த தவறுகளை கவனத்தில் கொள்ளுங்கள்:

வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான இதர பிரச்னைகள் தொடர்பாக வர்த்தக நிறுவனங்கள் பொதுவாக செய்யும் தவறுகள்-

  • வெகுமதிகளுக்கு உணர்ச்சிபூர்வமான மதிப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.
  • அறைக்குள் இருக்கும் பாராபட்சம் மற்றும் வேண்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தொடர்பான பிரச்னைகளை அணுகாமல் இருப்பது.
  • குழுவின் கூட்டுச் செயல்திறனை மதிப்பிடாதது அல்லது செயல்திறனை மதிப்பிடுவதற்கான அளவீடுகளை வரையறுக்காதது.
  • குழு உறுப்பினர்களுக்கான KPA’s மற்றும் KPI’s போன்றவற்றை தெளிவாக வகுக்காதது.
  • பணியாளர்களின் தொழில் முன்னேற்றத்தில் பங்களிக்காதது.
  • வளர்ச்சிக்கான போதுமான சவால்களை வழங்காமல் இருப்பது அல்லது பணியாளர்களின் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் திறனுக்கு வழிவகுக்காதது.
  • தேவைப்படும் நேரத்தில் பணியாளர்களிடம் பரிவு காட்டாமல் இருப்பது.
  • பணியாளர்களின் குறைகளை காது கொடுத்து கேட்காமல் இருப்பது.
  • ஊதிய உயர்வு, போனஸ், பதவி உயர்வு போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பததன் மூலம் தேவையற்ற பிரச்னைகளை நிறுவனத்திற்குள்ளேயே வளரவிடுதல்.

 

மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் தகவல்கள் சங்கீதா சங்கரன் சுமேஷ்  அவர்களின் “Where is The Moolah” என்ற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival