Read in : English
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. ஆளும் திமுக அரசு, அம்மா உணவகங்களுக்கு நிகராக கலைஞர் உணவகங்கள் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தவுடன் சில திமுக தொண்டர்கள் ஒரு பேனர் அடித்து அம்மா உணவகம் முன்பாக பொருத்தினார்கள். கலைஞர் உணவகம் அறிவிப்பு ஆனால் இருப்பதோ அம்மா உணவகம். என்ன செய்வது என்று தெரியவில்லை எனவே இரண்டு தலைவர்கள் படங்களோடு பேனர் அமைத்து விட்டார்கள். வெகு சீக்கிரம் அது அகற்றப்பட்டது என்றாலும், தமிழகத்தை பொறுத்தவரை கழக ஆட்சிகளின் நலத்திட்ட அறிவிப்புகளின் ஒரு முரண்நகை என்றே அந்த பேனர் இருந்தது எனலாம்.
சமூக நீதி மற்றும் அதிகார பகிர்ந்தளவு போன்ற கொள்கைகளை பின்பற்றி திமுகவின் நலத்திட்ட அறிவிப்புகள் இருக்கும். அதிமுகவை பொறுத்தவரை, இட ஒதுக்கீடு தவிர, அது போன்ற கட்டாயங்கள் அதற்க்கு கிடையாது. நலத்திட்ட உதவிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும், அந்த திட்டங்கள் ஆட்சி அமைக்க உதவவேண்டும்.
திமுக அல்லது அதிமுக, கழக ஆட்சிகளின் அச்சாரமாக நாம் நலத்திட்ட உதவிகளை சொல்லலாம். என்றாலும் நலத்திட்ட உதவிகளை வகுப்பதில் இவை இரண்டும் வேறுபட்டே நிற்கின்றன. அரசை நடத்துவது எப்படி இருப்பினும் திராவிட இயக்கத்தில் இருந்து தோன்றிய திமுக நலத்திட்ட உதவிகளை திராவிட கொள்கைகளின் அடிப்படையிலேயே வகுக்கிறது. சமூக நீதி மற்றும் அதிகார பகிர்ந்தளவு போன்ற கொள்கைகளை பின்பற்றி திமுகவின் நலத்திட்ட அறிவிப்புகள் இருக்கும். அதிமுகவை பொறுத்தவரை, இட ஒதுக்கீடு தவிர, அது போன்ற கட்டாயங்கள் அதற்க்கு கிடையாது. நலத்திட்ட உதவிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும், அந்த திட்டங்கள் ஆட்சி அமைக்க உதவவேண்டும்.
திராவிட கழகங்களை பொறுத்தவரை தேர்தல் அறிக்கை என்றால் நலத்திட்ட அறிவிப்புகள்தான். திமுக ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு அறிவித்தால், அதிமுக இலவச அரிசி என்று அறிவிக்கும். ஆட்சி மாற்றம் நடந்தாலும் ஒருவருடைய நலத்திட்ட உதவிகளை மற்றவர் ரத்து செய்வதோ குறைப்பதோ தமிழகத்தில் கிடையாது என்றே சொல்லலாம். அந்த நலத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். ஏறக்குறைய பத்துவருடம் கழித்து, MGR மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தார். மதிய உணவு திட்டம் அதிமுகவின் முக்கியமான நலத்திட்ட உதவி.
இந்தி எதிர்ப்பு என்பதை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்திருந்தாலும், இலவச அரிசிதான் திமுகவை வலுவாக காலூன்ற வைத்தது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் பிடி தளர தொடங்கிய நேரமும் அதுவாக இருந்தது. கொள்கை முரணான பல கட்சிகள், வலது சரியான சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட, திமுகவின் கூட்டணியில் சேர்ந்த தருணம் அது. ஆட்சிக்கு வந்தவுடன் நலத்திட்டங்கள் எப்படி ஆட்சியில் தொடர எப்படி உதவும் என்று திமுக உணர்ந்துவிட்டது. எனினும் நலத்திட்ட உதவிகளின் பலன் சமூக நீதியாக இருக்கவேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் திமுக உறுதியாக இருந்தது.
