Read in : English
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட காலத்தில், மக்களிடம் ஆழ்ந்த ஒற்றுமை நிலவியது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நிர்வாகத்துக்காக தன்னாட்சியுடன்கூடிய மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, தேசியப் பெருமிதத்துக்கு எதிரான கட்டமைப்புத் தடைகள் உருவாயின.
இதனால், உணர்ச்சியால் தூண்டப்பட்ட மக்களிடம் தவறான தகவல்கள் பரவின. சொந்தக் கலாசாரமும் குடும்ப நெறிமுறைகளும் உடைய பன்முகப்பட்ட கலாச்சாரம் கொண்ட நமது நாட்டைப் பற்றிய பெருமித உணர்வு அவர்களிடம் குறையத் தொடங்கியது. சுற்றுச்சூழல், சமூக, கலாசார நெறிமுறைகளுக்குப் பதிலாக, இறக்குமதி செய்யப்பட்ட கருத்துகள் மற்றும் கொள்கை அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி தொடங்கியது.
அதையடுத்து, பிராந்திய பிரச்சினைகள் சீழ்பிடித்த புண்களைப் போல ஆயின. முல்லைப் பெரியாறு அணை குறித்த பிரச்சினையும் அதுபோன்ற ஒன்றுதான். 1960ஆம் ஆண்டிலிருந்து இப்பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே தவறான சிந்தனைப் போக்கு இருந்து வருகிறது.
வேறு ஒரு சந்தர்ப்பத்தில், வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் யாமினி அய்யர் கூறியதாவது: “பகிர்ந்து கொள்ளப்படும் வரலாறுகளும், கலாச்சாரமும், புவியியல் பரஸ்பர இணைப்புகளும் மிகப் பெரிய பலத்துக்கான ஆதாரம் ஆகின்றன. ஆனால் கவனமாக அதை வளர்த்தெடுக்காவிட்டால், இந்தப் பரஸ்பர இணைப்புகளும் பகிரப்பட்ட வரலாறும் ஆழ்ந்த பிரிவினைவாத, வன்முறை அரசியலைத் தூண்டும். அதாவது பிராந்திய எல்லைகளைக் கடந்து, உள்நாட்டு மனோபாவம் அதிகரிக்கும் கருவியாகிவிடும். அதுபோன்ற அரசியல் ஒவ்வொரு நாட்டையும் மேலும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். அந்தப் பகுதிக்கான நலன்களை தேசிய நலனாக மனதில் வலிமையாகப் பதிந்துவிடும்.”
கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும், கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான காவிரி நதி நீர் பிரச்சினையிலும், ஆந்திரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை விஷயத்திலும் இது உண்மையாகியுள்ளது.
எனினும், இதுகுறித்து ஒரு அறிக்கை சரியாகக் குறிப்பிட்டுள்ளது: “தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே இருக்கும் பிரச்சினையைவிட இந்த இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சினை சிக்கலானது. பரம்பிக்குளம் ஆழியாறு, பவானி ஆற்றுப் படுகையில் சிறுவாணி, நொய்யாறு போன்ற நதிப் பிரச்சினைகள் போன்ற நதி நீர்ப் பிரச்சினைகள் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே உள்ளன.
கேரளத்தில் உள்ள பம்பை, அச்சன்கோவில் நதிகளை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாற்றுடன் இணைக்கும் திட்டத்திலும் பிரச்சினை உள்ளது. ஆனால், கர்நாடகத்தைப் பொருத்தவரை, காவிரி நதி நீர் பிரச்சினை ஒன்று மட்டும்தான்.“
முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் முக்கியப் பிரச்சினை, அணையின் நீர் மட்டம் குறித்தது. 1960களில் முல்லைப் பெரியாறு அணையில் வெள்ளஅதிகரிப்பு காரணமாக அதன் பாதுகாப்பு குறித்து கேரளத்தில் உள்ள தேசிய நாளிதழில் வந்த அமானுஷ்ய செய்திகளையடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு அம்சங்கள் பிரச்சினையாக எழத் தொடங்கியது.நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளோ, தொடக்கத்தில் குறிப்பிட்ட முக்கியக் காரணங்களோ இன்னமும் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படவில்லை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளோ, தொடக்கத்தில் குறிப்பிட்ட முக்கியக் காரணங்களோ இன்னமும் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படவில்லை.
1895ஆம் ஆண்டில் அணை கட்டப்பட்டதிலிருந்து, சுமார் 80 ஆண்டுகள் வரை இரு மாநிலங்களுக்கு இடையே எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகவே இருந்தது.
1979இல், அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் முழுக் கொள்ளளவு 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டதிலிருந்து பிரச்சினை வெடித்தது. இது கேரளாவின் அச்சங்களைக் குறைக்க உதவவில்லை.
அணையின் பாதுகாப்பு குறித்த கோரிக்கை வலுப்பெற்றதற்கு மேலும் சில காரணங்கள் இருப்பதற்கும் சாத்தியம் உண்டு.
மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை நீதிமன்றங்கள் வழங்கின. 2006, 2014ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டு தனித் தீர்ப்புகளில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்று கூறியது.
இதைக் கண்காணிப்பதற்கு ஒரு குழு அமைக்கவும் உத்தரவிட்டது. ஜனநாயகச் செயல்பாடுகளின் அடிப்படையில் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது.