அதிமுகவிற்கு ஒரு கூடுதல் சிறப்பம்சம் இருந்துவந்திருக்கிறது. அதிமுகவின் தாக்கம் ஏழை மக்களிடம் அதிகம், முக்கியமாக மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் எப்பொழுதுமே அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த தாக்கத்திற்கு முக்கியமான காரணம் அதிமுகவின் நலத்திட்ட உதவிகள்.
இந்த இரண்டு கழகங்களுக்கும் அடிப்படை வித்தியாசம் என்பது என்ன என்பதை உணர்த்துவது அவற்றினுடைய மக்கள் நலத்திட்டங்கள்தான். திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவிற்கு ஆதரவு என்பது தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள், திமுகவின் பலம் வடக்கு மற்றும் காவிரி டெல்டா பகுதிகளான மத்திய தமிழ்நாடு. ஒவ்வொரு தேர்தலின் போதும் மற்ற கழகங்களின் பலம்பொருந்திய பகுதிகளை எப்படி ஊடுருவது என்பதே ஆட்சி மாற்றத்தின் பிரதானம். எனினும் அதிமுகவிற்கு ஒரு கூடுதல் சிறப்பம்சம் இருந்துவந்திருக்கிறது. அதிமுகவின் தாக்கம் ஏழை மக்களிடம் அதிகம், முக்கியமாக மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் எப்பொழுதுமே அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த தாக்கத்திற்கு முக்கியமான காரணம் அதிமுகவின் நலத்திட்ட உதவிகள்.
1982ல் எம்ஜியார், காமராஜரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியபொழுது அது ஒரு மாநிலம் முழுமைக்குமான உணவளிக்கும் திட்டமாக மாறியது. இந்த ஒரே ஒரு திட்டத்தின் மூலம் எம்ஜியார் பெண்கள், முக்கியமாக தாய்மார்கள், மனதில் ஒரு நீங்கா இடத்தை பெற்று விட்டார் என்கிறார் ஒரு ஆய்வாளர். அவர்களை பொறுத்தவரை எம்ஜியார் பசித்திருந்த தங்கள் குழந்தைகளுக்கு உணவளித்த ஒரு மகான்.
எம்ஜியாரின் அணுகுமுறை ஒரு இதயம் சார்ந்ததாக இருந்ததே தவிர ஒரு கொள்கை சார்ந்தது என்று கூறிவிட முடியாது. 1980ல் இட ஒதுக்கீடை சாதி மட்டும் இல்லாது பொருளாதாரம் சார்ந்து மாற்றலாம் என்று முயன்றார் ஆனால் அந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்ற பின்பு தனது முடிவை சட்டென்று மாற்றிக்கொண்டார். எம்ஜியாரின் இந்த தோல்வியில் இருந்து ஜெயலலிதாவும் நல்ல ஒரு பாடத்தை கற்றுக்கொண்டார். அதன் பின்னர், அதிமுகவின் நலத்திட்ட அறிவிப்புகள் கொள்கை சார்ந்து அதிகம் இருந்தது இல்லை.
எம்ஜியாரின் அதிமுக தெற்கு மற்றும் மேற்கில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அமைந்தது என்றாலும் அது திராவிட கொள்கை சார்ந்த ஒன்று என்று சொல்லமுடியாது. அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்படும் முக்குலத்தோர் சமூகம் திராவிட கொள்கைகளை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறது என்பது ஒரு கேள்விக்குறி. தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற முக்குலத்தோரின் தலைவர் முத்துராமலிங்க தேவர் கடைசி வரை கழகங்களுக்கு எதிராகவே இருந்தார்.
உணவுக்கு உத்திரவாதம் என்ற நோக்கம் நிறைவேறியவுடன் கழகங்கள் தங்களுடைய நலத்திட்டங்களை வெவ்வேறு பொருட்களை நோக்கி நகர்த்தின. ஆடு முதல் ஸ்கூட்டர் வரை கழகங்கள் வழங்காத நலத் திட்டங்களே இல்லை எனலாம். என்றாலும் திமுக தன்னுடைய திராவிட கொள்கைகள் நடைமுறைப்படுத்தவும் தவறவில்லை. அனைவரும் அர்ச்சகர் என்பது ஈ வெ ரா பெரியாரின் கனவு திட்டங்களில் ஒன்று. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று 1929 செங்கல்பட்டு மாநாட்டில் அவர் நிறைவேற்றிய தீர்மானத்தை கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சி நடந்த 1989ம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றினார் என்பது வரலாறு.
Read in : English