படித்த, ஆனால் தவறான கண்ணோட்டம் கொண்ட கல்விப்புலனத்தினர், குறிப்பிட்ட பத்திகையாளர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் போன்றோர் Ðஅரசியலமைப்புச் சட்டப்படி அடுத்த மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். விஞ்ஞானிகளும் நிபுணர்களும் அணையின் பாதுகாப்பு குறித்த நுணுக்கங்கள் குறித்து பேசத் தொடங்கினர். நிபுணர்களுக்கு குறிப்பிட்ட ஆணைகளை நீதிமன்றங்கள் வழங்கின. ஆனால் சில ஊடகங்கள் இதைப் புறக்கணித்துவிட்டு, அணைக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கின.
சர்வதேச சக்திகள், கல்விப்புலத்தைச் சேர்ந்தவர்கள், கல்விப்புலம் சாராதவர்கள் இரு மாநில நலன்களுக்கு எதிராக செயல்பட்டார்கள். இது தேசிய நலன்களுக்கு ஆபத்தானது. அணையின் பாதுகாப்பு குறித்த அவர்களது எச்சரிக்கை வெறும் மதிப்பீடுகள், கணிப்புகள் அடிப்படையிலானவை. `தண்ணீருக்கான பழைய கட்டமைப்புகள்: உருவாகும் உலக அபாயம்’ என்ற தலைப்பில் கனடாவில் உள்ள தண்ணீர், சுற்றுச்சூழல், சுகாதார நிறுவனமான யுனைட்டெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஒவ்வொரு நாட்டின அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்குவதற்குப் பதில், பொது வெளியில் உள்ள சில வெற்றுப் புள்ளி விவரங்களையும், கேரளத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்த செய்திகள் அடிப்படையிலும் அந்த அறிக்கை பொத்தம்பொதுவான முடிவுக்கு வந்தது.
இரு மாநிலங்களைச் சேர்ந்த நீர் நிர்வாக அதிகாரிகளுக்கிடையில் நல்ல தகவல் தொடர்பு இல்லாதது, அணையில் தண்ணீர் இருப்பு, தண்ணீரை வெளியேற்றுதல், பராமரிப்பு போன்ற முக்கியமான சூழ்நிலைகளை சரிவர நிர்வகிக்க முடியாத நிலைமைகள்தான் பிரச்சினைகளுக்குக் காரணம். வழக்கத்துக்கு மாறான, கேரளத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் போன்றவையே தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாக உள்ளது.
இரு மாநிலங்களைச் சேர்ந்த நீர் நிர்வாக அதிகாரிகளுக்கிடையில் நல்ல தகவல் தொடர்பு இல்லாதது, அணையில் தண்ணீர் இருப்பு, தண்ணீரை வெளியேற்றுதல், பராமரிப்பு போன்ற முக்கியமான சூழ்நிலைகளை சரிவர நிர்வகிக்க முடியாத நிலைமைகள்தான் பிரச்சினைகளுக்குக் காரணம்.
மழையையும் வெள்ள சாத்தியங்களையும் சரிவர கணிக்காததன் விளைவுதான் தற்போதைய நிலைமைக்குக் காரணம். இச்சூழ்நிலையில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையாக்கப்படுகிறது.
ஓடைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் போன்ற நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை பராமரித்து, புத்துணர்ச்சியூட்டுவதற்கு தமிழ்நாட்டில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
இதன் மூலம் நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்து, தண்ணீரின் தேவையை ஈடு செய்ய முடியும். ஆனால் இந்தப் பிரச்சினைகளில் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை.
கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே பொதுவான கலாச்சார, குடும்ப, சமூகப் பண்பாடுகள் பல உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கும்போது பரஸ்பரம் கசப்பு உணர்வு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து இருதரப்பும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
அணையின் பாதுகாப்பு, தண்ணீர் பயன்பாடு ஆகியவற்றுக்கு பாரபட்சமில்லாத அறிவியல் விவரங்களின் அடிபடையில்தான் தீர்வு காண முடியும்.
தற்போதைய நிலையில், அணையின் நீரியல் தன்மை, கட்டமைப்பின் உறுதி, நில அதிர்வுப் பிரச்சினை போன்று அரசு அமைத்தக் குழுக்களின் அங்கீகாரம் பெற்ற ஆய்வு முடிவுகள் பொதுவெளியில் கிடைப்பதில்லை.
உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு வகுத்துள்ள விதிமுறைகளை இரு மாநிலங்களும் பின்பற்றுவது பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி.
இரு தரப்பிலும் மாநில வெறியைத் தூண்டுபவர்களைத் தண்டிப்பதன் மூலம் இரு மாநில மக்களிடையே நிலவும் அவநம்பிக்கையைத் தவிர்க்க முடியும்.
தற்போதைய இரு துருவ நிலைப்பாட்டைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இரு நிலைப்பாடுகளுமே குறைபாடுகளைக் கொண்டவையாக இருக்கின்றன.
முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம், மாநிலங்களுக்கிடையேயான முறையான, முதலாவது தண்ணீர் பகிர்வு ஒப்பந்தம். அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு, அரசியல் உறுதியுடன் செயல்பாட்டால், நதிநீர் பிரச்சினையைத் தீர்க்கவும், விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கச் செய்ய நதி நீர் பங்கீடு செய்யவும் நாடு முழுவதும் செயல்படுத்த இது முக்கிய முன்மாதிரியாக இருக்கும்.
கட்டுரையாளர், பி. சந்திரசேகரன், பொருளியளார் மற்றும் பொதுக் கொள்கை நிபுணர்
Read in : English